Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இன நெருக்கடிக்கு கருணாநிதியால் தீர்வு காண முடியும்

Featured Replies

இலங்கை இன நெருக்கடிக்கு கருணாநிதியால் தீர்வு காண முடியும்

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்புகையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சென்றிருந்தார். அந்நாடுகளில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் ஈழவேந்தன் இலங்கை இன நெருக்கடியின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

சிங்கப்பூரில் `தமிழ் முரசு' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது;

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தற்போது உதவக் கூடியவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதிதான்.

அழுதாலும் பிள்ளையை நாங்கள் தான் பெற வேண்டும். எனினும், தற்போது ஈழத் தமிழர்களுக்கு உதவக் கூடிய தலைவர் தமிழக முதல்வர்தான். ஆரம்ப காலத்தில் இருந்தே ஈழத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டி வருபவர் அவர். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைக் காக்கும் கடவுளாக அவர் உள்ளார்.

நீயும் வாழ், எங்களையும் வாழவிடு என்று தான் தமிழர்கள் சொல்கிறார்கள். இலங்கையில் வாழும் எந்தத் தமிழரும் போரை விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு வழியில்லை. அழிவின் விளிம்பில் நிற்கும் அவர்கள் எல்லை மீறி பொறுமை காக்கும் நிலையில் இல்லை.

இந்தியாவுடன் செய்து கொண்ட இருநாட்டு ஒப்பந்தத்தையே, 19 ஆண்டு முடிவில் தூக்கியெறிய முடியும் என்றால், எதை நம்பி சிங்கள அரசுடன் தமிழர்கள் இனி ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.

வடக்குக்கும் கிழக்குக்கும் இருந்த தரை வழிப் பாதைகளான ஏ-9, ஏ-15 இரண்டும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதால் பெரும்பாலும் அங்கு வாழும் பல ஆயிரம் மக்கள் பெருந்துன்பத்தை அனுபவிக்கிறார்கள். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. மக்கள் பசியோடும் பட்டினியோடும் வாழும் நிலை. பண்பாட்டுப் படுகொலை, உயிர்ப் படுகொலை, பொருளாதார ஒடுக்குதல் என்று எல்லா வகையிலும் தமிழ் மக்கள் பூண்டோடு அழிக்கப்படுகிறார்கள்.

வடக்கின் நிலைமையாவது அறியக் கூடியதாக இருக்கிறது. கிழக்கின் நிலைமை இன்னும் மோசம். என்ன நடக்கிறதென்பது வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது துயரம் சொல்லி மாளாது.

இலங்கை சுதந்திரம் பெற்று 59 ஆண்டுகள் ஆகிய நிலையில், இங்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் எண்ணிலடங்காதவை.

தமிழீழத்தைத் தவிர, ஈழத் தமிழ் மக்களுக்கு வேறு எந்தத் தீர்வும் விடிவையோ விடுதலையையோ தராது. இந்த நாட்டுக்கு ஒற்றையாட்சி முறை ஒரு போதும் ஒத்துவராது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று புதிதாகச் சொல்லவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் 76 இல் தந்தை செல்வா என்றழைக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின் மூத்த தலைவர் மறைந்த செல்வநாயகம் கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களை நெருக்கும் பிரச்சினைகள் ஆயிரம். சொந்த மண்ணில் வாழ்வு பெறாத நிலைக்கு, அழிவுக்கு தமிழ் இனம் ஆளாகியுள்ளது.

இன்றைய உடனடித் தேவை வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்.

கோலாலம்பூரில் வரவேற்பு

கோலாலம் பூரில் மலேசியத் தமிழர் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஈழவேந்தன் கூறியதாவது;

இந்தியாவை தமிழர்களை விட நேசிக்கிறவர்கள் உலகத்தில் யாரும் இருக்க முடியாது. காலம் கடந்தாலும் இந்தியா ஞானம் பெற வேண்டும்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மீண்டும் மீண்டும் உருவாக்காமல் புண்படுத்தியவர்களையும் பண்படுத்தும் போக்கு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

வியாபாரம் வாழ்க்கைக்கு தேவை. ஆனால், வாழ்க்கையை வியாபாரமாக்கிவிட்டால் எந்த இனமும் ஒன்றும் செய்துவிட முடியாது. அனைத்து இனமும் ஈழத்தில் ஒற்றுமையாக இருந்தால்தான் விடிவு பிறக்கும். தமிழ் ஈழம் கிடைக்குமா - கிடைக்காதா? நம்புங்கள் - நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை மலரும். ஆனால், இது கேட்கும் பொருளாக கிடைக்காது என்பதை உணர வேண்டும்.

தமிழினம் தப்பிப் பிழைக்க வேண்டுமெனில் இதைவிட வேறு வழியில்லை என்பதை உணர வேண்டும். இலங்கை பாராளுமன்றத்தில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி தந்தை செல்வா மிகத் தெளிவான கருத்தை எடுத்துச் சொன்னார்.

மலேசியாவின் ஈப்போவில் பிறந்த வேலுப்பிள்ளை செல்வநாயகம், தமிழ் ஈழத்தின் உயிலை அன்றைக்கு பாராளுமன்றத்தில் எடுத்து வாதாடினார்.

இன்று ஈழத்தின் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தத் தாகம் - தமிழீழத் தாயகம் என்று குரல் எழுப்புகிறார்.

மிகத் தெளிவான சிந்தனையோடு தந்தை செல்வநாயகம் முன்பு சொல்லிய செய்தியைத்தான், எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று செய்து வருகிறார் என்று சொன்னார்.

இலங்கையில் மிகச் சிக்கலான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இனச் சிக்கலால் பொருளியல் படுமோசமாகி இருக்கிறது. இதைத் தீர்க்க சிங்களவர்கள் தயங்குவாராயின் 2 கோடி மக்களைக் கொண்ட இலங்கையின் எதிர்காலத்தை ஒரே ஒரு மனிதன் தான் தீர்க்கப் போகிறார் என்று சொல்கின்ற கூற்று இன்று உருவாகியிருக்கிறது. அந்த மனிதன் தான் தமிழீழத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார் என்று சக்தி ஸ்ரீகந்தா என்பவர் ஒரு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒன்று, விடுதலையை நாம் பெற வேண்டும் என்கிற விதையைத் தலைவர் இப்போது விதைத்துள்ளார். நாங்கள் இப்போது எதிர்பார்ப்பது இந்திய துணைக் கண்டமே பாரதத் தாயே, ஈழத் தமிழர்களைக் காப்பது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடல் கடந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற காவல் தெய்வமாம் கலைஞர் கருணாநிதி எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சில நேரங்களில் எங்களுக்கு கவலை தருகின்ற வகையிலே கலைஞர் கருணாநிதி சோர்ந்திருக்கிறார். மீண்டும் தமிழர்களின் விடயத்தில் தலையிட்டு இந்தியாவிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். கலைஞர் கருணாநிதி வாழ்கின்ற காலத்தில் வரலாற்றைப் படைக்கின்ற அளவுக்கு இந்திய அரசிடம் தொடர்ந்து `ஈழத்தில் என் தமிழினம் கண்ணீர் சிந்துவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்பதை எடுத்துரைக்க வேண்டும்.

பெயருக்கு நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நடைமுறையில் நான் நாடோடியாக இருக்கிறேன்.

உலகெல்லாம் வாழ்கின்ற தமிழ் மக்கள் ஈழத்தில் என்ன நடைபெறுகிறது என்ற கேள்வியையும் இந்த மக்களுக்கு விடிவுண்டா? வாழ்வுண்டா? விமோசனம் உண்டா? என்கின்ற கேள்விகள் எழுந்த வண்ணமாக உள்ளன. ஈழ மக்கள் தினமும் அழிந்து வருகிறார்கள். வருகின்ற செய்திகளில் 200 - 300 பேர் மரணமடைகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதுவெல்லாம் உண்மையல்ல.

இந்த உண்மைகளை உலகத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எடுத்துரைப்பதும் என் பணிகளில் ஒன்றாக இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம். வாழ்வா - சாவா என்ற நிலை இப்போது அமைந்துள்ளது.

இதற்கொரு விளக்கம் கொடுக்காத நிலையில் நாம் சும்மா செத்துக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்த்தத் தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.

மலேசிய நண்பன் பேட்டி

மலேசிய நண்பன் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் ஈழவேந்தன் கூறியிருப்பதாவது;

தினமும் சாவுகள், பேரழிவுகள், திட்டமிட்ட அழிப்பு, பண்பாடு சீர்குலைவு,பொருளாதார அழிவு, சிங்களவர்களின் தீராத வெறியாட்டம் இதுதான் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினராகிய என்னால் கூட யாழ்ப்பாண மக்களை சந்திக்க முடியவில்லை. அவர்களின் துயரங்களை, அவலங்களை கேட்டறிய முடியவில்லை. சாவின் மத்தியில் வாழும் எம் மக்கள் தினமும் சாவை எதிர்நோக்கியவர்களாக வாழும் அவலம் நீடிக்கிறது.

எல்லை கடந்த வறுமை, ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகளின் மரண ஓலங்கள், மருத்துவ வசதிகள் இன்றி வாழும் கர்ப்பிணித் தாய்மார்கள் இவ்வாறு இலங்கை சிங்கள அரசு, தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் புற்று நோயை உருவாக்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழீழம் மலர வேண்டும்! இதுதான் இறுதித் தீர்வு. வேறு எந்தவித தீர்வாலும் இலங்கைத் தமிழர்கள் திருப்தி அடைய மாட்டார்கள்.

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, இலங்கைத் தமிழர்கள் தங்களது குடியுரிமையை இழந்தார்கள். முடியுரிமையையும் இழந்தார்கள். வாக்குரிமை பறிக்கப்பட்டது. மொழியுரிமை அபகரிக்கப்பட்டது. தொழில் மற்றும் மத உரிமைகள் மறுக்கப்பட்டன.

இழந்த இவ்வனைத்தையும் தமிழர்கள் பெற வேண்டுமானால் தமிழீழமே தீர்வாகும். அதன்பிறகு தான் அங்கே அமைதி மலரும். சமாதானமும் சமத்துவமும் தழைத்தோங்கும். நாளை அமையவிருக்கும் இந்த தமிழீழம் உலகத் தமிழர்களுக்கு தாய்வீடாகத் திகழும்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, மறைந்திருந்து தாக்கும் யுக்தியை மேற்கொண்டார். ஆனால் தற்போது மகிந்தா சீறிப்பாயும் பாம்பாக வெளிப்படையாகவே தாக்குகிறார்.

அனைத்துலகத்தின் முன்னிலையிலும் கையொப்பமிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையே மீறிய இவரிடம் எதை எதிர்பார்ப்பது? ஆனாலும், நாங்கள் சிங்களவர்களோடு நட்புப் பாராட்டவே விரும்புகிறோம். நண்பர்களாக வாழவே விரும்புகிறோம். அவர்களோ விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள். காரணம் அதிகாரத்தை இழந்து விடுவோமா என்று பயப்படுகிறார்கள்.

மகிந்தா கூறும் ஒற்றையாட்சி `ஒழித்துக் கட்டி விடும்'. நாங்கள் கோரும் இணைப்பாட்சிதான் `இனிய வாழ்வு தரும்'.

கே: இலங்கை பிரச்சினையை கண்காணிக்க சிறப்புப் பிரதிநிதி ஒருவரை அமெரிக்க அதிபர் புஷ் நியமிக்க வேண்டுமென அந் நாட்டு எம்.பி.ஒருவர் கோரியுள்ளது பற்றி...?

ப: அந்த எம்.பி.க்கு அந்த உரிமை உண்டு. இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவால் உருப்படியாக ஏதும் செய்ய முடியாது. காரணம் உலகின் முதல் பயங்கரவாதியே அமெரிக்காதான். வியட்நாம், ஈராக் போன்ற நாடுகளில் தப்புக் கணக்கு போட்டு பேரழிவுகளையும் மனித அவலங்களையும் ஏற்படுத்திய அமெரிக்காவால் இலங்கை பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? ஈழத் தமிழர்களை அமெரிக்கா ஆதரிக்குமேயானால் எங்கள் பிரச்சினையில் தலையிட அமெரிக்காவை வரவேற்போம்.

கே: இலங்கையே ஒரு குட்டி நாடு. அதிலே தனி நாடு கேட்கிறீர்களே...நியாயமா?

ப: பரப்பளவில் சிங்கப்பூர் யாழ்ப்பாணத்தை விட சிறியது. அந் நாடு தனிநாடாக அங்கீகரிக்கப்பட்டு இன்று உலகத்திற்கே முன் மாதிரியாக திகழவில்லையா?

25,000 சதுர மைல் கொண்ட இலங்கையில் தமிழர் பகுதியின் பரப்பளவு 2,500 சதுர மைலாகும். ஏற்கனவே எங்களிடம் இராணுவம், கடற்படை, பொலிஸ் நீதித்துறை, மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள் என அனைத்தும் உள்ளன. புதிதாக நாங்கள் எதையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே எங்களிடம் இருக்கிறது.இவற்றுக்கு உலகின் அங்கீகாரத்தைத் தான் நாங்கள் கேட்கிறோம்.

காரணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வரும்போது உலகத் தொடர்பை துண்டித்துவிட்டு வாழ நாங்கள் விரும்பவில்லை.

கே: புலிகள் அமைதிப் பேச்சுக்கு திரும்பும் வரை தாக்குதல் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளாரே?

ப: அப்படி அவர் சொல்லா விட்டால்தான் வியப்பு. கட்சி தாவுவதில் வல்லவரான அவரின் இந்த பொருளற்ற பொருத்தமற்ற கேள்வியை நான் பொருட்படுத்தவில்லை.

கே: மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்குமா?

ப:ஈழ மக்கள் என்றுமே அமைதியை விரும்புகிறவர்கள். தன்மானத்தோடு தற்காப்போடு வாழ்வதற்கு ஒரு அரசியல் அமைப்பும் சுய உரிமையோடு சுதந்திரமாக எம் மண்ணில் நாங்கள் வாழும் நிலை உருவானால் அமைதி திரும்ப வாய்ப்புண்டு. மாறாக, பொருளற்ற முறையில் அமைதி என்றால் அது வராது தனி ஈழத்தை ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை நடக்கும்.இனி எதையும் விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை.

கே:இலங்கை முஸ்லிம்களை பிரித்து பார்க்கிறீர்களா?

ப: இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களோடு பின்னிப் பிணைந்தவர்கள். ஈழத்தைப் பற்றி தமிழ்க் கவிஞர்களை விட இஸ்லாமிய கவிஞர்கள் தான் அதிகமாக பாடியுள்ளனர். ஆகவே, நாங்கள் முஸ்லிம்களை பிரித்துப் பார்க்கவில்லை, இணைத்தே பார்க்கிறோம்.

கே: இலங்கைக்கு வருமாறு தமிழக முதல்வர் கருணாநிதியை அதிபர் மகிந்தா அழைத்துள்ளது பற்றி...?

ப:இளம் வயதில் இந்தி எதிர்ப்புக்காக தண்டவாளத்திலேயே தலையை வைக்கத் துணிந்து இன்று 84 வயதிலும் உலகத் தமிழர்களின் தன்னிகரற்ற தலைவராக வலம் வரும் கலைஞர் அவர்கள் மகிந்தாவை நம்பி இலங்கைக்கு போக மாட்டார். பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியையே கொலை செய்ய முயன்ற சிங்கள இராணுவத்தின் பாதுகாப்பை நம்பியா கலைஞர் செல்வார்? உலகில் இன்று அரசியல் முதிர்ச்சி பெற்ற ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் தான். எக் காரணம் கொண்டும் சிங்களவர்களை நம்பி அவர் இலங்கைக்கு போக மாட்டார்.

ஐயா என்னங்க இப்படியே சொல்லிக்கிட்டு நாமளும் இருக்கிறம், அகிலமும் பார்த்துக்கொண்டு இருக்குது. சத்திய சாயி பாபா வேற வந்து உங்களை பார்க்கிறார். அப்ப நீங்க எம் பிரச்சனையைத்தீர்த்தால் நீங்க தான் கோ எங்களுக்கு சிவபெருமான். இன்று இரவு நித்திரை முழிக்கப்போறன் சிவா விஸ்ணு கோவிலில ஆகையினால் அடி முடி தேடி நாங்க பாடுரோமுங்க நீங்க அசத்தமாட்டீங்களோ பின்ன நானே சொல்லவன் நீங்க தான் சிவன் எண்டு.ந்வீங்க தானே சொன்னீங்க கடவுளை நாம் தேடி போகாமல் அவர் நாம் என்ன செய்யிரம் என்டு பார்த்து விரும்ம்பி எம்மை தேடி வரவேன்டும் எண்டு. ஆக ந்வீங்க எமக்கு நல்லது செய்யுங்க இந்த உலகமே உங்கலதாம் திரும்ம்பிப்பார்க்கும். சாயிபாபாவும் உங்கட பக்க்தராமாரிடு வாருங்கோ. யாருக்கு யார் மோதிரம் கொடுக்கிறது. என்ன கருணாநிதியா கடவுளா...எங்க பார்ப்பம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் இதயங்களில் எம்ஜிஆரிற்கு எப்போதும் ஓரிடமுண்டு,

“எம்ஜிஆர் இன்னும் கொஞ்சக்காலம் இருந்திருந்தால்

தமிழ் ஈழத்தினை நாம் பத்து வருடம் விரைவாக அடைந்திருப்போம்” என்பதாக!

கலைஞர் அவர்களிற்கும் ஓரிடமுண்டு

“தமிழீழத்தை அமைத்துத் தந்தவர்” என்பதாக அல்லது

“இவர் கொஞ்சக்காலம் கூட இருந்ததால் தமிழ் ஈழத்தினை நாம்

பத்து வருடம் பிந்தி அடைந்தோமே” என்பதாக!!

கலைஞரே,

நீங்கள் தமிழீழப் பாதையில் படிக்கல்லா தடைக்கல்லா?

படிக்கல்லானால் ஏறி ஓடுவோம்!

தடைக்கல்லானால் தாண்டி ஓடுவோம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞரே!

அரை நூற்றாண்டுகள் தமிழை எழுதி

தேர்ந்த உங்கள் கையில்

இன்று

ஈழத்தமிழரின்

வரலாறை எழுதும்பேனா தரப்பட்டுள்ளது.

எழுதுங்கள்!

எட்டுக் கோடி இதயங்களும்

உங்கள் கைகளையே பார்க்கின்றன

எழுதுங்கள்!!

மன்மோகனுக்குக் காதல் கடிதத்தையல்ல

ஈழத்தமிழனின் வரலாறை!!

நேற்று தண்டவாளத்தில தலைவைத்து எங்கள் தமிழ்மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்திய தலைவா கருனாநிதி அவர்களே , இன்று எந்த வயதிலும் தன்நம்பிக்கை, சுயமரியாதை இருந்தால் ஆயிரம் வயதுவரை போராடி வெற்றிபெரலாம் என்று உங்கள் பகுத்தறிவினை எமக்கு ஊட்டிக்க்கொண்டிருக்கும் எம் தமிழ் ஆசானே, மறவனே.

உன் வீரம் தான் எமக்கு இன்று தேவை, உங்கள் அரசியல் ஆணக்கியத்தால் அந்த ஆண்டவனே வீடு தேடி வரவளைத்த தமிழ்ச் சிங்கமே. ராஜ ராஜ சோழனே.. என்னும் எப்படி எப்படி எல்லாம் உங்களை நாம் புகழ்வோம். உந்த அமெரிக்காக்காரனுக்கு கொஞ்சம் கூப்பிட்டு தமிழானா கொக்க்கா என்று இரண்டு வீர வசனம் பேச மாட்டீங்களா. உங்களுக்குத்தானே அல்வா எப்படி சூசகமாக குடுக்கதெரியுமே. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.