Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கீரிகட்டு அணியின் திருவிளையாடல்

Featured Replies

இந்திய அணி நேற்று இலங்கைகூட தோத்த பின்னர் இந்திய ரசிகர்கள் தமது வீர திருவிளையாடலை ஆரம்பித்துல்லனர்

f_73542m_021a4d0.gif

f_123m_e712f9f.jpg

Edited by வானவில்

பேசாம என்னை,தலையையும் எடுத்தால் இந்திய டீம் நல்லா வந்திடும்

:(

இது என்ன கொடுமை..இப்படியும் செய்வார்களா?

இது என்ன கொடுமை..இப்படியும் செய்வார்களா?

என்ன யம்முவையும்,வானவில்லையும் டீமுக்கு எடுக்க சொன்னதோ

:P

  • தொடங்கியவர்

பேசாம என்னை,தலையையும் எடுத்தால் இந்திய டீம் நல்லா வந்திடும்

:unsure:

:lol::lol: ஆள விடுங்க சாமி :angry:

  • தொடங்கியவர்

f_Front1lm_6e57d04.jpg

:unsure:

  • தொடங்கியவர்

11 பேரை பாடை கட்டி தூக்கி வந்தனர்: சவ ஊர்வலம் நடத்திய கிரிக்கெட் ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்றுக்கான தகுதிப் போட்டி யில் இந்தியா இலங்கையிடம் மிக மோசமாக தோற்றது. இதன் மூலம் இந்தியா சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இந்தியாவின் தோல்வி கிரிக் கெட்ரசிகர்களை கடும் அதிர்ச் சிக்குள்ளாக்கியது.

இந்த அதிர்ச்சி ஆவேச மாகி மாறி நாடு முழுவதும் கிரிக்கெட் வீரர்களை கண் டித்து பெருமளவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. வட மாநிலங்களில் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கு சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களது கோபத்தை தணித்துக்கொண்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் கான் பூரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்று திரண்டனர். 11 பேருக்கு கிரிக்கெட் வீரர்களின் சீருடை அணிந்து பிணம் போல் ரோட்டில் படுக்க வைத்த னர். அருகில் மற்ற ரசிகர்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். சிறிது நேரம் அழுது விட்டு 11 பேரையும் பாடையில் வைத்து தூக்கி இறுதி ஊர்வலம் சென் றனர்.

ஊர்வலத்தில் கிரிக்கெட் வீரர்களின் படங்கள், உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. வழி நெடுக ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களும் கிரிக்கெட் வீரர்களை தீட்டித் தீர்த்தனர்.

இதே போல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் கிரிக்கெட் ரசிகர்கள் இறுதி ஊர்வலம் நடத்தினார்கள். இதில் தெண்டுல்கர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தனர்.

நடுரோட்டில் வீரர்களின் படங்களும், உருவ பொம்மைகளும் தீ வைத்து கொளுத் தப்பட்டன.

Lankasri Sports : Pathma

  • தொடங்கியவர்

கங்கையில் அஸ்தி கரைத்து போராட்டம்

வாரணாசியில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய வீரர்களின் படங்களையும் உருவ பொம்மைகளையும் எரித்தனர்.

பின்னர் சாம்பலை ஒரு பானையில் போட்டு ஊர்வலமக கொண்டு சென் றனர்.

கங்கை நதியில் அந்த சாம்பலை தூவி அஸ்தி கரைப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். முடிவில் ரசிகர்கள் மொட்டை போட்டனர்.

சில ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களின் படங்களை எரித்து கங்கையில் வீசினர். அலகாபாத்தில் டிராவிட், தெண்டுல்கர், டோனி ஆகியோரது படங்களை தார்பூசி அழித்தும் தீவைத்து எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்

  • தொடங்கியவர்

கொல்கத்தாவில் கங்குலி வீட்டின் முன் ரசிகர்கள் மொட்டை போட்டு கதறி அழுதனர்.

இந்திய அணி இலங்கை யிடம் தோற்றதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது.

வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். திடீர் என்று சிலர் கங்குலிக்கு எதிராக கோஷம் போட்டனர். வீட்டின் முன் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்திய வீரர்கள் நமக்கு தலை குணிவை ஏற்படுத்தி விட்டனர். கொல்கத்தாவில் கிரிக்கெட் ரசிகர்களின் படங்களே இருக்க கூடாது என்று ரசிகர்கள் கூறி நகரில் ஆங்காங்கே இருந்த வீரர்களின் படங்களையும், போஸ்டர்களையும் தார்பூசி அழித்தனர்.

டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும், இது இந்திய கிரிக் கெட் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம் என்று கொல்கத்தா கிரிக்கெட் ரசிகர் அபிஜித் முகர்ஜி கூறினார்.

  • தொடங்கியவர்

இந்திய அணி படுதோல்வி: ரசிகர்கள் கொந்தளிப்பு- சென்னையில் தெண்டுல்கர், கங்குலி படங்கள் எரிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் இத்தனை நாட்கள் இருக்கின்றன என்று தினமும் விரல்களை எண்ணி எண்ணி இந்தியாவில் கோடான கோடி ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தார்கள்.

எதிர்பார்த்தபடி போட்டி தொடங்கியது. ஆனால் நேற்றைய ஆட்டம் மூலம் இனி ஜென்மத்துக்கும் உலக கோப்பையை பற்றியே நினைத்து பார்க்காதபடி செய்து விட்டனர் இந்திய வீரர்கள்.

சில முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் இந்த தடவை இந்தியாவுக்குத்தான் உலக கோப்பை என்று ஜோதிடம் கூறினார்கள். ரசிகர்களும் அதை நம்பினார்கள். ஏப்ரல் 28-ந்தேதி நம்மவர்கள் கையில் உலக கோப்பை இருக்க போகிறது என்று விதம், விதமாக கனவு கண்டார்கள். கனவு பொய்த்தால் கூட பரவாயில்லை. இனி கனவே காண முடியாதபடி தூக்கத்தையே பறித்து விட்டனர்.

தகுதி சுற்றில் இந்தியா இடம் பெற்று இருந்த `பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், பெர்முடா ஆகிய அணிகள் இடம் பெற்று இருந்தன. இதில் வங்காளதேசம், பெர்முடா ஆகியவை `சொத்தை' அணிகள் அவற்றை தூக்கி கடாசி விடலாம். இலங்கை சமீபத்தில்தான் நம்மிடம் அடி வாங்கி ஓடியது. எனவே அதை கண்டும் பயம் இல்லை. `பி' பிரிவில் நாம்தான் ஜாம்பாவான் என்று ஒவ்வொரு ரசிகரும் நினைத்து கொண்டிருந்தார்கள்.

முதல் போட்டியிலேயே வங்காளதேசத்திடம் பலத்த அடி வாங்கிய போதும் கூட ஏதோ ஆட்டத்தின் போக்கு மாறி விட்டது மைதானம் சரியில்லை என்று நமக்குள்ளே சாக்குபோக்கு கூறிக்கொண்டோம்.

அது உண்மைதான் என்பது போல பெர்முடாவை இந்திய வீரர்கள் துவைத்து எடுத்தார்கள். இந்தியா 413 ரன் குவித்தது. உலக கோப்பை போட்டியிலேயே இதுதான் அதிகபட்ச ரன். இந்தியா சாதனை படைத்ததால் ஒவ்வொரு ரசிகரும் காலரை தூக்கி விட்டு கொண்டனர்.

இதே போல இலங்கையையும் புரட்டி எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ஏற்கனவே வங்காளதேசத்திடம் தோற்று இருந்ததால் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் கூட இலங்கை தானே ஜெயித்து விடலாம் என்றே பெரும்பாலோர் நினைத்தனர்.

அந்த ஆவலில் நேற்று இரவு கிட்டத்தட்ட ஒட்டு மொத்த இந்தியாவே தூக்கத்தை மறந்து விட்டு டி.வி. முன்பு அமர்ந்து இருந்தது. இலங்கை அணி வீரர்கள் பேட்டிங்கை 254 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினார்கள். இந்த ரன்களை எடுப்பது கஷ்டம் இல்லை. கங்குலி, உத்தப்பா, ஷேவாக், தெண்டுல்கர், டிராவிட், யுவராஜ்சிங், டோனி என பெரிய பேட்ஸ்மேன் கூட்டமே இருக்கிறது. பார்த்து கொள்வார்கள் என்று நினைத்தனர். உத்தப்பா, கங்குலி விழுந்ததுதான் தாமதம் மற்றவர்களும் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். 185 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தனர்.

அனுபவ வீரர்கள் கங்குலி, தெண்டுல்கர் அதிரடி வீரர்கள் உத்தப்பா, டோனி, யுவராஜ்சிங் என அனைவரும் சொதப்பி இந்தியாவை முதல் சுற்று ஆட்டத்திலேயே உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேற வைத்து விட்டனர்.

இது இந்திய ரசிகர்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. போட்டியை டி.வி.யில் பார்த்தவர்கள் பலர் கண்ணீர் சிந்தினார்கள். பரீட்சை நேரம் என்ற போதிலும் கூட படிப்பை மறந்து விட்டு டி.வி. முன்பு உட்கார்ந்திருந்த குழந்தைகளும் தாங்கி கொள்ள முடியாமல் துடித்தனர்.

ஏதோ நடக்க கூடாத துக்க சம்பவம் நடந்து விட்டது போல நாடே சோகத்தில் மூழ்கியது.

இது கடும் கோபமாக மாறி வீரர்களுக்கு எதிராக ரசிகர்களை திரள செய்துள்ளது. நாடு முழுவதும் வீரர்களின் படங்களை எரித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்து கொண்டனர். வீரர்களை கடுமையாக விமர்சித்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். அவர்களும் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டம், படங்கள் எரிப்பு என கதி கலக்கி விட்டனர்.

சென்னை ஓட்டேரி சிவசண்முகபுரம் `ஏ' பிளாக்கில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா உலக கோப்பையை வெல்லும் என்ற கனவுடன் ரூ. 2 ஆயிரம் செலவில் டிஜிட்டல் போர்ட்டு வைத்து வாழ்த்தினார்கள். இந்திய அணியின் தோல்வியால் அந்த பகுதி ரசிகர்கள் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரசிகர்கள் தெண்டுல்கர், கங்குலி, டோனி போன்றோரின் படங்களை கையில் வைத்து செருப்பால் அடித்தனர்.

ஒரு சிலர் ஆவேசத்தை அடக்க முடியாமல் கையில் தீப்பந்தத்துடன் வந்து கிரிக்கெட் வீரர்களின் படங்களை தீயிட்டு கொளுத்தினர். வீரர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர். சிலர் வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தனர்.

புரசைவாக்கம் ஜவகர்நகர் மைதானத்தில் கவுன்சிலர் மாலினி ரமேஷ்கண்ணன் ஏற்பாட்டில் ராட்சத திரை கட்டி கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட்டது.

விடிய விடிய ஆவலுடன் கண் விழித்து போட்டியை ரசித்தனர். இந்தியா தோற்றதும் அவர்கள் ஆவேசம் அடைந்தனர். `இவனுக உருப்பட மாட்டானுக...' என்று பெண்கள் ஏக வசனத்தில் திட்டியபடி வீடு திரும்பினார்கள்.

இதுபற்றி கூறிய மாலினி ரமேஷ்கண்ணன், "இவ்வளவு மோசமாக நமது வீரர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. சொதப்பலாக விளையாடியதை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. விளம்பரங்களில் கவனம் செலுத்துகிறார்கள். விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் 100 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பு இருப்பதை மறந்து விட்டார்கள்.

வங்காள தேசத்துடன் ஆடும்போதே பார்த்தேன். நமது வீரர்கள் கிழடுகள் ஆகி விட்டார்கள். அவர்களால் இளைஞர்களிடம் ஈடுகொடுக்க முடியவில்லை. அணியில் இளைஞர்களை சேர்க்க வேண்டும்'' என்றார்.

ரசிகர்கள் பலரும் இதே போல கொட்டி தீர்த்தனர்.

விவேக்ராஜ்:- இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஒருவருமே நாட்டிற்காக விளையாடவில்லை. அனைவரும் சுய நல பேய்கள். ஏதாவது சொத்தை டீம் கிடைத்தால் போதும் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி போல போட்டு அடிச்சு மிதிப்பாங்க. இவங்கல்லாம் ஏன் பிளைட்டை புடிச்சு கிரிக்கெட் விளையாட போறாங்க. காசுக்காக நாட்டை விற்கவா? துட்டு வாங்கிட்டு தோத்துட்டாங்க. இவங்களை நாட்டுகுள்ளேயே நுழைய விடக்கூடாது.

ரியாஸ்:- தெண்டுல்கருக்கு வயசாகி போச்சு... விருப்ப ஓய்வு பெறுவது நல்லது. கங்குலிக்கு கையில பவரூ இல்லை. அவர் பயந்து பயந்து நடுங்குறாறு. சரியில்லாத வீரர்களை மாற்றணும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கனும். பதான் இருக்கும் போது `டக்' புகழ் வீரர்களெல்லாம் டீமில் எதற்கு.

2 சிக்சர் அடிச்சா 4 விளம்பரத்துல நடிக்கறாங்க. முதல்ல இந்திய வீரர்கள் விளம்பரத்தில் நடிக்க தடை விதிக்க வேண்டும்.

அப்பன்ராஜ்:- பயம்... பயம்... பயம்.. பேசாம மேட்ச் தொடங்கின உடனேயே `நாளைக்கு மீட் பண்ணுவோம்' ன்னு வடிவÚலு ஸ்டைலுல சொல்லிட்டு போயிடலாம். எதற்கு இப்படி கேவலமா தோற்கனும் அத்தனை வீரர்களையும் மாத்தனும். பணத்துக்காக ஆடறாங்க எவரும் சரியில்லை. நாட்டிற்காக விளையாட எத்தனையோ இளம் வீரர்கள் இருங்காங்க. அவர்களுக்கு வாய்ப்பு வழங்கனும்.

நாவலரசு (12 வயது சிறுவன்):- நைட்டுல்லாம் மேட்ச் பார்த்து கண்ணு ரெண்டும் வீங்கிப் போச்சு. அதுவும் நம்பாளுங்க தோற்றதால் மனசே தாங்கல. எல்லாருகிட்டேயும் ஒன்று கேக்குறேன். 100 கோடி பேர் இருக்குற இந்தியாவுல கிரிக்கெட்டுக்கு தெண்டுல்கரை விட்டா ஆளே கிடையாதா... நல்லா பார்த்தாங்கன்னா தமிழ்நாட்டிலே தெருவுக்கு 2 நல்ல வீரர்கள் கிடைப்பார்கள்.

என்னை விட்டால் கூட 2 ரன்னாவது எடுத்து வருவேன். "டக்'' அவுட் ஆகறாங்க. நம்ம வீரர்களை புலி என விளம்பரத்தில் சொல்கிறார்கள். அவ்வளவும் எழுந்து நடக்க முடியாத கிழட்டு புலிகள்.

ஜாகீர்கான் ஓட்டல் மீது கல்வீச்சு

இந்திய வீரர் ஜாகீர்கான் மராட்டிய மாநிலம் புனேயில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்தியா தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சிலர் அந்த ஒட்டலுக்கு சென்றனர். அங்கு ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் ஓட்டல் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீரர்கள் தேர்வில் அரசியல் குறுக்கீடு: கேப்டன் பொறுப்பில் இருந்து டிராவிட்டை தூக்க வேண்டும்- திருச்சி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவேசம்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி... கடந்த 13-ந்தேதி ஆரவரத்துடன் ஜமைக்காவில் தொடங்கியது. கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை உள்ளது.

இதனால் உலககோப்பை தங்களுக்கு என்றுதான் ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் கனவில் மிதந்து வருகிறார்கள். போட்டியில் ஒவ்வொரு நாட்டு வீரர்களும் கடமை உணர்ச்சியுடனும் விளையாடி வருகிறார்கள்.

கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8க்கு ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நிïசிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்று உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் 8 க்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதற்கு அடுத்தபடியாக நேற்று நடந்த வாழ்வா, சாவா ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியிடம் தோற்றது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்திடம் படுதோல்வி அடைந்தது. தற்போது இலங்கையிடமும் இந்தியா தோல்வி அடைந்து உள்ளதால் 110 கோடி இந்திய மக்களின் உலக கோப்பை கிரிக்கெட் கனவு கலைந்துள்ளது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தாலும் பெர்முடா அணியுடன் சிறப்பாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை இந்தியா அணி தட்டி பறித்தது.

இத்தகைய சந்தோஷங்கள் தற்போது ரசிகர்களுக்கு சின்ன பிள்ளைக்கு முட்டாய் கொடுப்பதாக கூறி ஏமாற்றும் கதையாகி விட்டது. இதனால் உயிரை கூட தியாகம் செய்யும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மன வேதனையில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து திருச்சி கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை பலவாறு கொட்டி தீர்த்தனர்.

இதில் சில ரசிகர்களின் கருத்துக்கள் வருமாறு:-

சுந்தர் (கல்லூரி மாணவர்) கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணி முதல் ஆட்டத்திலேயே ரசிகர்களை ஏமாற்றியது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாகி விட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களின் கோப்பை கனவு கலைந்து விட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடமை உணர்வுகளுடன் விளையாடவில்லை. இதுதான் தோல்விக்கு முதல் காரணம்.

எத்தனையோ மக்கள் தங்களது நேரங்களை வீண்அடித்துக் கொண்டு நமது நாடு விளையாடுகிறது என்று டி.வி.முன்பு தவம் கிடக்கிறார்கள். அவர்களது கனவுகள், ஆசைகளை எல்லாம் நேற்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தகர்த்து எரிந்து விட்டனர். எனவே இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களை களையெடுக்க வேண்டும். அப்போதுதான் நமது அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறினார்.

சிலம்பரசன்:- (எம்.எஸ்.சி. மாணவர்) விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு. ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான். இதில் வெற்றி பெற்று இந்தியாவின் பெருமையை நிலை நாட்ட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

மற்ற நாடுகளைப் போல் நம்நாட்டு வீரர்கள் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை அதிரடியாக விளையாடாதது தோல்விக்கு முதல் காரணம். நேற்றைய ஆட்டத்தில் பவுலர்களின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. எனவே திறமையான பவுலர்களை விளையாட்டில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வெற்றி இலக்கை எளிதில் அடைய முடியும்.

இது தவிர இலங்கையின் பந்து வீச்சை இந்திய அணியின் வீரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. எனவே பேட்ஸ்மேன்களும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். இந்திய அணியில் மாற்றங்கள் இருந்தால்தான் மாறுதல்கள் ஏற்படும். எனவே டெண்டுல்கர், டோனி, ஹர்பஜன்சிங் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

சரவணகுமார் (மாணவர்) கூறியதாவது:- ரசிகர்களுக்கு இருக்கிற கடமை உணர்வு கூட வீரர்களுக்கு இல்லை என்பது வேதனைக்குரியதாகும். இந்திய வீரர்களுக்கு திறமைகள் இருக்கிறது. அந்த திறமைகள் சில நேரங்களில், சில வேளைகளில் மறைக்கப்படுகிறது. இதுதான் என்ன காரணம் என்று தெரியவில்லை. விளம்பரத்தில் நடிக்கும் நமது வீரர்கள் நிஜ விளையாட்டிலும் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள். வீரர்கள் தேர்வு செய்வதில் அரசியல் குறுக்கீடு உள்ளது. வீரர்களிடையே ஒற்றுமையில்லை. வெற்றிப் பெற திட்டமிட்டு விளையாடவில்லை.

இவ்வாறு மோசமாக விளையாடும் வீரர்களை கங்குலி போல வெளியே வைத்துவிட்டு விளையாட அனுமதி வைக்க வேண்டும். அப்போதுதான் வீரர்களுக்கு புத்தி வரும். டிராவிட் கேப்டன் பொறுப்பு பலிக்கவில்லை. இதனால் கேப்டனை மாற்றி இந்திய அணியின் திறமையான புதுமுகங்களை கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நமது அணி வெற்றி வாய்ப்பை பெறும் என்று கூறினார்.

பிஷப் ஹீபர் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு தமிழ் பாடப்பிரிவில் படிக்கும் மாணவி சத்யபிரியா கூறியதாவது:-

தேர்வுக்கு கூட இப்படி கண்விழித்து படித்தது இல்லை. ஆனால் நேற்றைய ஆட்டத்தை முடியும் வரை பார்த்தேன். வருத்தமும், ஏமாற்றமும்தான் முடிவில் கிடைத்தது. மகிழ்ச்சி கிடைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. இது தோல்விக்கு முதல் காரணம். மேலும் முதல் வீரர் குறைந்த ரன்னில் `அவுட்' ஆகி விட்டால் அதே சொற்ப ரன்களுடன் அவுட் ஆகிவிட வேண்டும் என்று வீரர்கள் லட்சியமாக உள்ளனர்.

எனவே இந்திய கிரிக்கெட் அணியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை எட்ட முடியும்.

அதே கல்லூரியில் படிக்கும் வித்யா என்ற மாணவி கூறியதாவது:- திறமையான வீரர்கள் இருந்தும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8-க்கு இந்திய அணி தகுதி பெறாதது வேதனைக்குரிய விஷயம் ஆகும். நம் அணியின் நேற்றைய ஆட்டத்தில் பந்து வீச்சு மிக மோசமக இருந்தது.

மேலும் ஒரு வீரர் நன்றாக ஆடினால் நமது அனைத்து வீரர்களும் போட்டி போட்டு கொண்டு நன்றாக ஆடுகிறார்கள். திறமையான வீரர்கள் தினேஷ் கார்த்திக், பதான் போன்றவர்களை சேர்க்காதது அணியின் தோல்விக்கு ஒரு காரணம். 110 கோடி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நினைத்து இந்திய அணி வீரர்கள் விளையாடி இருந்தால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் எவரும் சரியாக விளையாடவில்லை. இனி மேல் இதே போல் தவறுகளை செய்யாமல் இந்திய அணி வெற்றிக்கு வீரர்கள் பாடுபட வேண்டும்.

இவ்Öறு அவர் கூறினார்.

மாலைமலர்

இது நல்ல விடயம். இத்துடன் கிறிக்கட்டை மறந்துவிட்டு எல்லோரும் உருப்படியான ஏதாவது வேலையில் ஈடுபடட்டும். அரசியல், சூதாட்ட, பண ஆதிக்க, தலைக்கணம் பிடித்த கிறிக்கட் அணியில் மாற்றங்கள் ஏற்படட்டும்.

  • தொடங்கியவர்

இது நல்ல விடயம். இத்துடன் கிறிக்கட்டை மறந்துவிட்டு எல்லோரும் உருப்படியான ஏதாவது வேலையில் ஈடுபடட்டும். அரசியல், சூதாட்ட, பண ஆதிக்க, தலைக்கணம் பிடித்த கிறிக்கட் அணியில் மாற்றங்கள் ஏற்படட்டும்.

லீசா நீங்க இந்திய கிரிக்கட் ரசிகர்களப் பற்றி தப்புக் கணக்கு போட்டீங்க அவங்கள பறி டெரியது, நாளைக்கு என்னும் ஒரு மட்ச்சில இந்திய ஜெயிக்க இப்போ திட்டினவங்கலயெல்லாம் தலைல வச்சு ஆடுவாங்க :P

:unsure::lol: ஆள விடுங்க சாமி :angry:

யார் இப்பை உம்மை பிடித்து கொண்டு இருக்கினம்

:angry: :angry:

  • தொடங்கியவர்

உம்மை நம்பி நான் எப்படி இந்திய அணியில் சேர்வது.......? :angry: :angry:

இது என்ன கொடுமை..இப்படியும் செய்வார்களா?

இது என்ன இதுக்கு மேலேயே செய்வார்கள். வென்றால் கொண்டாடுவதும் தோற்றால் போட்டு மிதிப்பதும் அங்கு சர்வ சாதாரணம். அதீத எதிர்பார்பும் மீடியாக்களில் ஊதி ஊதி வளர்க்கப்பட்ட இந்திய அணி குறித்த பிரமாண்ட இமேஜும் இதற்கு காரணம். அந்த இமேஜ் உடைந்து நிஜம் வெளியில் தெரியும் போது ரசிகர்களால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.

உம்மை நம்பி நான் எப்படி இந்திய அணியில் சேர்வது.......? :angry: :angry:

என்னை நம்பினோர் கை விடப்படார்

:unsure:

  • தொடங்கியவர்

இந்திய அணி வீரர்களெல்லாம் விளம்பரத்தில் காற்றில் பாய்ந்து கட்ச் பிடிக்கவும், சிம்பாவே,பெர்மூடா போன்ற அணிகளுடன் சதமடிக்கவும்தான் சரி

ஹும்... இது ரொம்ப மோசம்.... வெற்றி பெற்று வந்தால் எப்படி கொண்டாடினம்... அதே தோழ்வி எண்டும் போது ஏன் இப்படி எல்லாம் செய்கினம். அவர்கள் என்ன வேணும் எண்டேவா தோற்றினம்... இப்படி செய்யும் போது விளையாடி தோற்றவர்களுக்கு என்னும் ஆத்திரத்தை உண்டு பண்ணும்.தோற்று வருபவரிடம் ஆறுதல் சொன்னால் அவர்கள் மனசுக்கும் ஆறுதலாக இருக்கும்... அடுத்த முறை நல்லா விளையாடி வெற்ற பெறவேணும் எண்டு நினைப்பினம்.... இருந்தாலும் இபப்டி கஸ்டப்பட்டு விளையாடிய வீரர்களின் போட்டோவை இப்படி செய்யக் கூடாது. :unsure:

இந்திய அணி வீரர்களெல்லாம் விளம்பரத்தில் காற்றில் பாய்ந்து கட்ச் பிடிக்கவும், சிம்பாவே,பெர்மூடா போன்ற அணிகளுடன் சதமடிக்கவும்தான் சரி

நம்ம தலைக்கு அது கூட தெறியாது என்பது தான் முகவும் வருத்தாமான விசயம்

;)

  • தொடங்கியவர்

ஹும்... இது ரொம்ப மோசம்.... வெற்றி பெற்று வந்தால் எப்படி கொண்டாடினம்... அதே தோழ்வி எண்டும் போது ஏன் இப்படி எல்லாம் செய்கினம். அவர்கள் என்ன வேணும் எண்டேவா தோற்றினம்... இப்படி செய்யும் போது விளையாடி தோற்றவர்களுக்கு என்னும் ஆத்திரத்தை உண்டு பண்ணும்.தோற்று வருபவரிடம் ஆறுதல் சொன்னால் அவர்கள் மனசுக்கும் ஆறுதலாக இருக்கும்... அடுத்த முறை நல்லா விளையாடி வெற்ற பெறவேணும் எண்டு நினைப்பினம்.... இருந்தாலும் இபப்டி கஸ்டப்பட்டு விளையாடிய வீரர்களின் போட்டோவை இப்படி செய்யக் கூடாது. :lol:

அதே போட்டோவிற்க்குதான் சில காலங்களிற்கு முன்பு கோவிலில் வைத்தி அபிஷேகம் செய்தார்கள், இன்றைக்கு செருப்பு மாலை போடுகிறார்கள் :P

  • தொடங்கியவர்

பாப் உல்மர் செத்துப் போய் பாகிஸ்தான் அணியை காப்பாத்திட்டாரு..

க்ரேக் சாப்பல் இருந்துகிட்டே இந்தியா அணியைக் கொலை பண்ணிகிட்டு இருக்காரு..!

------------------------------------------

பெர்முடா: ஏண்டா ஒரு புள்ள பூச்சிய பொட்டு இந்த அடி அடிச்சிட்டீங்களேடா

இந்தியா: எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சிகிட்டே இருக்கீங்களேடா, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கடா..

--------------------------

பாகிஸ்தான் தோல்விக்கு ஒரு கொலை போதும்

இந்தியா வெல்வதற்கு பல கொலைகள் தேவை!

---------------------------

ஒருவர்: ஏன் இந்திய டீம் மாத்திரம் பெரிய பொதிகளை சுமந்து செகின்ரார்கள்?

மற்றவர்: ஓ....! அதுவா? எல்லாம் பெண் ரசிகர் இவர்களை பார்ப்பதற்காக கொடுத்த நேர புத்தம் தான்

==============

(சேவாக் நம்ம கேப்டன் டிராவிட்டிடம் கேட்கிறார்)

அண்ணே! அண்ணே! அடுத்த தடவையும் பெர்முடா கூடவே

விளையாடுவோம்னே?

=============

வடிவேல் ஸ்டைலில்

பெர்முடா கேப்டன்: நீ ஒரு வீரனை அடிச்சிருந்தா ஓகே. ஆனா நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சிய. அதனால உனக்கு வேல்ட்கப் இல்ல, ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடையாது. இதுக்கெல்லாம் ஒரு ரெஃப்ரி, 3 அம்பயர்.

:lol::unsure::):( :P :P :(

என்னவானவில் இப்படி இந்தியா டீமைவாங்குறீர் அது சரி கொஞ்ச நேரத்துக்கு முன்னம் நீர் 1987 கரூத்து எழுதி இருந்தீர் அதுக்குள்ல எப்படி 2022 படு வேகமப்பா நீர் :P

  • தொடங்கியவர்

இன்சமாம் : ஏனப்பு உங்களுக்கும் சேர்த்து டிக்கெட் போடட்ட?

டிராவிட் : இல்ல மச்சான் இப்பத்தான் ஒருத்தன் சிக்கி இருக்கான்,

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான். அவன் ரொம்ப நல்லவனா இருக்கான் மச்சான்.

============

திராவிட் ; என்ன இன்சி..? உங்க பயிற்சியாளர் இறந்துட்டாராமே..?

இன்சி ; அவர் மானஸ்தன்.. எங்க டீம் தோத்ததும் உயிரை விட்டுட்டார்..

_________________

ரகசிய கூட்டம்

ட்ராவிட் : இந்த போட்டியிலும் தோற்றால் நாம் நாடு திரும்பும் போது நமக்கு கொலை வெறி தாக்குதல் காத்திருக்கும். என்ன செய்யலாம்?

சேவாக் : இலங்கை அணியில் பெர்முடா வீரர்களையும் கலந்து விட்டால் நான் சமாளித்து வெற்றி வாங்கி தந்துடுவேன்.

டெண்டுல்கர் : அம்பயர்ட்ட பேசி ஒரு எக்ஸ்ட்ரா சான்ஸ் மட்டும் வாங்கி குடுத்திங்கன்னா சமாளிச்சுடுவேன்.

கங்குலி : அந்த கேப்டன் பொறுப்பை மட்டும் என்கிட்ட குடுங்க அரை இறுதிக்கு கூட்டிட்டு போயிடுறேன்.

அப்புடியே அந்தாளை(சேப்பலை) அவரோட ஊருக்கு துரத்துங்க, கோப்பையையே தூக்கிறுவோம்.

சேப்பல் : இப்பிடியே ஆளாளுக்கு பேசுங்க. தோத்தா ஊருக்கு போயி அடிவாங்கப்போறது நீங்கதான்.

நான் என்னோட சொந்த ஊருக்கு ஓடிடுவேன். முடிஞ்சா தப்பிச்சுக்கோங்க.

இந்திய அணிவீரர்கள் (ஒருமித்த ஒட்டுமொத்த குரலில்) : அதெல்லாம் ஜெயிச்சு சூப்பர் 8க்குள்ள போயிடலாம்.

அதுக்குன்னே நமக்காக (வெளியே) விளையாட தனியா ஒரு டீம் இருக்குங்க.

=============

பெர்முடா கேப்டன் சொல்கிறார் :

மொதல்ல ரெண்டு பேருதாங்க அடிச்சாங்க, அதுல ஒருத்தன் டிராவிட்டுக்கு போன் போட்டு ஃபிரீயா இருந்தா வாடா மச்சான் ஒரு டப்பா டீம் சிக்கி இருக்குன்னு சொன்னான்.

அந்த லூசு இதுதான் சான்ஸ்னு மொத்தம் 11 பேர கூட்டிக்கிட்டு வந்து 3 மணி நேரம் கதறக் கதற அடிச்சாங்க.

சரி அடிச்சுப் போட்டோம்னு விட்டுட்டேன்.

அதுல சேவாக் சொன்னான் " என்னை எல்லோரும் 1 ரன்னுல அவுட் ஆக்கிடுவாங்க, என்னை 100 அடிக்க விட்டு அழகு பார்க்குறாங்க இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடான்னு சொன்னான்டா.................... (ஆனந்தக் கண்ணீர் விடுகிறார்)

_________________

டிராவிட்: ஹாய் பாகிஸ்தான் பங்காளி, வச்சிட்டாண்டா இலங்கை மச்சான் ஆப்பு! உங்க கோச்சை எப்படிடா போட்டுத் தள்ளுனீங்க? சொன்னீங்கன்னா நாங்களும் சேப்பலைப் போட்டுத் தள்ளீட்டு வெஸ்ட் இண்டீஸ் போலீசு கிட்ட சரண்டராயிருவோம்!

==============

டெண்டுலகர் : என்ன தல! இந்த தடவை அடி கொங்சம் ஓவரோ!

ட்ராவிட் : பேசாதடா! நான் தனியா அடிவாங்கும் போது எல்லா பக்கியும் ஓடி போய்ட்டு இப்ப ஒவ்வருத்தரா கேள்வியா கேக்குறீங்க ரஸ்கல்.

(அதே நேரத்தில்) சன் செய்திகள் : ஒருவேளை வங்கதேசத்தை பெருமுடா வெற்றிகொண்டால் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

ட்ராவிட் : இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்திதானே உடம்பே ரணகளமாகிடுச்சு.

சேவாக் : தல பெருமுடா ஜெயிச்சுட்டா நாம சூப்பர் 8க்குள்ள போயிடலாம்.

ட்ராவிட் : அது எனக்கு அவமானம்.

  • தொடங்கியவர்

தோனி: டிராவிட் அண்ணே! வங்காள தேச அணியினர் எங்கே தங்கியிருக்காங்க என்றே தெரியலை. தெரிஞ்சிருந்தால் பேதி மாத்திரை கொடுத்திடலாம்.

-------

சேப்பல்: நீங்க கொஞ்சம் பேட்டிங் ஆர்டரை நான் சொல்ற மாதிரி மாத்திருந்தா எல்லாம் சரியாயிருக்கும். நல்லா அடிச்ச ஹர்பஜன் சிங்கை ஓப்பனரா இறக்கலாம்னு முதல்லே சொன்னேன். கேட்டாத் தான?

டிராவிட்: எங்களுக்கு பேட்டிங் ஆர்டர் சொல்றது இருக்கட்டும். உங்களுக்கு பேக்கிங் ஆர்டர் போட்டாத் தான் சரியா வரும்.

கங்குலி: அதே அதே!

===========

சேப்பல் : நான் அன்னைக்கே சொன்னேன், "கங்குலி திரும்ப அணிக்கு வந்தா நாம உலககோப்பையை இறுதிபோட்டிக்கு போகமுடியாதுனு, யாருமே கேக்கலை".

கங்குலி : ஆமாம் சேப்பல், நானும் அன்னைக்கே சொன்னேன், "சேப்பல் கோச்சா இருந்தா நாம தகுதி சுற்றுக்கே போகமுடியாதுனு. யாருமே கேக்கலை"

சேப்பல் : ??!!??

=========================

[b]கிப்ஸ் (Gibbs) : நாங்க ஆறு பந்துலையும் Sixer அடிப்போம்.

பௌச்சர் (Boucher) : நாங்க 9 பந்துல 50 அடிப்போம்.

சேவாக் : நாங்க இன்னும் ஒரே நாள்ள ஊருக்குப் போவோம்ல...

சிங்கம்ல........... நாங்க

இங்கனம்

விடிய விடிய மேட்ச் பார்த்துட்டு நொந்து நூலாய் போனோர் சங்கம்

=============================

டிராவிட் : என்ன பங்காளி, சொன்னம்ல வந்துடுவோம்னு அதுக்குள்ள கிளம்பிட்டீங்க எங்களை விட்டுட்டு????

இன்சமாம் : பங்காளி நெசமாவே நீ மானஸ்தன்தாயா,... சொன்னபடியே வந்திட்ட. இந்தா புடி டிக்கெட்ட....

வா பங்காளிஇஇஇஇஇஇ.................

===========================

சேவாக் மகன் : அம்மா! இங்க டி.வி. பாரு அப்பா சிக்ஸ் சிக்ஸா அடிக்குறாரு!

சேவாக் மனைவி : டேய்! மானத்தை வாங்காதடா! அது மேட்ச் இல்ல. Boost விளம்பரம்.

===================

தலை பின்னிட்டீங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.