Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும்

Featured Replies

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிறு மாலை கிழக்குவெளுத்திடும் நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இந்நிகழ்வு கனடாகந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.இன்நிகழ்வு

கனடாவில் கிழக்கு மக்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் வேண்டி கிழக்கு வெளிக்கும் நிகழ்வு

- சோழன் வுhரசளனயலஇ 12 யுpசடை 2007 03:27

தமிழர் தாயகத்தில் அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனிதப் பேரவலங்கள் மனித உரிமை மீறல்கள் என்பவற்றால் சொல்லொணாத் துயருறும் எமது மக்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் வேண்டி கனடிய தமிழர் பேரவையினால் கிழக்கு வெளிக்கும் என்ற நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இடம்: கனடா கந்தசாமி கோவில்

733 டீசைஉhஅழரவெ சுழயனஇ ளுஉயசடிழசழரபா

காலம்: ஏப்ரல் 15ம் திகதி ( 15-04-2007)

நேரம்: மாலை 4:00 மணி

இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஊடகங்கள், சர்வதேச நிவாரண அமைப்புகள் என்பன பங்குபற்றவுள்ளன.

எம் உணர்வுகளின் வெளிப்பாடாக அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு: 416 240 0078

  • கருத்துக்கள உறவுகள்

ரொறண்டோவில் இருக்கும் மக்கள் பங்கு பற்றவேண்டிய ஒரு முக்கிய நிகழ்விது. இந் நிகழ்ச்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உடனடி சர்வதேச நடவடிக்கை வேண்டிய கனடிய தமிழரின் கிழக்கு வெளிக்கும் நிகழ்வு

கனடியத் தமிழர்களின் கிழக்கு வெளிக்கும் நிகழ்வுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு ஏப்ரல் 15ஆம் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ் மக்களின் மண்டபம் நிறைந்த பங்களிப்புடன் கனடா முருகன் கோவில் மண்டபத்தில் பிற்பகல் 4:30 மணியிலிருந்து 8:00 மணிவரை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்துப் பேச்சாளர்களும், அரசியல்வாதிகள், மனித உரிமை வாதிகள், சமூகத்தொண்டர்கள், ஊடகவியாளர்கள் உட்பட, கிழக்கில் தமிழ் மக்களின் துயரங்களையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அரச கொடுமைகளையும், இந்த அரசின் மூர்க்கத்தனமான இராணுவ நடவடிக்கைகளையும் தினமும் இந்த அவல வாழ்வுக்கு அரச பயங்கரவாத்தினால் இரண்டுலட்சத்துக்கு மேற்பட்ட தமது உறவுகள் மிகவும் கிழ்த்தரமான, மனிதாபானமற்ற, அரக்கத்தனமான சிறீலங்கா அரசினால் திட்டமிட்ட முறையில் அநீதி இழைக்கப்படுவதனை சுட்டிக்காட்டி, அதனை வன்மையாக கண்டித்ததுடன், நாம் ஒற்றுமையாக நின்று கனடிய அரசும் சர்வதேசமும் அவலப்படும் இம் மக்களுக்கு உடனடி நிவாரணமும் நீதியும் கிடைக்க உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் உரத்துக் குரல் கொடுத்தார்கள்.

கிழக்கில் அரச பயங்கரவாத்தினால் 200,000 மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தும், வடகிழக்கில் 350,000 மேற்பட்ட மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டும், 4000ற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலமை டாபூர் நிலமையினை ஒத்த மனிதப்பேரவலத்தினை கனடா உட்பட சர்வதேசமும் அனுமதிக்கப்போகின்றதா என கனடியத்தமிழர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள் .

இந்த நிகழ்வில் கனடிய தேசியகீததினை செல்வி. அருந்தா அன்ரனி அவர்கள் வழங்க, அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து செல்வி. றேனுசகி கமலநாதன் வழங்கியுருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மாமனிதர். திரு. ஜோசப் பரராயசிங்கம் அவர்களின் துணைவியார் பொதுசுடரேற்றி வைத்ததார், அதனைத்தொடர்ந்து, எமது மண்ணின் விடிவுக்காய் தம் இன்னுய்ர்க்ளை ஈகம்செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கும் அப்பாவிப்பொதுமக்களுக்கும் அகவணக்கத்துடன் நிகழ்வுகள் அரம்பித்தன.

கிழக்கின் இன்றைய மனிதப்பேரவலத்தினை அம்மண்ணின் மைந்தனான திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்கள் உருக்கமாகவும், விரிவகாவும் எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, செல்வி. ஆர்த்தி வேலுப்பிள்ளை எமது தமிழ் உறவுகள் தினம், தினம் வாழ்வதற்கே எவ்வாறான துயரங்களை அனுபவிக்கிறார்கள் என மிகவும் உருக்கமாக ஆங்கிலத்தில் எடுத்துரைத்தார்,

அதனைத்தொடர்ந்து, ரொரொன்ரோ பல்கலைக்கழக மாணவியும், ரொரொன்ரோ பல்கலைக்கழக தமிழ் மாணவர்சபையின் முதல்வருமான செல்வி. சுஜானி கிறிஸ்ணலிங்கம் அவர்கள் மிகவும் உருக்கமாகவும், தனது இதயத்தின் அடியிலிருந்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், தமிழ் மக்கள்படும் மனிதப்பேரவலத்தினை ஆதாரங்களுடனும், வரைபடங்களுடனும் சிறந்த ஒலி அமைப்புகளுடனும் மண்டபம்நிறைந்த மக்கள்மத்தியில் உணர்ச்சிக்கவிதை மூலம் எடுத்துரைத்திருந்தார்.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் கனடா கிளையின் இலங்கைக்கான பிரதிநிதி திரு. ஜோன் ஆர்க்கு பேசும்போது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைத்து அவர்களுக்கு, உண்ண உணவும் இல்லை, மருத்துவ வசதியும் இல்லை, அமைதியும் இல்லை என்பதனை எடுத்துரைத்துச்சென்றார். செஞ்சிலுவைச்சங்கம் கனடா கிளையின் இல்ங்கைக்கான பிரதிநிதி திருமதி. பேரஸ் ஒய்யுகி அவர்கள் பேசும்போது செஞ்சிலுவைச் சங்கம் இலங்கையில் போரினால் பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வாறன உதவிகளை வழங்கிவருகின்றது என எடுத்துரைத்திருந்தார்.

கனடிய தேசிய ஜனநாயக்கட்சியினை சேர்ந்த திருமதி.மர்லின் செர்லி அவர்கள் பேசும்போது உடனடியாக சர்வதேச அமைதிப்படையினரை இலங்கைகு அனுப்பவேண்டும் என்றும் தமிழ் மக்கள்படும் மனிதப்பேரவலத்தினை தான் உணர்வதாகவும், சமாதானத்துக்கும் அமைதிக்கும் தானும், தனது கட்சியும் தொடர்ந்து குரல்கொடுப்பதாகவும், இதற்கான பிரேரணையினை ஜனநாயக்கட்சியின் வெளிவிவார விடயங்களைப் பேச வல்ல மாட்சுமை தங்கிய அலக்சா மக்டொனா அவர்கள் கனடியப் பாராளுமன்றத்தில் கொண்டுவர இருப்பதாக கூறினார்.

தமிழ்ர் புணர்வாழ்வுக்கழக கனடா கிளையின் தலைவர் திரு. குணநாதன் அவர்கள் தமிழ்ர் புணர்வாழ்வுக்களகம் எவ்வளவு இடர்வரினும் தமது மனிதாபிமான பணியினை தொடர்ந்தும் எவ்வாறேனும் செய்துகொண்டே இருக்கும் என்றும் எமது மக்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழக மனிதாபிமான பணிக்கு கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டிநின்றார்.

திரு. வித்துவான் ஜெபரட்னம் அவர்கள் தமது உணர்ச்சிபூர்வமான உரையில் கிழக்கில் குறிப்பாக படுவான்கரை மக்களின் வாழ்க்கைமுறைகளையும் அவர்களின் சொல்லொணா துன்பியல்களையும் அவர்களுக்கு நாம் எவ்வாறு ஆக்கபூர்வமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினை பலப்படுத்துவதால் உடனடியாக உதவலாம் என எடுத்துரைத்தார். மற்றும் சாமித்தம்பி பாக்கியராஜா, கேதீஸ்வரன் பேன்ற கிழக்கின் மைந்தர்களும் அங்குள்ள மக்கள் எவ்வாறான கொடுமைகட்கு உட்பட்டுள்ளார்கள், அவர்களது உயிர்கள், உடமைகள், எவ்வாறு அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்படுகின்றது, அவர்களது மிகப்பெரும் சொத்தான கல்வியினை எவ்வாறு நசுக்குகின்றார்கள் என்று விவரித்துச்சென்றார்.

மூத்த ஊடகவியலாளரரான பொன்னைய விவேகானந்தன் மிகவும் உறுதிபடவும் உணர்ச்சிபூர்வமாகவும் கிழக்கு மண்ணினதும் மக்களினதும் மகிமையினையும், அவர்கள்படும் மனித அவலங்களையும் தமிழ்மக்களுக்கு மொத்தமாக இழைக்கப்படும் கொடுமைகளையும் அனைத்துக்கும் நிரந்தரமான முடிவு எமக்கொன்று ஒரு நாடு உருவாகுவதால் மட்டும்தான் முடிவுக்கு கொண்டுவரும் என்றார்.

கிழக்கு மண்ணின் கொடுமைகளையும், நிதர்சனத்தினையும், மிகவும் உருக்கமாகவும் அவர்களுக்கு புலம்பெயர்ந்த உறவுகள் ஆற்றவேண்டிய பங்கினையும், அனைவரும் தமிழர் பேரவையுடன் இணைந்து ஆற்றவேண்டிய சேவைகள் நிறைய உள்ளதனையும் உறுதிபட திருமதி. சிவபாக்கியம் தியாகராஜா தெரிவித்தார்.

ர்ழn னுயn ஆஉவுநயபரந ஆP கழச ளுஉயசடிழசழரபா நுயளவ-Piஉமநசiபெ ஓர் அறிக்கை மூலம் தனது நேரடி பிரசன்னத்தினை தரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கனடிய அரசு ஆக்கபூர்வமக இலங்கையின் அமைதி முயற்சிக்குதவ வேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தார்.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர். சந்திரகாந்தன் அவர்கள் பேசும்போது, எமது மக்கள் தமிழ் பேசும் தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும், தொடர்ச்சியான அரச அடக்குமுறைகள், அரச படுகொலைகள் அராஜகங்களுக்கு முகம்கொடுக்கிறார்கள், இந்த மனிதப் பேரவலம் ஒரு அரசியல் பிரைச்சனை என்பதற்கு அப்பால் அவர்களின் வாழ்க்கை பிரச்சனை என்றும், தனது நேரடி துன்பகரமான மக்களின் அவலங்களை தான் எவ்வாறு கடந்த காலத்தில் எதிர்கொண்டேன் என்பதனையும் இந்த மனிதப் பேரவலத்திற்கு முடிவுகட்டப்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

இறுதியாக கனடியத் தமிழர் பேரவையின் அமைபாளர் திரு. பொன் பாலராஜன் அவர்கள், தனது நன்றியுரையில் இந்த நிகழ்வினை நிறைவேற்ற பல வழிகளில் ஒத்துளைத்த அனைத்து தொடர்புசாதனங்களுக்கும் தொண்டர்களுக்கும் குறிப்பாக கிழக்கின் மண்னின் மைந்தர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் எமது மக்கள் மட்டும்தான் தமது பலத்தினாலும், ஒன்றுபட்ட செயற்பாட்டினாலும் நல்ல தீர்வினை விரைவாக அடையமுடியும் என்றும் அதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து கடுமையாக சகலமட்டதிலும் காரியமாற்றவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார்.

அதற்கு இங்குள்ள தமிழ் மக்கள் கனடியத் தமிழர் பேரவையுடன் பெருவாரியாக இணைந்து பல முனைகளில் காரியமாற்ற முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சிறப்புற நடந்த நிகழ்வை இளையவர்கள் சுபாங்கி மற்றும் கவிதா ஆகியோர் முறையோ தமிழ், ஆங்கிலத்தில் உயர்வுடன் தொகுத்து வழங்கியிருந்தனர்.

மிகவும் உணர்ச்சிபூர்வமான “நிஜங்கள்” என்ற தலைப்பில் விவரணத்தின் மூலம் தற்போதைய கிழக்கின் நிலைமைகளை வெளிக் கொணர்ந்திருந்தனர், கிழக்கிலிருந்து எமது உறவுகள் அவலக்குரல் எழுப்பும் மக்களின் பரிதாபமான நிலையினை மற்றுமொரு விவரணத்தின் மூலம் எமது புலம்பெயர் உறவுகளின் மனக்கண்ணின் முன் கொண்டு வந்திருந்தார்கள். தாயகத்தில் இருந்து தமிழத் தேசியமைப்பு கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அரியேந்திரன் அவர்களின் கிழக்கு வெளிக்கும் நிகழ்விற்கான கிழக்கின் மக்களின் அவலத்தினையும் அவர்களின் எதிர்பார்ப்பினையும் ஒலிவடிவில் கொடுத்திருந்தார்கள்.

- கனடியத் தமிழர் பேரவை

  • கருத்துக்கள உறவுகள்

T.O. Tamils seek help for war-torn homeland

Ottawa urged to intervene in Sri Lankan civil war

Theresa Boyle

Staff Reporter

More than 500 Tamil Canadians joined yesterday to call attention to the bloody civil conflict that has gripped Sri Lanka.

"The Tamil villages are being bombarded one after another, systematically driving the poor villagers (to run for) their lives, leaving the dead and severely injured behind," Arthi Velupillai, one of many speakers, told the gathering in east Toronto.

John Argue, a Sri Lanka co-ordinator with Amnesty International, said there is an "urgent need to protect civilians," noting 300,000 people are displaced.

Even in the camps where people are seeking refuge, there is a shortage of food and medical supplies, and there are armed gangs running around, he noted.

Argue said there's a need for international monitors to ensure the people of Sri Lanka are protected.

The gathering, organized by the Canadian Tamil Congress, heard that thousands have been killed in the conflict.

The Liberation Tigers of Tamil Eelam have been fighting the government since 1983, demanding a self-ruled homeland for Sri Lanka's 3.1 million minority Tamils, citing decades of discrimination by the Sinhalese-dominated state.

A Norwegian-brokered 2002 ceasefire has all but disintegrated, although it still officially holds. Since December 2005, Sri Lanka has again been at undeclared war with itself.

Speakers at yesterday's gathering urged the Canadian government to intervene. Sri Sri-Skanda-Rajah,who sits on the Toronto Star's community editorial board, began a hunger strike yesterday to put pressure on Ottawa.

http://www.thestar.com/News/article/203489

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.