Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007

natyaabishekamposter2iu9.jpg

நல்லதொரு நிகழ்ச்சி கடந்த ஆண்டு பார்க்க சந்தர்ப்பம் ஏற்பட்டது அரங்கு நிறைந்து காட்சி நடத்தபட்டது,இந்த முறையும் அவ்வாறு காட்சி நடந்து நவம் அறிவு கூடதிற்கு நிதி வந்தடைய வேண்டும் என்பதே எனது அவா. :lol:

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நவம் அறிவுக்கூடம் பற்றி முன்பு யாழில், உறவுகள் பதிந்த கருத்துக்களில் சில

வசிசுதா -

இங்கு போராட்டத்தில் எதிரியுடன் சமர் புரிந்து உடம்பில்

ஏதோ ஒரு அங்கத்தை இழந்த பெண் ஆண் போராளிகள்

உள்ளனர். இவர்கள் இங்கு படித்தும் வேறு சில

சுயதொழில்களும் செய்து போராட்டத்திற்கு தங்களால்

முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிறேம் -

நவம் அறிவுக்கூடமானது, லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக தலைவர் அவர்களினால் போரிலே உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்த போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப். கேணல். நவம் அண்ணா அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர்.

இந் நவம் அறிவுக்கூடம் நிலையத்திலே இருக்கும் போராளிகள் எமது தமிழீழ விடிவிற்கான போராட்டத்திலே பங்களித்து தம் அங்கங்களை இழந்தும் அல்லது முழுமையாக அங்கங்கள் செயற்படாது இருப்பினும் இன்னும் தாயகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் துடிப்புடன் இருக்கிறார்கள்.

வல்வை சகாரா -

நவம் அறிவுக்கூடம் போரில் காயமுற்று அங்கங்கள் பாதிக்கப்பட்ட போராளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு கலைகள்இ தொழில்நுட்பம்இ ஆங்கில மொழிப்பயிற்சி

அத்தோடு விளையாட்டுகள் எனப் பலதரப்பட்ட

கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இருகண்களை எதிரியின் துப்பாக்கிக்குண்டுக்கு இரையாகக் கொடுத்த

அன்புக்கரசன் என்னும் கவிஞன் அகக்கண்களால் உலகைப் பார்த்து கவிதை படைக்கிறான்.

அதேபோல் ஒருபெண்

போராளி பரதக்கலையில் சாதனை படைப்பது மட்டுமல்லாது

மற்றைய போராளிகளுக்கு அக்கலையைப் புகட்டும் குருவாக இருக்கிறார்.

முள்ளந்தண்டு மடிந்த ஒரு போராளி கணனியைக் கரைத்துக் குடித்திருப்பதோடு நின்றுவிடாமல்

தன்னம்பிக்கையோடு எங்களை வரவேற்று பிரமிக்கவைத்தார்.

உயிரோட்டமுள்ள ஓவியங்களைப் படைக்கிறார்கள். சிறந்த

இசைக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

கந்தகக் குதறல்கள் எம் சிந்தைகளை என் செய்யும்? என்று

நிமிரும் வண்ணம் அங்கிருக்கும் போராளிகள் துணிவுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கிறார்கள்.

தமிழீழத்தின் அரச கட்டுமானத்தில்

இந்த நவம் அறிவுக்கூடம் பெரும்பங்கு வகிக்கும்.

இங்கு பாதிக்கப்பட்ட போராளிகள் ஒளியுூட்டும் தாரகைகளாகச் செதுக்கப்படுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ltnavamri0.gif

இராணுவப் பரிசோதனை ஒன்றின்போது கையை இழந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், அனுதாபமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை. வீட்டிலேயே இரு பாசத்தின் மேலீட்டால் இப்படியொரு கோரிக்கை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கின்றது. தனக்கு அனுதாபம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் தருணம் எனத் தீர்மானிக்கின்றான்.

எனக்கு இன்னொரு கை இருக்கு. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது வார்த்தைகள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தனது நிலையை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை நட்சத்திரமாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகின்றான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப்பிரதேசத்தில். போராடியது வன்னிக் களங்களில். வன்னியை நேசித்ததாலும் வன்னிக்களத்திலே காயமுற்ற இவனது உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசீலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய வார்த்தைகள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமான சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்கும் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால் தான் நவத்தைப்பற்றி அப்போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

அதிதியாக வந்தோரால் அகதியாக ஆக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை சிறீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.

அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் பிரதேசங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது இராணுவமுகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது பிரதேசத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். காரணம் அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப்போகிறவர்களாதலால் எவ வித இடர்களையும் எதிர்கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பர். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால் தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விஸ்தரித்து வருகின்றது சிறீலங்கா அரசு. ஆனால் இது தமிழீழமண் என்று எல்லை போட்டுக்காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஒதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையையும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாகக் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டப்படாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக்கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் இன்று வன்னி மண்ணைக் காத்து நிற்கின்றனர்.

கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாறு மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பிரதேசத்தில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி.

- எரிமலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் TYO அமைப்பின் பதிவிலிருந்து

Navam Arivukoodam provides housing for the casualties of war. It provides housing for about 170 individuals, with about 30 of them being administrators and aids. There are a few computers for educational purposes. The teacher?s training was provided by an outside institution, which she uses to educate the capable. Brail is also taught for the blind. Also this is the institution that received the funds collected by ACTS. The money was used to create a solar-powered generator that is used to provide power to the facility for an extended period of time. The administrator let me know that they greatly appreciated the funds. Walking around the compound and seeing all the physically disabled stirred many emotions within me.

http://www.tyo-online.dk/index.php?option=...4&Itemid=60

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 நிகழ்வினைப் பற்றிய யாழ்கள உறவு புத்தனின் கருத்துக்கள்

இன்று நவம் அறிவு கூடத்திற்காக நிதி சேகரிப்பு வைபத்திற்கு சேரன் சிறிபாலன் பரத நாட்டிய கச்சேரி ஒன்று நடைபெற்றது இந்த கலைஞன் புலத்தில் பிறந்து வளர்ந்த கலைஞன்,நன்றாக நாட்டிய கச்சேரி சிறந்த முகபாவங்களுடன் ஆடினார்.இதன் மூலம் அவுஸ்ரேலியன் டொலர் 140000 நிதி சேகரிக்க பட்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தினூடாக நவம் அறிவு கூடத்திற்கு கொடுக்கபட்டது,பரத நாட்டியத்தில் ஆர்வம் இல்லாதவர்களும் இதற்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் காரணம் இது நல்ல நோக்கத்திற்காக பணம் அனுப்பபடுகிறது என்பதற்காக.அங்கு உறையாற்றிய சிலர் நவம் அறிவுகூடம் தேசிய தலைவரின் நேரடி பார்வையில் நடைபெறுகிறது என்றும் கூறினார்கள்.

புத்தனுக்கும் பரத நாட்டியத்திற்கும் வெகு தூரம் இருந்தும் இந் நிகழ்ச்சிக்கு சென்றது ஒரு இனம் தெறியாத மகிழ்ச்சியை தந்தது.

Navam Arivu kodam is an insititution named after a valiant Tamil figter called Navam who laid down his life defending his people."Arivu Koodam is loosely translated to mean repository of knoweldge".it provides young men and women maimed in the war with skills in computer science,languages,literature,history,psychology,art and claasical music,several of the residents at the institute are blind while others have lost limbs.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=15009

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006ல் நடைபெற்ற நிகழ்வினைப் பற்றிய எனது கருத்து

நவம் அறிவுக்கூட நிதிசேகரிப்புக்கான நிகழ்ச்சி

சென்ற சனிக்கிழமை தீபாவளி நாளில் நவம் அறிவுக்கூட நிதிசேகரிப்புக்கான நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். புலத்தில் பிறந்த இளைஞன் சேரன், நவம் அறிவுக்கூடத்தினூடாக தாயகத்தில் விழுப்புண் அடைந்த போராளிகளுக்கு உதவி செய்யும் நோக்குடன் பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார். காற்றினிலே வரும் கீதம் என்ற பழைய பாடலினை சங்கீத ஆசிரியர் ஒருவர் பாட, இவ்விளைஞ்சன் அழகாக நடனம் ஆடினார். தமிழ் நாட்டில் அடையாரில் வசிக்கும் புகழ்பெற்ற பரத நாட்டிய தனஞ்செயனிடமும் திருவான்மியூர் கலாசேத்திராவிலும் முறையாக பரத நாட்டியம் பயின்ற இவ்விளைஞ்சனின் நாட்டியத்தினை பலர் ரசித்துப்பார்த்தார்கள்.

இன்னிகழ்ச்சியில் சேர்க்கப்பட்ட 14000 வெள்ளிகளும், லண்டனில் இருந்து வந்த, தனது பிள்ளையினை இழந்த ஒரு தம்பதியினர் இம்மண்டபத்தில் வழங்கிய 2500 வெள்ளிகளும் சேர்த்து 16500 வெள்ளிகள் நவம் அறிவுக்கூடத்துக்கு அனுப்பப்படவுள்ளது. இன்னிகழ்ச்சிக்காக நடனமாடிய சேரனும், பக்கவாத்தியாங்கள் இசைத்தவர்களும் சில நாட்களாக வேலை, பல்கலைக்கழகம் இடையே கிடக்கும் நேரங்களில் கடுமையாகப் பயிற்சி செய்து திறம்பட நல்ல ஒரு நிகழ்ச்சியினை நடாத்தினார்கள்.

இன்னிகழ்ச்சியில் நவம் அறிவுக்கூடத்திற்கு சென்று பார்த்தவர்கள், நவம் அறிவுக்கூடம் பற்றிச் சொன்னார்கள். போராளிகளின் தியாகங்களினைச் சொன்னார்கள். அனையிரவுச் சமரின் போது முள்ளுக்கம்பிகளினூடாக போராளிகள் கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கொஞ்சம் நேரம் எடுத்தால் எதிரி பலம் பெற்று விடுவான். ஆனால் முள்ளுக்கம்பியினூடாகச் செல்வது என்றால் உடலினைக்கிழித்து காயங்கள் ஏற்படுத்திவிடும். இதனால் தாங்களாகவே சில போராளிகள் குப்பியினைக் கடித்துக் கொண்டே முள்ளுக்கம்பியில் போய்ப்படுத்து விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டார்கள். அவர்களின் மேல் மற்றைய போராளிகள் சென்று அனையிரவினைக் தாக்கினார்கள். இதே மாதிரி 100க்கு மேற்பட்ட போராளிகளுக்கு நடுவில் எதிரியின் வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்கள் இருந்தது. வெடித்தால் பலர் இறப்பார்கள். உடனே சில போராளிகள் அவ்வெடிகுண்டின் மேல் பாய்ந்து தங்களது உயிரைக் கொடுத்து மற்றைய போராளிகளினைக் காப்பாற்றினார்கள். எவ்வளவு தியாகம்.

நவம் அறிவுக் கூடப் புகைப்படங்களையும் இன்னிகழ்ச்சியில் காண்பித்தார்கள்.அங்கங்கள் இழந்த நிலையிலும், கண்பார்வை குறைந்த நிலையிலும், உணர்வற்ற நிலையிலும் பல போராளிகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. இவர்கள் யாருக்காக இத்தியாகங்கள் செய்தார்கள்?. புலத்தில் நாங்கள்(என்னையும் சேர்த்து தான்)தாயகத்துக்கு உதவுவது என்றால் யோசித்து கொஞ்சப்பங்களிப்புச் செய்கிறோம். ஆனால் அப்போராளிகள் யோசிக்கமால் தமிழீழம் தான் குறி என்ற உயர்ந்த இலட்சியத்துடன் போராடுகிறார்கள்.

இன்னிகழ்வு நடந்த மண்டபத்தில் மிகவும் குறைவான மக்களே வந்திருந்தார்கள். ஆனால் சிலர் மண்டபத்துக்கு வராவிட்டாலும் இன்னிகழ்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்கள். இன்னிகழ்வுக்கு வரச்சொல்லி எனக்குத் தெரிந்த சிலரைக்கேட்டேன். அதற்கு சிலர் இன்று அஜித்குமாரின் வரலாறு படம் ஒடுவதாகவும் அதைப்பார்க்கவேண்டும் என்றும், சிலர் அவுஸ்திரெலியா இங்கிலாந்து துடுப்பாட்டம் தொலைக்காட்சியில் போகுது பார்க்கவேண்டும் என்றும் சொன்னார்கள். அப்ப நிகழ்ச்சிக்குப் போகாவிட்டலாவது பரவாயில்லை, பற்றுச்சீட்டினை வாங்கி பண உதவி செய்யலாம் தானே என்று கேக்க ஒரு மூச்சுப் பேச்சையும் காணவில்லை. இவர்கள் ஈழத்தில் பிறந்து புலத்தில் வசிப்பவர்கள். ஆனால் சேரன் புலத்தில் பிறந்து ஈழத்துக்கு உதவ நினைத்தவர்.

போராளிகளும் திரைப்படம் அல்லது துடுப்பாட்டம் முடிய போரிடப் போக நினைத்திருந்தால் நிலைமை என்னவாய் இருந்திருக்கும்?.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=231916

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி நன்றாக இடம்பெற வாழ்த்துகள்,சிட்னிவாழ் தமிழ் மக்களே கட்டாயம இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி நன்றாக இடம்பெற வாழ்த்துகள்,

நோர்வே ஒஸ்லோ வில் இருக்கின்ற இந்து ஆலயமும் அங்கத்தவர்களின் வேண்டுகோளூக்கினங்க வருடாவருடம் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து அதன் பொருளாதார சுமையை ஓரளவு ஏற்றுள்ளது.

இப்படி புலம் பெயர் நாடுகளில் இருகின்ற ஒவ்வொரு கோயில்களும் ஈழத்தில் இயங்குகின்ற உதவி நிறுவனங்களை தத்தெடுத்து நிதிப்பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே ஒஸ்லோ வில் இருக்கின்ற இந்து ஆலயமும் அங்கத்தவர்களின் வேண்டுகோளூக்கினங்க வருடாவருடம் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து அதன் பொருளாதார சுமையை ஓரளவு ஏற்றுள்ளது.

இப்படி புலம் பெயர் நாடுகளில் இருகின்ற ஒவ்வொரு கோயில்களும் ஈழத்தில் இயங்குகின்ற உதவி நிறுவனங்களை தத்தெடுத்து நிதிப்பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும்.

சிட்னியில் இருக்கும் துர்க்காதேவி ஆலயமும் ஈழத்தில் இருக்கும் அனாதைப்பிள்ளைகளைப் பொறுப்பெடுத்து உதவி புரிந்து வருகிறது. முன்பு இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் தனது வருமானத்தில் செலவுகள் போக மீதமுள்ளவற்றில் மூன்றில் ஒரு பகுதியை தாயகத்துக்கு உதவி புரிந்துவந்தது. கனடாவில் சில ஆலயங்கள் தாயகத்துக்கு உதவி புரிகிறது.

பாராட்டத்தக்கதும், பின்பற்ற கூடியதுமான செயல். சென்ற வர்டமும் சேரன் அண்ணாவுக்கு சிட்னி வாழ் தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தனர். இந்த முறையும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்தியை இங்கு இணைத்து மேலும் நவம் அறிவுகூடத்தை பற்றிய தகவல்களை அளித்த கந்தப்புக்கு மிக்க நன்றிகள். [சென்றவருடமும் இதே போல செய்ததும் எமக்கு நினைவில் உள்ளது].

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத்தக்கதும், பின்பற்ற கூடியதுமான செயல். .

இதில் முக்கிய விடயம் இக்கலைஞர் புலத்தில் பிறந்தவர் என்பதே. ஆனால் ஈழத்தில் பிறந்தும் தாய் நாட்டை மறந்து பல தமிழர்கள் சிட்னியில் வாழ்கிறார்கள். இவர்களை என்ன செய்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.