Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி ஊடகங்களின் ஆரம்பமும் இன்றைய பிரச்சார வடிவமும்

Featured Replies

மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது.

மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இந்த செய்திப் பரிமாற்றம் என்பதும் வரையறைகளை சந்தித்ததுடன் புதிய வடிவங்களையும் பெற்றது. ஆட்சி அதிகார பீடங்கள் அறிவிப்புகளை செய்தல், நிகழ்வுகளை தொகுத்து வழங்குதல் போன்றவற்றின் மூலம் செய்திகள் தனிநபர் பரிமாற்ற வடிவத்தில் இருந்து கட்டுப்பாடான பரப்பல் வடிவத்தை அடைந்தது. பரப்பல் நோக்கமாக்கப்பட்ட நிலையில் அதற்கு பொருத்தமான வடிவங்களாக இசை நடனம் கதை பாடல்கள் என்பன புகுத்தப்பட்டன. ரோமர் சாம்ராச்சியத்தில் யூலியஸ் சீசர் காலப் பகுதியில் இருந்து அன்றாட நிகழ்வுகள் பற்றி தயாரித்த அறிக்கைகள் அதன் காலனித்துவ பகுதிகளில் பரப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு.

அச்சு பிரதி செய்யும் முறை 1456 இல் கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து செய்திப் பரப்பல் முறை புதிய வடிவத்தைப் பெற்றது. ஆரம்பத்தில் பைபிள் போன்ற புத்தகங்கள் அச்சுப் பிரதி செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டன. புத்தக பாணியில் எழுதப்பட்ட பருவவெளியீடாக முதல் பிரசுரம் 1594 இல் லத்தீன் மொழியில் யேர்மனியில் வெளிவந்தது என்று கூறப்பட்டாலும், ஆதாரபூர்வமாக முதலாவது செய்தித்தாள் அச்சு செய்யப்பட்ட ஆண்டாக 1605 உலக செய்தித்தாள் ஒருங்கமைப்பினால் (World Association of Newspapers) இன்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வாராந்த சஞ்சிகை வடிவிலான பிரசுரங்கள் முதன் முதலில் 1665 இல் இருந்து ஆங்கில மொழியில் இங்கிலாந்தில் வெளிவரத் தொடங்கியது.

கைத்தொழில் புரட்சி தொழில்நுட்ப ரீதியில் அச்சுப் பிரதிகளை உருவாக்குவதில் பாரிய முன்னேற்றங்களை தரத்திலும் வேகத்திலும் தந்தன. காலனித்துவ காலங்களில் அரசாட்சிக்கு எதிரான பத்திரிகைகள் இயங்க முற்பட்ட பொழுது அவற்றை தடுக்கும் நோக்கில் பத்திரிகைகளை பிரசுரிப்பதற்கு முத்திரை பெறவேண்டிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம் முத்திரை மூலம் பெறப்படும் வரி மூலம் பொருளாதார சுமையை அதிகரித்து சுயாதீன பத்திரிகைகளிற்கான எண்ணிக்கையை குறைப்பதும் முத்திரையை வழங்காது விடுவதன் மூலம் குறித்த பத்திரிகைகளை தடை செய்யும் முயற்சியாகவும் இருந்தது. அச்சடித்த செய்தித்தாள்கள் வினியோகத்திற்கு வந்த பின்னரான போர்க் காலங்களில், செய்திகளை அறிவதற்குரிய ஆவல் என்பது செய்தித்தாள்கள் மீது எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாய் செய்திச் சேகரிப்பு என்ற பிரிவு தனித்துவமடைந்து உருவாக்கம் பெற்றது. இவ்வாறு படிப்படியாக மக்களின் ஆர்வங்களை பூர்த்தி செய்யும் செய்திகளை தாங்கி வந்த ஊடகமும் அதை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட ஊடகத்துறையும் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்தும் ஒரு கண்ணுக்கு புலப்படாத அதிகாரத் தரப்பாக மாற்றம் பெற்றது.

செய்தி ஊடகத்தின் வளர்ச்சியானது அதன் செய்தி சேகரிப்பு முதல் வினியோகம் வரை எதிர்கொள்ளும் பொருளாதார சுமைகளை தாங்குவதற்குரிய பின்புலங்களில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. சுயாதீனமாக இயங்கிய செய்தி ஊடகங்கள் விளம்பரங்களை பிரசுரிக்கும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியதனூடாக தமது சுயாதீனத்தை மேலும் இழந்தன. இவ்வாறு வணிக மயப்படுத்தப்பட்ட ஊடகத்துறை தம்மை நோக்கி விளம்பரங்களையும் முதலீடுகளையும் கவரும் நோக்கில் தமது இயக்க விதிகளை மாற்றிக் கொண்டார்கள். இதன் அங்கமாக மரியாதைக்குரிய நடத்தை, நடுநிலையான நீதியான கொள்கைகள் என்ற பொது அபிப்பிராய ரீதியில் கவர்ச்சியான வரையறைகளை உருவாக்கியதன் மூலம் corporate media என்பதற்கு வித்திட்டார்கள். இதன் அங்கமாக ஊடகத்துறைக்குரிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. இவ்வாறு துறைசார் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட professional journalism என்பதன் ஒரு அங்கம் தான், உத்தியோகபூர்வ மூலங்களில் இருந்து வரும் தகவல்களையும் அபிப்பிராயங்களையும் மட்டும் தான் செய்தியாக்கும் மரபு. அதாவது அரச நிர்வாகம் முதல் ஏனைய நிலையான கட்டமைப்புகளின் நலன்களுக்கு எதிராக எதையும் பிரசுரிக்காத தன்மை.

இன்றைய உலகில் "பிபிசி" முதல் "நியுயோர்க் ரைம்ஸ்" பத்திரிகை வரை எல்லோரும் corporate media என்ற வரையறைக்குள் இயங்குபவர்கள். 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பில் பிரித்தானியா பங்குபற்றுவதற்கு முன்வைத்த காரணங்களை கேள்விக்குட்படுத்திய குரல்களை பிரித்தானிய ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் கவனமெடுக்காது விட்டதாக கருதப்படுகிறது. வேல்ஸ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி ஆக்கிரமிப்புக்கு முன்னர் பேரழிவு ஆயுதங்கள் (Weapons of Mass Destruction) பற்றிய செய்திகளில் "பிபிசி", 90 வீதமான சந்தர்ப்பங்களில் சதாம் அவற்றை உண்மையில் கொண்டிருக்கிறார் என்ற கருத்தைத்தான் மறைமுகமாகவேனும் உணர்த்தியது. இதன் மூலம் படையெடுப்பை நியாயப்படுத்துவதில் துணைபுரிந்தது. இவற்றுக்கு உறுதுணையாக புலனாய்வுத்துறையினர் மக்களை நம்பவைக்கும் படியான "சதாமின் மாளிகைகளில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கெல்லாம் கிறீடம் வைத்தாற் போல(CNN,FOX) போன்ற செய்தி ஸ்தாபனங்கள் யூதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது கசப்பான உண்மை.இதிலும் அறாபிய மக்களின் விடுதலை பற்றி இந்த செய்தி ஸ்தாபதனங்கள் எப்படி உண்மையை வெளிவிடும்?.அல்லது மற்ற நாடுகளின் விடுதலை பற்றி உண்மையான கருத்தை வெளியிடும்?.இவ்வளவு பிரச்சனை நடக்கும் எமது நாட்டில் CNN பேட்டி கண்ட ஆள் பழைய EPDP யின் ஒரு உறுப்பினர் ஒருவர்.இவர்களின் நடு நிலமை அப்போதே புரிந்து விட்டது.அத்தோடு மட்டுமல்லாமல் சிங்கள விரிவுரையாளரை பேட்டி கண்டு(நிச்சயமாக இவர் சிங்கள இன வாதி) ஏதோ தமிழர்கள் தான் பயங்கரவாதிகள் என பூதாகரமான பிரச்சாரத்தை கொடுத்தவர்கள் இந்த CNN.இன்னும் பல உதாரணங்களை சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமென நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

Prostitution is an Institution

By: Professor Aaron Rajah, San Diego, California

Courtesy: TamilCanadian

A prostitute says to a potential client, “Hon, if you got money I got time.” The modern day media prostitutes have a new slogan, “You got money, we got writing.” Often these new slogans are attributed to the state organizations involved in a cover up or state propaganda. In the context of Sri Lankan state terrorism against the minority Tamils, this propaganda often induces foreign journalists and transforms them into prostitutes attempting to continue the state’s terrorism propaganda in the international arena. Associate press (AP) writers often make good media prostitutes in the fight against truth in Sri Lanka’s ethnic cleansing against minority Tamils.

...

http://www.tamilcanadian.com/page.php?cat=134&id=5261

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மீதான கவனம் திரும்பிய காலப் பகுதியில் பிபிசி மற்றும் வொயிஸ் ஒவ் அமெரிக்க போன்ற ஊடகங்கள் பேர்சியன் (Persian) மொழியிலான சேவையினை விரிவாக்கியிருந்தார்கள். அதேவேளை பிபிசி பொருளாதார சிக்கல்களினால் செலவீனங்களை கட்டுப்படுத்தும் மறுசீரமைப்பு மூலம் சில நிகழ்ச்சிகளை நிறுத்துவதாகவும் பல நூறு பணியாளர்களை இடைநிறுத்துவதாகவும் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் சர்வதேச ஊடகங்களின் பல்மொழிச் சேவைகளின் நோக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நீங்கள் கூறியது போல் ஈரான் மக்களிற்காக பாரசீக மொழியில் ஒரு நிகழ்ச்சி தொடங்குவார்கள் அதில் தற்போது இருக்கும் அரசிற்கேதிரான கருத்துகளை வளர்பார்கள் அந்த கருத்துகளாள் நடுதரவர்க்கத்தினர் சிலர் கவலைபடுவார்கள் பிறகு அவர்களுக்கு மேற்கத்தைய நாடுகளில் அரசியல் தஞ்சம் கொடுப்பார்கள் ஏனையோர் ஈரானில் இருந்தே செயற்படுவார்கள் போராட்டம் வெடிக்கும் தமது கொள்கைகளிற்கு அரசு அடங்கினா அரசிற்கு உதவி செய்வார்கள் தாம் வளர்த்த நடுதரவர்க்கத்தை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்குவார்கள் அரசு அடங்காவிட்டால் தாங்கள் வளர்த்த நடுதர வர்க்கத்தினை மனித உரிமை,ஜனநாயக மீறல் என்று கூச்சல் போட சொல்லி அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களை தங்களின் கைபொம்மையாக்கி அரசு கட்டிலில் ஏற்றுவார்கள்.

ஒரு பேப்பர் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள்:

மேற்குறித்த கட்டுரையாளரின் கீழ்வரும் கருத்துக்களையும் தயவு செய்து பரிசீலிக்கவும்!

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறதோ அதை நிறைவேற்றுவதற்குரிய முழுக் கருத்துச் சுதந்திரம் தான் குறைந்தபட்ச்சத் தேவை. யாழ்களத்தின் இயங்கும் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆடம்பரமானதும் தேவை கருதி கட்டுப்படுத்தப்படக் கூடியதும் வேண்டியதுமே.

யாழ்களம் என்ன நோக்கத்திற்காக இயங்குகிறது என்பதை அதன் பொறுப்பாளர்(கள்) தான் தீர்மானிக்கக் கூடியவர்கள். ஏனையவர்களிற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறது எந்தளவிற்கு கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை. இது முற்று முழுக்க பொறுப்பாளர்களின் உரிமை-முடிவு என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

யாழ் போன்ற ஒரு களம் எப்படியான நோக்கங்களிற்கு இயங்க வேண்டும் என்பதைப் பற்றி தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்லலாம்.

-1- இன்று தமிழ் இனம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றிய சரியாக prioritize பண்ணுப்பட்டு அவற்றில் கவனம் தேவை.

-2- அந்த சவால்கள் பற்றி ஏனை தளங்களில் இல்லாத பார்வைகளிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

-3- வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்கப்பட வேண்டும் புதிய அணுகுமுறைகள் பரீட்சித்துப்பார்க்கும் ஊக்குவிக்கும் களமாக இருக்க வேண்டும்.

-4- இவற்றின் மூலம் புதிய வழிமுறைகள் அணுகுமுறைகள் அறிமுகப்படுத்தப்படலாம். அது பரந்த சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதும் விடுவது பல புறக்காரணிகளால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடைப்படலாம். ஆனால் அவற்றை இனங்கண்டு அவற்றின் மீது கவனத்தை கொண்டுவர முயற்சிக்கும் கடமையைச் செய்ய வேண்டும்.

-5- எமது சமூகத்தில் உள்ள வழமையான சிந்தனைகள் பார்வைகள் கருத்துக்கள் ஏனைய தளங்கள் ஊடகங்கள் களங்களில் நிரம்பி வழியும் விவகாரங்களால் நிரம்பி வழிவதை overwhelm பண்ணப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

-6- மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தின் சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலம் நோக்கிய ஒரு சுதந்திரமான சிந்தனை மற்றும் பரீட்சாத்த ஆய்வு களமாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தை பாதிக்காத நீதியான நியாயமான நேர்மையான சட்டதிட்டங்களிற்கு உட்பட்ட அனைத்திற்கும் அனுமதி இருக்க வேண்டும். இதன் அர்த்தம் விபச்சாரத்தால் எப்படி விரைவாக பணம் பண்ணலாம் என்று ஆய்வு செய்யலாம் அறிவுரை கூறலாம் என்று அர்த்தம் இல்லை!

கருத்துக்களம் என்பதற்கும் இணையத்தளம் அல்லது ஊடகம் ஒன்றிற்கும் இடையில் உள்ள வேறுபாடுபாட்டை தேவைகருதி சிதைத்து கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் கருத்துக்களம் என்பது மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக பிரதிபலிக்கும் என்பதே பொதுவான அபிப்பிராயமாக காணப்படுகின்ற போது, இதே கட்டுரையாளர் "யாழ்களத்தின் இயங்கும் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட கருத்துச் சுதந்திரம் ஆடம்பரமானதும் தேவை கருதி கட்டுப்படுத்தப்படக் கூடியதும் வேண்டியதுமே." என்று கூறி மக்களின் கருத்துகள் கூறுபோடப்படுவதை நியாயப்படுத்தும் இவர் "2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான படையெடுப்பில் பிரித்தானியா பங்குபற்றுவதற்கு முன்வைத்த காரணங்களை கேள்விக்குட்படுத்திய குரல்களை பிரித்தானிய ஊடகங்கள் திட்டமிட்ட முறையில் கவனமெடுக்காது விட்டதாக கருதப்படுகிறது " என்றும் "அமெரிக்காவின் ஊடகங்கள் ஈராக் மீதான படையெடுப்பில் அரச தரப்பு தகவல்களையும் அபிப்பிராயங்களையும் ஒருமனதாக ஒத்து ஊதி, நாட்டையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் (ஊடகத்) துறையையும் ஏமாற்றிவிட்டதாக தற்பொழுது விவாதங்கள் நடைபெறுகின்றன." என்றும் கூறி சர்வதேச ஊடகங்களை நோக்கி விரலை நீட்டுவதன் மூலம் "The modern day media prostitutes have a new slogan, “You got money, we got writing.” என்ற வசனத்திற்கு தானும் விதிவிலக்கல்ல என்பதை உணர்த்தி நிற்கிறார்.

சுதந்திர கருத்தாளர் சங்கம் - யாழ்களம் சார்பில்,

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

சாணக்கியன்

நான் எழுதிய ஆக்கத்தின் நோக்கம் செய்தி ஊடகம் என்பது தனியே நடக்கும் நிகழ்வுகளை அறிவிக்கும் நடுநிலையான நடத்தை கொண்டது அல்லது. அவர்கள் நடப்பவற்றை விபரிக்கும் முறை (perspective) அவர்களை இயக்கும் சக்த்திகளின் நிகழ்ச்சி நிரலை பொறுத்தது. சுதந்திர ஊடகமாக நடப்பவற்றை பற்றி எல்லா மூலங்களில் இருந்து வரக்கூடியவற்றை உண்மைத்தன்மையின் அடிப்படையில் வெளியிடுபவர்கள் அல்ல. சிங்கள ஊடகங்களில் வருபவற்றை மொழிபெயர்த்து பரப்புவது பற்றிய முன்னய விமர்சனங்களிலும் perspective பற்றி சொல்லியிருக்கிறன்.

சர்வதேச ஊடகங்களிற்கு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது அவை வியட்னாம் காலத்தில் மாத்திரமல்ல தற்பொழுது ஈராக் விவகாரத்தில் மீண்டும் அம்பலமாகியிருக்கிறது என்பதை உதாரணத்திற்காகத்தான் குறிப்பிட்டிருக்கிறன். எந்தவொரு பரிய அளவிலான நிதி ஒதுக்கீட்டிற்கு பின்னாலும் நிகழ்ச்சி நிரல்(கள்) இருக்கிறது. அவர்கள் மில்லியன் பவுண்ஸ்களே யுரோக்களோ டொலர்களே செலவளித்து ஊடகம் நடத்துவதது வேலை வாய்ப்பு வழங்கவல்ல. நிகழ்ச்சி நிரலிற்கேற்ப சேவைகளின் விரிவாக்கம் ஆரம்பம் முடிவுகள் தீர்மானிக்கப்படுகிறது.

இந்த பிரச்சாரத் தன்மையை நாங்கள் சிறீலங்கா-சிங்கள ஊடகங்களில் அனுபவத்தில் ஓரளவு உணர்ந்திருக்கிறம். ஆனால் சர்வதேச ஊடகங்களில் இன்னமும் ஒருவகை எதிர்பார்ப்பு நம்பிக்கை இருக்கிறது. சர்வதேச ஊடகங்கள் எமது விடையங்களை எமது நிலைப்பாட்டில் இருந்து சொல்ல வைக்க வேண்டும் என்பது தான் குறிக்கோள் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதே நேரம் அவர்கள் தனியே சிங்கள சிறீலங்காவின் பிரச்சார தந்திரங்களால் (சர்வதேச ஊடகங்கள் பயன்படுத்தும்; உத்தியோகபூர்வ மூலத்தால்) ஏமாற்றப்படுகிறார்கள் என்றதற்கு அப்பால் அவர்களிற்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதாவது சர்வதேச ஊடகங்களில் நிர்வாக நிலையில் உள்ள நிகழ்ச்சி நிரல் பற்றியது.

தமிழ்கனேடியன் இல் இருந்து இணைப்புக் கொடுத்த கட்டுரை என்பது ஊடகவியலாளர்கள் செய்தியாளர்கள் நிலையில் உள்ள தனிநபர் நிகழ்ச்சி நிரல்; அது எவ்வாறு நிர்வாக மட்ட நிகழ்ச்சி நிரலிற்கு உதவுகிறது என்றதை விளக்குவதால் பூரணப்படுத்தும் நோக்கில் இணைத்திருந்தன்.

சர்வதேசமோ இந்தியாவோ சீனாவோ சிறீலங்காவோ தனது நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப நேரத்தை நிதியை மனித வளத்தை பயன்படுத்துகிறது. தமிழரின் வளங்கள் அவர்களது சுய நிகழ்ச்சி நிரலிற்கு பயன்படுத்தப்படுவதை விட ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலில் (இதன் வடிவங்கள் ஜனநாயகம், கருத்துச்சுதந்திரம், மதம், மனிதஉரிமை, சினிமா, குடிவரவு என்று பல கோணங்களில் விரிகிறது) காதல் கொள்வதும் முடிந்தால் விபச்சாரம் செய்து சிற்றின்பம் காண்பதிலும் தான் விரயமாகிறது.

ஏனையவர்களின் நடத்தையின் ஆழத்தில் ஒழிந்திருக்கும் நிகழ்ச்சி நிரலை சுட்டிக்காட்டுவது அதை உணர்ந்து எமது எதிர்பார்ப்புகளை மாற்றியமைத்து அவ்வாறு நாமும் இயங்க முயற்சித்தால் தான் எமக்கு என்று ஏதாவது இறுதியில் தேறும் என்பதற்காகவே. இது யாழ் தரிசனம் புதினம் தமிழ்நாதம் ஒருபேப்பர் என்று எல்லாருக்கும் பொருந்தும்.

Edited by kurukaalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.