Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழ்விசன் (ரீவிஐ) தொலைக்காட்சி: சில எண்ணப் பகிர்வுகள்..!

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

கொஞ்சக் காலமா கனடாவில இருக்கிற இந்த ரீவிஐ தொலைக்காட்சி பற்றிய எனது கருத்துக்களை உங்கள் எல்லாருக்கும் சொல்லவேணும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது.

முதலாவது விசயம், எங்கட வீட்டில ரீவிஐ தொலைக்காட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்து இருக்கிது எண்டு நினைக்கிறன். வீட்டில அம்மா, அப்பா பொழுதுபோகாமல் சுவரைப் பார்த்துக்கொண்டு இருந்ததால நல்லதோ கெட்டதோ ஒரு தமிழ் தொலைக்காட்சிய வீட்டுக்கு எடுக்க வேண்டிய தேவை இருந்திச்சிது. ரீவி பார்த்தாலும் மூள தட்டும், பார்க்காட்டியும் தட்டும்.. எண்டபடியால் இதுபற்றி எடுப்பதா விடுவதா எண்டு அதிகம் யோசிக்கவில்ல. இப்ப $19.45 ரீவிஐக்கும், $14.95 ஜெயாரீவிக்கும் (ஏரீஎன்) கட்டி வாறம். மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கிது. எண்டாலும் மனநோயாளிகளா இருக்கிறத விட கொஞ்ச காச இதுக்கு செலவளிக்கிறது பிழையாத் தெரிய இல்ல. நான் ரீவி பார்க்கிறது குறைவு. நாலு இடத்துக்கு வெளியால போயிட்டு வந்தாலே போதும். ஆனா வீட்டில இருக்கிற வயசுபோன ஆக்கள் பாவம்தானே? அவேக்கு கட்டாயம் இப்படியான தமிழ் தொலைக்காட்சிகள் வேணும்.

நாங்கள் வழமையா தமிழ் ஊடகங்கள் எண்டால் அதுகளக் கிண்டல் அடிக்கிறதுதான் வழமை. அதைப் பாராட்டுற பழக்கம் எங்களுக்கு குறைவு. என்ன இருந்தாலும் ஒருத்தன் நல்லதா ஒண்டைச் செய்தால் அதப் பாராட்டத்தான் வேணும். இந்த வகையில ரீவியையும் நல்ல சேவைகளை வழங்குவதாக எனது கண்களுக்கு படுவதால் இதுபற்றி இஞ்ச எழுதுறன். ஐரோப்பாவில இருக்கிற தரிசனம், தீபம் எண்டு இருக்கிற தொலைக்காட்சிகள பலர் கடுமையா விமர்சிச்சு இருக்கிறீனம். நானும் அதுகளப் பார்த்து இருக்கிறன். ஆனா கனடா ரீவிஐ எண்டுறது அவற்றை விட கொஞ்சம் வித்தியாசமானது எண்டு சொல்லலாம். முக்கியமா கனடாவில கூடுதலான தமிழ் ஆக்கள் - கலைஞர்கள் இருக்கிறதால ஏனைய தொலைக்காட்சிகள விட ரீவிஐ மூலம் தரமான சேவையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிது

மெய்யே ஆடு!

மெஆஆய்...

உண்ட இறைச்சிய டேஸ்ட் ஆ சாப்பிடுறது எண்டால் உன்ன எங்க வாங்க வேணும்?

ஹங்.. ஹங் ஞாங்... யோஓ காஸ்!

பாத்தீங்களே! ஆடே சொல்லிப்போட்டிது?

பிறகென்ன...

தரமான ஆட்டு இறைச்சிகளுக்கு

யோஓ காஸ்!

மேல நான் சொன்னது கனடா ரீவிகளில போற பிரபலமான ஒரு விளம்பரம். இதச்செய்தவர் கனடா தமிழ் வன் எண்டுற தொலைக்காட்சியோட சம்மந்தப்பட்டு இருக்கிறார் போல. அட... ரீவி எண்டோன எனக்கு இந்த விளம்பரம் நினைவுக்கு வந்திட்டிது. விசயத்துக்கு வாறன் மன்னிச்சு கொள்ளுங்கோ..

நான் ரீவிஐ நிகழ்ச்சிகள பார்க்கிறது சரியான குறைவு எண்டாலும்... வீட்டில 24 மணிநேரமும் (ஆகக்குறைஞ்சது தினமும் ஆறு மணித்தியாலம்) ரீவிஐ லைவாப் போகேக்க காதுல விழுந்தது மற்றது சாப்பிடேக்க இடக்கிடை பார்த்தது (நான் சாப்பிடேக்கதான் அதிகம் ரீவி பார்க்கிறது) பற்றி கொஞ்சம் சொல்லிறன். சிலது ஜெயா ரீவியில போறதுகள ரீவிஐ இல போறது எண்டு மாறிச்சொன்னால் ஒருத்தரும் கோவிச்சுக் கொள்ளாதிங்கோ.

முதலாவது விருப்பமான நிகழ்ச்சி: விசர் வைத்திலிங்கம் எண்டுற நிகழ்ச்சி (ஒரு அன்பில விசர் வைத்திலிங்கம் எண்டுதான் நான் வீட்டில சொல்லிறது) உண்மையில நிகழ்ச்சிக்கு பெயர் வைத்திலிங்கம் ஷோ எண்டு நினைக்கிறன். பின்னேரம் ஆறு அரை சொச்சம் போறதாக்கும். இருந்திட்டு பார்க்கிறது. நல்ல ஒரு தரமான நிகழ்ச்சி. அதில மத்தளம் அடிக்கிற ஒருத்தர பார்க்க கொஞ்சம் பகிடியா இருக்கும்.

ரெண்டாவது: இந்த சீரியலுகள். சிரிக்கக்கூடாது. இரவில ஸ்கூல் ஆள வந்து ஏழு மணி சொச்சம் சாப்பிடேக்க இதுதான் அடிக்கடி போவதால் நானும் சீரியலுகள் பார்க்க வேண்டி வந்திட்டிது. நான் நல்லா விரும்பிப் பார்த்தது செல்வி, மற்றது ஆனந்தம். ரெண்டும் உண்மையில நல்லா இருந்திச்சிது. சீரியல்களுல நிறைய கள்ள ஐடியாக்கள் கிரிமினல் வேலைகள் எல்லாம் சொல்லித்தாறாங்கள். சிலது ஆத்திரமாகவும் இருக்கும். நான் சீரியல் போகேக்க ரீவிய ஓவ் பண்ணி எதும் விளையாட்டுக்கள் காட்டினால் பிறகு அம்மா கோவம் வந்து உனக்கு இண்டைக்கு சாப்பாடு ஒண்டும் தரமாட்டன் எண்டு பூச்சாண்டி காட்டி வெருட்டிப் போடுவா. ஒவ்வொரு நாளும் பார்க்கிற வேற வேற விதம் விதமான சீரியல் கதைகளை குழம்பாமல் அப்பிடியே மனதில பதிஞ்சு வச்சு இருக்கிறது எப்பிடி எண்டு அம்மாவிட்டதான் கேட்க வேணும்.

மூண்டாவது: தாயக வலம். பல நிகழ்ச்சிகள எல்லாம் - யாரோ எடுத்தத தமிழ்விசனில திருப்பிப் போடுறீனம். ஆனாலும் தாயக வலம் நிகழ்ச்சியை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிது. மாட்டுவண்டில், பனை, தென்னை மரங்கள், தோட்டங்கள்... புழுதி நிலம்.. தெரு... வேலிகள்... அதுல வாற எல்லாமே அழகு..

நாலாவது: பின்னேரம் அஞ்சு மணிக்கு கோயிலுகள் போகும். வீட்டில என்ன நடக்கிதோ இல்லையோ. டங் எண்டு பின்னேரம் சரியா அஞ்சு மணிக்கு ரீவிஐ இல கோயில் பார்க்காட்டிக்கு அம்மா பத்திரகாளி ஆட்டம் ஆடத்தொடங்கீடுவா. நானும் முந்தி இந்த நேரத்தில வாயப்பொத்திக்கொண்டு பயபக்தியா இருந்தன். பிறகு அம்மாவுக்கு பக்கத்தில போய் இருந்து கோயிலுக்கு வாற சனங்கள ரீவியுக்கால வேடிக்கை பார்க்க துவங்கியதுல இருந்து இப்ப இந்த நிகழ்ச்சி எனக்கு நல்லாப் பிடிச்சுக்கொண்டுது. கனடாவில இருக்கிற கலர் கலரான ஆக்கள வீட்டில இருந்து பார்த்து ரசிக்கிறதுக்கு இது நல்ல ஒரு வாய்ப்பு.

அடுத்த நிகழ்ச்சி: செய்திக்கண்ணோட்டம். நான் இரவு ஸ்கூலால வந்து சாப்பிடுற நேரம் ஒன்பது மணி சொச்சத்தில இது போகும். தமிழ்பிரியன் தலமையில நடக்கும். நல்ல ஒரு நிகழ்ச்சி. இஞ்ச யாழுக்கு வாற வித்துவாங்கள விட கொஞ்சம் ஸ்டாண்டர்ட் ஆன முறையில நிறைய வித்துவாங்கள் வந்து சுத்தி இருந்து கதைப்பீனம். ஆனா இதுல வெளி ஆக்கள் கோல் பண்ணி கதைக்க முடியாது. இத ஒரு குறை எண்டும் சொல்லலாம். ஓரிரு செய்திக் கண்ணோட்டங்களில வெளி ஆக்களும் தொலைபேசி மூலம் கலந்து கொள்ள சந்தர்ப்பம் குடுத்து இருக்கிறீனம்.

பிறகு, நையாண்டி மேளம், படலைக்கு படலை எண்டு எங்கட ஆக்கள் யூரோப்பில இருந்து செய்யுற நிகழ்ச்சிகள். இப்ப கனகாலமா அதுகளப் பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்க இல்ல. நையாண்டி மேளம், படலைக்கு படலை இரண்டும் நல்ல தரமான நிகழ்ச்சிகள்.

பிறகு அண்மையில குரஸ் ரோட்ஸ் (CROSS ROADS) எண்டுற நிகழ்ச்சிய பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைச்சிது. மிக நன்றாக இருக்கிது. கனடாவில இருக்கிற இளைய தலைமுறை பற்றி, அவர்கள் பிரச்சனை பற்றி ஆங்கிலத்திலேயே உரையாடல் நடக்கிது. நிறைய விசயங்கள அறியக்கூடியதாக இருக்கிது. இதுல கேள்விகள் கேட்கிறவர எனக்கு மிகவும் பிடிக்கும். விசர் வைத்திலிங்கம் நிகசழ்ச்சியிலும் இவர் மேளம் ஏதோ அடிச்சுக்கொண்டு இருப்பார். நல்ல ஆங்கில அறிவு இருக்கிது இவருக்கு. நிறைய ஆங்கில நேர்முகங்களை செய்து இருக்கிறார். இப்படியான கலைஞர்களை ரீவியை பெற்று இருப்பது அதன் அதிஸ்டம்.

அடுத்தது என்ன எண்டால் திங்கள் இரவு எண்டு நினைக்கிறன். மசாலா எண்டு ஒரு நிகழ்ச்சி போகும். இந்த நிகழ்ச்சியில வாறவரைப் பார்க்க எனக்கு யாழ் இணையத்து கிருபன்ஸ் அண்ணையின் நினைவுதான் அடிக்கடி வரும். ஏன் எண்டு தெரிய இல்ல. இதுல வாற பொண்ணு கொஞ்சம் அல்ல நல்லா இந்தியத் தமிழில இழுத்து இழுத்து கதைப்பா. சில பெண்களுக்கு இவவப் பிடிக்காது எண்டு நினைக்கிறன். ஆனா ஆண்களுக்கு நல்லா பிடிக்கும்போல. அவ இழுத்து இழுத்து கொஞ்சிக் கொஞ்சி கதைக்கிறத விரும்பி கேட்பீனம் போல..

தமிழ்விசனில செய்திகள்: வாசிப்பவர்கள், செய்தி எண்டு எல்லாம் இங்கு சர்வதேச தரத்தில இருக்கிது எண்டுதான் சொல்லவேணும். இடைக்கிடை யாழில ஆக்கள் கருத்தாடல் செய்யேக்க செய்தியில தாயகத்தப் பற்றி குறைச்சு இல்லாட்டி கூட்டி சொல்லிப்போட்டீனம் எண்டு குறைப்பட்டுக் கொண்டீனம். எனக்கு என்னமோ செய்திகள் பகுதியில பிழை ஒண்டையும் கண்டுபிடிக்க முடிய இல்ல. செய்திகள் வாசிக்கும் அனைவருமே திறமை உள்ளவர்கள் எண்டு சொல்ல வேணும்.

அடுத்ததா ஞாயிறு பின்னேரம்.. விவேகம் எண்டு ஒரு நிகழ்ச்சி போகும். பொது அறிவு சம்மந்தமா கேட்கப்படுற கேள்விகளுக்கு நேயர்கள் (வானொலிக்கு நேயர் எண்டு சொல்லிறது, ரீவிக்கும் நேயர் எண்டோ சொல்லிறது? இன்னொரு நல்ல தமிழ் சொல் இருக்கிது. இப்ப மண்டையுக்கால வருகிது இல்ல..) தொலைபேசி மூலம் பதில் சொல்லலாம். நிகழ்ச்சி இறுதியில பரிசும் கொடுக்கப்படும். நிறைய சின்னப் பிள்ளைகள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில கலந்து கொள்வதை அவதானிக்க கூடியதா இருக்கிது. எனக்கு இந்த நிகழ்ச்சி போரிங் அடிச்சாலும் உண்மையில சிறுவர்களுக்கு - இளையவர்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி இது.

இரவிலயும், பின்னேரம் ரெண்டு மணி சொச்சமும் தமிழ் படங்கள் போகும். சிலது திருப்பித் திருப்பி ஒரு படத்தையே போட்டு சுழட்டிக்கொண்டு இருப்பீனம். எரிச்சலா இருக்கும் எண்டு சொல்ல மாட்டன். ஏன் எண்டால் நான் படம் பார்க்கிறது குறைவு. அதுல என்ன போனாலும் எனக்கு அக்கறை இல்ல. ஆனாலும், நிறைய நல்ல படங்களையும் ரீவிஐ தொலைக்காட்சிக்கால நான் பார்த்து இருக்கிறன் எண்டும் சொல்லத்தான் வேணும்.

தில் எண்டு ஒரு நடன நிகழ்ச்சி இடக்கிடை போச்சிது. பார்க்க நல்ல உற்சாகமா இருந்திச்சிது. என்னோட ஸ்கூலில படிக்கிற ஒருத்தரும் ஆட்டம்போட்டு இதில பரிசு எல்லாம் வாங்கி இருந்தார். நல்ல ஒரு நிகழ்ச்சி எண்டு சொல்லலாம். அந்த நிகழ்ச்சிய நடத்துற ஒரு பையனத்தான் ரீவிஐ தொலைக்காட்சியில திரும்பவும் திரும்பவும் சுத்திச் சுத்தி காட்டிறீனம். ஏன் எண்டு விளங்க இல்ல. வேற பெடியங்கள் இல்லையோ கனடாவில படம் காட்டுறதுக்கு? அவர் - அந்தப் பெடியும் திறமை உள்ளவர்தான். அவருக்கும் பாராட்டு சொல்ல வேணும். அவரோட அடிக்கடி சோடியா ஒரு பொண்ணும் வந்து குலைஞ்சுகொண்டு இருப்பா. அவவும் திறமை உள்ள ஒருத்தர் எண்டு சொல்லத்தான் வேணும். எண்டாலும் ஓரிரண்டு பேர மட்டும் சுத்திச் சுத்தி காட்டாமல் வேறயும் ஆக்கள அறிமுகம் செய்து வச்சால் நல்லா இருக்கும்.

பிறகு சில நிகழ்ச்சிகள் பெயர் தெரிய இல்ல. நல்லா இருக்கிது. அதுல ஒண்டு சின்னப்பிள்ளைகள் பாட்டுப் பாடுறது. இந்தியாவில இருக்கிற பிள்ளைகள் மாதிரி கனடாப்பிள்ளைகளும் நல்லா தமிழ் சினிமாப் பாட்டுக்கள் பாடுதுகள். நல்ல முன்னேற்றம். மேலும், சிறுவர்கள் நிகழ்ச்சியும் நிறையப் போகும். நல்லா இருக்கும். எனக்கும் பொழுதுபோகாவிட்டால் பார்க்கிறது. ரெண்டு பேர் கிளி மற்றது வேறயும் ஏதோ வேசம் போட்டுக்கொண்டு சிறுவர் நிகழ்ச்சி செய்வார்கள். கதைக்கிறது, காட்சிகள், ஒலி அமைப்பு எல்லாம் மிக நன்றாக இருக்கும். அவர்களும் சிறந்த கலைஞர்கள் எண்டு சொல்லவேணும்.

காலம்பறயும் கோயில் போகும். எங்கட வீட்டில விடியக்காலம்பற அஞ்சு மணிக்கே ரிவிய அம்மா போட்டுடுவா. ஆனா ஜெயா ரீவிதான் அஞ்சு மணிக்கு போறது. ரீவிஐயை ய விட அதிகாலையில ஜெயா ரீவி - ஏரீஎன் இல நல்ல கோயில் நிகழ்ச்சிகள் போகும். கனடாக் கோயில்களவிட இந்தியக் கோயிலுகள் எண்டால் கொஞ்சம் எழுப்பம் தானே? டிங் டிங் டிங் டிங் எண்டு ஐயர் மணி அடிக்கிற சத்தத்தோடதான் நான் காலம்பற நித்தாவால எழும்பிறது. சிரிக்கக் கூடாது. அம்மா ரீவியை இல கோயில் நிகழ்ச்சி காலம்பற போகேக்க ரீவியில போற சாமிக்கும் கற்பூரம் காட்டி கும்பிடுவா. அவ்வளவு பக்திப் பரவசம். நான் அடிக்கடி சொல்லிறது கற்பூரம் எல்லாம் காட்டுறது சரி ஒரு நாளைக்கு சாமி கும்பிடுற பக்திப் பரவசத்தில வீட்ட எரிச்சுப்போடாதிங்கோ எண்டு.

மற்றது முக்கியமான ஒரு நிகழ்ச்சிய சொல்ல மறந்து போனன்.. பொன்.விவேகானந்தன் தலமையில நடக்கிற முதியோருக்கான நிகழ்ச்சி. உண்மையில சூப்பரான ஒரு நிகழ்ச்சி. எங்கட வீட்டிலையும் அம்மா அப்பா அதப் பார்ப்பீனம். நானும் சந்தர்ப்பம் கிடைக்கேக்க பார்ப்பன். வயது போன ஆக்களையும் அரவணைச்சு அவேக்கும் நிகழ்ச்சி குடுக்கிறது நல்ல ஒரு விசயம்.

இன்னும் எத்தினையோ விதம் விதமான நிகழ்ச்சிகள் போகிது. எல்லாம் என்ன எண்டு எனக்கு விரிவாத் தெரியாது. நினைவும் இல்ல. வேற என்ன... ?

கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி பற்றி கனக்க சொல்லீட்டன் போல இருக்கிது. அளவுக்கு மிஞ்சி புகழ்ந்தால் பிறகு ரீவிஐகாரருக்கு தலைக்கனம் கூடீடும். இதவிட மாத சந்தாப் பணத்தையும் கூட்டிப்போடுவாங்கள். பிறகு எங்கடபாடுதான் கஸ்டம். எண்டபடியால் இத்துடன் சுருக்கமா முடிக்கலாம் எண்டு நினைக்கிறன். நீங்களும் இஞ்ச இருக்கிற கனடாக்காரர் யாராச்சும் ரீவிஐ நிகழ்ச்சிகள் பார்த்தால் உங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கோ.

அட கடைசியா ஒண்டு சொல்ல மறந்து போனன். ஏதோ கொண்டாட்டம் அது இது எண்டு களியாட்ட நிகழ்ச்சிகளையும் பெரும் எடுப்பில வருடாவருடம் (வருசத்துக்கு ரெண்டு தரம்?) ரீவிஐ நடத்தி வருகிது எண்டு நினைக்கிறன். நான் ஒருநாளும் இதுகளுக்கு போக இல்ல. எண்டபடியால மேலதிகமா ஒண்டும் தெரியாது. இதுபற்றி ரீவியில அடிக்கடி விளம்பரங்கள் போகும்.

தமிழருக்கு எண்டு கனடாவில சொல்லிக்கொள்ளுறமாதிரி ரீவிஐ தொலைக்காட்சி இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிது. நன்றி! வணக்கம்!

ஒளிவு மறைவு இல்லாமல் உள்ளத சொல்லி இருக்கிறன். பிறகு இத வாசிச்சுப் போட்டு ஒருத்தரும் கோவிக்ககூடாது. :wub:

பி/கு: இருட்டுக்க இருந்து எழுதினது. எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்தி படியுங்கோ. மற்றும் எனது எண்ணப் பகிர்வுகள் பற்றிய உங்கள் கருத்துக்களை msivagur@gmail.com எண்டுற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது யாழிலையும் சொல்லலாம். நன்றி!

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

முரளி நீங்கள் நல்ல விடயத்தை நகைச்சுவையாக விபரித்துள்ளீர்கள், உங்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்களால் குறிப்பிட்ட இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் சேவை உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒன்று.

இது தனிமனிதனின் நிறுவனமுமில்லை என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழ்த்தேசியத்தின் சார்பாக மிகவும் நிதானமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம்.

சி.எம்.ஆர் வானொலியும், தமிழ் விஷனும் ஒரே நிறுவனம் என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

அடுத்ததாக உங்களால் குறிப்பிடப்பட்ட கொண்டாட்டம் என்ற நிகழ்சியும் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறைகொண்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ஏனெனில் இதில் சேகரிக்கப்படும் நிதி குறிப்பிட முடியாத நல்ல விடயத்திற்குத்தான் போய் சேருகின்றது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

  • தொடங்கியவர்

நன்றி வல்வை அண்ணை...

எனக்கு கொண்டாட்டம் எண்டு சொல்லப்படுற நிகழ்ச்சிக்கு போக சந்தர்ப்பம் கிடைக்க இல்ல. போனால் அதுபற்றியும் பிறகு எழுதிவிடுறன். சீஎம் ஆரும் தமிழ்விசனும் ஒண்டோ? எனக்கு தெரியாது. நான் வானொலி கேட்கிறது இல்ல. அப்பா கலாதரன் எண்டு சொல்லப்படுறவரின் வானொலியை கேட்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்; cmr,tvi,கலாத்ரனின்ctr எல்லாமேஎம் பக்கம்தான்.நாம் கட்டாய்யம் ஆதரவு கொடுக்கவேண்டும்

ரீவிஐ யின் உங்கள் விமர்சனத்துடன் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் குறிப்பாக செய்திப்பிரிவு பற்றியது. சர்வதேசத் தரத்துடனான செய்திவாசிப்பவரையும் கொண்டுள்ளது என்பது உண்மைதான். ஆயினும் அவரின் தமிழ் உச்சரிப்பைப் பார்த்தால் அவரைவிட தமிழழை பேசப்பழகும் ஒரு குழந்தை கூட அழகாக தமிழினை உச்சரிக்கும்.

அடுத்து கொண்டாட்டம் ,

இக் களியாட்ட நிகழ்வு ஆரம்பித்த முதலாவது வருடம் மட்டுமே இரண்டு தடவைகள் கொண்டாடப்பட்டது. அடுத்து வந்த வருடங்களில் வருடத்தில் ஒரு தடவை மட்டுமே கொண்டாடப்படுகிறது.

வல்வைமைந்தன் கொண்டாட்டத்தின் மூலம் சேர்க்கப்படும் நிதி குறிப்பிடப்படமுடியாத நல்ல திட்டத்திற்கு போய்ச்சேர்கிறது என்று எவ்வாறு கூறுகிறீர்கள். அதில் சேர்க்கப்படும் நிதியானது பெயர்குறிப்பிடமுடியாத திட்டம் ஒன்றிற்கு செல்வதற்கு ஒன்றும் 1 டொலரோ அன்றி 2 டொலரோ அல்ல. அதில் சேர்க்கப்படும் நிதியின் பெறுமதி அதிகம்.

நேரம் இருக்கும் போது மிகுதி தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுடர் உங்கள் கருத்திற்கு நன்றி, சி.எம்.ஆர், தமிழ் விஷன் இணைந்து நடாத்தும் கொண்டாட்டம் நிகழ்ச்சி பற்றி அதிகம் விமர்சித்து சட்ட சிக்கல்களை ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

அதாவது எங்கள் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போடுவது மாதிரி...

ஜயா இந்த தலைப்பில் இருந்து நான் விடுபடுகின்றேன்.

  • தொடங்கியவர்

எனது அறிவுக்கும் அப்பால்பட்ட விசயம் பற்றி சுடர் சொல்லி இருக்கிறீங்கள் கொண்டாட்டம் பற்றி...

மற்றது,

குழந்தைப் பிள்ளை மாதிரி யாரோ செய்தி வாசிக்கிறதாய் சொன்னீங்கள். யார் எண்டு தெரிய இல்ல. நான் அறிஞ்ச வகையில விக்னேஸ்வரன், மதியழகன், தமிழ்பிரியன், மற்றது ரூபவாகினியில முந்தி செய்தி வாசிச்ச ஒரு அக்காமார் இப்படி நல்லா வாசிக்கிறீனம். நீங்கள் சொல்லிற குட்டி பபா யார் எண்டு எனக்கு தெரியாது. நான் ரீவியை இவ்வளவு காலமும் பார்த்த அனுபவத்தில இருந்து எழுதி இருக்கிறன். ஆனா ஒவ்வொருநாளும் பார்க்கிறது இல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.