Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் ஆரம்பமாகும் பருவமழையை அடுத்து ஏற்படப்போவது சூறாவளியா? சுனாமியா?

Featured Replies

லண்டனிலிருந்து வன்னியன்

"கிளிநொச்சி' இது சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை வெல்லப்படமுடியாத ஆனால் வீழ்த்தப்பட வேண்டிய இலக்கு. அதேநேரம் புலிகளின் இராஜதந்திர நகரம் என உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட கிளிநொச்சி மிகக் கடுமையான போரழிவுகளைச் சந்தித்து மண்மேடாகி பின் குறுகிய காலத்தில் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்கிறது. தமிழர்களின் கடும் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் சான்று பகரும் நகரம்.

ஆனால் அதன் துரதிர்ஷ்டம் என்னவோ மீண்டும் அதன் மீது ஊழிப் பெருங்காற்று வீசத் தொடங்கிவிட்டது.

கடந்த வாரத்திலிருந்து ஆட்லறிப்பல்குழல் எறிகணைகளும், விமானப்படைக் குண்டுவீச் சுக்களும் கிளிநொச்சி நகரத்தின் பெரும் பாலான கட்ட டங்களை அழித்துக்கொண்டிருக் கின்றன. இக் கட்டுரை எழுதப்படும் வரை யிலும் நகரம் அதிர்ந்த வண்ணம் இருப் பதாகவே அறியமுடி கிறது. புலிகளின் உட் கட்டுமானங்களை அழிப் பதாகக் கூறிக் கொண்டு கிளிநொச்சி நகரத்தை அரபடைகள் அழித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் புலிகளின் உட்கட்டமைப்பை.

கட்டடங்களை அழிப்பதன் மூலம் சீர் குலைத்து விட முடியாது.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களுடைய உட்கட்டுமானங்கள் யாருக்கும் தெரிவதில்லை. அந்த நிலையில் ஓர் உட்கட்டமைப்பு அலு வலகத்தினை தேவையேற்படின் ஓர் இரவிலேயே பிறிதொரு இடத்திற்கு அவர்களால் மாற்றிவிட முடியும்.

அந்த அளவிற்கு சுறுசுறுப் பாக இயங்கக் கூடிய அனுபவ?ள்ள மனித வலுவை நாம் எங்கேனும் காணமுடியாது. இவ்வாறுதான் கிளிநொச்சியிலுள்ள புலிகளின் நிர்வாக மையங்கள் யாவும் திடீரெனக் காணமல் போய் கிழக்கு வன்னியில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது புலிகளுக்குக் கைவந்த கலை. இந்நிலையில் நகரமக்களை இடம்பெயர வைத்து சொத்துக்களை நாசம் பண்ணலாமே தவிர புலிகளை கிளிநொச்சி நகரத்திலிருந்து வெளியேற்றுவது இலகுவான கா?யமாக இருக்கப்போவதில்லை.

"கிளிநொச்சி நகரத்தின் கட்டடங்களைப் பார்க்க முடிகிறது. விரைவில் நகரத்துள் நுழைந்து விடுவோம் எனப்படைத்துறையினர் கூறிக்கொண்டாலும் பார்க்கத்தான் முடியும்.

ஆனால் அடையமுடியாது என்பது போலவே புலிகள் அக்கராயன் முறிகண்டி வீதிக்குச் சமாந்தரமாக முன்னரங்கை அமைத்து மிகக் கடுமையான தற்காப்புச் சண்டையை நிகழ்த்திக் கொண்டிருப்பதாகக் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படையினருக்கு அதிக இழப்புக்கள் ஏற் படுகின்ற போதெல்லாம் நாச்சிக்குடாவி லிருந்து திருமுறிகண்டி வரையான 25 மைல் நீளத்திற்கு தொடர்ச்சியாக 12 அடி உயரமுடைய மண்அணையும், அதனையடுத் துப் பெரும் அகழியும், முன்னே கண்ணி வெடி வயல் என்பவற்றை அமைத்து புலிகள் கடுமையாக தாக்குகிறார்கள் என படையதிகாரிகள் கூறு வதை ஊடகங்கள் யாவும் அதனை மேலும் மிகைப்படுத்தி கூறிவிடுகின்றன.

உண்மையில் நாச்சிக்குடா தொடக்கம் திருமுறிகண்டி வரையான மேற்கு, கிழக்கு முன்னரங்கப் பகுதியில் தொடர்ச்சியான மண் அணையைப் புலிகள் அமைக்கவில்லை.

என்பதுவே ஆச்சரியமான உண்மை. இவ்வாறு தொடர்ச்சியான பெரும் மண் அணையை அமைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு இல்லை. அத்தோடு அவ்வாறான பெரும் மண் அணையை அமைக்கக் கூடிய கனரக இயந்திரவளங்களும் அப்பகுதியில் இல்லை என்றே கூறலாம்.

மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இப்பகுதியில் ஏற்படும் சண்டைகள் குறுகிய காலத்திற்குள் ?டிவடைந்துவிடும் என்பதனால் பெரும் வளங்களை வீண்விரயம் செய்ய ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் தேவை ஏற்படுகின்ற சிற்சில இடங்களில் மாத்திரம் சிறிய மண் அணையை உருவாக்கியிருக் கிறார்கள் என்பதுதான் உண்மை.

புலிகள் எங்கு எதற்காக மண் அணையை அமைப்பார்கள் எனப் பார்ப்போமேயானால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளின் சாயம் வெளுத்து விடும். பொதுவாக வயல்வெளி கள், கடற்கரையோரச் சதுப்புநிலங்கள் போன்ற திறந்த வெளிப்பிரதேசங்களில்தான் மண் அணையும், அகழியும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

அந்த வகையில் நாச்சிக்குடா, பல்லவராயன் கட்டு சதுப்புநில திறந்தவெளிப் பிரதேசத்தில் சிறிய முட்புதர் களையும், செடிகளையும் தவிர வேறொன்றும் இல்லை. எனவே இப்பகுதியினூடாக யுத் தடாங்கி, மற்றும் கனரக வாகனங்கள் சகிதம் முன்னேறும் படையினரைத் தடுத்து நிறுத்தவும் எறிகணை வீச்சுக்களிலிருந்து பாதுகாக்கவும்,

எதிரிகளின் பார்வை படாவண்ணம் மறைப்பிட வும் இப்பகுதியில் மண் அணை ஏற்படுத்தப் படுகிறது. இங்கு 5 தொடக்கம் 6 அடி உயர மான மண் அணை உருவாக்கப்படும் போது மண் எடுக்கப்பட்ட இடம் அகழியாகின்றது.

இவ்வாறுதான் வன்னேரி, அக்கராயன் பகுதிகளில் சில இடங்களில் வயல் வெளிகளுக்குக் குறுக்கே சிறிய மண்அணை இடப்பட்டிருக்கிறது என்பதும் உண்மையே.

ஆனால் 12 அடி உயரமான மண்அணையோ, தொடர்ச்சியான மண் அணையும் அகழியுமோ இங்கு அமைக்கப்படவில்லை. மேலும் படையினருடைய முன்னகர்வுகள் யாவும் பெரும் காட்டுப் பகுதியினூடான இரகசிய நகர்வாகவே இருப்பதனால் மண் அணையுடன் கூடிய புலிகளின் முன்னரங்கப் பகுதியில் படையினர் சண்டைகளை தவிர்த்து வருவது தான் உண்மை.

பெருங்காட்டுப் பகுதியில் மண் அணை அமைப்பது மிகக் கடினமானதோடு அது தேவையற்றதொன்றே. அத்துடன் டாங்கிப் படையணி காடுகளுக்கூடாக முன்னகரமுடி யாது. அத்தோடு காட்டுமரங்களின் பின்னே புலிகள் பாதுகாப்புத் தேடுவதோடு மறைப்பாக வும் கொள்ளமுடியும்.

எனவே காட்டுப் பகுதியில் பதுங்கு குழிகளையும், காப்பரண்க ளையும்,கண்காணிப்பரண்களையும் தொடர்ச்சி யாக நிறுவி முன்னரங்கங்களை அமைப்பது தான் பொதுவான நடைமுறையும் கூட திறந்த வெளிப் பிரதேசத்திலுள்ள முன்னரங்க நிலைக்கு அப்பாலுள்ள எதிரி புலிகளின் உட் புறத்திலுள்ளவற்றை அவதானிக்க முடியா தவாறு மறைப்பிடுவதற்கு மரக்கிளைகள், பனையோலை, கிடுகு, படங்குகள், பயன்படுத் துவது வழக்கமாகும்.

இதனால் முன்னரங்கப் பகுதி உயரமான வேலிபோன்று தோற்றமளிக் கும். இதனைப் பெரும் தொடர் மண் அணை எனக்கூறப்படுகின்றது.

மேலும் கடந்த வாரம் 572 டிவிசன் கொக்காவில் நகரத்தை நோக்கி முன்னேறுவதா கவும், கொக்காவில் புகையிரத நிலையத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட ஏனைய ஊடகங்களும் அச்செய்தியினை அப்படியே பறக்க விட்டு விட்டன.

இங்கு வேடிக்கை என்னவெனில் கொக்காவில் என்கின்ற நகரமோ, அல்லது ஒரு புகையிரத நிலையமோ நான் 2001ஆம் ஆண்டு வரை நடந்து திரிந்த அந்தக் கொக்காவில் காட்டுப் பகுதியில் இல்லவே இல்லை. கொக்காவில் என்பது ஏ9 வீதியில் திருமுறிகண்டிக்குத் தெற்கே 3மைல் தொலைவில் உள்ளது. இங்கிருந்து துணுக்காய்க்கு ஏ9 வீதியிலிருந்து ஆரம்பிக்கும் சிறு வீதி புத்துவெட்டுவான், தேறாங்கண்டல் ஊடாகச் செல்கிறது.

கொக்காவில் பிரதேசம் புவியியல் ரீதியில் வன்னிப் பெருநிலப்பரப் பில் மிகஉயர்ந்த பகுதி என்பதனால்தான் கொக்காவில் சந்தியில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனத்தின் துணை ஒளிபரப்புக் கோபு ரமும், அலுவலகக் கட்டடமும் அமைக்கப்பட் டிருந்தது.

இந்த ரூபவாஹினிக் கூட்டுத் தாபனக் கட்டடம் தான் பின்னாளில் கொக்காவில் இராணுவ முகாமாக மாறியிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே கொக்காவில் என்ற பெயர் பிரபல்யம் அடைவதற்கு 1985ஆம் ஆண்டு காலப்ப குதியில் நிகழ்ந்த முக்கிய இரண்டு தாக்குதல் கள் காரணமாயிற்று.

ஒன்று ரெலோ இயக்கம் மேற்கொண்ட முகாம் தகர்ப்பு முயற்சி. மற்றையது படையினரை ஏற்றிச் சென்ற யாழ் தேவி தொடரூந்தின் மீது புலி களால் மேற்கொள் ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்களாகும்.

பின்னர் 1990 இல் இம்முகாம் புலிகளால் துடைத்தழிக்கப்பட்டதோடு அந்தப்பகுதியில் எந்த விதமான கட்டடங்களையும் தரைக்கு மேல் காணமுடியவில்லை. கொக்காவில் சந்தியிலிருந்து செல்லும் துணுக்காய்வீதி ஒரு மைல் தொலைவில் புகையிரதப் பாதையைக் கடந்து செல்கிறது. அவ்விடத்தில் புகையிரதப் பராமரிப்பு ஊழியர் தங்கும் விடுதிக் கட்டடம்.

(ரயில்வே காங்கிக் கட்டடம்) முன்பு இருந்தது ஆனால் அது பின்னாளில் அழிக்கப்பட்டு அக்கட்டடத்தின் அத்திவாரத்திற்கு இடப்பட்ட வலுவான செங்கற்கள் கூட தோண்டி எடுக் கப்பட்ட நிலையில் புதர்கள் வளர்ந்து கட்டடம் முன்பிருந்த இடத்தைத் தேடிப் பிடிப்பதுவே மிகக் கடினம்.

மற்றும் தாக்குதலுக்குள்ளான சேதமடைந்த பெட்டிகளின் இரும்புகள் யாவும் பழைய இரும்பு விலைக்கு விற்கப் பட்டுவிட்டன. இப்பகுதிக்கு அண்மையில் மக்கள் குடியிருப்பு என்றால் அது புத்து வெட்டுவான் கிராமம் மாத்திரமே.

திருமுறிகண்டியிலிருந்து மாங்குளம் வரை யான ஏ9 வீதியின் மேற்குப் புறத்தில் 1 தொடக்கம் 3மைல் இடைவெளிகளில் ஏ9 க்குச் சமாந்தரமாக மேற்குப் புறத்தில் படையினர் நிலைகொண்டுள்ளனர்.

என்பதுதான் உண்மை. அடுத்து மல்லாவியிலிருந்து மாங்குளம் நோக்கி முன்னேறும் படையினர் (573) மாங் குளத்திலிருந்து 3 மைல் மேற்கே வன்னி விளாங்குளத்தில் கடந்த இரு மாதங்களாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஜயசிக்குறு நடவடிக்கையின் போது வன்னிவிளாங்குளப் பகுதியில் படையினர் அமைத்த பலமான மண்அணை முன்னரங்கினை தற்போது புலிகள் தமது முன்னரங்கமாக அமைத்து மாங்குளத்தை படையினர் அணுகாத வண்ணம் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் கடும் பருவ மழைக்கு முன்னர் மாங்குளத்திற்கும், திருமுறி கண்டிக்கும் இடைப்பட்ட ஏ9 வீதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு படையி னர் பெரும்முயற்சி எடுத்துவருகின்றனர்.

எனினும் மேற்கு வன்னியின் வடக்கு முன்ன ரங்கைப் போலவே கிழக்கு முன்னரங்கமும் அதாவது மாங்குளம் திருமுறிகண்டிக்கு இடைப்பட்ட பகுதி மாறிவருவதனை கடந்த வாரத்தில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக் களிலிருந்து அறியமுடிகிறது.

மொத்தத்தில் கிளிநொச்சி மீதான படைநடவடிக்கையை பருவமழைக்கு முன்னர் பூர்த்தி செய்யவேண் டும் என்பதில் படைத்தரப்பு அவசரம் காட்டுவதுபோல் தெரிகிறது. ஆனால் புலிகளோ கிழக்கு வன்னியில் அமைதியாகவும். அதேநேரம் திறமையாகவும் காரியங்களை கச்சிதமாக மேற்கொள்வ தாகவே தெரிகிறது.

ஏனெனில் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் போர்க்களத்திற்கு அப்பால் புலிகள் எதிர்க்கட்சியில் இணைந்திருக்கின்ற ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது தாக்குதல் நடாத்தி அவரை அழிப்பதன் மூலம் போர்க் களத்தில் எந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தமுடியாது. அது ஓர் உடனடித் தேவையும் அல்ல.

ஆனால் இங்கு எதிர்காலத்தில் வளரவிருந்த கருவேலமரம் முளையிலேயே வேருடன் கிள்ளி எறியப்பட்டிருக்கிறது. மேலும் இரா ணுவ நடவடிக்கைக்கு எதிரான வியூகங்களை வகுத்து சண்டைக்குத் தயாராகிக் கொண்டிருக் கும் புலிகள் இயக்கம் சண்டைக்கு வெளியேயும் செய்ய வேண்டியவற்றை தக்க தருணத் தில் கச்சிதமாகச் செய்து முடிப்பதிலிருந்து புலிகள் இயக்கம் நெருக்கடியைச் சந்திக்கவில்லை. மக்கள்தான் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

இது இவ்வாறு இருக்க வன்னியில் இடம் பெயர்ந்த மக்களை தேசியத்தலைவர் நேரடி யாகச் சென்று பார்வையிட்டு நம்பிக்கையூட் டும் வகையில் உரையாடி அவர்களின் குறைக ளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்குகின்ற போது தற்போதைய வன்னிக் களநிலைமை புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே இழுத்துச் செல்லப்படுவதாகவே தெரிகின்றது. எனவே வன்னியில் ஆரம்பமாகும் பருவமழையை அடுத்து ஏற்படப்போவது சூறாவளியா? சுனாமியா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://www.tamilskynews.com/

மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இப்பகுதியில் ஏற்படும் சண்டைகள் குறுகிய காலத்திற்குள் ?டிவடைந்துவிடும் என்பதனால் பெரும் வளங்களை வீண்விரயம் செய்ய ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
:icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

அடுத்து ஏற்படப்போவது சூறாவளியா? சுனாமியா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://www.tamilskynews.com/

:icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

அப்புறம் வன்னியன் ! அருமையாக இருக்கு கதையின் தன்மை என்ன கொஞ்சம் சில வார்த்தைகளை பிரயோகித்து இருந்தால் இன்னும் சிறப்பாக பத்திரிகை விற்க உதவி இருக்கும்

உதாரணம். 1. விரியப் போகும் களத்தில் விடை கொடுக்க தயாராகும் புலியணிகள்

2. இறுக்கத்தில் இராணுவம்

3. தேள்வடிவத் தாக்குதல் மையத்திற்குள் இன்னும் நுளையாத படைகள் காத்திருக்கும் புலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது படையினர் கிளிநொச்சியினை கைப்பற்ற 48 மணி நேரமே உள்ளது - ஹெல உறுமய கூறுகிறது

வீரகேசரி நாளேடு 10ஃ12ஃ2008 7:32:01 Pஆ - எமது படையினர் கிளிநொச்சியினைக் கைப்பற்றுவதற்கு இன்னமும் 48 மணி நேரமே உள்ளது. இந்த நிலையில் இந்தியா அல்ல எந்தவொரு நாட்டினதும் அழுத்தத்திற்கு அடிபணிந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை அரசாங்கம் கைவிடக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் நரேந்திர குணதிலக தெரிவித்தார்.

கருணாநிதி ஜெயலலிதா கூட்டணி தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. தேர்தலுக்கான நாடகத்தையே அரங்கேற்றுகின்றனர். வைகோ கூட்டணி பிரபாகரனின் தோல்வியைத் தாங்க முடியாது தவிக்கின்றது என்றும் அவர் கூறினார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறி வருவது தொடர்பில் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து நரேந்திர குணதிலக மேலும் கூறியதாவதுஇ

இந்தியா சுதந்திர மற்றும் இறையாண்மையுடைய நாடு. அதேபோல் இலங்கையும் சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாகும். எமது அயல்நாட்டை மதிக்கின்றோம். ஆனால்இ அதற்காக மண்டியிட முடியாது. இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை தலைதூக்குவதற்கு இந்தியாவே வழிவகுத்தது. இந்திராகாந்திஇ ராஜீவ்காந்தி பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கி இறுதியில் ஆயுதங்களுக்கே பலியானார்கள். இது பழைய கதையாகும்.

ஆனால்இ இன்று சார்க் நாடுகளின் முதன்மை நாடாக இந்தியா திகழ்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கியது. ஆனால்இ இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு சார்பான போராட்டங்களால் நிலை தடுமாறிப் போயுள்ளது. காரணம் அடுத்த வருடம் அங்கு தேர்தல் இடம்பெறவுள்ளது.

எனவேதான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றது. இந்திய அரசியல் நன்மைகளுக்காக பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிறுத்த முடியாது. இதனை சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். இலங்கைத் தமிழ் மக்களுக்காக கருணாநிதியும் ஜெயலலிதாவும் போராட்டம் நடத்தவில்லை. தேர்தலுக்காக தமிழக மக்களின் ஆதரவைப் பெறவே நாடகமாடுகின்றனர்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களின் விடுதலை வீரன். ஒரு போதும் தோல்வியுறச் செய்ய முடியாதென்ற மாயையை வைகோஇ நெடுமாறன்இ ராமதாஸ் போன்றோர் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அரசியல் நடத்தினர். இதனால் விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தது. இதனாலேயே ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டனர். பல்வேறு உதவிகளை வழங்கினர்.

ஆனால்இ இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் கிளிநொச்சி எமது படையினர் வசம். பல முனைகளிலும் எமது படையினர் வெற்றி பெறுகின்றனர். புலிகள் தோல்வியின் விளிம்பிற்கே சென்று விட்டனர். எனவே போராட்டங்களை தமிழகத்தில் ஆரம்பித்துள்ளனர். நு-அயடை வழ ய கசநைனெ

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=7380

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.