Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் வந்துள்ள சிங்கள குடியேறிகள் - அரச அதிபர் விசனம்

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 9, 2010

முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீரென வந்து தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும். திரும்பப் போகப்போவ தில்லை எனத் தெரிவித்திருக்கும் சிங்களக் குடும்பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் சிவில் நிர்வாகத்துக்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. என

யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் பி.பி.ஸிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு மீள்குடியேறும் நோக்குடன் வந்துள்ளதாகக் கூறும் யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள குடும்பங்கள் தொடர்பாக பி.பி.ஸிக்கு யாழ். அரச அதிபர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.ஸி. செய்திச் சேவையில் தெரிவிக்கப் பட்டதாவது:

யாழ்ப்பாணத்தில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வாடகைக்கு குடியிருந்ததாகவும் அன்றைய சூழல் காரணமாகத் தாங்கள் நாட்டின் தென்பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் தெரிவித்து, பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களான சுமார் 80 குடும்பங்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என யாழ் அரசாங்க அதிபரிடம் கோரியிருக்கின்றனர்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், இந்தக் குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தக் காணிகள் இருக்கவில்லை எனவும், இவ்வாறு இடம்பெயர்ந்ததாகத் தெரிவிக்கும் குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக் கைகள் எதுவும் இப்போது இடம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் ஆகியவற்றை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளே இப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் அரச அதிபர் சுட்டிக்காட் டியுள்ளார்.

முன்னறிவித்தல் எதுவுமின்றி வந்து, தாங்கள் யாழ்ப்பாணத்திலேயே இருக்க வேண்டும், திரும்பப் போகப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் இந்தக் குடும் பங்களின் நடவடிக்கை யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்திற்கு ஒரு சங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் யாழ் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D

நேற்று ஸ்ரீ லங்காவின் சிங்கள மதவாத கட்சியான ஹெல உறுமய (JHU) விடுத்த அறிக்கை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"அரசாங்கம் வடக்கில் இடம்பெயர்ந்த 'சிங்கள மக்களை' மீண்டும் அங்கே குடியேற்ற தவறினால், கொழும்பில் உள்ள இந்து கோவில்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்படும். இதன் மூலமாவது சிங்களவர்களை, தமிழர்களான இந்துக்கள் புரிந்து செயற்பட வேண்டும்."

original :

Government should re-settle Sinhala families in North where they were displaced during 1980's. If Government fails to do so, all Hindu temples in Colombo Sri Lanka will be destroyed, and hence Hindu Tamils will know who Sinhalese are.

ராஜபக்ச இந்தியாவிற்கு வரும் போது இந்த அறிக்கை வெளிவந்திருப்பது - ராஜபக்சவின் தோழமை கட்சி ஹெல உறுமய - இங்கே கவனிக்கத் தக்கது.

(( மின்னஞ்சலில் வந்தது ))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.