Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் மக்களே சிறீலங்காவுக்கு வருமானத்தை வழங்குகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் மக்களே சிறீலங்காவுக்கு வருமானத்தை வழங்குகின்றனர்

October 12th, 2010 boycott-sri-lanka-04-dollar

போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்காவின் உல்லாசப்பயணத்துறை அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அது புலம்பெயர் தமிழ் சமூகம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்வதால் ஏற்பட்டது என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் முடங்கிக்கிடந்த உல்லாசப்பயணத்துறை போர் நிறைவுபெற்ற பின்னர் அதிக வளர்ச்சி கண்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது.

கட்டுநாயக்கா அனைத்துலக விமானநிலையத்தின் ஊடாக சிறீலங்காவுக்குள் நுளையும் மக்களின் தொகையை கொண்டு இந்த கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் சிறீலங்காவுக்கு செல்லும் மேற்குலக மக்களின் எண்ணிக்கைகள் தற்போதும் மிகவும் குறைவாகவே உள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட ஆடம்பர விடுதி ஒன்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேற்குலகம் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிகள், ஆசிய நாடுகளில் தோன்றியுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை போன்றவை இதற்கான காரணங்கள். எனவே தான் ஆசிய நாடுகளின் பயணிகளை குறிவைத்து சிறீலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களுடன் சிறீலங்கா செல்வதை உல்லாசப்பயணிகளின் வரவாக அரசு கணக்கில் எடுத்து வருகின்றது.

மேலும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் சென்று குடியேறிய சிங்களவர்கள், முஸ்லீம் மக்கள் உட்பட பல இனத்தவர்களும் போர் நிறைவுபெற்ற பின்னர் சிறீலங்காவுக்கு சென்று வருகின்றனர்.

சிறீலங்காவில் வர்த்தகங்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் சிறீலங்கா சென்று வருகின்றனர். ஆனால் அவர்களை எல்லாம் சிறீலங்காவின் உல்லாசப்பயணத்துறை தனது தரவுகளில் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, சிறீலங்காவுக்கு செல்லும் தமிழ் மக்களில் பெருமளவானவர்கள் சிறீலங்கன் ஏயர்லைன் விமான சேவையை பயன்படுத்துவதால் சிறீலங்கா அரசின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவுக்கு தமது உறவுகளை பார்க்கச் செல்லும் மக்களை நாம் தடுக்க முடியாது, ஆனால் சிறீலங்காவின் சேவைகளையும், பொருட்களையும் அவர்கள் இயலுமானவரை புறக்கணிக்க முடியும், அதனை தான் நாம் வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் பொருட்களை புறக்கணிக்குமாறு மேற்குலக நாடுகளில் புலம்பெயர் தமிழ் சமூகம் போராட்டங்களை முன்னெடுத்து வருகையில் தமிழ் மக்கள் அதனை புறக்கணிப்பது வேதனையானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

meenakam

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் இதேபோன்று தமது தொடர்ந்த ஆதரவை வழங்கி மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வரும்வரை சிங்களப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த உதவுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்..! :D:)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பலர் சிறிலங்காவுக்குச் செல்கிறார்கள். பெற்றோர்களை, சகோதர சகோதரிகளை, உறவுகளைப் பார்ப்பதற்குச் செல்வது வேறு. ஆனால் சுற்றுலா செல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காக அதுவும் சிறிலங்கன் எயர்லைன்சில் பிரயாணம் செய்கிறார்கள். நான் சிறிலங்காவை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னைப் பொருத்தமட்டில் நான் தற்பொழுது சிறிலங்காவுக்குச் செல்ல மாட்டேன். இனிமேல் செல்வேனோ தெரியாது. அங்கு செல்ல விருப்பமில்லை. முன்பு தமிழர்களுக்கு ஒரு ஆட்சி இருந்தது. இப்பொழுது எல்லாம் போய்விட்டது. இங்கு இருந்தே அங்குள்ள மக்களுக்கு உதவலாம். சிட்னியில பல தமிழர்களின் வீடுகளுக்குச் சென்றால் அங்கே தமிழினப் படுகொலைக்கு உடந்தையாக இருந்த கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சியே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவிரும்பினால் இணையத்தில் அல்லது வாடகைக்குப் பெற்றுப் பார்க்கலாம். ஆனால் காசு கொடுத்து விட்டுக்கு நேரடியாக ஒளிபரப்புச் செய்து பார்க்கிறார்கள். மற்றைய நாடுகளை விட சன் தொலைக்காட்சி சிட்னியில் மாதம் ஒன்றுக்கு 36 வெள்ளிக்கு மேல் அறவிடுகிறார்கள். அவுஸ்திரெலியாவில் சன் தொலைக்காட்சியை கலாநிதி மாறன் நேரடியாக அவருக்குத் தெரிந்த இந்தியரின் ஊடாக ஒளிபரப்புச் செய்கிறார். சிட்னியில் பல விடுகளில் டில்மா தேநீரைத்தான் குடிக்குறார்கள். எங்களுக்கு சுதந்திரமான வாழ்வைத்தந்த அவுஸ்திரெலியாத் தேனீரான புசலைப் புறக்கணிக்கிறார்கள். சிறிலங்கா தேசிய உடை பதிந்த ஆடையை அணிகிறார்கள். நெக்டோ குளிர்பானத்தை வாங்கிக் குடிக்கிறார்கள். இவர்களைத் திருத்த முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.