Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச புலன் விசாரணைக்கு ஐநாவை வற்புறுத்தி நா.க.த. அ கையெழுத்து வேட்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. செயலாளருக்கு விசாரணைக்குழு அமைக்க அதிகாரம் உள்ளது: ருத்ரகுமாரன்

ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு அதிகாரம் இருப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அது குறித்து விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை அமைக்க முடியும் என்றும், அதற்கான வேலைத் திட்டங்களில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த விஷயம் குறித்து வழக்கு தாக்கல் செய்வதற்குத்தான் பாதுகாப்பு சபையின் அனுமதி தேவை. ஆனால் அங்கு அது குறித்து புலனாய்வு செய்தவற்கு வழக்கறிஞர்களுக்கு பரிந்துரைப்பதை ஐ.நா. செயலாளர்தான் செய்ய முடியும். அதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளது என்றும் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52723

-------------------------------------

ஐ.நா. அறிக்கை இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்தியுள்ளது: ருத்ரகுமாரன்

ஐ.நா. செயலாளரின் ஆலோசனைக்குழுவின் அறிக்கையானது, இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்திருக்கிறது என்பதை பல வகைகளிலும் உணர்த்துவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான வி. ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் விடுதலைப்புலிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகத்தை விளைவித்தார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விமர்சனங்கள் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த ருத்ரகுமாரன், புலம்பெயர் தமிழர் இந்த போராட்டத்தை நடத்தவில்லை என்றும், இலங்கையில் இருந்த தமிழர்களே அதனை நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் போர் குறித்து முழுமையான ஒரு விசாரணை நடத்தப்பட்டாலே முழுமையான உண்மைகள் வெளிவரும் என்று ருத்ரகுமாரன் கூறினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52724

... இச்செய்தியை பார்த்து ஒருவரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்! ...

.... கடந்த வார இறுதியில்(அதற்கு முன்முள்ள வார இறுதிகளில் கூட) இங்குள்ள வானொலி ஒன்றில், எம் பிரதிநிதிகள்(??????) மீது பலத்த கண்டனங்கள் வாசகர்களால் தொடுக்கப்பட்டன ... என்ன ஒன்றையும் செய்கிறார்களில்லை? தமக்குள் அடிபட மட்டும் வீதிகளில் இறங்குகிறார்கள்? ஏமாற்றுகிறார்கள்? போன்ற ... அதனை கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிரதிநிதி ... லண்டனில் இருக்கிறாராம் ... அவசர அவசரமாக தமது இணையத்தில் இப்படி ஒரு புலுடாவை விட்டு விட்டு அவ்வானொலிக்கு வந்து ... நாம் செய்கிறோம் ... என்றாராம்!!!!!!!!!!

.... மு.கு: இச்செய்தி, அவர்களது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டது, மக்களின் கண்டனக்குரல்கள் ஆவ்வானொலியில் எழுந்த நேரத்தில் ...

... காலம் காலமாக ... நாம் தேர்வு செய்த பிரதிநிதிகள் ... நமக்கு மொட்டை அடித்து, நாமம் தடவி, ஏறி இருந்து அர்ச்சனை செய்ய முற்படுகிறார்கள் ... அது இன்று புலத்திலும்!!!!!!!!!!!!!!!!!!!

.... இந்த நாகதஅ விற்கு ஆதரவான இணையத்தளங்களான சங்கதி, தாய்நிலம், .. போன்றவற்றில் தேடினால் ...

sankathi.png

... ஒன்றுமில்லை ... சிங்களவன் செய்கிறான்!!! என்ற செய்தியோடு ... இங்குள்ள மற்றைய தரப்பு மீது சகதி அள்ளீ எறியும் செய்திகளும் ...

வேறொரு செய்தியில் ... யாரோ கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள் ... இவர்கள் அதற்கு உரிமை கோரப்போகிறார்களா???????

.... எவ்வளவு காலத்துக்குத்தான் இனியும் ஏமாற்றப்போகிறார்கள்??????????

Edited by Nellaiyan

... நெடுக்கர், இந்த வேட்டைச் செய்தியை இங்கு இணைத்திருக்கிறீர்!!! ... நீராவது இந்த வேட்டையில் கையெழுத்து இட்டு விட்டீரா??????? அல்லது யாராவது யாழில் இருந்தாவது????????

... சிலசமயம் ... நாகதஅ பிரதமர், அமைச்சர்கள் வாழ், பிரதிநிகள் வாழ் எல்லோரும் "றோயல் வெடிங்" இன்விற்றேஷனுக்கு காத்திருக்கிறார்கள் போல ... கடைசி நேரத்தில் ... அது முடிய வேட்டையில் இறங்கக்கூடும்??????!!!!!!!

36_1_19.gif36_1_19.gif36_1_19.gif36_1_19.gif36_1_19.gif36_1_19.gif

Edited by Nellaiyan

நாடு கடந்த தமிழீழ அரசின் கையொப்ப வேண்டுகோள்

அய்யன்னா மன்றத்தின் வல்லுனர் குழுவின் விதந்துரையின்படி சுதந்திரமாக இயங்கும் பன்னாட்டு விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு அய்யன்னா மன்றத்தையும் அய்யன்னா மன்றத்தின் செயலாளர் நாயகத்தையும் நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டிக் கொள்கிறது.

மேலும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் மீதும் மூத்த அரசியல் தலைமை மீதும் போர்க் குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் மற்றும் இனப்படுகொலைக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அய்யன்னா மன்றத்தை நா.க.த.அரசு வலியுறுத்தி நிற்கிறது.

நா.க.த.அரசு அலுவல் முறையாகத் தொடக்கி வைக்கும் இந்நிகழ்ச்சிக்குத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு மிக்க பணிவோடு வேண்டி நிற்கிறோம்.

இந்நிகழ்ச்சி மார்க்கம் நகர அவை அறையில் (Markham City Council Chambers) வெள்ளிக்கிழமை ஏப்ரில் 29 ஆம் நாள் சரியாக மாலை 7.00 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத் தருகிறோம்.

இந்த முயற்சி வெற்றிபெற கனடா வாழ் தமிழ் மக்களினதும் ஏனைய மக்களினதும் ஆதரவை நாடி நிற்கிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு – கனடா

2625 Eglinton Ave East, Unit #2

Scarborough, On. M1K 2S2

(Raa Supermarket Plaza)

Brimley /Eglinton

416 854 4143

இந்தப்பிரதமருக்கு மேலே பல சனாதிபதிகள் இருக்கின்றார்கள்.

இவரை மன்மோகன்சிங்குடன் ஒப்பிடலாம்.

வழிப்போக்கன் புத்திசீவி சிறிகாந்தராசா போன்றவர்களின் சத்தத்தைக் கானவில்லை.

அறிக்கைகளை வெளியிட்டு ஆட்சியைத்தக்கவைக்கும் சூச்சுமத்தை யாரிடமிருந்து கற்றார்களோ தெரியவில்லை.

US envoy heads to Sri Lanka amid war flap

http://news.yahoo.com/s/afp/20110429/pl_afp/srilankaunwarcrimesrightsus

... வாற கிழமை றொபேட் பிளேக் கொழும்பு போறாராம் ... நான் நினைக்கிறேன், உந்தப்பயணம் "நாகதஅ" உருத்திரகுமார் அன்ட் கொம்பனி கேட்டுத்தான் போறார் போல?????

23_33_7.gif

றோயல் கல்யாணத்துடன் நாலு நாள் லீவு ... எங்கேயாவது உந்த வேட்டைக்குப்போய் ஒரு கையெழுத்து போடலாம் என்றால் .... ??????!!!!!!

Edited by Nellaiyan

யாழில் உலாவும் யாராவது கையெழுத்து இட்டீர்களா??? அல்லது அதனைப் பற்றி அறிந்தீர்களா????

.... ஏன் இந்த ஏமாற்று???????? .....

... அறிக்கைகளும், ஓரிரு தமிழ் ஊடக பேட்டிகளும் .... எம்மைப் போன்றவர்களை ஏமாற்ற போதுமானது!!!!!!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உலாவும் யாராவது கையெழுத்து இட்டீர்களா??? அல்லது அதனைப் பற்றி அறிந்தீர்களா????

.... ஏன் இந்த ஏமாற்று???????? .....

... அறிக்கைகளும், ஓரிரு தமிழ் ஊடக பேட்டிகளும் .... எம்மைப் போன்றவர்களை ஏமாற்ற போதுமானது!!!!!!!!!!!!

நேற்றுப் பிறந்த குழந்தை.. நாளையே ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற வகையில் இருக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசு பற்றிய உங்கள் கருத்துக்கள்.

வேண்டாப் பொண்டாட்டி கால் பட்டால் குற்றம் கை பட்டால் குற்றம் என்று ஒரு பழமொழி எம்மவர் மத்தியில் உண்டு. அதை நா.க.த. அரசு சார்ந்து உங்கள் கருத்துக்களில் அப்படியே இனங்காண முடிகிறது.

தயவுசெய்து உங்கள் பார்வைகளைத்தான் கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன். அப்போதாவது அவர்களின் செயற்பாடுகளின் மீது உங்களுக்கு சிறிய நம்பிக்கை பிறக்கலாம். :(:o:D:)

Edited by nedukkalapoovan

தயவுசெய்து உங்கள் பார்வைகளைத்தான் கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன். அப்போதாவது அவர்களின் செயற்பாடுகளின் மீது உங்களுக்கு சிறிய நம்பிக்கை பிறக்கலாம். :(:o:D:)

நெடுக்கர், ... நாம் உள் குத்துப்பாட்டுக்கு நடுரோட்டு வரை வந்தோம் ... சேறள்ளி அடித்தோம் ... ஆனால் இப்போ எம்மக்கள் பிரட்சனை என்றவுடன் தலைமறைவாகுகிறோம் ... ஏன்????? ... அது போக ... இந்த அறிக்கை விட்டி இன்று ஆறு நாட்களாகின்றது ... ஏதாவது????

தயவுசெய்து உங்கள் பார்வைகளைத்தான் கொஞ்சம் மாற்றிப் பாருங்களேன். அப்போதாவது அவர்களின் செயற்பாடுகளின் மீது உங்களுக்கு சிறிய நம்பிக்கை பிறக்கலாம். :(:o:D:)

... நா.க.த.அ இன் செயற்பாடுகள் ..

1) மீள் கட்டுமானம்

2) உள் நாட்டு பாதுகாப்பு

3) மீள் குடியேற்றம்

4) விவசாயம்

5) மீன்பிடி

7) கைத்தொழில்

8) கல்வி

9) சுகாதாரம்

10) ...

... இவை ஏதாவதில் செயற்படுகிறார்களா???? ... இல்லை!!!!!!!!! ... இருப்பது ... மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் ... சம்பந்தமான செயற்பாடுகள்!!! ... அதனை செய்யாது விடின், இவர்கள் ஏன் எமக்கு???

எவ்வளவு காலத்துக்கு பிறந்த புத்தம் புதிய குழந்தை என்று கொண்டு இழுக்கப்போகிறீர்கள்??????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... நா.க.த.அ இன் செயற்பாடுகள் ..

1) மீள் கட்டுமானம்

2) உள் நாட்டு பாதுகாப்பு

3) மீள் குடியேற்றம்

4) விவசாயம்

5) மீன்பிடி

7) கைத்தொழில்

8) கல்வி

9) சுகாதாரம்

10) ...

... இவை ஏதாவதில் செயற்படுகிறார்களா???? ... இல்லை!!!!!!!!! ... இருப்பது ... மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் ... சம்பந்தமான செயற்பாடுகள்!!! ... அதனை செய்யாது விடின், இவர்கள் ஏன் எமக்கு???

எவ்வளவு காலத்துக்கு பிறந்த புத்தம் புதிய குழந்தை என்று கொண்டு இழுக்கப்போகிறீர்கள்??????????????

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற் திட்டங்கள் தாயக மக்களை நேரடியாக சென்றடைவது இன்றைய எதிரியின் ஆக்கிரமிப்பு வேளையில் சாத்தியமில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகமே செயலிழந்து இருக்குது. இருந்தும் அவர்கள் வேறு வடிவங்களில் சாத்தியமானவற்றை செய்ய சிந்திக்காமலும் இல்லை.

எடுத்ததற்கு எல்லாம் அதைச் செய்தியா இதை செய்தியா என்று கேட்பது இலகு. ஆனால் சாத்தியப்பாடுகள் குறித்த அறியும் ஆய்வும் அறிவும் எமக்கு முதலில் வரனும்.

நாடு கடந்த தமிழீழ அரசு தென் சூடானிற்கு போகும் நிலையில்.. தமிழீழம் நோக்கிப் போக அதிகம் தாமதம் காட்டாது. ஆனால்.. செயற்பாட்டு சாத்தியம் குறைந்த களத்தில் அவர்கள் வெளிப்படையாக செயற்பட முடியாத நிலை இருக்கிறது. அந்த வகையில்.. இவ்வகையான குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு ஒவ்வாதவை மட்டுமன்றி.. சூழ்நிலைகளை சரிவர ஆராயாத அபந்தமான கோரிக்கைகளாகவும் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு செயற்திறனற்ற தமிழருக்கு உபயோகமற்ற ஒன்று என்று காட்டி அதன் இருப்பை இல்லாமல் செய்யும் நோக்கமும் இதற்குள் அடங்கி இருக்கலாம்.

உங்களின் கருத்துக்கள் நியாயமான சூழ்நிலைக்காரணங்களை கருத்தில் எடுக்காது நாடு கடந்த தமிழீழ அரசின் மீது சதா குறை பிடிக்கும் வகையில் அமைந்திருப்பது அந்த அமைப்பின் பால் நீங்கள் அவ்வளவு நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு மேலால் அந்த அமைப்பின் இருப்பை இல்லாமல் ஆக்கலாமோ என்று சிந்திக்கத் தூண்டும் வகையிலேயே அதிகம் அமைந்திருக்கிறது. இது மக்களை குழப்பக் கூடிய ஒரு கருத்துமட்டுமன்றி நாடு கடந்த தமிழீழ அரசின் மீது மக்கள் சிறுகச் சிறுக காட்டி வரும் ஆர்வத்தை வேரறுத்து அதன் இருப்பை குலைக்கக் கூடிய ஆபத்தையும் கொண்டது. இதனையே எதிரியும் நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பில் செய்ய விளைகிறான். நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எதிரிக்கு அந்த வகையில் உதவி வருகிறீர்கள் என்பதை சொல்லக் கூடியதாகவே உங்கள் கருத்துக்கள் பிரச்சார ரீதியானதாக யதார்த்தத்தை விட்டு வெளியில் அமைய அமைந்துள்ளன. :(:o

Edited by nedukkalapoovan

... இந்த நா.க.த.அ இற்காக குரல் கொடுத்தவர்கள் பலர் இன்று விரக்தி அடைந்துள்ளனர் ... இதனை யாரும் விரும்பின் ஐ.பி.சி வானொலியில், ஞாயிறு மாலை நடைபெறும் அரசியல் கலந்துரையாடலில் கேட்டால் மக்களின் உணர்வலைகள் புரியும்!!! ... இந்த எழுத்துக்கள்/ஏச்சுக்கள் எல்லாம் இவர்கள் ஒன்றும் செய்கிறார்களே இல்லை என்றுதான்!! ... அவ்வமைப்பை உடைக்கவல்ல ....

  • கருத்துக்கள உறவுகள்

... நெடுக்கர், இந்த வேட்டைச் செய்தியை இங்கு இணைத்திருக்கிறீர்!!! ... நீராவது இந்த வேட்டையில் கையெழுத்து இட்டு விட்டீரா??????? அல்லது யாராவது யாழில் இருந்தாவது????????

... சிலசமயம் ... நாகதஅ பிரதமர், அமைச்சர்கள் வாழ், பிரதிநிகள் வாழ் எல்லோரும் "றோயல் வெடிங்" இன்விற்றேஷனுக்கு காத்திருக்கிறார்கள் போல ... கடைசி நேரத்தில் ... அது முடிய வேட்டையில் இறங்கக்கூடும்??????!!!!!!!

தங்களை போன்ற ஆர்வமுள்ளவர்களின் உதவி இல்லாமல் எப்படி கையெழுத்து சேகரிப்பது? நீங்கள் எப்போது கையெழுத்து சேகரிக்க ஆரம்பிக்கிறீர்கள்? நாகதஅ மக்களிடம் வரி சேகரிக்க முடியாத காரணத்தால் தங்களை போன்ற தொண்டர்களின் உதவியை நம்பித்தான் செயல் படுவதாக தெரிகிறது.

தங்களை போன்ற ஆர்வமுள்ளவர்களின் உதவி இல்லாமல் எப்படி கையெழுத்து சேகரிப்பது? நீங்கள் எப்போது கையெழுத்து சேகரிக்க ஆரம்பிக்கிறீர்கள்? நாகதஅ மக்களிடம் வரி சேகரிக்க முடியாத காரணத்தால் தங்களை போன்ற தொண்டர்களின் உதவியை நம்பித்தான் செயல் படுவதாக தெரிகிறது.

தற்போது இவை போன்றன ..

1) அடிமட்ட தொண்டர்கள் இன்மை

2) நேரமின்மை

3)...

.... காரணங்களை சாட்டாக கூறுகிறார்கள், செயற்பட முடியாமல் இருப்பதற்கு!! ... பல தடவை இவைகளுக்கு பதில்கள் வந்தாயிற்று!!! ... இவர்கள் அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்யாது விடில் எவ்வாறு மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்லப் போகிறார்கள்? தொண்டர்களை இணைக்கப் போகிறார்கள்? ... குறிப்பாக எது செய்வதானாலும் தொண்டர்கள் இல்லாமல் ...!!!!

... உண்மைகள் எதெனில் ... இன்று வரை ... இன்று தெரிவு செய்யப்பட்டு ஓர் வருடம் பூர்த்தி என நினைக்கிறேன் ... திட்டங்களோ, செயற்பாடுகளோ ... திட்டமிட்ட செயற்பாடுகள் எதுவும் இவர்களிடம் இல்லை!

... மாதம் ஓரிரு முறை இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு ஒன்றிரண்டு அறிக்கைகளை, தமிழில் தட்டச்சில் தட்டி அனுப்பவதோடு இவர்களின் அரசியல் ...

... நாம் இலங்கையில் சிங்கலம் செய்யும் கையெழுத்து வேட்டைக்கு அழுது குழறுகிறோம் ... ம்ம்ம்ம் ... அதனை ஓரளவு சர்வதேசம் புரியுந்து கொள்ளும் எவ்வாறு இக்கையெழுத்து பெற்றார்களென்று??? ... அதை விடுங்கள் ... நாம் கையெழுத்து என்று அறிவித்துப் போட்டு ... மன்னிக்கவும் வேட்டை என்று அறிவித்துப் போட்டு ... இப்போ IPL பார்த்துக் கொண்டிருக்கிறோம் ... எமது அமைச்சர் ஒருவரும் IPL இரசிகராம் ... ஒரு IPL match கூட தப்ப அவர் விடுவதில்லையாம்!!!! <_< <_< <_< <_<

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இவை போன்றன ..

1) அடிமட்ட தொண்டர்கள் இன்மை

2) நேரமின்மை

3)...

.... காரணங்களை சாட்டாக கூறுகிறார்கள், செயற்பட முடியாமல் இருப்பதற்கு!! ... பல தடவை இவைகளுக்கு பதில்கள் வந்தாயிற்று!!! ... இவர்கள் அடிமட்டத்தில் இறங்கி வேலை செய்யாது விடில் எவ்வாறு மக்களிடம் கருத்துக்களை கொண்டு செல்லப் போகிறார்கள்? தொண்டர்களை இணைக்கப் போகிறார்கள்? ... குறிப்பாக எது செய்வதானாலும் தொண்டர்கள் இல்லாமல் ...!!!!

... உண்மைகள் எதெனில் ... இன்று வரை ... இன்று தெரிவு செய்யப்பட்டு ஓர் வருடம் பூர்த்தி என நினைக்கிறேன் ... திட்டங்களோ, செயற்பாடுகளோ ... திட்டமிட்ட செயற்பாடுகள் எதுவும் இவர்களிடம் இல்லை!

... மாதம் ஓரிரு முறை இங்குள்ள தமிழ் ஊடகங்களுக்கு ஒன்றிரண்டு அறிக்கைகளை, தமிழில் தட்டச்சில் தட்டி அனுப்பவதோடு இவர்களின் அரசியல் ...

அவர்களுக்கு திட்டமிட்ட செயற்பாடுகள் இல்லையென்று தெரிந்தால் நீங்கள் அவர்களுக்கு திட்டமிட உதவி செய்யலாமல்லவா? உங்கள் திட்டத்தை இங்காவது எழுதலாமே? அவர்களுக்கு அது உதவ கூடும். ருத்திரகுமாரனிலும் பார்க்க நல்லமுறையில் நீங்கள் நாடுகடந்த அரசை செயற்படுத்தும் ஆற்றல் கொண்டவர் போல தெரிவிக்கிறீர்கள். அது உண்மையானால் தேர்தலில் போட்டியிட்டீர்களா? ஏன் நீங்கள் தெரிவு செய்யப்படவில்லை? மக்கள் தங்கள் ஆற்றலை புரிந்து கொள்ளவில்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.