நிர்வாகத்தினரிடம் ஓர் சந்தேகம்:
கருத்துக்களிற்கு சக கருத்தாளர்களினால் வழங்கப்படும் மதிப்புநிலை சம்மந்தமான தற்போதைய புதிய அமைப்புமுறை புரியவில்லை. அதை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடியவாறு விளங்கப்படுத்துவீர்களா? உண்மையில் எனக்கும் புரியவில்லை. இதனால் நான் இன்னமும் இதை பரீட்சித்து பார்க்கவில்லை.
முன்பு பச்சை, சிவப்பு புள்ளிமுறை கொண்டுவரப்பட்டது. இது நேர், எதிர் புள்ளிகளின் ஒட்டுமொத்த வேறுபாட்டின் அடிப்படையில் உயர்ந்த அல்லது தாழ்ந்த மதிப்புநிலையை தனித்தனி கருத்து மட்டத்திலும் பின்னர் தனியொருவரின் சுயவிபரக்கோவையிலும் மதிப்பு நிலையில் மாறுபாட்டை ஏற்படுத்தியது.
பின்னர் சிவப்பு புள்ளிகள் நிறுத்தப்பட்டு பச்சை புள்ளிகளின் பயன்பாடு மாத்திரம் காணப்பட்டது.
இப்போது மீண்டும் சிவப்பு, பச்சை அம்புக்குறிகள் காணப்படுகின்றன. அவற்றை அழுத்தினால் தனியொரு கருத்திலும், சுயவிபரக்கோவையிலும் மதிப்புமட்டத்தில் எவ்வாறான மாற்றம் கிடைக்கும் என்று புரியவில்லை.
இதற்கான விளக்கத்தை தாருங்கள்.
இந்த மதிப்புமட்டத்தை யாழ் வாசகர்கள் பார்வையிடமுடியாது. யாழ் உறவுகள் மாத்திரமே பார்வையிடமுடியும். எனவே, யாழில் பிரிவினைகள், குழுமுறைப்போட்டிகள் தவிர வேறு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று புரியவில்லை.
வெளியில் இருந்தும் வாசகர்கள் இந்த மதிப்பீட்டு அமைப்பில் பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமாயின் நான் இத்திட்டத்தை வரவேற்பேன். ஏனெனில், அப்போது தனிப்பட்ட ஒவ்வொரு கருத்திற்கும் பொதுவான அபிப்பிராயம் பற்றிய கணிப்பீட்டை ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக அமையும். அவ்வாறு இல்லாமல் யாழ் உறவுகள் மாத்திரமே ஒவ்வொரு கருத்திற்கும் மதிப்புநிலையை வழங்கமுடியும் என இருந்தால் அது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதாகவே போகும்.
ஐபி முகவரி மூலம் மதிப்பீட்டு அமைப்பை கட்டுப்படுத்தலாமெனில், வாசகர்களும் வெளியிலிருந்து தமது விறுப்பு, வெறுப்புக்களை ஒவ்வொரு தனித்தனி கருத்துகளிற்கும் தெரிவிக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்பதோடு அது வாசகரிடையே வரவேற்பையும் பெறும். இது வாசகர்களின் எண்ணிக்கையையும் எதிர்காலத்தில் அதிகரிக்க உதவும். அப்படியல்லாமல் யாழ் உறவுகள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாமெனில் மோசடிகளிற்கும், பிரிவினைகளிற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நன்றி!