தன்னிகரில்லா ஒர் வீரசரித்திரத்தை தங்கள் ரத்தத்தால் எழுதிச் சென்ற நம் சொந்தங்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நேரத்தில் சாதாரண தமிழ்மகனா எனக்கு இருக்கும் ஆதங்கங்களை மட்டும் நீண்ட மனப்போராட்டத்தின் பின் இங்கு பதிவாக எழுதுகிறேன்!
தலைவன் வழியில் போராடி மடிந்த செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி எடுக்கும் மாவீரர் நாளை பல பிரிவுகளாக பிரிந்து அனுஷ்டிக்கிறது எந்த கொள்கைகளுக்காக போராடி அவங்கள் வீரமரணம் அடைந்தாங்களோ அந்த நோக்கத்தை கொச்சைப்படுத்திறதாகவே அமையும்.மேலும் எதிரி கைகொட்டி சிரிக்கவும் போராட்டத்தை சிதைக்கவும் வாய்ப்பை நாமே உருவாக்கியிருக்கிறோம்! 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு'னு சும்மாவா சொன்னாங்க. கூட்டமாக திரியும் காளைமாடுகள் பிரிந்து செல்வது வேட்டைக்கு வரும் சிங்கத்துக்கு தான் நன்மையே தவிர காளைக்கல்ல!
தலைவன் விட்டுச்சென்ற கனவை நனவாக்க புலத்திலிருந்து தான் செயற்பாடுகள் அமையவேண்டும். அச்செயற்பாடுகள் வீரியத்துடனும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச்செல்ல மாவீரர்களே நீங்கள் தான் ஆசி வழங்கவேண்டும்! வேற்றுமைகள் களைந்து தலைவன் வழியில் மாவீரர் கனவுகளோடு ஓரணியில் ஒன்றாய் பயணிக்க இந்த மாவீரர் நாள் எமக்குகிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பம்!
இவ்வண்ணம்,
மாவீரர் நினைவுகளுடன் வாழும் சாதாரண தமிழன்