[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் இல்லாமலிருந்ததையும்[/size] [size=4]கவனிக்கக் கூடியதாக இருந்தது.[/size]
[size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. கடந்த சில வருடங்கள் மாவீரர் நாளில் கலந்துகொள்ளாது ஒதுங்கி இருந்தவர்கள் கூட இங்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுகள் யாவும் பிரித்தானிய நேரம் 5.30 க்கு நிறைவுக்கு வந்து மக்கள் கலையத்தொடங்கிய பின்னரும் பலர் வேலையை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]