எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும்
வணக்கம் தமிழீழ உறவுகளே !
யாருக்கும் இல்லாத பெருமையும்
எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம்
எப்போதும் இல்லாத பேரழிவை இப்பொது கண்டிருக்கிறது
வல்லூர்கள் துணையோடு பொல்லாதவர்கள் சூழ்ந்து
நம்மை சூறையாடினர்
நிலம் அதிர நீர் அதிர நட்சத்திரங்கள் எல்லாம் அதிர
கொத்துக் கொத்தாய் கொன்று முடித்தனர் கொலைகாரப் பாவிகள்
நெட்டை மரமென இந்த உலகம் வேடிக்கை பார்த்தது
வேற்றுப் புலம்பலாய் நம் நேற்று முடிந்தது - ஆனால்
நாளை அப்படி இருக்காது , இருக்கவும் கூடாது
நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுத் துயரை
நம் மீது படிந்த இந்த வரலாற்றுப் பிழையை
நாமே துடைப்போம்
நமக்கான விடியலுக்காய் நாமே எரிவோம்
என மீண்டும் மீண்டும் எழுகின்ற தமிழினத்துக்கு
மற்றுமொரு வரலாற்று கடமை நிமிர்த்தம்
பயணிக்கும் ஏராளமான் உறவுகளில் ஒன்றாக தமிழீழப் பறவையாக கனடாவில் இருந்து இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் தமிழீழ நினைவில்'
" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் "