பிரான்சில் நடைபெற்ற மே தினம்.
பிரான்சு பாரிஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் தொழிலாளர் தின போராட்டத்தில் விடுதலையை தேடி நிற்கும் இனங்கள் அனைவரும் பங்குபற்றி தமது விடுதலை போராட்டங்களை வலியுறுத்தியதோடு, போராட்ட குழுக்கள் எல்லோரும் ஓர் அணியில் நின்று போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
தமிழீழ மக்களின் போராட்டத்தை மிகவும் உயர்வாக பார்க்கும் சிலர் வருங்காலத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களில் பங்கு எடுக்க தமது விருப்பத்தை தெரிவித்தனர்.
தந்தை செல்வா வழியில் வந்து, அவர்காலத்தில் முன்மொழிந்த தமிழீழ தேசியக்க கொள்கையை தமிழருக்கான ஒரே தீர்வாக எடுத்து, தமிழீழம் என்ற இடைக்கால அரசை உருவாக்கி, அதற்குரிய தேசியக்கொள்கைகளை உருவாக்கி, தமிழீழ மக்களுக்கு வட்டுகோட்டையில் தீர்மானிக்கப்பட்டு, தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழ சோஷலிச அரசை, முற்போக்கான கொள்கைகளும், சர்வதேசத்தையும், சகல மக்களையும் முன்னிறுத்திய அரசை நடைமுறையில் நடத்திக்காட்டிய தமிழீழப் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவருமாகிய, எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிகாட்ட தமிழீழ மக்கள், தமீழத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என்ற குறிக்கோளுடன் தொழிலாளர் தினப்போராட்டதில் கொட்டும் மழையிலும் தமிழீழ மக்கள் பங்குபற்றினர்.
(முகநூல்)