Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ்ப்பொடியன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    89
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    8557
    Posts
  3. VENDAN

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    3
    Points
    601
    Posts
  4. அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    2597
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/24/13 in all areas

  1. Parani Krishnarajani கவிஞர் ஜெயபாலன் விசா விதிமுறைகளை மீறியதால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக சிங்களம் அறிவித்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும். மே 18 இற்கு பிறகு இலங்கைக்கு செல்வதற்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் இது பொருந்தும். முதலில் வெனிநாட்வர்களுக்கு வருவோம். ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் பலருக்கு இலங்கைக்குள் நுழைய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மீறி வேறு வகையில் நுழைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பொதுநலவாய மாநாட்டு தருணத்தில் கூட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவ்வளவு ஏன் நியூசிலாந்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கூட 10 நாட்களுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். இதுதான் யதார்த்தம். இனி இலங்கைக்குள் நுழைய விரும்பும் தமிழர்களின் நிலையை பார்ப்போம். இனப்படுகொலை அரசுடன் அல்லது அதன் அடிவருடிகளுடன் தொடர்பு ஏற்படுத்துபவர்களும் அல்லது வெறும் சடங்காக எந்த வித அரசியல் விமர்சனமும் இன்றி சென்று வருபவர்களுக்கு மட்டுமே "கட்டுநாயக்கா" கதவு திறக்கும். மீறி செல்வது கடினம். மே 18 இற்கு பிறகு புலத்தில் இருந்து போய் வருபவர்களின் பட்டியலை தொகுத்தாலே இது புரியும். இதில் ஜெயபாலன் எந்த வகை என்று தெரியவில்லை. எந்த அடிப்படையில், எந்த நம்பிக்கையில் அங்கு சென்றார் என்றும் தெரியவில்லை. சிங்கள ஊடகவியலாளர்கள், மனிதஉரிமையாளர்கள் கூட தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சூழலில் இவரை சிறீலங்காவிற்கு பயணிக்க வைத்த நம்பிக்கை என்னவென்றுதான் புரியவில்லை? எந்த அடிப்படையாயினும் அவரது கைது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு விடயம் உறுத்துகிறது. கைது செய்யப்பட்டாரா? இல்லை கடத்தப்பட்டாரா என்று இன்று வரை தெரியாமல் பல்லாயிரக்கணக்கானவரின் நிலை தொடரும் ஒரு தேசத்தில் அவரது கைதை ஊடகங்கள் திட்டமிட்டு மிகைப்படுத்துகின்றனவோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் இலங்கை வரலாற்றில் கைது செய்யப்பட்டவர் தொலைபேசியில் உரையாடியது எல்லாம் கிடையாது. இது அங்கு நடக்கும் உண்மையான கைதுகளை - கடத்தல்ளை கேலிக்கூத்தாக்கும் செயல். ஏதோ திட்டமிட்ட பின்னணி இருக்கிறது. எனவே இந்த செய்தியை கையாள்வதில் கவனமாக இருப்பது நல்லது. அவர் விடுதலைக்கு உழைப்போம். ஆனால் செய்தியை காவுவதில் கவனமாக இருப்போம்.
  2. இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதுதான் போன் எல்லாம் கொடுத்து கொண்டுபோனம் என்று நாளை அறிக்கை விட சுகம் பாருங்கோ . நீங்க கதைப்பதை கூட இப்ப பார்த்திட்டு இருப்பார் சுண்டல் போனில இணைய தொடர்பு வேற இருக்காம் .
  3. கவிஞர் பாதுகாப்பாக விடுதலையாக வேண்டும். இணைப்புக்கு நன்றி. தமிழினம் உணர்வுநிலைப்பட்டு ஆய்வதிலேயே தனது காலத்தைக் கழிக்கிறது. ஆனால் சிங்களமோ அறிவு சார்ந்தும் நீண்டகால நோக்கிலும் செயற்படுவதோடு வெற்றியும் கண்டுவருகிறது. எனவே ஆயுதப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த கையோடு பெரும் உளவியல்போரை நீடித்துச்செல்வதினூடாகத் தனது இலக்கை அடைய முனைகிறது. பலமாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தளங்களில் உள்ள தமிழர்கள் ஒருதிசையில் கூடுவதாக இல்லை. அதன் கரணியமாக பொருண்மிய நெருக்கடியில் நின்றவாறும் சிங்களம் தனது திமிரைக்காட்டுகிறது. பலவீனமான எவருடனும் யாரும் நெருங்குவதில்லை. உலகமும் அப்படியே.....
  4. சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் , சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ , மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ , ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ . இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி .
  5. யாழ்கள உறுப்பினரும் கவிஞருமான ஜெயபாலன் அவர்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும். அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்ற மெல்பேர்னைச் சேர்ந்த ஒருவர் முன்பு சிங்களதேசத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவுஸ்திரெலியா அரசின் அழுத்தத்தினாலும் ,மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தத்தினாலும் அவரை வேண்டாவெறுப்பாக சிங்களம் விடுதலை செய்திருக்கிறது. யாழில் இச்செய்தி சென்ற வருடம் வந்தது. அதே போல நோர்வே குடியுரிமைபெற்ற ஜெயபாலன் அவர்களின் விடுதலைக்கு நோர்வேயினூடாக சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உலகில் எத்தனையோ அழகான அமைதியான நாடுகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு பயணிப்பதினைத் தவிருங்கள்.
  6. அது எப்பிடிப்பா பயங்கர வாத தடுப்பு உங்களை அர்ரெஸ்ட் பண்ணிட்டு போகேக்க போன் எல்லாம் பேச விட்டா கூட்டிட்டு போவாங்க? நான் நினைச்சன் பயங்கர வாத தடுப்புல இருக்கிறவங்க ரொம்ப டெரரா பயங்கரமா இருப்பாங்க என்று .... அதில்ல பகிடி குரு கவியருக்கு போன் பண்ணி கேக்கிறார் எப்பிடி இருக்கீங்க என்று கவிஞரோ திரும்ப குருட்ட கேள் படுத்து எப்பிடி சுகம் நல்லா இருக்கீங்களா என்று..... அய்யோ என்னால முடியலப்பா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.