மேலேயுள்ள வரைபடத்தில் வெள்ளை நிற வழித்தடத்தை(MRTS) பார்த்தால் புரியும்.
முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையம், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின்(MRTS) வழித்தடத்தில் வரும் புதிய ரயில் நிலையமாகும். இது திருமயிலை (மயிலாப்பூர்) ரயில் நிலையத்திற்கும், லைட் ஹவுஸ் ரயில் நிலையத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம்.
இது மின்சார ரயில் பாதையாகும்.
சென்னை சென்ரலிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கோவளம் வரை அக்காலத்தில் ஆங்கிலேயர்களால் படகுப் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாய் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
அக்கால்வாயில் படகு சவாரி மூலம் மக்களும்,, காய்கறி சணல் போன்றவைகளும் எடுத்துச்செல்லப்பட்டன என்றால் நம்ப முடிகிறதா?
சுதந்திரம் பெற்ற பின் படிப்படியாக வந்த அரசுகள் எவையும் தொலை நோக்கில் நகரின் வளர்ச்சிக்கேற்றவாறு இருக்கும் இயற்கை சூழலை பாதுகாக்கவில்லை.
விளைவு?
இன்று பக்கிங்காம் கால்வாய் கழிவு நீருக்கான சாக்கடையாக சிதைந்து உருமாறிவிட்டது.. அக்கால்வாய் தான் நீங்கள் குறிப்பிடும் முண்டக்கன்னியம்மன் கோயில் ரயில் நிலையத்தை ஒட்டிச் செல்கிறது.
இப்பொழுது கூவத்தின் நடுவே தூண்கள் என காரணம் கூறி சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால திட்டத்தை தடுக்கும் அரசு, அப்பொழுது சென்னை பறக்கும் சாலை ரயில் திட்டத்தில் பல இடங்களில் பக்கிங்காம் கால்வாய் நடுவே தூண்கள் எழுப்பியபோது கள்ள மெளனம் சாதித்தன என்பது வேடிக்கை.
சென்னை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற்கரையிலிருந்து வேளைச்சேரி வரை முதல் இரண்டு திட்டங்களாக நிறைவேற்றப்பட்டது. அதன் விரிவாக்கமாக (Phase III) வேளச்சேரியிலிருந்து பரங்கிமலை வரை மூன்றாம் கட்ட திட்டம் நிறைவேற்றுகையில் வழக்கம் போலவே நில ஆர்ஜித வழக்குகளால் இத்திட்டம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே 500 மீட்டர் தூரத்தில் நிறைவேறாமல் தொங்கி நிற்கிறது.
டிஸ்கி:
பரவாயில்லையே.., யாழ் களத்திலும் சில சீவன்கள் அக்கறையாக தமிழ் நாட்டின் வளர்ச்சி பற்றியும், திட்டங்கள் பற்றியும் கேட்கிறார்கள். நன்றி!
இத்திரியை வாசிக்கும் அனைவருக்கும் நன்றி.