வணக்கம்,
அண்மைக்காலங்களில் குறுகிய மற்றும் மலினமான அரசியல் காரணங்களுக்காக முற்றிலும் பக்கச்சார்பான செய்திகளையும், மிகவும் பொய்யான விடயங்கள் அடங்கிய சோடிக்கப்பட்ட தகவல்களையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தமையாலும், சகல ஊடக நெறிகளையும் தர்மங்களையும் மீறி புனைவுகளை செய்திகளாக்கியமையாலும் பின்வரும் இணையத்தளமும்
1. பதிவு:www.pathivu.com
செய்திகளை அதன் உண்மைத்தன்மைகளுக்கு அப்பால் சென்று வணிக நோக்கங்களுக்காக மிகவும் தரக்குறைவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பிரசுரிப்பதாலும், பொய்யான பல தகவல்களை தொடர்ந்து பிரசுரிப்பாதலும் பின்வரும் இணையமும்
2. ஜேவிபி செய்தித் தளம்: http://www.jvpnews.com/
இன்றிலிருந்து கறுப்புப்பட்டியலில் இடப்படுகின்றன.
இனிமேல்
1. இத்தளங்களில் இருந்து செய்திகள் யாழில் காவப்படுவதும்
2. இத் தளங்களை பிரதி பண்ணி இடும் ஏனைய தளங்களின் செய்திகளை பிரசுரிப்பதும்
களவிதிகளை மீறிய செயற்பாடுகளாக கருதப்படும் என்றும், இவ்வாறு செயற்படுகின்றவர்களின் செய்திகளை பதியும் உரிமை மட்டுப்படுத்தப்படும் என்று அறிவிக்கின்றோம்.
யாழ் இணையம் பலதரப்பட்ட சமூக மட்டங்களில் நிலையான மதிப்பையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து பேணி வரும் என்றும் இதனூடாக ஆரோக்கியமான உரையாடல் வெளியினை தமிழ் தேசிய அரசியல் மட்டத்தில் உருவாக்குவதில் தன் செல்வாக்கினை தொடர்ந்து காத்து வரும் என்றும் உறுதி அளிக்கின்றோம்.
நன்றி