உள்ளேன் ஐயா..
எனது முன்னைய பதிவு ஒன்று..
நாங்கள் ஒரு புராணமும் இயற்றவில்லை. இயற்றுவதற்குப் பலர் உள்ளனர். மாற்றுக் கருத்தென்று ஐரோப்பாவில் திரிபவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்வதெல்லாம் தண்ணிப் பார்ட்டிகளில்தான். ஏன் தண்ணியடிக்கும்போதுதான் புலி விமர்சனம் வருகிதென்று கேட்டால் அப்போதுதான் சுயசிந்தனை வருகின்றதென்பார்கள். இந்தப் புண்ணாக்குகளால் ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்க்காக வைக்க முடிந்ததா கருத்துச் சுதந்திரம் மிக்க ஐரோப்பாவில்? இன்ரனெற் வந்தது மிகவும் வாய்ப்பாகிவிட்டது. தங்கள் புழுகுகளை அவிழ்த்துவிட இது ஒரு நல்ல ஊடகம் என்று கண்டு கொண்டார்கள். ஆனால் இன்ரனெற் பாவிப்பவர்கள் ஓரளவேனும் சரி பிழை எதுவென்று சொந்தமாகத் தீர்மானிக்கக் கூடியவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். உங்களுடன் ஒத்தூத ஒருவரும் இல்லையென்பதிலிருந்தே இது தெளிவாகத் தெரிகின்றதல்லவா.
http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=1151&view=findpost&p=35557