உள்ளேன் ஐயா!
...
யாழ் களத்தில் கருத்தாடுபவர்கள் எல்லோரும் அறிவிஜீவிகள் அல்ல, அல்லது அடி முட்டாள்களும் அல்ல. அவரவர் தங்கள் தங்களுக்குப் பிடித்ததை எ௯ழுதுகிறார்கள், குழுக்களாக கருத்தாடுகிறார்கள் (அல்லது அரட்டை அடிக்கிறார்கள்). அதிக அரட்டையும், சினிமா மாயையும் உள்ள எங்கள் சமூகத்தின் நிலையை யாழிலும் பிரதிபலிக்கின்றது என்பது யாரும் மறுக்கமுடியா உண்மையான விடயம். வார சஞ்சிகைகள் வரும்போது, சினிமாப் பக்கத்தை ஒருவர் முதலாவதாகப் படிப்பார். இன்னொருவர் அரசியலைப் படிப்பார். மற்றொருவர் எதுவுமே படிக்க மாட்டார். அதுபோலத்தான் இங்கும். இதற்காக யாரும் யாரையும் நோகவேண்டியதில்லை. தத்துவங்கள், சித்தாந்தங்கள் எடுத்த எடுப்பிலேயே அனைவருக்கும் புரிந்துவிடுவதில்லை. புரியாமல் இருந்தாலும் ஒன்றும் கெட்டுவிடுவதில்லை. வழமையான பொழுதுபோக்குகளுடன் எங்கள் வாழ்க்கை தன்பாட்டில் போகும். எங்குபோகும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்பவர்கள்தான் அதிகம். மார்க்கசியம், சோசலிசம், அரசியல் விஞ்ஞானம், முதலாளித்துவம், பொருள்மையவாதம், சிற்றிலக்கியம், பேரிலக்கியம், தீவிர இலக்கியம், எல்லாம் அறிந்து என்ன செய்யப் போகின்றோம். இருப்பது முதலாளித்துவ ஐரோப்பாவில். அதிகம் படித்தால் எப்படி முதலாளித்துவம் எங்கள் உழைப்பை அட்டை மாதிரி உறிஞ்சுகின்றது என்பது புரிந்துவிடும். அது புரியாமல் இருப்பதே பலருக்கு நல்லது. தேடலும் ஆர்வமும் இல்லாமல் எமது சமூகம் போவது எதிர்காலத்திற்கு நல்லது என்றால் நாங்கள் எமது சிந்தனைமுறையை மாற்றாமல் அப்படியே தொடர்வோம்.
http://www.yarl.com/forum/index.php?s=&showtopic=7268&view=findpost&p=137312