கண்ணீரிலும்...செந்நீரிலும்...,
கரைந்து போன எனது ஈழக்கனவே !
கர்ணனின் சங்காரத்தைப் போலவே...,
உன்னையும் பல பேர் கூடியே..
கொன்று குவித்தனர்!
அநாதரவாய்....,
ஆதாரமில்லாமல் அலைந்தவர்கள்,
உனது பெயரைச் சொல்லி,,,,,
தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டனர்!
உனது பெயரால்....,
சேமிக்கப் பட்ட செல்வங்களால்...,
தங்களுக்கெனத் தனி விலாசங்கள்,
தேடிக் கொண்டார்கள்!
ஏதிலிகள் என நாமம் சுமந்தவர்கள்...,
ஏதிலியாக ஆக்கியவர்களுடன்....,
இரு கரங்கள் கோர்த்து..,
விருந்துண்டது தான் எமது சரித்திரமா?
ஆகுதியானவர்கள்...,
அங்கங்களை இழந்தவர்கள்....,
அனாதைகள் ஆனவர்கள்...,
எல்லாமே எம்மவரின்..,
மூலதனங்களாக...
மாறிப் போன அதிசயம் தான் ...,
நாறிப் போன நமது சரித்திரமா?
எனது ஈழக் கனவே..!
எல்லோரும் அப்படியல்ல..!
இருப்பினும் பெரும்பகுதி அவ்வாறே!
கோவில் கோபுரங்களின்..
தங்கக் கலசங்களும்...,
அவர்கள் கழுத்துக்களில் தொங்கும்,
அந்தப் புலிப்பல்லுச் சங்கிலிகளும்..,
அவர்கள் வீரம் சொல்லி நிற்கட்டும்!
முள்ளி வாய்க்காலின் ...,
சாம்பல் மேடுகளும்,
வாழ்வைத் தொலைத்த இளசுகளின்,
வெற்றுக் கழுத்துக்களும்..,
வரலாற்றின் சுவடுகளாய்....,
எமக்காக இருக்கட்டும்!
எனது ஈழக்கனவே...!
நீ கனவாக இருக்கும் வரை..,
காளான்களாய் முளைக்கின்ற விகாரைகளும்..,.,
செத்துப் போன புத்தனின்..,
கல்லறைகளாகவே இருக்கும்!
நீயும்.....,
உனக்காக மரணித்தவர்களின்..,
ஈர நினைவுகளும்..,
மரணம் கடந்த நிலையில்...,
என்றும் வாழ்ந்திருக்கும்..!
வீர வணக்கங்கள்!
,