புங்கையூரான்.... உங்களது கேள்வி, மறக்க முடியாத நினைவுகளை கிளறி விட்டது.
எனது முதல்.... முகச் சவரம் என்றுமே மறக்க முடியாதது.
பாடசாலையில்... "அகில இலங்கை தமிழ் நாடகப் போட்டியில்" ,
கல்லூரியை சேர்ந்த பல வகுப்புகளை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து நடித்த, "சிலப் பதிகாரம் " நாடகம்.
அதன் நெறியாள்கை சொக்கலிங்கம் மாஸ்ரர். (சொக்கன்)
அதில்... பாண்டிய அரசன் நெடுஞ்செழியனுக்கும், கண்ணகிக்கும் தான் அதிக வசனங்கள் பேச வேண்டும்.
எனது வேடம்... கோப்பெருந்தேவி.என்பதால்....
அரசவையில்... கண்ணகி தான் குற்றமற்றவள் என நிரூபிக்க தனது கால் சிலம்பை நிலத்தில் அடித்து உடைக்கும் போது...அதிலிருந்து சிதறிய முத்துக்களை பார்த்த பாண்டிய மன்னன், தான் செய்த குற்றத்தால்... "ஹார்ட் அற்ராக்கில்" நிலத்தில் விழுந்து இறக்கும் போது....
" ஆ.... மன்னா...." என்ற இரண்டு சொல் வசனத்தை பேசி நானும் நிலத்தில் விழுந்து சாக வேண்டும்.
16 வயதில் நடித்த அந்த வேடத்துக்கு, எனது முகத்தில் அரும்பியிருந்த மீசையை எடுக்க வேண்டும் என்று
நாடக அரங்கேற்றத்துக்கு முதல்நாள் சொக்கலிங்கம் மாஸ்ரர் சொல்ல, அடுத்த நாள் ஈஸ்வரன் (கண் டாக்டர் அருணாச்சலத்தின் மகன்) "ரேசருடன்" வந்து மீசையை எடுத்தவுடன், முளைத்த முடி... இன்று வரை ஓயாமல் சேவ் எடுக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.
அந்த நாடகத்தின்... உடையலங்காரங்களுக்கு கம்பெனி பொறுப்பேற்காது என்பதால்...
கூறைச்சீலை, பிளவுஸ், ப்ரேசியர் எல்லாம் எனது வீட்டிலும், மச்சாள் வீட்டிலும்...
நைசாக.... எடுத்துக் கொண்டு வரப் பட்ட பாடு.... கொஞ்ச நஞ்சம் அல்ல.