மரணத்தின் விழி நோக்கி நகைத்து.
உயிர் தன்னைத் திரணமென மதித்து,
நாளைய சந்ததிகளின் நலன்களுக்காய்....,
இன்றைய வாழ்வைக் கருக்கியவர்கள்!
நீங்கள் எதிர்பார்த்த எதிர்காலமோ....,
நாய்களினதும்.....பேய்களினதும்....,
நக்கிப் பொறுக்கிகளினதும் கையில்....!
நாளொரு களவு.....,
வாரமொரு வன்புணர்வு....,
அங்கொன்றும்.....இங்கொன்றுமாய்...,
அடிக்கடி கோரக்கொலைகள்...!,
அட.....இது தானா நான் பிறந்த தேசம்?
எனக்குள் தினமும் நாணிக் குமைகின்றேன்!
தாய்ப் பசுவின் அலறலுக்காய்...,
தேர்க்காலில் மகனை நசுக்கியது..,
நிச்சயமாய்....
கட்டுக் கதையாக இருக்க வேண்டும்!
கலிங்கத்து மன்னன்...,
மனிதப்பற்களில் சோறு சமைத்த,
பேய்களைக் கண்டு....,
போரை நிறுத்திய வரலாறும்,
புனை கதையாக இருக்க வேண்டும்!
இல்லாவிட்டால்...,
புத்தனின் மேற்பார்வையில்....,
ஏழைகளின் வாழ்வும்...வயல்களும்,
களவெடுக்கப் படுவது....,
எந்த வகையில்...நியாயம்?
தவறுகள்...,
உங்கள் பக்கம் இல்லை!
எங்கள் பக்கம் தான்!
வீர வணக்கங்கள்!