Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88046
    Posts
  2. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    53011
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts
  4. அக்னியஷ்த்ரா

    கருத்துக்கள உறவுகள்
    2
    Points
    1962
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/06/18 in Posts

  1. இணையத்தில், ரசித்த... குட்டிக் கதைகள். ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது..அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன் நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்..ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்..நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார் அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலைசெய்யும் கம்பெனியில் போன் உண்டு அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன்.. வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள் உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! ??? உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!???
  2. இவர் மன்னாரை சேர்ந்த ஜஸ்டின் ஆக இருக்கணும் உடுப்பு 90க்கு முற்பட்ட காலப்பகுதியில் எடுக்கபட்ட படம் என்பதை சொல்கிறது . ஏன் ரதியக்கா வலு மும்முரமாய் விசாரிப்பு ?
  3. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மிஸ்டர் பிரியன்.....!
  4. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
  5. வேறொன்றுமில்லை, என்னிடம் இல்லாதது உங்களிடம் எப்படி இருக்க முடியும் என்னும் பொறாமைதான்......!
  6. எல்லா வகையிலும் யூத இனத்தோடு நம் இனத்தை ஒப்பிடவில்லை. ஹிட்லர் போன்ற இன வெறியர்களின் இன அழிப்பு முயற்சியை எதிர்கொண்ட யூத இனத்தைப் போல் இலங்கைத் தமிழினமும் சிங்கள இன வெறியை எதிர்கொண்டுள்ளது. யூதர்கள் தமக்கான நிலத்தை (இஸ்ரேல்) அமைத்தது போல் தமிழரும் ஈழம் காண்பர். கரும்புலிகளுக்கு வீர வணக்கம்.
  7. படித்ததில் பிடித்த... உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார் பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் ஆனால் "INDITEX SPAIN" நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி... அமான்சியோ ஓர்டேகா, 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும், சரியான திரைப்படங்கள் அமையாமலும்... தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது. 24 வயதில் திருமணம் செய்த... என் தந்தை தனது 30 வது வயதில் இறந்தார், தனது 40 வயதில் திருமணம் செய்த... என் பெரியப்பா தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார் எல்லோருக்கும்.... எல்லாமும், அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால்... அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு, உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். யார் கண்டது.... அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று. இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். இங்கே.... இப்போது, இந்த நொடியில்..... என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ, அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும். தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் ஆசைகள்... ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது.
  8. பழங்கால ரிகர்ஸிவ் குட்டிக் கதை ஒரு ஊரில் ஒரு குருவி இருந்தது. காலையில் குப்பையைக் கிளறியதில் குருவிக்கு ஒரணா கிடைத்தது. எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதில், ராஜா அரண்மனையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். மரத்தில் வந்தமர்ந்து "ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு! ராஜாகிட்ட பணமில்லே... என்கிட்டதான் பணமிருக்கு!" என்று கத்தியது. கடுப்பான ராஜா, ஏவலாள்களை விட்டு குருவியின் ஓரணாவைப் பிடுங்கச் செய்தார். இப்போ குருவி, "என்னை விட கேடுகெட்ட ராஜா, என் காசைப் பிடுங்கறார்" என்று கூவியது. வெறுப்பான ராஜா, ஓரணாவை, குருவிகிட்டயே விட்டெறிஞ்சார். குருவி விடாமல், "என்னைப் பார்த்து பயந்து போன ராஜா, என் காசை திரும்பக் கொடுக்கிறார்", என்று தொடர்ந்தது.
  9. சம்பளம் உயர்த்திக் கேட்ட வேலையாளுக்கு, BOSS வைத்த TEST..!! #BOSS: நீ FLIGHT - லபோய்கிட்டு இருக்க.. அதுல 50 செங்கல் இருக்கு.. அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா, மீதி எவ்ளோ இருக்கும்..?? *வேலையாள்: 49 இருக்கும்..!! #ஒரு யானையை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? *ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! #ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது..?? *ஃப்ரிட்ஜை திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், ஃப்ரிட்ஜை மூடனும்..!! #அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள்..!! எல்லா விலங்குகளும் வந்துடுச்சு..!! ஒன்னு மட்டும் வரல, அது என்ன..?? *மான், ஏன்னா.. அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு..!! #முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும்.. என்ன பண்ணுவாங்க..?? *தாரளமா கடக்கலாம்.. எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு..!! #ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி..?? *குளத்தில் மூழ்கிட்டாங்க..!! #அதான் இல்ல, முதல்ல FLIGHT - ல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டேல.. அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு..!! இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க.. இதுல உனக்கு சம்பளம் வேற கூட கேக்குற..!! ஒழுங்கா கவனமா வேலைய பார்.. இல்லன்னா சீட்டு கிழிச்சிரும்..!! ☆☆☆ நீதி: கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது..!! @@படித்ததில் பிடித்தது@@
  10. வங்கி மேலாளருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்."ஏம்பா! மாடு வாங்கணும்ன்னு லோன் கேக்குறியே? பணத்தை ஒழுங்கா திருப்பி கட்டுவியா?""என்ன சார் நீங்க? கட்டலைன்னா மாடு ஓடிடாதா? நிச்சயமா கட்டி வைப்பேன் சார்.""நான் கேட்டது மாட்டை இல்லை.!""மாடுதான் இன்னும் வாங்கவே இல்லையே. அப்புறம் அதை எப்படி சார் கேப்பிங்க?" "அப்ப வாங்கினப்புறம் கேட்டா?" "வாங்கினப்புறம் கேட்டாலும் மாடு சொல்லாது சார்." "மாட்டை கேக்குறதுன்னு நான் சொன்னது மாட்டை இல்லை." "பின்னே எதை?" "மாடு வாங்குனப்புறம் மாட்டைக் கேட்டா குடுத்துடுவியான்னேன்." "மாட்டைக் கேட்டா மாடுதான் குடுக்கும். நான் எப்படி குடுப்பேன்?" "ஐயோ.... சரி ஆரம்பிச்ச இடதுக்கே வருவோமா? கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லை." "நானும் ஆரம்பிச்ச இடத்துக்கே வரேன். கட்டுவியான்னு என்னைத்தானே கேட்டிங்க..?" "உன்னை ஏன் கட்டணும்?" "என்னைக் கேட்டா? நீங்கதானே கட்டுவியான்னு கேட்டது மாட்டை இல்லைன்னு சொன்னீங்க. அப்ப என்னைன்னு தானே அர்த்தம்." "கேட்டது உன்னைத்தான்." "அப்பிடீன்னா ஏன் என்னைக் கட்டனும்னு நீங்களே சொல்லிடுங்க." "கட்டறதுன்னா மாடும், நீயும்தானா..? மூணாவதா ஒண்ணு இருக்கே. அதைக் கட்டுவியா ஒழுங்கா?" "மூணாவதான்னா..? இங்க நீங்கதான் இருக்கிங்க." "என்னைப் பிடிச்சி கட்டிடு. இல்லேனா கடிச்சாலும் கடிச்சிடுவேன்." "அப்பவே சொன்னாங்க! பேங்க் மேனேஜர் ஒரு பைத்தியம்ன்னு." நான்தான் கேக்கல...!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.