ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்..
கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என் சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..
கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. !
உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.
மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..!
வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..!
உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.
40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..
மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..
என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..!
அதாங்க.. வாங்கிவிட்டேன்..!!