2001ம் ஆண்டு தான் தமிழீழ வான் படை ஆரம்பிக்க பட்டது என்று நினைக்கிறேன் தமிழ் சிறி அண்ணா , தேசிய தலைவரின் அனுமதியுடன் ( சங்கர் அண்ணா தான் வான் படையை ஆரம்பிச்சு வைச்சவர் ) நான் சொன்ன ஆண்டில் சிலது பிழை இருக்கலாம் , ஏன் என்றால் சங்கர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தவர் 😓/
நீங்கள் சொன்னது போல் பல பொருட்கள் வன்னிக்கு போவதுக்கு தடை இருந்தது , கடல் வழியால் பல நாடுகளில் இருந்து ஆயுதம் தொட்டு விமானத்துக்கு தேவையான பொருட்கள் கொண்டு வர பட்டது வன்னிக்கு /
பல மாவீரர்கள் மற்றும் தளபதிகள் சிந்தின வேர்வை எம் போராட்டத்துக்கு சொல்லில் அடங்காதவை ,
தளபதியளின் படங்களை பார்க்கும் போது அவர்கள் போர் களத்தில் சாதிச்ச நினைவுகள் கண் முன்னே வரும் , அவர்களின் கம்பீரமான தோற்றம் வீரம் போர் தந்திரங்கள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வருது 😓🤔🤔 /