Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19139
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87993
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46798
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/26/23 in Posts

  1. கட்டடத்துக்கு மணைப் பொருத்தம் அவசியம்........! 😍
  2. எம்மையழிக்க எதிரியுடன் கூடி நின்று, இறுதிவரை அவனுடன் கூடவிருந்து, ஈற்றில் எமது போராட்டம் முற்றாக அழிக்கப்படக் காரணமாயிருந்த இனத்துரோகிகளை தமிழினம் மறக்கப்போவதுமில்லை, மன்னிக்கப்போவதுமில்லை. இத்துரோகிகளின் சந்ததிகளும் இவர்களது துரோகத்தின் பெயரைக் காவிக்கொண்டிருக்கும்!
  3. கருணா குழுவினர் நடாத்திய மற்றொரு வஞ்சகம் 24.08.2006 அன்று மட்டக்களப்பில் அ. ம. இசைவழுதி எழுதிய கடற்கரும்புலி கப்டன் இயல்வாணனின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து... "சர்வதேசக் கடற்பரப்பில் இருந்து விடுமுறையில் சென்று மீண்டும் ஆழக்கடலில் ஆழத்தை அளவிடத் தயாராக மீண்டும் கடற்புலி லெப். கேணல் ஸ்ரிபன் தலைமையிலான போராளிகள் தயார் நிலையில் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அப்போது நேரம் நெருங்கியது தமக்குரியவற்றை செய்தார்கள். அங்கே தமது விநியோகத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு செல்வதற்காக ஒவ்வொரு தயார் படுத்தலை ஒவ்வோர் முனையிலும் இருந்து செயற்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், அன்று இராணுவ நெருக்கடிகள், துரோகத்தின் கொலை வெறிபிடித்த பார்வைக்கும் மத்தியில் ஓரளவு சீராக தம் போரியல் திரவியங்களை (வழங்களை) தென் தமிழீழத்தின் ஓர் பகுதியில் தரவிறக்கம் செய்துவிட்டு கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலினியன்) தலைமையில், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விநியோகப்பிரிவுப் போராளிகள் வன்னி நோக்கி தமக்கு உரிய இடத்திற்கு செல்ல தொலைத்தொடர்பின் மூலம் வருகையை அறிவித்து விட்டு புறப்படத் தயாரானார்கள். ஏனைய விடை கொடுத்த விழிகள் கடலைப் பார்ப்பதும் வருவதுமாய் இவர்களின் பயணத்தின் திசையைப் பார்த்தவண்ணம் இருந்தது அந்த சீரற்ற காலத்தில் பல ஏக்கங்களுடன்…… ஆனால், அங்கே குறிப்பிட்ட மணித்தியாலத்தில் சேரும் இடத்தைத் தாண்டவுமில்லை, நேரம் வழமையை விட அதிகரித்து சென்றது தொடர்பை எதிர்பார்த்த மனங்கள் பலதை எண்ணி ஏங்கித் தவித்த வண்ணம் இருந்தன. அவர்களின் பயணத்தின் போது……………………… தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை – நகர்வுகளை 2004ம் ஆண்டிற்கு பின்னர் சிறிலங்கா அரசுகளுடன் இணைந்து துரோக சக்திகளும் (துரோகி கருணா குழு) முடக்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பல முடக்க வேலைகளையும் – மூட்டுகட்டைகளையும் தரைவழியாக கடமைகளை மேற்கொண்ட போராளிகளுக்கு செய்து வந்த துரோக சக்திகள் அன்று கடற்புலிகளின் வரலாற்றில் மாபெரும் துரோகத்தை விதைத்து பல விழுதின் வேர்களை அந்த கரை மணலில் சாய்த்தார்கள். அப்போது அந்த போராளிகளின் படகை துரோகிகள் (துரோகி கருணா குழு) சூழ்ந்து, போராளிகளை நிராயுத பாணிகளாக கைது செய்து கரையில் கொண்டு சென்றார்கள். அதிலும் சில பழகிய முகங்கள் அங்கு துரோக சக்தியாக மனம் தாங்குமா? ஆயினும் அனைத்தையும் கடந்து அவர்கள் துரோகிகள் எம் விடுதலைக்கு எதிராகவே அவர்கள் கரங்களில் ஆயுதங்கள் ஆயினும் போராளிகள் அடிபணிவதாக இல்லை. அப்போது மறு திசையில் இவர்களின் வரவை அவதானித்தும் காத்திருந்த குரல்கள் தொடர்பலை இவர்களின் தொலைபேசியில் கூவிய வண்ணம் இருந்தது. இங்கே துரோகிகள் புடைசூழ போராளிகளின் கைகள், கால்கள் கட்டபப்ட்டு விசாரணை ஆரம்பமாகியது. எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? எங்கே எத்தனைபேர் என புதிய திட்டங்கள் மாற்றங்கள் விபரங்கள் போன்றவற்றை அறியும் முனைப்புடன் தொடுத்தார்கள் விசாரணையை…. ஆயினும் போராளிகளின் வாய்கள் மௌனம் காத்தன. பொறுமையிழந்த துரோகிகள் கோழைத்தனமான (சித்திரவதை) தாக்குதலை தொடுத்தார்கள். (அதை இங்கே எழுத்துருவில் வடிக்கும்போது என் கண்களே பனிக்கின்றது) குருதி தொய்ந்து வலிகள் தொடர்ந்தாலும்…., முன்னைய காலத்தில் ஒன்றாக ஓர் அணியில் இருந்து ஓர் தட்டில் உணவுண்டு பழகிய நட்புகள் இளைத்த துரோகம் இன்னும் வேதனையை கூட்டியது அப்போது………… தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மற்றவர்கள் உயிர் காக்கப்பட வேண்டும் அவர்கள் மூலம் தொடர்ந்து தங்களின் பணி தொடரவேண்டும் என்ற மனநிலையில் அங்கும் அவர்கள் போராட்ட மரபைக் கடைப்பிடித்து மெல்ல மெல்ல உயிரும் விட்டு பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது……….. ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த சக தோழர்கள் – சகோதரன் சாவதைப் பார்ப்பது எவ்வளவு கொடுமை அதுவே அங்கே…………. துரோகியால் கட்டையால் அடித்து அடித்தே ஓர் வீரனை சாகடித்தனர் அவனது உயிரும் அந்த அலைவந்து தாலாட்டும் கரை மண்ணில் கடலைப் பார்த்தவண்ணம் உயிர் பிரிந்து அவன் சாய்த்து சருகாகி விழுந்து போனான். எந்த ஒரு வைர நெஞ்சமும் கலங்கும் படி அங்கே நடந்த சம்பவம் ஏனையவன் மேல் துரோகிகளின் கோழைத்தனம் பாய்வதற்கு கைது செய்யப்பட்ட போராளிகளின் படகின் கட்டளை அதிகாரியின் முன் தொலைத்தொடர்பை வைத்து யாரையாவது இங்கு அழை என கூறினார்கள். அப்போது, கட்டளை அதிகாரி தன்னுடன் விடுதலைக்காக வேண்டி உழைத்தவன் இந்த கோழைகளினால் மற்றைய தோழன்போல் சாகடிகக்ப்படுவதா? என சற்று காலநிலை மாற்றத்துடன் கூடிய அந்த கடற்காற்றுடன் கலந்து இவரின் குரலும் மறுதிசையில் ஒலித்தது. ஆயினும் சில பின்னணி சத்தங்களை வைத்து ஊகிப்பார்கள் என அவர் நினைத்தார். ஆனால் அங்கு இயற்கையும் அவர்களுக்கு இசைவாகவே இருந்தது. ஆதலால் காத்திருந்தவர்களால் ஊகிக்க முடியவில்லை. துரோகிகள் அவர்களை படகின் இயந்திரம் பழுதடைந்தது விட்ட ஓர் மாயத்தை தோற்றுவித்து கதைக்கக் வைத்தார்கள். நாம் அன்றைய காலநிலையில் கடமைகள் செய்யும் பிரதேசம் எமக்கு சாதகம் அற்ற பிரதேசம். ஆதலால் சற்று வேகமாகவும் துரிதமாகமும் முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் குறிப்பிட்ட இடத்திலிருந்து இவர்கள் கூறிய இடத்துக்கு செல்ல சற்று வேகம் கூடிய படகே தேவை ஆதலால் அப்போது கரும்புலிப் படகு மட்டுமே புறப்படுவதற்கு தயார் செய்தார்கள். கரும்புலிப் படகு கடலின் குறுகிய பரப்பில் எதிரியின் அவதானிப்பு இல்லை என்று உறுதிப்படுத்திவிட்டு படகின் வழமையான திசைக்கு கருவிமூலம் அறிந்து அங்கே விரைந்தார்கள் அங்கே……………. கரையில் எமது படகு இருப்பதை அறிந்து கரும்புலிப் படகு கரைநோக்கி தொலைத்தொடர்பில் அறிவித்த படி மெல்ல மெல்ல நகர்ந்து சென்றது. ஆயினும் படகின் அமைதி ஓர் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது. துரோகிகள் தங்கள் கைவரிசையைக் காட்ட தயாரானார்கள். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மறுகணம் ஓர் புத்தரின் (பற்றைக்குள்) மறைவில் இருந்து கரும்புலிப் படகை நோக்கி R.P.G ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தி கூவிவந்தது. உடனே லாபகமாக திருப்பி நிலையை உடனே உணர்ந்து வேகம் கூட்டி உயரப் பறந்தது கரும்புலிப் படகு. ஆயினும் அதிலிருந்தவர்கள் விழிகள் ஓர் திசையில் எம் வீரர்கள் கைது செய்யப்பட்டும், ஓர் உடல் சாய்த்தும் கிடப்பதை அவதானித்து நிலைமையை அறிவித்துக் கொண்டு சென்றது. அப்போது கரும்புலிப் படகில் இருந்து அறிவிக்கப்பட்டது…………. நாங்க…………… நாங்கள் உயர நல்லா இழுக்கிறோம்………………. இழுக்கிறோம் ஆக்களை நீங்க…………………. வந்தால் சாத்தலாம்……. உடனே துரோகிகளின் சில படகுகள் எங்கிருந்தோ வந்து அவர்களை தொடர்ந்தது அப்போது கரும்புலிப் படகு உயரப்பறந்ததின் காரணம் அவர்களை உயர இழுத்து செல்ல மறு முனையின் இருந்து எம்மவர்களின் படகு வந்து ஓர் களம் விளையாடும் திட்டத்தில்……….. இல்லை…………… இல்லை………….. இப்ப வேண்டாம்……………… நிலைமை சரியில்லை………………. சற்று விளங்கும் தானே நிலைமை……………… சண்டைக்கு ஓர் அனுமதியும், ஓர் களத்தித் திறக்கவும் உத்தரவை வேண்டிக் காத்திருந்தார்கள். ஆனால் அது எமக்கு சாதகமற்ற சூழ்நிலையும் – இடமும் அந்நேரம் என்னதான் செய்வது……………………….? அவர்களின் இறுதித் தருணத்தில் கூட பதில் கூற முடியாதவர்களாய் நாங்கள் அன்று இருந்தோம். பின்பு கரும்புலிப்படகு கடலில் திசைமாற்றி சென்று அவர்களின் கண்ணில் இருந்து மறைந்து சற்று மணித்தியாலம் கழித்தே தளம் வந்து சேர்ந்தது. ஆத்திரமும் – குரோதமும் நிறைந்து அவர்களை இப்படியாக அடித்தே அந்த அலைகடல் மணலில் சாய்த்தனர் துரோகிகள். அதில் இதுநாள் வரையில் அருகாய் இருந்த எங்கள் கடற்புலி லெப். கேணல் குகன் (குன்றலியன்), கடற்கரும்புலி கப்டன் இயல் வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் ஆகிய விலைமதிப்பற்ற செல்வங்கள் ஆயிரம் கனவுகளுடன் பூவின் வாழ்வுபோல் உதிர்ந்து போனார்கள்."
  4. காந்தியத்தை அழிக்கத் திட்டம் போட்ட ஜெயாரும், ஏமாற்றப்பட்ட சம்பந்தனும் திருக்கோணேஸ்வரர் ஆலயம் 60 களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர்களாக சிங்களவர்களையே நியமித்து வருகின்றன. தமிழ் மாவட்டமான திருகோணமலையினைச் சிங்களமயமாக்குவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம் என்று அரசுகள் கருதிவந்தன. இவ்வாறான அரச அதிபர்களில் ஒரு சிலர் நேர்மையான, பாகுபாடற்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலான அரச அதிபர்கள் அரசாங்கத்தின் கருவியாகச் செயற்பட்டு திருகோணமலையினைச் சிங்கள மயமாக்கும் அரசின் திட்டத்தினை தமது தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி வந்தனர். இந்த இரண்டாம் வகை அரசாங்க அதிபர்களே ஜெயாரின் காலத்தில் திருகோணமலையினை நிர்வகித்து வந்தனர். 1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஜயதிஸ்ஸ பண்டாரகொட கடமையாற்றினார்.இவரது காலத்திலேயே திருகோணமலையில் சிங்களமயமாக்கல் துரித கதியில் இடம்பெற்று வந்தது. அரச திணைக்களங்களுக்கென்று மிகப்பெரியளவில் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதோடு, இக்காணிகள் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தார்கள். சுமார் 5000 ஏக்கர்கள் கொண்ட கொழும்பு வீதியுடன் அமைந்திருந்த நீண்ட நிலப்பரப்பு துறைமுக அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதைவிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உல்லாசப் பயணத்துறைக்கென்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்றும் இன்னும் பிற அரச திணைக்கங்களுக்கென்றும் அரசால் கையகப்படுத்தப்பட்டு வந்தன. தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னம் ஒன்றின் பின்னணியில் தெரியும் நீலப்பனிக்கைக் குளம் திருகோணமலைக்கு வடக்காக இருந்த திரியாய் பகுதியில் அரசு திட்டமிட்டிருந்த மரமுந்திரிகைத் திட்டத்தினை ஜெயார் இரத்துச் செய்தமைக்காக தான் அவருக்கு நன்றிகூறியதாக சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். திரியாய்க் கிராமம் மிகத் தொன்மையான தமிழ்க் கிராமம் ஆகும். நீலப்பனிக்கைக்குளம், 1940 ஆம் ஆண்டு புனருத்தாரனம் செய்யப்பட்டபின்னர் இக்குளத்திற்கு அண்மையாக உள்ள கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கை நடைபெற்று வந்தது. நிர்வாகக் கோளாறு ஒன்றின் காரணமாக இக்காணிகளில் விவசாயம் செய்துவந்த தமிழர்களுக்கான காணி உரிமைப் பத்திரத்தினை அன்றைய நிர்வாகம் வழங்கத் தவறியிருந்தது. 1980 ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வந்த திருகோணமலை அரச அதிபர் ஜயதிஸ்ஸ பண்டாரகொட, தமிழ் விவசாயிகளுக்கு இக்காணிகளுக்கான உரிமையாளர் பத்திரம் இன்மையினால் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், இப்பகுதியில் 2000 ஏக்கரில் மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார். திரியாயில் தமிழ் விவசாயிகளை விரட்டிவிட்டு மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவுள்ளதை அறிந்த சம்பந்தன் உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று தோட்டப் பயிர்ச்செய்கை கைத்தொழில் அமைச்சர் ஜயவர்தனவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். நெற்பயிற்செய்கை நடக்கும் காணிகளில் மரமுந்திரிகை செய்ய அரச அதிபர் முயற்சிப்பது குறித்து அமைச்சர் அறிந்தபோது திகைப்படைந்தார். மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பாடதென்பதுடன் சாதாரண தரையமைப்பே அதற்கு உகந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. "இந்தத் திட்டத்திற்கான உத்தரவைனை வழங்கியது யார்?" என்று சம்பந்தர் அமைச்சரைக் கேட்டார். தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், மரமுந்திரிகைத் திட்டத்திற்கான உத்தரவு அதிமேலிடத்திலிருந்தே தனக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அதிமேலிடம் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் குறிப்பிடுவது ஜனாதிபதி ஜெயாரைத்தான் என்பதை சம்பந்தன் அறிந்தே வைத்திருந்தார். "என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் பெரிய மனிதரிடம் தான் இதுகுறித்துப் பேச வேண்டும்" என்று அமைச்சர் கைவிரித்து விட்டார். ஆகவே, சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்துப் பேசினார். ஜெயாரின் சிந்தனையில் ஏறும்வகையில் சம்பந்தன் அவரிடம் இவ்விடயத்தைப் பற்றி வினவினார், "இப்பகுதியில் வாழ்ந்துவருவது தமிழர்களா சிங்களவர்களா என்பதை விட்டு விடலாம், ஆனால், நெற்பயிர்ச்செய்கைக்காக கிராமக் குளத்திலிருந்து நீர்ப்பாசணம் செய்யப்பட்ட காணிகளில் மரமுந்திரிகையினை பயிர்செய்த முதலாவது ஜனாதிபதி என்கிற பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சம்பந்தன். இதனையடுத்து மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் உத்தரவினை ஜெயார் வழங்கினார். தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பப்பகுதியில் தன்னை ஒரு நீதியான அதிபராகக் காட்ட முனைந்திருந்தார் ஜெயார். ஜெயாரிடமிருந்து டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு உத்தரவு ஒன்று வந்திருந்தது. தான் வழங்கும் ஒவ்வொரு பேச்சும் தான் பேசியதுபோல, அதே ஒழுங்கில் அச்சிடப்படவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பத்திரிக்கை ஆசிரியர், "நாம் ஒரு பத்திரிக்கை தான் நடத்துகிறோம், பாராளுமன்றப் பதிவேடு அல்ல" என்று கூறினார். "நீங்கள் பேசிய ஒழுங்கிலேயே நாம் அதனைப் பிரசுரித்தால் உங்கள் பேச்சின் கருப்பொருள் பத்திரிக்கைச் செய்தியின் அடித்தளத்திற்கல்லவா போய்விடும்?" என்று அவர் ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "எனக்கு செய்தி முக்கியமில்லை, எனது பேச்சு சரித்திரத்தில் இடம்பெறவேண்டும், அவ்வளவுதான்" என்று தீர்க்கமாகக் கூறினார். இவ்வாறே எனது நண்பரும், பிரபல நீதிமன்ற செய்தியாளருமான நோர்ட்டன் வீரசிங்க ஜெயாரினால் ஒரு ஜனாதிபதியின் பேச்சினை சேகரிக்கும் நிருபராக ஆக்கப்பட்டார். அவரது வேலையெல்லாம் ஜெயாரின் பேச்சினை அப்படியே எழுதிக்கொள்வது. பின்னர் அதனை ஜெயாரிடம் காட்டி பிரசுரிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது என்பதாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் ஜெயாரின் பேச்சு பத்திரிக்கையின் அதிகாலை நேர வெளியீட்டில் உள்ளடக்க முடியாது போய்விடும். சிலவேளைகளின் அவரின் பேச்சு மறுநாள் வெளியீட்டிலேயே வந்திருந்தது. மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் ஜெயாரின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். காமிணி திசாநாயக்கவுடனான சம்பந்தனின் அனுபவம் வித்தியாசமானது. தமிழரின் பூர்வீக கிராமமான பெரியவிளாங்குளம் பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பண உதவியோடு காமிணி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் "மகாடிவுளுவெவ" என்று சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஒன்று நடைபெற ஆரம்பித்திருந்தது. இதனை அறிந்த சம்பந்தன் உடனடியாக இந்தக் குடியேற்றத்தை நிறுத்துமாறு காமிணியிடம் கோரியிருந்தார். சபந்தனின் முன்னால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய காமிணி அவர் முன்னாலேயே அத்திட்டத்தினை இரத்துச் செய்யும் உத்தரவினை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு வழங்கினார். ஆனால், சம்பந்தனை ஏமாற்றிய காமிணி, உடனடியாக திருகோணமலை அரச அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவை தொலைபேசியில் தொடர்புகொண்டு , பெரியவிளாங்குளம் பகுதியை முற்றான சிங்களக் குடியேற்றமாக்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி, தான் அனுப்பிய இரத்துச் செய்யும் உத்தரவு அரச அதிபருக்குக் கிடைப்பதற்கு முன்னர், திட்டம் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். பின்னாட்களில் தான் எமாற்றப்பட்டதை சம்பந்தன் அறிந்துகொண்டபோது மனமுடைந்துபோனார். எப்படியான சிங்கள இனவாதிகளுடன் தாம் அரசியல் நடத்தவேண்டி இருக்கிறது என்று என்னிடமும் சலித்துக்கொண்டார். ஜெயாருடன் இன்னொரு விடயம் குறித்தும் சம்பந்தன் பேசியிருந்தார். அதுதான் காந்தியம் செயற்பாடுகள் குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு. சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்த அதே காலையில் சண்டே ஐலண்ட் பத்திரிக்கையும், தி வீக்கெண்ட் பத்திரிக்கையும் காந்தியம் மீது கடுமையான பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகளைக் காவிவந்திருந்தன. சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் எழுதிய பீட்டர் பாலசூரிய காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீது விசாரணை என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தார். "மட்டக்களப்பில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான ரெட்பாணாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்திருக்கிறது. அமைச்சர் K. W. தேவநாயகத்தின் குற்றச்சாட்டொன்றினை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இந்த விசாரணையினை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பில் ரெட்பாணாவும், வடக்கில் காந்தியமும் செய்துவரும் பல நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், இதனாலேயே அரசாங்கத்தை அவர் எச்சரித்தார் என்றும் தெரியவருகிறது. காந்தியத்தின் செயற்பாடுகளை அமைச்சர் தேவநாயகம் சந்தேகிப்பதால், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவரது சமூக நலன் அமைச்சு ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது" என்பதே ஐலண்ட் பத்திரிக்கையின் செய்தியாகும். இதேவகையான செய்தியையே தி வீக்கெண்ட் பத்திரிக்கையில் ரனில் வீரசிங்கவும் ஜெனிபர் ஹென்றிக்ஸும் எழுதியிருந்தார்கள். "காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தேவநாயகம் உயர் மட்ட அமைச்சர் கூட்டத்தில் எழுப்பிய சந்தேகங்களையடுத்து இவ்விரு அமைப்புக்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகவிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்கண்டிநேவிய நாடுகளின் பண உதவியுடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சும், சமூக சேவைகள் அமைச்சும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன" என்பதே அந்தச் செய்தியாகும். சிங்கள அரசில் அமைச்சராகவிருந்த தேவநாயகம் என்னிடம் மேலும் பேசிய சம்பந்தன், காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீதான விசாரணைபற்றி தான் அறிந்துகொண்டவுடன் அமைச்சர் தேவநாயகத்துடன் தான் உடனடியாகத் தொடர்புகொண்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சர் தேவநாயகம், இந்த அமைப்புக்கள் குறித்து தான் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசியதில்லையென்றும், ஆனால் தனது பெயரைப் பாவிப்பதன்மூலம் இச்செய்திக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தினைக் கொடுக்க சிலர் முயல்வதாகவும் கூறியதோடு இச்செய்தி உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் ஜனாதிபதி ஜெயவர்த்தனவே இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாராம். "நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பேசும்போது காந்தியத்தை முற்றாக நசுக்கிவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது என்று கூறினேன். பட்டிணியினாலும், ஏழ்மையினாலும் வாடும் மக்களுக்கு காந்தியம் சிறப்பான தொண்டினை ஆற்றி, அவர்களை கெளரவத்துடன் வாழ வழி வகுத்து வருகிறது. என்னுடன் வந்து காந்தியம் செய்துவரும் தொண்டினை ஜெயார் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ஜெயார், நீங்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நான் வந்து பார்க்கவேண்டிய தேவையில்லை என்று கூறி எனது கோரிக்கையினை அவர் மறுத்துவிட்டார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். காந்தியத்தின் செயற்பாடுகளைத் தன்னுடன் வந்து பார்வையிடுமாறு தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையினை ஜெயார் நிராகரித்தபோதே காந்தியத்தை அழிக்க அவர் உறுதிபூண்டுவிட்டார் என்பதை தான் அறிந்துகொண்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். பின்னாட்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தின என்றும் சம்பந்தன் கூறினார்.
  5. மின்னல் தாக்கி, எரியும் மரம்.
  6. தமிழரின் தலைநகரான திருகோணமலையினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றிய சிங்கள பெளத்த இனவாதிகள் திருகோணமலை நகருக்கு அருகில் அமைக்கப்பட்ட மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வினை செய்தியாக்கும் நோக்கத்தில் நானும், ஜனாதிபதிச் செய்தி நிருபர் நோர்ட்டன் வீரசிங்கவும், புகைப்பிடிப்பாளர் சேன விதானகமவும் 1982 ஆம் ஆண்டு, கார்த்திகை 27 ஆம் திகதி திருகோணமலைக்குச் சென்றிருந்தோம். மறுநாள் 28 ஆம் திகதி திருகோணமலை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜவரோதயம் சம்பந்தன் வீட்டிற்கு அவரது தொலைபேசி இணைப்பினைப் பயன்படுத்தி கொழும்பு அலுவலகத்திற்கு செய்தியனுப்புவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றோம். மிட்சுவி சீமேந்துத் தொழிற்சாலை - திருகோணமலை பிராந்திய நகரங்களிலிருந்து கொழும்பிற்கு தொலைபேசி இணைப்புக்களை ஏற்படுத்துவதென்பது அக்காலத்தில் மிகவும் கடிணமானதொன்றாக இருந்தது. உயர் அரச அதிகாரிகள், பொலீஸார், ராணுவத்தின் கட்டளையிடும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமே அந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. ஏனையவர்கள் தொலைத்தொடர்பு நிலையங்கள் ஊடாகவே அழைப்புக்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அவைகூட பல மணிநேரக் காத்திருப்பின் பின்னர்தான் பலருக்குக் கிடைத்தன. தி ஐலண்ட பத்திரிக்கையின் செய்தியாளர் பீட்டர் பாலசூரிய திருகோணமலை அரசாங்க அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவிற்கு நெருங்கிய நண்பர் ஆதலால் அவரது தொலைபேசியினை பீட்டர் பாவித்திருந்தார். எமக்கோ தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த வேறு இடம் ஒன்றினைத் தேடவேண்டியதாயிற்று. சீமேந்துத் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு வந்திருந்த ஜெயாரைச் சந்தித்துவிட்டு அப்போதுதான் சம்பந்தன் தனது வீட்டிற்கு வந்திருந்தார். "மரமுந்திரிகைத் திட்டக் குடியேற்றத்தினை நிறுத்தியதற்காக நான் ஜெயாருக்கு நன்றி கூறினேன். மேலும், காந்தியம் அமைப்பினால் வவுனியா, திருகோணமலை , மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் குடியேற்றப்பட்டுள்ள ஏழை மலையக மக்களை அங்கிருந்து அகற்ற சிலர் முயல்வதுபற்றியும் அவரிடம் எடுத்துக் கூறினேன். நான் சொல்வதை ஜனாதிபதி கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார். மேலும், சிரில் மத்தியூவும், காமிணி திசாநாயக்கவும் திருகோணமலை மாவட்டத்தை சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக மாற்ற எத்தனித்து வருவது குறித்து தனது கவலையினை என்னிடம் தெரிவித்தார். சிரில் மத்தியூவுக்கு வழங்கப்பட்ட பணி திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுவதாக சிலர் கூறும் புராதன பெளத்த விகாரைகளைக் கண்டுபிடித்துப் புனருத்தாரனம் செய்து, அவற்றினைச் சுற்றிச் சிங்கள விவசாயக் குடியேற்றங்களை உருவாக்குவதுதான் என்று அவர் கூறினார். அவ்வாறே, திருகோணமலை மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான பெருமளவு நிலங்களில் அரச கூட்டுத்தாபனங்களை உருவாக்கி அவற்றினைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதுதான் காமிணி திசாநாயகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி என்றும் அவர் கூறினார். "இவர்கள் இருவரும் அரசாங்கத்தின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி திருகோணமலையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி வருகிறார்கள்" என்று சம்பந்தன் எம்மிடம் கூறினார். தேர்தல் பிரச்சார நடவடிக்கை ஒன்றில் சம்பந்தன் - 2004 தமிழ்ப் பெரும்பான்மை மாவட்டமாக இருந்த திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மாவட்டமாக மாற்றும் சிங்களவர்களின் போராட்டம் சேனநாயக்கவின் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. அவர் காலத்திலேயே திருகோணமலை நகரை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் வீதிகளின் இருமருங்கிலும் பெளத்த விகாரைகளும் குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டன. தமது தாயகத்தின் தலைநகராக திருகோணமலையை தமிழர்கள் உரிமை கோரியதற்கு சிங்கள பெளத்த அரசாங்கங்கள் கொடுத்த பதில் இந்த பெளத்த சிங்களக் குடியேற்றங்கள்தான் என்றால் அது மிகையில்லை. திருகோணமலை நகரில் பிரெட்ரிக் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இருக்கும் கோணேஸ்வரம் ஆலயத்தை மீளக் கட்டவேண்டும் என்ற சமஷ்ட்டிக் கட்சியின் கோரிக்கையினை அடுத்தே திருகோணமலை மாவட்டத்தினை சிங்கள பெளத்த மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு உத்வேகம் கொடுக்க ஆரம்பித்தது. 1965 ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசிடம் தேவாலயத்தினைப் புனருத்தாரனம் செய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றி தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு திருச்செல்வம் கேட்டிருந்தார். இதன் பின்னரே தமது சிங்கள பெளத்த மயமாக்கலினை துரித கதியில் செயற்படுத்தவேண்டும் என்று சிங்கள அரசுகள் எண்ணிச் செயற்பட்டு வரலாயின. தமிழர் தாயகத்தினை சிங்கள மயமாக்கும் கைங்கரியத்திற்குத் துணைபோன சிங்களக் கல்விமான்களில் ஒருவர் - பேராசிரியர் பரணவிதாரண தமது இதிகாசப் புத்தகமான மகாவம்சத்தில் திருகோணமலையில் பிரெட்ரிக் கோட்டை அமைந்திருக்கும் பகுதியில் கோகண்ண என்கிற விகாரை இருந்ததாகவும், ஆகவே அவ்விடத்தில் சைவக் கோயில் ஒன்றினை மீள நிறுவுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லையென்றும் பெளத்த பிக்குகளும், சிங்கள மக்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அவர்களினால் எழுதப்பட்ட கதையான மகாவம்சத்தின்படி கிறீஸ்த்துவுக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அவர்கள் கூறும் மகாசேனன் எனும் மன்னன் வட - கிழக்குக் கடற்கரை ஓரம் ஒன்றில் கோகண்ண விகாரை என்று அழைக்கப்படும் பெளத்த கோயிலைக் கட்டினான் என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கான வரலாற்றுச் சாட்சியங்கள் எவையும் எவராலும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை. முன்னாள் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் பேராசிரியர் பரணவித்தாரண, கோணேஸ்வரம் ஆலயத்தின் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஓலைச்சுவடிகளில் விவரிக்கப்பட்ட விடயங்களை தனக்குத் தெரிந்த வகையில் மொழிபெயர்ப்புச் செய்து அப்பகுதியில் பெளத்த விகாரை ஒன்று இருந்திருக்கலாம் என்று தான் கருதுவதாகக் கூறியிருந்தார். அந்த ஓலைச் சுவடிகளில் இந்தியாவில் இருந்து இப்பகுதிக்கு விஜயம் செய்த இளவரசனான கொடகங்க தேவாவின் வருகையினை மட்டுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால் நுனிப்புல் மேய்ந்து முடிவுகளை எடுத்தும், சிங்கள பெளத்த அரசின் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் சேவகம் செய்துவரும் சிங்களக் கல்விமான்கள் இந்திய இளவரசன் ஒருவனின் விஜயத்தினை விகாரை ஒன்று இப்பகுதியில் இருந்ததாக நிறுவும் தமது சதிக்குத் துணையாகப் பாவித்திருந்தனர். திருகோணமலை மாவட்டத்தில் பெளத்த புராதனச் சின்னங்களைத் தேடுகிறோம் என்கிற பெயரில் செயற்பட்டு வந்த சிறில் மத்தியூவின் வலதுகரமான பியசேனவும் அவனது சகாக்களும் தாம் தேடுவது சிங்கள பெளத்த புராதனச் சின்னங்களையா அல்லது தமிழர்கள் பின்பற்றி வந்த மகாயான பெளத்தத்தினையா என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர். மேலும், கோணேஸ்வர ஆலயப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் இந்து மொழியான சமஸ்கிருதத்தில் இருக்கின்றனவா இல்லையா என்பதுபற்றிக் கூட அவர்கள் அறிந்துகொள்ள விரும்பியிருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தாம் கண்டெடுக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே சிங்கள பெளத்தர்கள் பின்பற்றும் தேவராத பெளத்தத்திற்குச் சொந்தமானவைதான் என்கிற நிலைப்பாடே இருந்தது.
  7. பேராதனையில் இடம்பெற்ற தாக்குதல்கள் ஜெயவர்த்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான அமைச்சர்கள் மத்தியில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர் மீதான முழு அளவிலான தாக்குதல்கள் குறித்த வதந்திகளை அரசே தனது தொழிற்சங்கக் காடையர்களுக்கும், மாணவர் அமைப்புகளுக்குள்ளும் வேண்டுமென்று கசியவிட்டது. ஜெயார் தான் பதவிக்கு வந்த நாளிலிருந்து இரு தொழிற்சங்கங்களை தனது அரசியல்ப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக வளர்த்து வந்தார். சிறில் மத்தியுவினால் வழிநடத்தப்பட்ட ஜாதிக சேவ சங்கமய மற்றும் காமிணி திஸாநாயக்கவினால் வழிநடத்தப்பட்ட லங்கா ஜாதிக எஸ்டேட் தொழிலாளர் சங்கம் ஆகியவையே அவை இரண்டு தொழிற்சங்கங்களும் ஆகும். ஆனால், பல்கலைக்கழக மாணவர்களிடம் அதிகம் செல்வாக்கினைக் கொண்டிருக்காத ஐக்கிய தேசியக் கட்சி பல்கலைக்கழகங்களில் பலமாக வேரூன்றியிருந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எதிராக தனது சொந்த மாணவர் அமைப்பு ஒன்றினை உருவாக்கியது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட காலம் முதல் அரச படைகளின் ஆதரவுடனான ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பிற்கும், இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கும் இடையே பல்கலைக் கழகங்களில் மோதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பு பேராதனைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டதையடுத்து அதுவரையிருந்த இனச் சமத்துவம் பாதிக்கபடலாயிற்று. சுமார் 25 வீதம் தமிழ் மாணவர்களைக் கொண்ட பேராதனைப் பல்கலைக் கழகம் இடதுசாரி மாணவர் அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் தமிழ் மாணவர்கள் பெருமளவில் இனவன்முறைகளுக்கு உள்ளாவதிலிருந்து தப்பி வந்தனர். ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தினுள் தமிழ் மாணவர்களுக்கெதிரான உணர்வு சிங்கள மாணவர்களிடையே, குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்பினரிடையே அதிகரித்து வரலாயிற்று. சில சிங்கள மாணவர்கள் வெளிப்படையாகவே தமிழ் மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்? உங்களின் ஈழத்திற்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்களுக்கு ஈழமும் கிடைக்கப்போவதில்லை, பல்கலைகழகத்திலும் இடமில்லை, விலைமாதருக்குப் பிறந்த தமிழர்களே" என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கினர். அக்காலப்பகுதியில் தமிழ் மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட நிழல் இல்லாத மனிதர் எனும் மேடை நாடகத்தினையடுத்து சிங்கள மாணவர்கள் கடும் சினமடைந்திருந்தார்கள். ஜேர்மனிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய பிரெஞ்சுப் போராளிகள் மீது நாஜிகள் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளையே இந்த மேடை நாடகம் பேசியது. இந்த நாடகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது தமது ராணுவம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதைக் காட்டவே தமிழ் மாணவர்கள் முயல்கிறார்கள் என்று சிங்கள் மாணவர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். ஆகவே, பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் மாணவர்களை அடித்து விரட்டும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளின் அறிக்கை குறித்து ராஜன் ஹூல் தனது புத்தகமான "அதிகாரத்தின் மமதை" இல் குறிப்பிட்டிருக்கிறார். "தாக்குதல்களின் நோக்கமே தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து துரத்துவதுதான். சட்டத்தினை அப்பட்டமாக மீறிய வகையிலும், கடுமையான வன்முறைகளைப் பாவித்தும் தாக்குதலாளிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றினார்கள்" என்று ராஜன் ஹூல் எழுதுகிறார். தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலை கென்னத் டி லனரோலே, டொரை கல்னைடொ மற்றும் திருமதி எகநாயக்க ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. பல்கலைக் கழக வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட சின்னத்தில் இருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்கள் அழித்தார்கள் என்று குற்றஞ்சாட்டியே அவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆனால், சின்னத்திலிருந்த சிங்கள எழுத்துக்களை பட்டப்பகலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடனான மாணவர் அமைப்பே அழித்தது. ஆனால், இதனைச் செய்தது தமிழ் மாணவர்களே என்கிற வதந்தி சிங்கள மாணவர்களால் பரப்பப்பட்டதுடன், தமிழ் மாணவர்கள் தங்களது அறைகளில் புலிகளின் கொடியினையும், தமிழ்த்தேசியத்தினை ஆதரிக்கும் சுலோகங்களையும் மறைத்து வைத்திருந்தனர் என்கிற இன்னொரு வதந்தியும் திட்டமிட்டே பரப்பப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு வெளியில் இருந்த சில சிங்களவர்கள் அன்று மாலை பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து தமிழ் மாணவர்களை அச்சுருத்தியிருக்கின்றனர். "மிக விரைவில் நாங்களும், மாணவர் அமைப்பினரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு பாடத்தினைப் புகட்டவிருக்கிறோம்" என்று அவர்களை எச்சரித்திருக்கின்றது அந்தக் கும்பல். அன்றிரவு, அருணாச்சலம் மண்டபத்தில் தமிழ்த் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டுக்கொண்டிருப்பதை அறிந்து கொண்ட விஞ்ஞானப் பிரிவில் நான்காம் ஆண்டில் பயிலும் துள்சி விக்கிரமசிங்க மற்றும் ஏ. எகநாயக்க ஆகிய சிங்கள மாணவர்கள் அம்மண்டபத்திற்குச் சென்றிருக்கின்றனர். அங்கு திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த சில தமிழ் மாணவர்களை வெளியே இழுத்துவந்த அவர்கள், பல்கலைக் கழக வாயிலில் சின்னத்திலிலிருந்த சிங்கள எழுத்துக்களை தமிழ் மாணவர்களே அழித்தார்கள் என்றும், ஆகவே மொத்தத் தமிழ் மாணவர்களும் இதற்குப் பொறுப்பாளிகள் என்று குற்றஞ்சாட்டிக்கொண்டே மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள். பின்னர் தமிழ் மாணவர்களை கலகா சந்தியிலிருந்து கலைப்பீடம் வரையான வீதியில் இருந்த அனைத்துத் தமிழ் எழுத்துக்களையும் தார் கொண்டு அழிக்க வைத்திருக்கிறார்கள். .
  8. மக்கள் ஆணையினை இழந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகிய தமிழ் மக்களும் குழந்தைகளுடன் தலைவர் பிரபாகரன் தேர்தல் முடிவுகள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு முற்றான தோல்வியினைக் கொடுத்திருந்தன. 1977 ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மக்கள் இக்கட்சிக்கு வழங்கிய ஆணையினை 1983 ஆம் ஆண்டு வைகாசி 18 ஆம் திகதி அது முற்றாகவே தொலைத்திருந்தது. 1977 இல் முன்னணிக்கு தமது ஆணையினை வழங்கியிருந்த தமிழ் மக்கள், 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கான தேர்தலில் தமது ஆணையினை மீளவும் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆனால், 1983 ஆம் ஆண்டு வைகாசி உள்ளூராட்சித் தேர்தல்களில் புலிகளின் வேண்டுகோளினை முற்றாக ஏற்றுக்கொண்டிருந்த தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினை முற்றாகப் புறந்தள்ளியிருந்தனர். தேர்தல் முடிவுகள் முன்னணியினை தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணித்திருந்ததைக் காட்டியது. இரு வருடங்களுக்கு முன்னர் 80 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முன்னனி, 1983 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் பத்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. வடமாகாணத்தின் ஒற்றை மாநகராட்சிச் சபையாகத் திக்ழந்த யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் 13 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருந்தவேளை 87 வீதமானோர் புலிகளின் வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு தேர்தலினைப் புறக்கணித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்த மூன்று உள்ளூராட்சிச் சபைகளில் சாவகச்சேரியில் 14 வீதமானோர் முன்னணிக்கு வாக்களித்திருக்க 86 வீதமானோர் தேர்தலினை நிராகரித்திருந்தனர். பிரபாகரனின் செல்வாக்கிற்கு உடபட்ட இரு சபைகளான வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறைச் சபைகளுக்கான தேர்தல்களில் வெறும் 2 வீதமான வாக்குகளையே முன்னணி பெற்றிருந்தது. இச்சபைகளில் முன்னணி பெற்ற வாக்குகள், வல்வெட்டித்துறை - 2 %, பருத்தித்துறை - 0.75% என்பது குறிப்பிடத் தக்கது. முன்னணியின் தோல்வி போராளிகளுக்கு மகிழ்வினைக் கொடுத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு முன்னணிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையினை அது இழந்துவிட்டது என்று அவர்கள் கூறினர். "தம்மீது மக்கள் வைத்த நம்பிக்கையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இழந்துவிட்டனர். மக்களுக்கு தாம் வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட முன்னணியினர் ஜயவர்த்தன வீசியெறியும் அற்பச் சலுகைகளுக்காக அவர் பின்னால் ஓடுகிறார்கள்" என்று சுதந்திரன் பத்திரிக்கையில் எழுதிய கோவை மகேசன், "மக்களால் முன்னணிக்கு வழங்கப்பட்ட தனிநாட்டினை உருவாக்குவதற்கான ஆணை தற்போது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு போராளிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது" என்றும் எழுதினார். தமிழ் ஈழம் விடுதலை முன்னணியின் உப தலைவரான ஈழவேந்தன் கூறும்போது, "தேர்தல்களுக்கு முன்னர் மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை அண்ணை அமிர்தலிங்கம் நிறைவேற்ற வேண்டும்" என்று கேட்டிருந்தார். "இத்தேர்தலில் மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்பினை அவர் ஏற்றுக்கொண்டு, போராளிகள் தமது கடமையினை முன்னெடுக்க வழிவிட்டு விட்டு அரசியலில் இருந்து அவர் விலகிச் செல்லவேண்டும்" என்றும் அவர் கூறினார். மக்களிடையே இருந்த பொதுவான உணர்வும் இதனையே வெளிப்படுத்தியிருந்தது. மக்களிடம் கருத்துக்களை வெளியிட்டு வந்த ஈழநாடு பத்திரிக்கையும் இதே வகையான உணர்வுகளையே வெளியிட்டு வந்தது. 1977 ஆம் ஆண்டு மக்கள் அமிருக்கு வழங்கிய ஆணையின் ஊடாக சுதந்திரத் தமிழீழ நாட்டை உருவாக்குவதற்கான செயற்பாடுகளிலும், அதற்கான அரசியலமைப்பினை உருவாக்குவதிலும் ஈடுபடப் போவதாக உறுதியளித்த அமிர் தலைமையிலான தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் செய்ய முற்றாகத் தவறியுள்ளதையடுத்து தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆணையினை இன்று அவர்கள் இழந்துவிட்டார்கள் என்பதே சாதாரண தமிழனின் உணர்வாக இருந்தது. "மக்கள் தமக்கு வழங்கிய ஆணையின்படி நடக்க அவர்கள் தவறிவிட்டார்கள்" என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது. நான் இதுதொடர்பாக அமிர்தலிங்கத்தை டெயிலிநியூஸ் பத்திரிகைக்காகப் பேடி கண்டிருந்தேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை அலசுமாறு அவரிடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த அமிர், தனக்கு ஜெயவர்த்த அளித்த வாக்குறுதிகளைச் செயற்படுத்த மறுத்தமையே தமது தோல்விக்கான காரணம் என்று கூறினார். " மாவட்ட அபிவிருத்திச் சபைகளைச் செயற்படுத்தப் போவதாக அவர் என்னிடம் உறுதியளித்தார், ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க அவர் விரும்பவில்லை. இச்சபைகளை நடத்துவதற்கான நிதியினை வழங்க அவர் மறுத்துவிட்டார். அவர் எங்களுக்குத் தந்ததெல்லாம் வெற்றுக் கோது ஒன்றே அன்றி வேறில்லை. மக்களிடம் சென்று காட்டுவதற்கு எம்மிடம் எதுவும் இருக்கவில்லை. புலிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவும் எம்மிடம் எதுவும் இருக்கவில்லை" என்று அவர் கூறினார். பிரபாகரனின் துண்டுப்பிரசுரத்தில் இருந்த, "தமிழரின் குருதி குடித்து, வாயில் அந்தக் குருதி இன்னமும் சிந்திக்கொண்டிருக்கும் அரச பயங்கரவாத ஓநாய்" எனும் வாக்கியத்தின் பொருளினைத் தான் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய அமைர், "ராணுவத்தினரின் பதில்த் தாக்குதல்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படும் தமிழ் மக்கள் போராளிகளின் கைகளுக்குள்ளேயே அடைக்கலம் தேடுவார்கள் என்று ஜெயவர்த்தனவை நான் எச்சரித்திருந்தேன்" என்று அவர் கூறினார்.
  9. ராணுவத்திடமிருந்து புலிகள் முதன்முதலாகக் கைப்பற்றிய டி - 56 ரக தானியங்கி ரைபிள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த தாக்குதல்களையடுத்து பீதியான சூழ்நிலையொன்று தோன்றியது. மீதமாகவிருந்த வேட்பாளர்களும் தமது விலகலை அறிவிக்கும் கடிதங்களுடன் ஈழநாடு பத்திரிக்கைக் காரியாலயத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி தான் தேர்தலில் இருந்து விலகப்போவதில்லை என்று அறிவித்திருந்தபோதிலும், அக்கட்சியின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக்கொண்டனர். வேட்பாளர்களின் பின்வாங்கலும், விலகிச் செல்லலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையும் வெகுவாகப் பாதித்திருந்தது. யாழ்ப்பாண மாநகரசபையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளரான நாகராஜா உட்பட அச்சபையில் போட்டியிட விண்ணப்பித்திருந்த 35 வேட்பாளர்களும் விலக்கொண்டனர். ஆனால், அமிர்தலிங்கமோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். சில வேட்பாளர்கள் விலகிக்கொண்ட போதிலும் தனது கட்சி இத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடும் என்று அவர் அறிவித்தார். தேர்தல் நடைமுறையில் இருந்த தவறுகளைத் தனக்குச் சாதகமாகப் பாவித்த அமிர்தலிங்கம், வேட்பாளர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் விலகுவது சட்டத்திற்கு முரணானது என்று அவர் அறிவித்தார். சட்டத்தின்படி, வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து பின்வாங்கினாலும், இறுதியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் தொடர்ந்தும் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கத்தின் பிடிவாதமான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாக புலிகளின் தலைமையினால் கருதப்பட்டது. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை வெளிப்படையாக எதிர்கொள்வதென்று பிரபாகரன் முடிவெடுத்தார். அதன்படி வைகாசி 8 ஆம் திகதி யாழ்ப்பாணத்த்ம் ஓட்டுமடம் பகுதியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூட்டமொன்றினை அமிர்தலிங்கம் நடத்திக்கொண்டிருந்தவேளை, சீலன் தலைமையில் ஆறு போராளிகள் அங்கு சென்றனர். புலிகளின் தடையினை உதாசீனம் செய்யுங்கள், பயப்படாது தேர்தலில் போட்டியிடுங்கள் என்று அமிர் பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட புலிகளின் போராளி ஒருவர், "கடந்த 30 வருடங்களாக நீங்கள் சாதித்தது என்னவென்று கூறுங்கள் பார்க்கலாம்?" என்று அமிர்தலிங்கத்தைப் பார்த்துக் கேட்டார். இன்னுமொரு போராளி, "ஜெயாருடன் தொங்கிக் கொண்டிருப்பதால் எதனைச் சாதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று அமிரைப் பார்த்துக் கோபமாகக் கேட்டார். அமிர்தலிங்கம் திகைத்துப் போனார். தன்னை நோக்கிக் கேள்விகேட்ட புலிகளுக்கு அமிர் பதிலளிக்கும் முன்னமே வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்கள் புலிகளால் தீர்க்கப்பட்ட அங்கிருந்த கூட்டம் கலைந்து ஓடத் தொடங்கியது. மேடையில் வீற்றிருந்த பேச்சாளர்களும் ஓடத் தொடங்கினர். தன்னைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் தன்னை விட்டு ஓடிச்சென்ற நிலையில் அமிர் மட்டும் கையில் ஒலிபெருக்கியுடன் அங்கே நின்றிருந்தார். பின்னர் அமிரின் காரினை ஓட்டிச் சென்ற புலிகள், அதனைச் சேதப்படுத்திவிட்டு மயானம் ஒன்றின் முன்னால் கைவிட்டுச் சென்றனர். நிலைமையினை ஆராய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயற்குழு வைகாசி 11 ஆம் திகதி கூடியது. ஆனால், அமிர்தலிங்கம் தேர்தலில் பங்கெடுக்கும் தனது முடிவில் பிடிவாதமாக நின்றார். "நாங்கள் துவக்கைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மரணம் எங்களுக்கு ஒருமுறை தான் வரப்போகிறது, அது இப்போது வந்தால்த்தான் என்ன? நான் தம்பிமாரிடம் ஒரு சவாலினை முன்வைக்கிறேன், முடிந்தால் அவர்கள் மக்களிடம் தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கேட்டுப் பார்க்கட்டும். மக்கள் அதனை முடிவெடுக்கட்டும். மக்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்று பேசினார். வைகாசி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்துமடம் சந்தியில் நடந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போதும் அமிர்தலிங்கம் இதனையே குறிப்பிட்டார். புலிகளின் புறக்கணிப்புக் கோரிக்கையினை நிராகரித்த அமிர்தலிங்கம், மக்கள் தனது கட்சிக்கு வழங்கிய ஆணையினை புலிகள் மதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அப்பகுதிக்கு வந்திருந்த புலிகள் வானை நோக்கிச் சில வேட்டுக்களைத் தீர்க்கவே அக்கூட்டமும் பாதியில் கலைந்து போனது. தேர்தல் நாள் அமைதியாக இருந்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வீதிகளில் போக்குவரத்து மிகவும் அரிதாகவே காணப்பட்டது. தேர்தலில் அதிக சிரத்தையெடுத்துக்கொண்டிராத பொலீஸாரும் வேண்டாவெறுப்பாகவே வீதிகளில் ரோந்துவந்து சென்றனர். தேர்தல்ச் சாவடிகளில் கடமையிலிருந்த அதிகாரிகள் வேடிக்கையாகப் பேசிக்கொண்டு அந்த பிற்பகல்ப் பொழுதைக் களித்துக்கொண்டிருந்தனர். காலையில் காணப்பட்ட ஒரு சில வாக்களர்களின் உற்சாகமும் பிற்பகலில் முற்றாகக் காணாமற் போயிருந்தது. செல்லக்கிளி தேர்தல் சாவடி இலக்கம் 25 இல் நான்கு மணியென்று கடிகாரம் ஒலிக்க, தேர்தல் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு மணிநேரமே இருக்கிறதென்று அனைவருக்கும் அது கூறியது. யாழ்ப்பாணம் அரசடி வீதியில் அமைந்திருந்த சிவப்பிரகாசர் வித்தியாலயத்திலேயே அந்த தேர்தல் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. தாம் வந்த சைக்கிள்களில் எட்டத்தில் விட்டுவிட்டு நிலையம் நோக்கி சீலனும் செல்லக்கிளியும் இன்னும் இரு போராளிகளும் நிதானமாக வந்துகொண்டிருந்தனர். நிலையத்தின் முற்பகுதிக்குச் சென்ற செல்லக்கிளி தான் கொண்டு வந்த கைக்குண்டை விட்டெறிய, வாயிலில் காவலுக்கு நின்ற ரஜரட்ட ரபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜயவர்தன கொல்லப்பட்டார். மீதியாக காவலுக்கு நின்ற இரு ராணுவ வீரர்களும் பாடசாலையின் உட்பகுதிக்கு ஓடிச்சென்று நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். அவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. கொல்லப்பட்ட ராணுவ வீரரை நோக்கி ஓடிச்சென்ற செல்லக்கிளி அவர் அருகில்க் கிடந்த டி 56 ரக ரைபிளை எடுத்துக்கொண்டார். ராணுவத்தினர் புலிகளிடம் பறிகொடுத்த முதலாவது தானியங்கித் துப்பாக்கி இதுவே என்பது குறிப்பிடத் தக்கது. தாக்குதலை முடித்துக்கொள்ளுமாறு கட்டளையிட்ட சீலன், தனது போராளிகளை அழைத்துக்கொண்டு தாம் வந்த சைக்கிள்களிலேயே தப்பிச் சென்றார். நிதானமாகவும், துணிவாகவும் செயற்பட்ட சீலனையும் போராளிகளையும் பிரபாகரன் பாராட்டியதோடு, புலிகளால் அன்று ராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட டி 56 ரக ரபிளையும் போராளிகளுக்குக் காண்பித்து விளங்கப்படுத்தினார்.
  10. பிரபாவின் துண்டுப்பிரசுரம் துரோகிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையும் பின்னால் வழங்கப்பட்ட தண்டனையும் தமிழரின் அரசியல்த் தலைமைத்துவத்தை தான் ஏற்கவேண்டிய தருணம் வந்துவிட்டதை பிரபாகரன் உணர்ந்தார். 1983 ஆம் ஆண்டு சித்திரை மூன்றாம் வாரத்தில் தான் கைப்பட எழுதிய துண்டுப்பிரசுரத்தை அவர் மக்களிடையே வெளியிட்டார். அந்த துண்டுப்பிரசுரத்தில் தமிழர்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் "துரோகிகள்" என்றும் விளித்திருந்தார். பிரபாகரன் அன்று வெளியிட்ட துண்டுப்பிரசுரம் இப்படிக் கூறியது, "அரச பயங்கரவாத ஓநாய்ககளின் வாய்களில் இருந்து ஈழத்தமிழ் இனத்தின் குருதி இன்னமும் வழிந்துகொண்டிருக்கும் இந்தவேளையிலும், சிங்கள இனவாத அரசு தனது பயங்கரவாதத்தை சர்வதேசத்தின் முன்னால் நியாயப்படுத்த இந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த முயற்சித்து வருகிறது. சிங்கள இனவாதிகளின் இந்த சதிக்குத் துணைபோகும் தமிழினத் துரோகிகளை நாம் அனுமதிக்கப்போவதில்லை". "சிறிலங்கா தேர்தல் மாயையிலிருந்து ஈழத் தமிழினம் தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டும். எமது மக்கள் ஆயுதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரள வேண்டும்". ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளோ இந்தத் துண்டுப்பிரசுரத்தின் தீவிரத் தன்மையினை உணர்ந்துகொள்ளத் தவறின. ஆகவே, அவர்கள் வழமைபோல தமது தேர்தல்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்ததுடன், பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தி வந்தனர். தனது முடிவுகளை செயலாக்குவதில் எப்போதுமே பின்னின்றிராத பிரபாகரன் தனது திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆகவே, சித்திரை மாதத்தின் நான்காம் வாரத்தில் தேர்தலில் பங்கெடுக்கும் வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்ற புலிகள், அவர்களை தேர்தல்களில் இருந்து விலகிக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்கத் தொடங்கினர். தமது வேண்டுகோளின் முடிவில் ஒரு எச்சரிக்கையினையும் அவர்கள் முன்வைக்கத் தவறவில்லை, "எமது கோரிக்கையினை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்" என்பதே அந்த எச்சரிக்கை. புலிகளின் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மறுநாளில் இருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கையில் தொடர்ச்சியாக சில விளம்பரங்கள் வெளிவரத் தொடங்கின. அந்த விளம்பரங்களின் சாராம்சம் இதுதான், " ....இந்தக் கட்சியைச் சேர்ந்த ... ஆகிய நான் இத்தாள் தமிழ் மக்களுக்கு அறியத் தருவது என்னவெனில், நடக்கவிருக்கும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் .... தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாடியலில் இருந்து நானாக விலக்கிக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல சுயேட்சைக் கட்சிகள் இத்தேர்தலில் இருந்து விலகிக்கொண்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலில் தொடர்ந்தும் போட்டியிடுவதில் உறுதியாக நின்றன. இவ்விரு கட்சிகளினதும் தேர்தலில் பங்கெடுப்பதான நிலைப்பாடு தமக்கு விடுக்கப்பட்ட சவாலாக புலிகள் எடுத்துக்கொண்டனர். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக செயலில் இறங்க முடிவெடுத்தனர் புலிகள். ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று வேட்பாளர்களை குறிவைத்து புலிகளின் மூன்று அணிகள் சித்திரை 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வலம் வந்தன. இவர்களுள் முதலாமவரான பருத்தித்துறைத் தொகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான 43 வயது நிரம்பிய வைரமுத்து ரத்திணசிங்கம் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை சைக்கிளில் வந்த இரு புலிப்போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் அவரது தலையினைத் துளைத்துச் செல்ல அந்தவிடத்திலேயே அவர் இறந்து வீழ்ந்தார். அதேநாள், மாலை 4:30 மணிக்கு, சாவகச்சேரி தொகுதியைச் சேர்ந்த 83 வயதான எஸ் முத்தையா தனது நண்பர்களின் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருக்கையில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே மாலை 5:30 மணிக்கு வல்வெட்டித்துறை உள்ளூராட்சிச் சபையின் வேட்பாளரான எஸ் ராஜரட்ணத்தின் வாகனத்தை வழிமறித்த புலிகள் அவரது மெய்ப்பாதுகாவலரை வெளியே இழுத்து விட்டு ராஜரட்ணத்தைச் சுட்டுக் கொன்றனர். ராஜரட்ணத்தைக் கொல்வதற்கான காரணம் அவர் யாழ்ப்பாணத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும், சிங்கள இனவாதியான சிறில் மத்தியூவின் நெருங்கிய சகாவும், யாழ்ப்பாணத்தில் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பங்கெடுக்கவேண்டும் என்று உறுதியாக செயற்பட்டுவந்தவருமான கே கணேசலிங்கத்தின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்ததனால் ஆகும். துரோகிகள் என்று தம்மால் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்களின் உடல்களின் அருகில் அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணத்தைப் புலிகள் குறிப்பிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன்படி, கொல்லப்பட்டவரின் உடலின் அருகில் அவரது பெயரும், உள்ளுராட்சித் தேர்தலில் பங்கெடுக்க வேண்டாம் என்கிற தமது எச்சரிக்கையினையும் மீறிச் செயற்பட்டு வந்ததினாலேயே இவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.