Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7138
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    33372
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    8975
    Posts
  4. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1887
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/26/23 in all areas

  1. அவர் முன்னர் ஈரோஸ் என்ற புரட்சிகர அமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அல்லவா! அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது
  2. இலங்கை தொடர்பான இந்திராவின் இரட்டை வழிக் கொள்கை 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் கடைசி 10 நாட்களும், ஆவணி மாதத்தின் முதல்ப் 17 நாட்களும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கும், இலங்கையின் சரித்திரத்திற்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்ததோ அதேயளவு முக்கியத்துவத்தை ஆவணி மாதத்தின் இரண்டாவது பகுதியும் பெற்றுக்கொண்டது. அக்காலத்தில்த்தான் இந்திரா காந்தி இலங்கை தொடர்பான தனது இரட்டை வழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்தார். வெளிப்படையான இராஜதந்திர செயற்பாடுகள் மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கான மறைமுக ஆயுத உதவியும் பயிற்சிகளும் இக்காலப்பகுதியிலேயே தோற்றம்பெற்றன. இந்திராவின் இந்த இருவழி செயற்பாடுகளுக்கு எதிராக ஜெயாரும் தனது பாணியில் மூன்றுவழி காய்நகர்த்தல்களை இக்காலத்தில் செய்யத் தொடங்கினார். பேச்சுவார்த்தைகள் என்று காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் பலமான இராணுவ இயந்திரத்தைக் கட்டமைத்துக்கொள்வதற்கான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வது. தமிழ் மிதவாதிகளை தொடர்ந்தும் பலவீனப்படுத்துவது. தமிழ்ப் போராளிக் குழுக்களை அந்நியப்படுத்துவது. தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கவாதப் போராட்டமாக சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்வது. இறுதியாக தமிழ் ஈழத்தின் அடிப்படை பலப்பிரதேசத்தை இல்லாமலாக்குவது என்பனவே இந்திராவின் காய்நகர்த்தல்களை முறியடிக்க ஜெயார் முன்னெடுத்த செயற்பாடுகள் என்றால் அது மிகையில்லை. இந்திரா காந்தி தனது வெளிப்படையான இராஜதந்திர நகர்வினை ஆவணி 17 ஆம் திகதி தான் ஜெயாருக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பினூடாக ஆரம்பித்துவைத்தார். பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் (Press trust of India) பத்திரிக்கையாளரான தர்மராஜா, ஜெயாரை செவ்விகாணும் குழுவில் அன்று இடம்பெற்றிருந்தார். இந்திரா, ஜெயாரை தொலைபேசியில் அழைத்தபோது ஜெயாரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை, உணர்ச்சிகளை தம்மால் காணக்கூடியதாக இருந்ததாக அவர் கூறினார். "அந்த வயோதிபர் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார், ஆனால் இந்தியாவை அவரால் எதுவுமே செய்யமுடியாது என்கிற இயலாமை அவரின் முகத்தில் தெரிந்தது. தனது சினத்தையும், இயலாமையினையும் ஒன்றுகூட்டி பின்வருமாறு அவர் பேசினார், " நாம் ஒரு சிறிய நாடு. இவ்வாறான வெளிநாட்டு அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்துதான் ஆகவேண்டும். எங்களைப்போன்ற சிறிய நாடுகள் எல்லாமே இவ்வாறான அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதென்பதே அவர்களின் விதியாகிப் போய்விட்டது" என்று கூறினார்". அன்று அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து, "இந்திரா என்னுடன் பேசிய விடயத்தை பாராளுமன்றத்தில் கூறுவேன் " என்று கூறினார். அதன்படி அடுத்தவாரம் , புதன்கிழமை, ஆவணி 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். இந்தியா மத்தியஸ்த்தத்தில் ஈடுபடப்போகிறதென்று ஜெயார் கூறியவேளை அங்கிருந்த அமைச்சர்களான காமினி ஜயசூரிய, காமிணி திசாநாயக, பிரேமதாச மற்றும் ரஞ்சித் அத்தப்பத்து ஆகியோர் உடனடியாக அதனை எதிர்த்தார்கள். இவர்களுள் காமிணி ஜயசூரியவே மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார். "நாம் இந்தியாவின் நல்லெண்ண மத்தியஸ்த்தத்தினை ஏற்றுக்கொள்வோமென்றால், நாம் கெளரவத்துடன் வீதிகளில் நடமாட முடியாது" என்று அவர் சினங்கொண்டு கூறினார். ஜயசூரியவின் பேச்சு ஜெயாரை உசுப்பேற்றியிருக்க வேண்டும், "முன்னாள்ப் பிரதமர் திருமதி சிறிமா பண்டாரநாயக்க இந்தியாவின் மத்தியஸ்த்தம் வேண்டும் என்று கோருகிறார். பயங்கரவாதிகளுடன் பேசுங்கள், பார்த்தசாரதியை அழைத்து ஆலோசனையில் ஈடுபடுங்கள் என்று அவர் கேட்கிறார். ஆனாலும் அவரால் வீதிகளில் தாராளமாக நடந்துசெல்ல முடிகிறதே?" என்று ஆவேசத்துடன் கேட்டார் ஜெயார். செல்லையா இராஜதுரை பிரேமதாதாச பேசும்போது தமிழரின் பிரச்சினை என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதனை தம்மால் பார்த்துக்கொள்ளமுடியும் என்றும், இந்தியாவின் தேவையற்ற மத்தியஸ்த்தம் இலங்கையின் இறையாண்மையினை மீறும் செயல் என்றும் கூறினார். "நாம் நேரடியாகத் தமிழர்களுடன் பேசலாம், அவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை நாமே கண்டறியலாம். இந்தியா தலையிடுவதற்கு இங்கே எதுவும் இல்லை, அவர்கள் இதற்கு வெளியே இருப்பதே நல்லது" என்று கூறினார். பின்னர் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த அரசுத்தரப்பு தமிழர்களான தேவநாயகம் மற்றும் இராஜ‌துரை ஆகியோரைப் பார்த்து, "இங்கிருக்கும் இவர்களுடன் நாம் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்" என்று கூறினார். பிரேமதாசா தம்மைப் பார்த்துக் கூறியதற்கு வேடிக்கையாகப் பதிலளித்த தேவநாயகம், "அப்படியானால் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கேட்பதைக் காட்டிலும் அதிகமாக நான் கேட்டுவிடுவேன்" என்று கூறினார். பாராளுமன்றத்தில் இந்திய மத்தியஸ்த்தத்திற்குத் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்த எதிர்ப்பினைச் செவிமடுத்துவிட்டு இறுதியாகப் பேசிய ஜெயார், தான் பாரத்தசாரதியின் விஜயத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டதாக சபையில் அறிவித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தைகளை பார்த்தசாரதி இந்தியாவில் ஆரம்பித்துவிட்டார் என்று கூறிய ஜெயார், மறுநாள் அவர் இலங்கைக்கு வருகிறார் என்பதையும் கூறினார். பாரத்தசராதியை இந்திரா இந்த நடவடிக்கைகளுக்குத் தெரிவுசெய்வதற்கு சில காரணங்கள் இருந்தன. இந்திராவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகர் என்பதைவிடவும், பேரம் பேசலில் மிகச் சிறந்த இராஜதந்திரியாகவும் அவர் திகழ்ந்தார். பிணக்குகளின்போது சிறந்த தீர்வுகளை வழங்கிய அனுபவம், அரசியலமைப்பில் அவருக்கு இருந்த தேர்ச்சி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழராக அவரால் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயலாற்ற முடியும் என்பதுடன் தமிழகத் தலைவர்களும் அவரின் தீர்மானங்களை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்கிற காரணமும் இந்திராவுக்கு பார்த்தசாரதியே இதற்குப் பொறுத்தமானவர் என்று எண்ண வைத்திருந்தது. பார்த்தசாரதி இதற்கு முன்னர் காஷ்மீர், மிசோரம் மற்றும் வியட்நாமியப் பிணக்குகளின்போது தீர்வுகளை வழங்கும் அதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
  3. இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்? இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார். இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார். கோபாலசாமி பார்த்தசாரதி தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால், இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார். இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள், "நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார். குப்தா மேலும் கூறுகையில், தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது. ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும். இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன‌ அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று கூறினார். 1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.