Kongu Food Club ·
Rejoindre
Prabhushetty · ·
மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து அருகில் இருந்த குஜராத்தி உணவகத்தில் மதியம் சாப்பிட கிளம்பினேன்.
மழைநீர் படாமல் ஒரமாக சென்று அடைந்து மேஜையில் அமர்ந்த போது பீகாரை சேர்ந்த உடன் பணி புரியும் நண்பன் அமர்ந்து இருந்தான். என்னை பார்த்து சிரித்தான் பேசியபடியே சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
மழை வலுத்திருந்தது. அருகில்
இருந்த பீடா கடையில் ஒதுங்கி நின்றோம். அவன் பீடா போடும் வழக்கம் உள்ளவன் அவனுக்கு பீடா தயார் செய்ய சொன்னான்.
உடன் எனக்கும் ஒன்று சேர்த்தான்.
நான் வேண்டாம் என கூறினேன்.
அதற்கு அவன் உனக்கு தயாரிக்க சொன்னது இனிப்பு பீடா தான் சாப்பிடு ஒன்றும் செய்யாது என்று கூறினான். (இப்படித்தான் பிறரை கெடுப்பார்கள்)
நான் கடைக்காரரை பார்த்தேன் அவரும் எனது நண்பர் தான் கர்நாடகா மங்களூரை சேர்ந்தவர் அவர் என்னிடம் ஆமாம் இது இனிப்பு பீடா தான் ஒன்றும் செய்யாது என்று கன்னடத்தில் கூறினார் சரியென்று நானும் வாங்கி சாப்பிட்டேன் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு மீண்டும் மழையிநீர் படாமல்
ஓரமாக சென்றுவிட்டோம் எங்கள் அலுவலகத்திற்கு.
மறுநாள் அவன் இல்லை நான் மட்டும் தனியாக சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன் மழைதான் மீண்டும் ஒரு பீடா கடையில் ஒதுங்கினேன்.
கடைக்காரர் என்னை பார்த்தவுடன் ஒரு பீடாவை தயாரித்து கையில் கொடுத்து விட்டார் பேசாமல் சாப்பிட்டேன். (இது அந்த பீடா வாயனுடனான கூடா நட்பினால் வந்த வினை)
மூன்றாம் நாள் மழை இல்லை
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் எனது கால்கள் பீடா கடையை நோக்கி தானாக சென்றது. சட்டென்று திடடுக்கிட்டேன். இது மூன்றாம் நாள் எனது அப்பா கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது வேடிக்கை வாடிக்கை தேடிக்கை
நீ எந்த விஷயத்தையும் வேடிக்கையாக ஆரம்பித்து பின்னர் அதை வாடிக்கையாக்கி அதன் பின் நீ இருக்கும் இடத்தில் அந்த செயலை செய்ய முடியாவிட்டால் அதைத் தேடிச் சென்று செய்வாய் இதுதான் அதற்கு அர்த்தம்.
சற்று யோசித்துப் பார்த்தேன் அதற்குள் பீடா கடைக்காரர் பீடாவை தயார் செய்து என் கையில் கொடுத்தார் நான் அதை மடித்து தருமாறு கேட்டேன் பார்சல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மடித்து கொடுத்தார் அலுவலகத்துக்கு வந்து அதை பிரித்து பார்த்தேன் ஒரு ஏலக்காய் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முழு பாக்கு சிறிது சிகப்பு நிற பழத் துண்டுகள் மற்றும் சிறிய மணி போன்ற இனிப்பு வகைகள் இவைதான் அதிலிருந்தன சிறிது ரோஜா குல்கந்து இருந்தது இதில் என்னை அடிமை ஆக்கியது எது என யோசித்து ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் எல்லாம் சுவையாக தான் இருந்தது ஆனால் எதிலும் பிடித்தமான சுவை இல்லை சாதாரணமாக இருந்தது பிறகு அந்த வெற்றிலையில் ஒரு பேஸ்ட் போல தடவியது நினைவுக்கு வந்தது அதை விரலால் எடுத்து சுவைத்து பார்த்தேன் சரிதான் அதில் தான் அந்த சுவை இருந்தது நம்மை பீடாவிற்க்கு அடிமை படுத்தும் சுவை.
பிறகு வெற்றிலையை கழுவி விட்டு எனது உதவியாளரை அழைத்து சிறிது மிளகு வாங்கி வர சொல்லி நான்கு மிளகுடன் அந்த வெற்றிலையை கடித்து சாற்றை விழுங்கினேன் அது சளியை முறிக்கும் என்பதால்.
இதில் நான் கற்றுக்கொண்டது எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இருப்பவர்கள் கூட அவர்கள் அதை செய்யும் பொழுது நாம் அருகில் இருந்தால் நமக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள் என்பது தான்.
இந்த சுவையூட்டிகள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அஜுனோமோட்டோ என்னும் ஒரு சுவையூட்டி சேர்க்கப்படுகிறது அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதை சாப்பிடுகிறார்கள் இதே போல தான் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் தயார் செய்கிறார்கள் அதனால் தான் அதை சாப்பிட்ட அந்த குழந்தைகள் சுவையூட்டிகளின் சுவையினால் கவரப்பட்டு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதுவே வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கிறது.
குழந்தைகளுக்கு பாக்கெட்டு களில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு வகைகளும் இவ்வாருதான் தயாரிக்கபடுகின்றன.
செரிலாக் பேரக்ஸ் லாக்டோ ஜென் போன்ற உணவு வகைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம். அதாவது அத்துடன் கலந்து செய்யப்படும் சுவையூட்டிகளால். இதைத் தவிர்க்க நாம் நம் வீட்டிலேயே அது போன்ற உணவு வகைகளை தயாரித்துக்கொடுத்து விடலாம்.
அதற்கு
1 கோதுமை. 1/4 கிலோ
2 கொண்டைக்கடலை 100கிராம்
(கருப்பு)
3 பாதாம் பருப்பு 100கிராம்
4 பிஸ்தா பருப்பு. 100கிராம்
5 சோயாபீன்ஸ். 100கிராம்
6 பச்சை பயிர். 100கிராம்
(பாசிப்பயறு)
7 முந்திரிப் பருப்பு. 100கிராம்
8 சாமை அரிசி. 100கிராம்
9 தினை அரிசி. 100கிராம்
10வரகு அரிசி. 100கிராம்
11 மக்காசோளம். 100கிராம்
12 வேர்கடலை. 100கிராம் 13நாட்டு கொள்ளு. 100கிராம்
14 கேழ்வரகு. 100கிராம்
முதலியவற்றை தனித்தனியாக நன்றாக தீய விடாமல் பொன் நிறமாக வறுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக காய்ந்த இந்த தானியங்களை ஒன்றாக நன்கு கலந்து அரைத்து காற்று போகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை குழந்தைகள் மட்டுமல்ல உடல் சற்று பலகீனமான அனைவருமே சாப்பிடலாம். இதில் உள்ள தானியங்கள் அனைத்துமே நாம் நன்கு அறிந்தது தான்.
ஒரு சிலருக்கு (குழந்தைகளுக்கு கூட)தோல் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் அவர்கள் வேர்கடலை மட்டும் தவிர்க்கவும்.
கொள்ளு தேவைப்படுபவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் அதை தவிர்த்தாலும் தவறில்லை
இந்த மாவை பாலிலோ அல்லது சுடுநீரிலோ வேகவைத்து சற்று கெட்டியான பதத்தில் கஞ்சி மாதிரி காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
சுவைக்கு நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம் அஸ்கா சக்கரை என்று நமது கொங்கு பகுதியில் அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும்.
உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முதலில் அனைத்து தானியங்களையும் 10 கிராம் அளவிற்கு எடுத்து மேலே கூறியுள்ளவாறு தயாரித்து கொடுத்து பாருங்கள் குழந்தைக்கு நன்றாக சாப்பிட்டால் நிறைய தயாரித்து கொடுங்கள்.
இது உடல் பலவீனமான பெரியோர்களுக்கும் உரிய குறிப்பாகும்
Voir la traduction
Toutes les réactions :
228228