Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Justin

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    7054
    Posts
  2. இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    7596
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/05/23 in Posts

  1. பிரபாகரன் மதிவதனி காதல் முதலில் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் பராமரிக்கப்பட்டனர். பெண் மாணவர்களை தம்முடன் வைத்திருக்கவோ அல்லது பயிற்சிமுகாம்களுக்கு அனுப்பிவைக்கவோ பிரபாகரன் விரும்பவில்லை. ஆகவே, சென்னையில் வசித்துவந்த அடேல் பாலசிங்கத்தைத் தொடர்புகொண்ட பிரபாகரன் அவருடன் தங்குவதற்கு நான்கு யாழ்ப்பாண மாணவிகளை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். விடுதலை வேட்கை என்று தான் எழுதியபுத்தகத்தில் திருவாண்மியூரில் தாம் தங்கியிருந்த நாட்கள் பற்றி அடேல் விபரிக்கிறார். பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட நான்கு பெண்களும் மதி (மதிவதனி), வினோஜா, ஜெயா மற்றும் லலிதா அக்கியோராகும். அவர்கள் நால்வருக்குள்ளும் சற்று உயர்ந்தவரும், மாநிறத்தைக் கொண்டவரும், அழகிய முகச் சாயலும், குறும்புத்தனமும் மிகுந்த மதியே அழகானவராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் நேர்காணலில் அவரைக் கண்ட தி டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபர் "அசத்தும் அழகானவர்" என்று குறிப்பிட்டிருந்தார். மதி புங்குடுதீவின் மடத்துவெளி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தாயாரின் பெயர் சின்னம்மை என்பதுடன் அவரது தகப்பனாரின் பெயர் ஏரம்பு. ஊரில் அவரை ஏரம்பு வாத்தியார் என்றே அனைவரும் அழைத்து வந்தனர். இந்துசமயத்தை கடுமையாகப் பின்பற்றிவந்த குடும்பம் அவர்களது. மதிகூட அதிக கடவுள் பக்தி கொண்டிருந்ததோடு மற்றோரிடத்தில் அன்பும் இரக்கமும் கொண்டவராக விளங்கினார். பல்கலைக்கழகத்தில் மதி படிப்பில் சிறந்து விளங்கினார். கால்நடை மருத்துவத்துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டபோதும் மதி விவசாயத்துறையில் கல்விகற்கவே விரும்பினார். கிராமத்தில் அவர்களது குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தமையே அவரது கல்வியில் தாக்கம் செலுத்தியதென்றால் அது மிகையில்லை. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டபோது மதிவதனி இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். இதனையடுத்து வீடுதிரும்பியிருந்த மதி உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தார். பெரும்பாலும் ஆண்களால் மட்டுமே நிரம்பி வழியும் திருவாண்மியூரில் அமைந்திருந்த புலிகளின் அலுவலகத்திற்கு திடீரென்று நான்கு பெண்கள் வந்துசேர்ந்தபோது ஆரம்பத்தில் சற்று அசெளகரியமாக இருந்தபோதும் அவர்களின் இயல்பான பண்பினால் அங்கு உற்சாகமும் மகிழ்வும் நிரம்பத் தொடங்கியது. அங்கிருந்தவர்களுக்கான சமையல்க் கடமைகளை இந்த நான்கு பெண்களும் பொறுப்பெடுத்துக்கொண்டனர். அவர்களின் யாழ்ப்பாணத்துச் சமையலை அன்டல் பாலசிங்கம் விரும்பிச் சாப்பிட்டார் என்று அடேல் கூறுகிறார். பிரபாகரன் அங்கு விஜயம் செய்யும் நாட்களில் அவருக்குப் பிடித்தமான உணவுவகைகளும் திண்பண்டங்களும் சமைத்துப் பரிமாறப்பட்டன. எப்போதும் துடினமாக இருக்கும் மதி அவ்வபோது குறும்புத்தனங்களிலும் ஈடுபடுவார். அவரது துடினமான இயல்பும், குறுபுத்தனமுமே பிரபாகரனுடன் அவரை நெருக்கமாக்கியது. தி டைம்ஸ் பத்திரிக்கை அதனை பின்வருமாறு கூறுகிறது, இந்திய ஹோலிப் பண்டிகையின்போது புலிகளின் தலைவரான பிரபாகரன் மீது சாயம் கலக்கப்பட்ட நீரை அவர் ஊற்றினார். அதிலிருந்தே அவர்களது காதல் உருவானது. மதி தன் மீது சாயம் கலந்த நீரை ஊற்றியபோது அவரைக் கடுமையாகக் கடிந்துகொள்வது போன்று பாசாங்கு செய்து அவரை அழவைத்த பிரபாகரன் உடனேயே தனது காதலை அவரிடம் வெளியிட்டார். தமிழ்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென்று வழங்கப்பட்ட விடுதியில் அந்நாட்களில் தங்கியிருந்த பிரபாகரன் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக மட்டுமே திருவாண்மியூரில் அமைந்திருந்த தனது அலுவலகத்திற்குச் சென்றுவந்தார். ஆனால், ஹோலிப் பண்டிகையின் தண்ணீர் ஊற்றுக்குப் பின்னர் அங்கு அடிக்கடி வரத்தொடங்கினார் அவர். பெரும்பாலான நேரங்களில் மதிவதனியைப் பார்க்கவே அங்கு சென்றுவரத்தொடங்கினார் பிரபாகரன். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ‌மாக விரும்பியிருந்தார்கள் என்று அடேல் எழுதுகிறார். இரவு பகல் பாராது மதிவதனியைச் சென்று சந்தித்த பிரபாகரன், அவருடன் பல மணிநேரங்களைச் செலவழித்தார். அநேகமான நேரங்களில் அவர்கள் தமக்குள் சிரித்து மகிழ்வதைக் காணக்கூடியதாக இருக்கும். இரவு வேளைகளில் பிரபாகரன் அங்கு வரும்போது அவரது மெய்க்காவலர்களும் ஆயுதங்களுடன் வந்திருப்பார்கள். சென்னையின் கிழ்க்குக் கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் வால்மீகி ஆலயம் 2003 இரவுவேளைகளில் பிரபாகரன் மேற்கொண்ட விஜயங்கள் அயலில் உள்ளவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் அவரை பகல் வேளைகளில் மட்டுமே அங்குவருமாறும் கூறுங்கள் என்று அன்டன் பாலசிங்கத்திடம் அடேல் கேட்டுக்கொண்டார். சில தினங்க‌ளுக்கு முன்னர் தான் ஒரு சம்பவம் அங்கு நடந்திருந்தது. திருவாண்மியூர் ஆச்சாரம் மிகுந்த பிராமணர்கள் நிரம்பிய பகுதி. தாவணி அணிவதை வழக்கமாகக் கொண்ட அப்பகுதிப் பெண்கள் ஆண்களுடன் பழகுவதைத் தவிர்த்தே வந்தனர். வெள்ளைக்காரப் பெண்மணியான அடேல் தமிழ் ஆணான பாலசிங்கத்துடன் அங்கு வாழ்ந்துவந்தார். அதுவே அப்பகுதியில் விசித்திரமாக நோக்கப்பட, அது போதாதென்று பெருமளவு ஆண்கள் இரவு பகலென்று பாராது அங்கு வந்துசென்றுகொண்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக நான்கு இளம் பெண்கள் வேறு அங்கு வந்து தங்கியிருந்தனர். வயதிற்கு வந்திருந்த இந்த நான்கு அழகிய பெண்களும் பாவாடை சட்டையே அணிந்திருந்தனர். அந்த வீட்டைக் கடந்து சென்ற அனைவரும் அதனை சந்தேகத்துடனே பார்த்துச் சென்றனர். சில நாட்களின் பின்னர் அவ்வீட்டில் வெள்ளைக்காரப் பெண்மணியொருவர் விலைமாதர்களின் விடுதியொன்றினை நடத்திவருவதாக அயலில் உள்ளவர்களால் வதந்தி பரப்பப்பட்டது. ஒருநாள் அவ்வீட்டின் முன்னால் கூடிய அப்பகுதி ஆண்கள் சிலர், அப்பகுதி அமைதியான மதிப்பிற்குரிய பகுதியென்றும் அப்பகுதியை விட்டு அவ்வீட்டில் உள்ளவர்கள் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில ஆண்கள் அவ்வீட்டின் மீது கற்களை வீசவும் செய்தார்கள். பாலசிங்கமோ அல்லது வேறு ஆண்களோ அப்போது வீட்டில் இருக்கவில்லை. வெளியில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தால் பெண்கள் நால்வரும் அச்சத்தில் உரைந்துபோய் வீட்டின் ஒரு மூலைக்குள் பதுங்கிக்கொண்டார்கள் என்று அடேல் எழுதுகிறார். சிறீ மருந்தீஸ்வரர் கோயில் திருவாண்மியூர் அதிஸ்ட்டவசமாக பொன்னமான் சில போராளிகளோடு அங்கு வந்து சேர்ந்தார். தமது வீட்டின்முன்னால் நின்ற கூட்டத்தைப் பார்த்தபோது அவர் சற்று அசந்துபோனார். அவர்கள் அங்கு கூடியிருந்ததன் நோக்கம் பற்றி அவர் அறிந்துகொண்டபோது அவரது அதிர்ச்சி அதிகமானது. கூட்டத்தைப் பார்த்து கோபத்துடன் கத்திய பொன்னமான் "நாம் இலங்கையிலிருந்து வந்திருக்கும் விடுதைப் போராளிகள்" என்று கூறினார். இந்திய அரசாங்கம் தமக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதற்காக இங்குவந்து தங்கவைத்திருப்பதாக அவர் கூட்டத்தைப் பார்த்துக் கூறினார். இதனை உறுதிப்படுத்துவதற்கு தனது இடையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்த அவர் கூட்டத்தை நோக்கி உயர்த்திக் காண்பித்தார். இதைக் கேட்டதும் அங்கு நின்ற கூட்டம் ஸ்த்தம்பித்துப் போனது. கோபம் கரைந்துபோக அவர்கள் மீது அபிமானமும் மரியாதையும் ஏற்படலாயிற்று. தமது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அக்கூட்டம் பின்னர் அவர்களை மரியாதையுடன் நடத்தத் தொடங்கியது. அயலில் உள்ளவர்களின் பழக்க வழக்கங்களை நாம் மதிக்கவேண்டும் என்று பிரபாகரனிடம் கூறிய அன்டன் பாலசிங்கம், மதிவதனியை இரவுவேளைகளில் அவர் வந்து சந்திப்பது தம்மீது அயலவர்கள் வைத்திருக்கும் மதிப்பினைக் குலைத்துவிடும் என்று கூறினார்.
  2. தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் கூறிய அந்த 4% அதிகரிப்பு விலை ஒரு தற்காலிக அதிகரிப்பாகவே இருக்கும், பின்னர் விலை பழைய விலையினை விட குறைவதற்கும் வாய்ப்புள்ளது (பொதுவான நடைமுறை). பெரிய நிதிநிறுவனங்கள் தமது கையிருப்பிலுள்ள பங்குகளை விலை குறையாமல் விற்பதற்கு இந்த நல்ல செய்திகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. Buying climax இந்த வரைபடத்தில் விலை மாற்றத்தினை குறிக்கும் Candle ( open price, high price, low price, close price ஆகிய 4 தரவுகலை கொண்ட), Candle நீளம் சிறிதாக இருக்கும் ( குறைந்த அளவு விலை மாற்றம்) ஆனால் கைமாறிய எண்ணிக்கை அதிகமாக இருக்கும் (Volume).
  3. உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்களை எனது நண்பனின்(இப்போது அவர் இல்லை இந்தியன் ஆமியின் செல் விழுந்து தொண்டையை கிழித்துவிட்டது)அண்ணன் தான் இவர்களது வீட்டுக் காரில் ஏற்றிச் சென்றதாக சொன்னார்கள். ஆனாலும் யாரிடமும் கேட்டு உறுதிப்படுத்தவில்லை.
  4. இந்தியப் பயிற்சி 1983 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் சென்னையி முழுதும் ஈழத் தமிழ் இளைஞர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவர்களைத் தொகுதி தொகுதியாக பஸ்வண்டிகளில் ஏற்றி தில்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ரோ அதிகாரிகள். "அது ஒரு களைப்பு மிகுந்த நீண்ட தூரப் பயணம்" என்று அரியாலையைச் சேர்ந்த நிருபன் எனும் இளைஞர் என்னுடன் சில வருடங்களுக்கு முன்னர் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். டெலோ அமைப்பின் முதலாவது தொகுதிப் பயிற்சிப் பாசறையின் உறுப்பினரான அவர் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார். டெலோ அமைப்பே இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது அமைப்பென்பதும் குறிப்பிடத் தக்கது. சுமார் 2,000 கிலோமீட்டர்கள் தூரத்தினைக் கடக்க தமது பஸ்வண்டிக்கு மூன்று நாட்கள் எடுத்ததாக அவர் கூறினார். தில்லியைச் சுற்றிப்பார்த்தபடியே தமது பயணத்தைத் தொடர அவர்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாம். "இடங்களைச் சுற்றிக் காட்ட எம்மை அழைத்துச் சென்றார்கள். ஆனால் எம்மை எவருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று நிருபன் கூறினார். தில்லியிலிருந்து பயிற்சி முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டம் என்பது ஒரு இரகசியாமான நடவடிக்கை என்று அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது. "எமது மூன்றரை மாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு நாம் மீன்டும் சென்னைக் கொண்டுவரப்பட்டபோதுதான் நாம் பயிற்றப்பட்ட இடம் டெஹெரா டன் எனும் பகுதி என்பது எமக்குத் தெரியவந்தது. பயிற்சி முழுதுவதும் எம்மை முகாமிற்கு வெளியே செல்ல அவர்கள் அனுமதியளிக்கவில்லை". அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றின் மலைப்பாங்கான நிலப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த அந்தப் பயிற்சி முகாம் வெளியுலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. "அது ஒரு அழகான இடம். நாம் அங்கு தங்கியிருந்த நாட்களை மகிழ்வுடன் களித்தோம். ஆனால் அங்கு நிலவிய காலநிலை மட்டுமே எமக்குப் பிரச்சினையாக இருந்தது" என்று அவர் கூறினார். முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட முதலாவது நாள் கடுங்குளிராகக் காணப்பட்டதாகக் கூறும் நிருபன் தனக்கு வழங்கப்பட்ட தடிப்பான கம்பளத்தினால்க் கூட அக்குளிரைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். பயிற்சிமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு, பதியப்பட்ட பின்னர் ஒவ்வொரு போராளிக்கும் இரு போர்வைகளும், படுக்கை விருப்பித் துணியும், மடித்துவைக்கக்கூடிய கட்டிலும் வழங்கப்பட்டது. "மிகக்கடுமையான குளிரைக் கொண்ட பிரதேசம்" என்று நிருபன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், ஒருவார காலத்தின் பின்னர் குளிருக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள். "பின்னர் குளிருக்கு எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்" என்று அவர் கூறினார். ஆனால், வட இந்திய உணவை உட்கொள்வது கடிணமாகவே தென்பட்டது. சப்பத்தி, நாண், பூரி என்பவற்றுடன் உருளைக்கிழங்கு, முட்டை அல்லது ஆட்டுக்கறி அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இடையிடையே கோழிக்கறியும் வழங்கப்பட்டிருந்ததது. எப்போதாவது ஒருமுறைதான் சோறும் மீன்கறியும் முகாமில் கிடைத்தது. "அவர்களின் உணவில் சுவையே இருக்கவில்லை. அவர்கள் மிளகாய்த்தூள் பாவிப்பதேயில்லை" என்று நிருபன் தொடர்ந்தார். "சூடான, சுவையான உணவையே நாம் எதிர்ப்பார்த்தோம்" என்று அவர் மேலும் கூறினார். ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர். பின்னர் வந்த மாதங்களில் மேலும் சில தொகுதிப் போராளிகளை அமைப்புக்கள் அனுப்பி வைத்திருந்தன. இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச‌ பயனைப் பெற்றுக்கொள்ள இயக்கங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. டெலோவினால் அனுப்பப்பட்ட தொகுதிப் போராளிகளுக்கு சிறீ சபாரட்ணமும், ஈரோஸ் போராளிகளுக்கு பாலக்குமாரும், ஈ.பி.ஆர்.எல்.எப் தொகுதிக்கு டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் போராளிகளுக்கு உமா மகேஸ்வரனும், புலிகளின் போராளிகளுக்கு பொன்னமான் என்று அழைக்கப்பட்ட குகனும் தலைமை தாங்கியிருந்தார்கள். உமா மகேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவாநந்தாவிற்கும் லெபனானில் அவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புதுப்பிக்கும் நிகழ்வாக இந்தியப் பயிற்சி அமைந்திருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.