Jump to content

Leaderboard

  1. சுப.சோமசுந்தரம்

    சுப.சோமசுந்தரம்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      456


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      45088


  3. விசுகு

    விசுகு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      34278


  4. நியாயம்

    நியாயம்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      1762


Popular Content

Showing content with the highest reputation on 11/18/23 in all areas

  1. சமீபத்தில் 'இறுகப்பற்று' திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் ஒரு காட்சி என்னை வள்ளுவனிடம் கொண்டு விட்டது. அந்த அனுபவத்தை முதலில் யாழில் பதிவு செய்து, பின் ஏனைய வலைத்தளங்களுக்குக் கடத்தவே எண்ணம். இப்பதிவுக்கு மட்டுமல்ல; எனது எந்தவொரு பதிவுக்கும் இதுவே என் உள்ளக்கிடக்கை. அதற்குக் காரணம் எனக்கு ஆரம்பகால எழுத்தனுபவத்தைத் தந்தது யாழ் இணையமே! இங்கு யாழ் சொந்தங்கள் தந்த ஊக்கமே எனக்கான தூண்டுகோல். யாழ் தூண்டுகோல் ஆக நான் எழுதுகோல் ஆனேன். இருப்பினும் சில பதிவுகளில் காணொளி இன்றியமையாததாய் அமைகிறது; காணொளியை நேரடியாக யாழில் பதிவதில் எனக்கு சிரமம் ஏற்படுவதால் சமீப காலங்களில் அத்தகைய தருணங்களில் முகநூலில் பதிந்து, பின்னர் யாழின் சமூகவலை உலகத்திற்குக் கடத்துவதை வழக்கமாக்கிவிட்டேன் . அவ்வாறே இப்போதும், நான் மேலே குறிப்பிட்ட 'இறுகப்பற்று' திரைப்படத்தின் அந்தக் குறிப்பிட்ட காட்சியை இணைப்பது தேவையாகிப் போனது. எனவே முகநூல் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. வாசிப்போர் எனது எழுத்திற்குக் கீழேயுள்ள படக்காட்சியை முதலில் பார்த்துவிட்டு வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02KuPzvfGLva7tPapocedM4mjXMn5LYdkdxS7LNepAhM7cTFkhmqbF4Fbt6mZC64XEl&id=100083780391980&mibextid=Nif5oz
    7 points
  2. இந்த செய்தி தானியங்கி/ஏஐ மூலம் நேரடி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதோ? தண்டவாளம் அழுகக்கூடியது என இப்போதுதான் அறிகின்றேன்.
    4 points
  3. இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… பாவையர் குலவை போட… பரிதியர் சகடம் ஆட… பெண்கள் : அலைமேல் கதிரைப் போல… விளங்கிடும் மரும தேவ… பழையணி பெருமை சாற்ற… புலவர்கள் தமிழும் தீரும்… பெண்கள் : கடல் மேல் புயலைப் போல… களங்கள் விரைந்து பாய… வண்ணொலி சீராட்ட… தென்புலம் ஏங்கும் வீர… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… பாவையர் குலவை போட… பரிதியர் சகடம் ஆட… பெண் : அலைமேல் கதிரைப் போல… விளங்கிடும் மரும தேவ… பழையணி பெருமை சாற்ற… புலவர்கள் தமிழும் தீற… பெண் : கடல் மேல் புயலைப் போல… களங்கள் விரைந்து பாய… வண்ணொலி சீராட்ட… தென்புலம் ஏங்கும் வீர… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : ஊற்றாகிச் செல்… காற்றாகிச் செல்… ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே… மழை தான் பெய்திட… பர பர பர பரவென… பாயட்டும் பாய்மரம்… பெண்கள் : மறவர்கள் வீரம் காண… சமுத்திரம் பெருகிப் போகும்… உருவிய வாளைக் கண்டு… பிறைமதி நாணிப் போகும்… ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து… குதிகளம் வண்ணம் மாறும்… உதிர்ந்திடும் பகைவர் தேகம்… கடலுக்கு அன்னமாகும்… ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு… பகைப்புறம் சிதறி ஓடும்… சரமழை பெய்தல் கண்டு… கடலலை கரைத்து ஓடும்… ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா… எடடா துடி வாளை… தொடடா சரமாலை… அடடா பகை ஓட… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பெண்கள் : ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… ஆண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… ஆண் : வீரா…
    3 points
  4. இல்லை அண்ணா உலகம் சுருங்கி விட்டது. எவரும் தனித்து வாழும் சூழல் இல்லாமல் போய்விட்டது. சந்திப்பதும் பரஸ்பரம் பேசி தீர்வுகள் மற்றும் தேடல்களை செய்வதும் தவிர்க்க முடியாதவை. ஆனால் கேள்வி சீன அரசாட்சி பற்றியது. பதில் சரியே.
    3 points
  5. எங்காவது பொம்பிளை சகவாசம் வைத்து விட்டு வந்து எழும்பி ஓடேலாத மப்பில இருந்திருப்பார்.
    2 points
  6. அமெரிக்கா சீனா இரண்டுக்கும். அரசியலில் நிறையவே வித்தியாசம் உண்டு” இந்த யாழ் களத்தில் எதிர்தரப்பு உண்டு” ஆனால் மிகப்பெரிய ஆசிய நாட்டில்,..சீனாவில் எதிர்கட்சி இல்லை ஒரு கட்சி ஆட்சி இது சர்வாதிகாரமில்லையா ??? சீனாவில் இருந்து பல இலட்சம் மக்கள் அமெரிக்காவில் குடியேறி வாழ்கிறார்கள் காரணம் சுதந்திரம் சீனாவில் தொடர்ந்து ஒரே கட்சி ஆட்சி தான் அமெரிக்காவில் மாறி மாறி கட்சிகள் ஆட்சி செய்யும் பலமான எதிர்க்கட்சி இருக்கும் ஆட்சி நடத்துகொண்டிருக்கும்போது எதிர்கட்சி பலமடையும் வாய்ப்புகள் உண்டு” அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர முடியும் ஒரு ஆபிரிக்கா வம்சத்தைச் சேர்ந்த அமெரிக்கன் இரண்டு முறை ஐனதிபதி வகித்து உள்ளார் சீனாவில் முடியுமா??? இன்னும் நிறைய உண்டு” விசுகர் சொன்னபடியே பைடன். சொன்னது உண்மை ஒரு கட்சி ஆட்சி நடத்தும் சீனா ஐனதிபதி சர்வாதிகாரி தான் முடியுமானால். எதிர்கட்சி அமைய வழி விட்டு ஆட்சி நடத்தட்டும். பார்ப்போம் ஒருபோதும் முடியாது ரொம்ப கடினம் இந்தியாவை விட கேவலமான ஆட்சி தான் நடக்கும்
    2 points
  7. இரவிரவா, ஊர் சுத்திப்போட்டு, விடியக்காலைல வீட்டுக்குள்ள, கள்ளன் நுழையிற மாதிரி நுழைஞ்சா, கிரிக்கெட் மட்டை என்ன, அலவாங்கு அடி தானே விழும். 🤣😁
    1 point
  8. மௌலவி இப்படியான நடனங்களுக்கு என்ன சொல்லுவாரோ? 🤣 ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் மௌலவி மொழி கூறும் டிங்டொங் ஒலி கேட்டேன் 😎
    1 point
  9. நீங்கள் அவுஸினை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் எப்போதும் இந்த வகை முக்கிய ஆட்டங்களுக்கு ஒரு திட்டத்துடன் வருவார்கள். உதாரணமாக ஒரு உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதுவரை இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான வாஸ் அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்த வீரராக இறுதிப்போட்டியில் அவுஸினை எதிர்கொண்டார் அவரது பந்தினை ஆரம்ப ஓவர்களில் ஏற்படுதும் (பந்து உறுதியாக இருக்கும் போது) சாதகங்கலை இல்லாமல் செய்வதற்காக ஆரம்ப ஓவர்களில் கில் கிறிஸ்ட் பந்தினை அடித்தாடினார், அதற்காக தனது கீழ் கையில் (மட்டையின் மெதுவான கையில்) உறையினுள்ளே கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறப்படுகிறது (அது ஒன்றும் விதிமுறையற்ற செயல் அல்ல கீழ் கை ஆதிக்கம் செலுத்தும் போது மட்டை கட்டுப்பாட்டினை இழந்து உயர்த்தி அடித்து ஆட்டமிழக்கலாம்). இந்த ஆடுகளத்தில் (வழமையான) சடுதியான மாற்றம் ஏதாவதினை இந்திய நிர்வாகம் செய்யாவிட்டால், பொதுவாக இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாகும். குறிப்பாக இந்தியணியில் இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அது அவுஸிற்கு பெரும் தலையிடியாக இருக்கும் அவர்களை இந்த போட்டியில் துவம்சம் செய்வதற்கான திட்டத்துடனே அவுஸ் களத்தில் இறங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களில் அளவுகளையும் திசைகளையும் குழப்புவதுதான் அவுஸ் ஆரம்ப ஆட்டக்காரர்களின் திட்டமாக இருக்கும் அத்துடன் முதல் 10 ஓவருக்குள் விரைவாக ஓட்டத்தினை குவிக்க முற்படுவர் என கருதுகிறேன்.
    1 point
  10. உங்கள் கரிசனைக்கு நன்றி, இந்த வகை சூதாட்டங்களில் house always win என்பார்கள், இதில் வீடு என்பது சூதாட்ட நிறுவனம் இதனை மறுவளமாக பார்த்தால் சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எபோதும் தோற்பார்கள். உதாரணமக இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்திற்கான வெற்றி இலாபம் அவுஸ் 2.75 இந்தியா 1.50 3 டொலரில் 2 டொலரை இந்தியாவில் பந்தயம் வைத்தால் இலாபம் 3 டொலர் மறுவளமாக இந்தியா தோற்பதால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய (Hedge) அவுஸில் மிகுதி 1 டொலரினை இட்டால் வரும் பெறுமதி 2.75. இந்த 3 டொலருக்கும் 2.75 இடையே உள்ள இடைவெளி 0.25 (இழப்பு), இது House edge இந்த ஆட்டங்களில் அவர்கள் எப்போதும் வெல்வதற்கான காரணம் இந்த சாதக நிலைதான்(Edge). இந்த நிலைஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்பவர்களுக்கு சாதகமாக வரப்போவதில்லை, ஆனால் இதனை புரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இழப்பு என தெரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு உளவியல் ரீதியான வேறு காரணங்கள் (trigger) இருக்கலாம்(Self destruction). நீங்கள் கூறிய காலப்பகுதி 2010, உங்கள் விடயத்தில் 2009 தாக்கம் இருக்கலாமோ என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). அல்லது இதனை வெளியில் இருந்து பார்க்கும் என்னால் புரிந்து கொள்ளமுடியாமலும் இருக்கலாம். மற்றது நான் இந்த சூதாட்டத்தில் ஈடுபடமாட்டேன் எனவே கருதுகிறேன்.
    1 point
  11. மனிசியையும் பிள்ளைகளையும், சகோதரி வீட்டுக்கு அனுப்பிப்போட்டு, வீட்டில றால் கறியும், பியரும், சரஸ்வதி பூசைக்குள்ள போட்டுத் தாக்கினத்தில இருந்து, உங்களுக்கு கண்டம் தான். நீங்கள் தான் கிரிக்கட் விளையாடுறேல்லையே... பிறகென்ன பயம் வேண்டிக்கிடக்கு??? 🤣😁
    1 point
  12. சிறீலங்கா எனும் நாடு, ஒரு கோவிலில் பொட்டுக்கட்டித் தேவடியாளை நேர்ந்துவிட்டதுபோல ஒரு நாளைக்குச் சீனக்காரன் வருவான் வந்து தங்கிப்போட்டு கோவில் வெளிவீதியில் வெந்நீர் வைச்சுக்கொடுத்தால் குளித்துவிட்டு மடியில இருக்குற காசை விட்டெறிந்து போவான் பிறகு இந்தியாக்காரன் வருவான் மறுபடியும் அதே கதிதான் கடைசியில சீக்குப்பிடித்துச் சாகவேண்டியதுதான்.
    1 point
  13. நன்றி சுப, காணொளியைப் பார்த்தபின்னர் தங்களின் எழுத்தை வாசித்தேன். ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் இடையே ஊடலும் திழைத்தலும் குடும்பம் என்கிற அமைப்பைக் கொண்டு செல்ல எவ்வளவு முக்கியம் என்பதை அழகாகச் சொல்கிறது. இந்தப் படத்தை பார்த்தேயாக வேண்டும். 👍
    1 point
  14. ஆஹா ....ஒரு திரைப்படக் காட்சியை குறளுடன் கலந்து எவ்வளவு அழகாக ரசித்திருக்கிறீர்கள்.....சற்றுநேரம் உங்களின் கண்களை இரவல் கொண்டு நானும் ரசித்தேன்.......நன்றி ஐயா ......! 🙏
    1 point
  15. வீட்டு நிலம் காய்ந்து கிடக்க, ஊரெல்லாம் உரம்போட நினைத்தால் கிரிக்கெட் மட்டையென்ன உலக்கையும் விளையாடும் . 🤣
    1 point
  16. சும்மா கிடந்த தேரை இழுத்து, நடுத் தெருவில் விட்டு விட்டார்கள். கடலில்... பேனா சிலை வைக்கப் போய்... மாதக் கணக்கில் கிழித்து தொங்க விட்டார்கள். இது எத்தனை நாளைக்கோ.... 😂 இனி கொஞ்ச நாளைக்கு.... செந்தமிழன் சீமானின் காணொளிகளை மிஸ் பண்ணாமல் பார்க்க வேணும். 🤣
    1 point
  17. நீங்கள் இன்னும் இலங்கை இந்திய மனநிலையில் இருந்து வெளியே வராதது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கெல்லாம் மக்கள் கோரிக்கைகளை குப்பை தொட்டியில் போடமுடியாது. வைச்சு செய்வார்கள் அவர் நாட்டின் தலைவராக இருந்தாலும்....
    1 point
  18. இது ஒரு உதாரணம். கம்யூனிச ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. ஜனநாயக ஆட்சியில் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறியா? பணத்தைக் கட்டு,அனுமதியை எடு,பாதுகாப்பு தேவையா?முடிவில் ஏதாவது மகஜர் கொடுக்கப் போகிறியா கொண்டு வா. வாங்கி குப்பைக்குள் போட்டுவிடுவார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? அன்று சீனாவில் மக்கள் புல்லுத்தின்னும் கட்டத்தில் கம்யூனிசம் தேவையாக இருந்தது. இன்று நிலமை மாறி வருகிறது. சீனாக்காரனை கூப்பிடாமலே அவன் சர்வாதிகாரி என்று சொல்லியிருக்கலாம். கூப்பிட்டு கை குலுக்கி விட்டு பின் முதுகில் குற்றியது தான் பிரச்சனையே. மற்றும்படி அவர் சர்வாதிகாரி தான்.அதில் மாற்றுக் கருத்தில்லை.
    1 point
  19. இந்த க் கட்டுரைக்கு தென்னிந்தியாவில் அடிமை முறை என்று தலையங்கம் வரைவதே பொருத்தமாக இருக்கும். ஆனால், சோழர்களின் காலத்தில் எனக் குறிப்பாகச் சுட்டித் தலையங்கம் எழுதுவதன் நோக்கம் என்ன?
    1 point
  20. தம்பியவை உங்களுக்கு அதிஸ்டத்தில் நம்பிக்கை இருந்தால் லொட்டோ ஒரு வரிசை வெட்டுங்கோ. ஆனால் தொடர்ந்து உழைப்பை மட்டும் செய்து கொண்டே இருக்க வேணும். உழைப்பு ஏமாற்றாது.நான் கிழமைக்கு 2 ஈயூரோ மில்லியனும் 2 லொட்டோவும் வெட்டுவென்.9 பவுண்களோட அலுவல் முடியும் அதிஸ்டம் இருந்தால் விழும். மயிரில கட்டி மலையை இழுக்க வேணும் வந்தால் மலை போனா மயிர். அதை விட்டுட்டு இந்த சூதாட்டக் கிளப்புகளில் விளையாடினால் ஒண்ணும் மிஞ்சாது. ஆசை காட்டி மோசம் செய்வார்கள். கண்ணுக்குத் தெரியாத நிபந்தனைகள் எல்லாம் இருக்கு. இந்தியா வென்றால் அவங்கட அலப்பறை தாங்க முடியாதே உண்மை தென் ஆபிரிக்காவுக்காவுக்கு எப்போதுமே கடைசி நேரங்களில் சொதப்பி விடுகிறார்கள்.
    1 point
  21. வெல்லாத‌ அணிக‌ளில் ஒன்று வென்று இருந்தால் ம‌கிழ்ச்சி இர‌ண்டு அணிக‌ளும் ஏற்க‌ன‌வே கோப்பை தூக்கிட்டின‌ம் அவுஸ்ரேலியா 5 முறை இந்தியா 2 முறை கோப்பை இந்தியாவுக்கு தான் புல‌வ‌ர் அண்ணா
    1 point
  22. 18 NOV, 2023 | 03:51 PM காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதுதொடர்பில் தெரிவிக்கையில், ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது. இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் பயணிக்கலாம். ஒருவழிப் பயணக்கட்டணமாக 4,250 இந்திய ரூபாவும் மற்றும் வரிகளும் அறவிடப்படும். அத்தோடு ஒருவழிப் பயணக்கட்டணமாக 17,000 இலங்கை ரூபா மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான முற்பதிவுகளை தொலைபேசி செயலி மற்றும் இணைவழிகளில் மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/169636
    1 point
  23. புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர் தரன் ஸ்ரீ (ஸ்தாபகர், தலைவர், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்) யுடன் ஒரு உரையாடல். —- கருணாகரன் —- “பசுமையாக்கம்” என்ற எண்ணத்தோடு பசுமைச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக – ஆனால் முறையாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வரும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலைச் செய்துள்ளோம். தாயக விடுதலைப் போராட்டத்தில் மாணவப் பருவத்தில் இணைந்து செயற்பட்ட தரன் ஸ்ரீயின் இயற்பெயர், கணபதி ஸ்ரீதரன். போராட்ட வாழ்வின்போதுதான் அவருக்கு மரங்களின் மீதும் பசுமை மீதும் ஈர்ப்பும் அறிமுகமும் ஏற்பட்டது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார். சமூக அக்கறையும் இயற்கை மீதான நேசிப்பும் உள்ள பலருடைய பரிச்சயக் களமும் அனுபவமும் இதுவே. சரி பிழைகளுக்கு அப்பால் ஈழ விடுதலைப் போராட்டம் பல நல்ல சமூக அக்கறையுள்ள – இயற்கை மீதான – சூழல் மீதான – கரிசனையுள்ள பலரைப் பயிற்றுவித்துத் தந்துள்ளது. தரன் ஸ்ரீ இப்பொழுது இருப்பது புலம்பெயர் தேசமொன்றில். ஆனால் அவர் அகரீதியாகவும் அக்கறையுடனான செயற்பாட்டிலும் ஈழ நிலத்தில்தான் பிணைந்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளையும் லட்சக்கணக்கான விதைகளையும் இந்த மண்ணிலே நடுகை செய்தும் விதைத்தும் வருகிறார். இதற்காக அவர் தான் வாழும் நாட்டில் இரவு பகலாக வேலை செய்கிறார். அப்படி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில்தான் இந்தப்பணிகளை முன்னெடுக்கிறார். இதற்காக அவர் மிகக் கடினமான துப்புரவுப் பணியைச் செய்கிறார். கேட்டால், அந்தப் பணிக்கு அங்கே கூடுதலான காசைத் தருவார்கள். அந்தக் காசை இங்கே பயன்படுத்திக் கொள்வேன் என்று சிரிக்கிறார். பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்கிற சம்பிரதாய மர நடுகைகளுக்கு அப்பால், அக்கறையுடன் கூடிய ஒழுங்கான பசுமைத் திட்டம் இது என்று துணிந்து கூறும் தரன்ஸ்ரீ, அதைக் கண்முன்னே செயற்படுத்திக் காட்டி வருகிறார். பசுமைக்கு எந்த வேறுபாடுகளும் தெரியாது. அது அப்படி வேறுபடுத்திப் பார்ப்பதில்லை என்று சொல்லும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலை இரு அமர்வுகளில் முழுமைப்படுத்தினோம். 1. இதுவரையில் நீங்கள் விதைத்த – நடுகை செய்த மரங்களின் (விதைகளின்) எண்ணிக்கை? அண்ணளவாக நான்கு லட்சம் மரக்கன்றுகளை விதைத்திருப்போம்.விதைகள் அதைவிட மூன்று மடங்காக இருக்கும்.தொடர்ந்து வருடம் வருடம் பனை விதைகளை விதைத்து வருகிறோம். நிலக்கடலை விதைகள் வழங்கி வருகிறோம். கல்வி நிலையங்கள் கிராமங்களில் மக்களின் வீட்டு தோட்டத்திற்கு விதை தானியங்கள் வழங்கி வைத்திருக்கிறோம். நாங்கள் அதன் எண்ணிக்கைகளை கணக்கில் கொள்வதில்லை. 2. எந்தெந்தப் பிரதேசங்களில் விதைப்பு நடந்துள்ளது? அமைப்பை ஆரம்பித்த காலகட்டத்தில் வடக்கில் ஐந்து மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் விதைப்பை மேற்கொண்டு இருக்கிறோம். கொரோனா நோய் தாக்கத்தின் பின்னர் பொருளாதார போக்குவரத்து நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக கிளிநொச்சி யாழ் மாவட்டத்தில் மட்டும் மேற்கொள்கிறோம். 3. என்னென்ன மரங்கள் அல்லது விதைகள் நடுகை அல்லது விதைப்புச் செய்யப்பட்டுள்ளது? பாடசாலைகள், முன்பள்ளிகள், கல்வி நிலையங்களில் மாணவர்களின் எதிர்கால நன்மை கருதி பயன் தரும் மரக்கன்றுகளை தெரிவு செய்து விதைத்து வருகிறோம். எதிர்காலத்தில் அவர்களுக்கு பழங்கள் கிடைக்கக்கூடிய மரங்களை அதிகம் விதைக்கிறோம். மரவள்ளித் தடிகள், வாழைக்குட்டிகள், ராசவள்ளி விதை, வீட்டு தோட்டத்திற்கான விவசாய விதைப்பொருட்கள், பனை விதை, நிலக்கடலை விதை இதைவிட பல விதைப் பொருட்களை உள்ளடக்கிய விதைப்பந்துகள், குறிப்பாக அழிந்து போகும் இலுப்பை மரக்கன்றுகளை அதிகமாக விதைத்து அதிகம் வழங்கி வருகிறோம். பாடசாலைக்கு வழங்கும் மரக்கன்றுகளில் 30 தொடக்கம் 40 விதமான மரக்கன்றுகளை தெரிவு செய்து வைத்திருக்கிறோம். வீதிகளில் விதைக்கப்பட்ட மரக்கன்றுகள் இலுப்பை, கொண்டல், நாவல், மருது புளி, வாகை, வேம்பு, மலை வேம்பு, பூவரசு, கூழாமரக்கன்று ஆகிய மரக்கன்றுகளை வீதிகளில் விதைத்திருக்கிறோம். விதைத்து வருகிறோம். 4. பாடசாலைகளில் வன்னித் தமிழ் மக்கள் ஒன்றியம் மர நடுகையை மேற்கொள்கிறது. இது மாணவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அந்தச் சூழலையும் பசுமை – நிழற் சோலையாக்குகிறது. இதை எப்படி மேலும் மேம்படுத்தலாம்? எல்லாப் பாடசாலைகளும் இதற்கு ஒத்துழைக்கின்றனவா? நாங்கள் முன் பள்ளி மற்றும் பாடசாலையை பசுமை சார்ந்த செயல்பாட்டிற்கு முதன்மையாக தெரிவு செய்த காரணம் கல்வி எப்படி அடிப்படையில் இருந்து கற்றுக் கொடுக்கப்படுகிறதோ அதே போல் அங்கே இருந்து எங்களுடைய பசுமை விதைகளை உணர்வுகளை விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். ஒரு மாணவனின் வீட்டில் ஒரு மரக்கன்றை விதைத்தால் அவர் பராமரிக்க தவறினால் எங்கள் முயற்சிகள் பயனற்று போய்விடும். கடந்த காலத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வீடுகளுக்கு கொண்டு சென்று விதைப்பதற்காக மரக்கன்றுகளை கொடுத்தோம். இப்படிப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு. அந்த முயற்சியில் அதிகமான தோல்விகளை தழுவியுள்ளோம். பாடசாலையில் விதைக்கும் பொழுது ஒரு வகுப்பில் 30 தொடக்கம் 40 மாணவர்கள் இருக்கலாம். நாங்கள் பாடசாலையில் மரக்கன்றுகளை விதைக்கும் பொழுது பசுமை கருத்துக்களையும் விதைக்கிறோம். அதில் யாராவது ஒரு மாணவர் உள்வாங்கிக் கொண்டால் எங்களுடைய முயற்சிகள் பயனளிக்கும். ஆகவேதான் பசுமை அடிப்படையில் இருந்து விதைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு விதைத்து வருகிறோம். அனைத்து பாடசாலை அதிபர்களும் பசுமையை எதிர்பார்க்கிறார்கள். எங்களுடைய செயல்பாட்டாளர்கள் பாடசாலையோடு அதிபர்கள் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளும் பொழுது இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த பாடசாலை அதிபரும் எங்களுக்கு பசுமை வேண்டாம் என்ற கருத்தை சொன்னதில்லை. வடக்கில் பல நூற்றுக்கணக்கான பாடசாலைகளில் பசுமையை விதைத்து விட்டோம்..விதைத்த பாடசாலைகளில் எங்கே பசுமை பாதுகாக்கப்படுகிறது என்றால்… அந்தப் பாடசாலை அதிபர் அல்லது அந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு ஆசிரியர் பசுமை சார்ந்த உணர்வோடு நேசிப்பவராக இருக்க வேண்டும். அங்கு விதைக்கப்படும் மரக்கன்றுகள் பாதுகாக்கப்படுகின்றன. 5. உங்களுடன் இணைந்து எப்படியானவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்? ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமையை நேசிப்பவர்கள் எங்களோடு இணைந்து கொள்கிறார்கள். எங்கள் அமைப்பின் அலுவலகம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இருக்கின்றது. பசுமைப் பணியாளர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். பசுமை விதைப்பு நிகழ்வுகள் செயல்திட்டங்களின் போது அமைப்போடு தொடர்பில் இருக்கும் பசுமையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். நிகழ்வில் அவர்களும் கலந்து கொண்டு பசுமையை விதைத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை செயல்பாடுகளை அந்த கிராமத்தில் இருக்கும் பசுமை செயல்பாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி நடைமுறையை செயல்படுத்துகிறோம். பல நூறு பசுமை செயல்பாட்டாளர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் எங்கள் அமைப்போடு. 6. அடுத்ததாக நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள விதைப்புகள் – நடுகைகள்? பாடசாலைகள், முன்பள்ளி, கல்வி நிலையங்கள், அரசு நிர்வாகத் திணைக்களங்கள்,வீதிகள், கோவில்கள், குளங்கள், விளையாட்டு மைதானங்கள், சதுப்பு நில கண்டல் தாவரங்கள். பனை விதைப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மையப்படுத்தி விவசாயப் பொருட்கள், மரக்கன்றுகள் வழங்கும் செயல் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. 7. விதைப்பு அல்லது நடுகை செய்யப்பட்டவற்றை எப்படி, எந்த அடிப்படையில் பராமரிக்கிறீர்கள்? பாடசாலைகள், முன்பள்ளிகள். கல்வி நிலையங்களில் விதைப்பு செய்யும் பொழுது அவர்களோடு தொடர்பில் இருப்போம். மாதத்தில் இரண்டு தடவை அல்லது ஒரு தடவை சென்று பார்வையிடுவோம். அல்லது தொடர்பு கொண்டு மரக்கன்றுகளின் வளர்ச்சி சம்பந்தமாக கேட்டு அறிவோம். புகைப்படங்களையும் பெற்றுக் கொள்வோம். மரக்கன்றுகளின் வளர்ச்சியை அறிவதற்காக. வீதிகளில் விதைக்கும் மரக்கன்றுகளுக்கு அமைப்பு சார்ந்து நிரந்தர பணியாளர் ஒருவர் இருக்கிறார். தற்காலிக பணியாளர்களையும் ஏற்படுத்திக் கொண்டு நீரூற்றுவது, பராமரிப்பது போன்ற செயல்களை ஏற்படுத்துகிறோம். மரங்களை வளர்த்து முடிப்பதில் பல சிரமங்கள் உள்ளன. எங்களுடைய முயற்சிகளை சிரமங்களின் மத்தியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். பல தோல்விகளுக்கு மத்தியில் வெற்றிகள் கிடைக்கின்றன. அந்த வெற்றிகளே எங்களுடைய ஊக்கமாகும். அதுவே இந்த மண்ணின் பசுமையாகும். 8. இந்தப் பணியின்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்? பசுமைக்கான ஆதரவு மிக அரிதாகத்தான் உள்ளது. வெளியே பேசப்படும் அளவுக்கு இல்லை. தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். அதிகமான பாடசாலைகளில் அவர்கள் விருப்பப்படும் மரக்கன்றுகளை தரும்படி கேட்டுக் கொள்வார்கள். அவர்கள் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கி வைப்போம். விதைத்துக் கொடுப்போம். ஆனால் மரக்கன்றுகளை கேட்பதில் இருக்கும் அக்கறை பராமரிப்பதில் அதிகமாக இருப்பதில்லை. கேட்டால் பல காரணங்களை சொல்வார்கள். ஆனால் அவை தகுந்த காரணங்களாக இருப்பதில்லை. வீதி ஓரங்களில் மரக்கன்றுகளை விதைத்து மரக்கன்றுகளுக்கு கூடுகளை அடைத்து சிரமத்தின் மத்தியில் பராமரித்து வரும்பொழுது கால்நடைகள் கூட்டை அழித்து விடும். கன்றுகளை சாப்பிட்டு விடும். பல மாதங்களாக மரக்கன்றுகளை பாதுகாத்து வரும்பொழுது தங்கள் வீடுகளுக்கு முன்னே துப்புரவாக இருக்க வேண்டும் என்று மரக்கன்றுகளை முழுமையாக அழித்து விடுவார்கள். சிலர், மரக்கன்றுகளோடு குப்பைகளைக் கூட்டி நெருப்பு வைத்து விடுவார்கள். கூடு கட்டியிருக்கும் பனை மட்டைகளைக் கூட கழட்டிச் சென்று விடுவார்கள். எங்களிடம் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்கு வாகன வசதிகள் இல்லை. மரக்கன்றுகளுக்கு அருகில் இருக்கும் வீடுகள், குளங்கள், நீர்நிலைகளிலிருந்து நீரை எடுத்துக் கொள்கிறோம். சிலர் முன்வந்து உதவி செய்வார்கள். பலர் கதவை (படலையை) திறக்கவே மாட்டார்கள். அவர்களின் வீட்டுக்கு முன்னே வைத்திருக்கும் மரக்கன்றுகளுக்குத்தான் நாங்கள் நீரைப் பெற்றுக் கொள்ள வீட்டு உரிமையாளரோடு தொடர்பு கொள்வோம். மின்சார கட்டணம் அதிகரிக்கிறது என்று சொல்லி நீரைத் தராத பலர் உண்டு. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் ஊழியர்களும் பசுமை மரங்களின் தேவையை உணராத மனிதர்களும் நாங்கள் நீண்ட மாதங்களாக பராமரித்து வந்த பல நூறு மரக்கன்றுகளை அழித்திருக்கிறார்கள். அமைப்பின் பசுமைச் செயல்பாட்டை விரும்பாதவர்களும் பராமரித்து வந்த மரக்கன்றுகளை அழித்திருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடி எரிபொருளின் தட்டுப்பாடு காலங்களில் முப்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியான மரக்கன்றுகளை கொண்டு சேர்ப்பதற்காக 25,000 ரூபாயை வாகனத்திற்காக கூலியாக கொடுத்திருக்கிறோம் பல தடவைகள். வீதி விதைப்புகளை மேற்கொள்ளும் பொழுது பிரதேச சபைகளின் உதவிகளை எதிர்பார்த்தோம். மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுவதற்காக பிரதேச சபைகளை நிர்வாகித்த தவிசாளர்கள் வாக்குறுதி தருவார்கள். ஆனால் அவை வாக்குறுதிகளாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டு பசுமையின் அவசியத்தை விழிப்புணர்வாக விதைப்பு, பராமரிப்புகள் ஊடாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். 9. இதில் நீங்கள் அடைகின்ற உணர்வு? பசுமை நமது காலத்தில் பாதுகாக்க வேண்டும். நாளைய தலைமுறைக்காக என்ற இந்த அர்ப்பணிப்பு நிறைந்த பயணத்தை ஆரம்பித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மண்ணில் விதைத்த மரக்கன்றுகள் துளிர் விட்டு தலை எடுக்கும் பொழுது முயற்சிகள் தோற்றுப் போகவில்லை உயிரூட்டப்படுகிறது என்ற பசுமைக் கனவுகள் மெய்ப்படும் தருணங்களாக பசுமை உணர்வை அதிகப்படுத்துகின்றன. 10. எப்படியானவர்கள் இந்த விதைப்பு அல்லது நடுகைப் பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர்? கடந்த காலத்தில் பசுமை செயல்பாடுகளோடு ஆர்வம் உடையவர்கள், பசுமையை நேசிப்பவர்கள், அதன் அவசியத்தை உணர்ந்தவர்கள், நிலத்தையும் பலத்தையும் பாதுகாக்க விரும்புபவர்கள், சுற்றுச்சூழல் சார்ந்த அதிகம் அக்கறை கொண்டவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறை பசுமை உணர்வாளர்கள். 11. உங்களுடைய இந்தப் பசுமைச் செயற்பாடுகளுக்கு புலம்பெயர் உறவுகளும் உள்ளுர் ஆதரவாளர்களும் ஊக்கமளிக்கின்றனர். இவர்கள் எல்லோரையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம் அல்லவா? ஆம், அதற்கான முயற்சியை ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பு சார்பாக புலம்பெயர்ந்த ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து தாய் மண்ணிலும் பசுமையின் கனவுகளோடு இருக்கும் பல பசுமை செயற்பாட்டாளர்களை மாவட்டம் தோறும் தேர்வு செய்து பயணிக்கும் ஒரு முயற்சியை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். 12. இளைய தலைமுறையின் ஈடுபாடு எப்படியுள்ளது? தற்பொழுது பசுமை சார்ந்த செயல்பாடுகளில் இளைஞர்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வதைக் காணமுடிகிறது. வடக்கைப் பொறுத்தவரை எங்களுடைய வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பு நீண்ட காலமாக பசுமை விதைப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதால் பல இளைஞர்களை பசுமையை நேசிப்பதற்கும் விதைப்பதற்கும் தயார்படுத்தி இருக்கிறோம். இன்று பல புதிய புதிய பசுமை அமைப்புகள் உருவாகி இருக்கின்றன. பசுமையை நேசிக்கும் எங்களுக்கு அவை மிக மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பசுமை அனைவருக்கும் பொதுவானது. அவசியமானது என்பதை உணர்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். 13. இதுவரையான உங்களுடைய அனுபவம், அவதானிப்பு என்ன? என்னுடைய பசுமைப் பயணம் என்பது க.வே பாலகுமாரன் அண்ணா அவர்களால் எனக்குள் பசுமை உணர்வு விதைக்கப்பட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர். நீண்ட காலங்களாக இந்த பசுமை விதைப்போடு பயணித்துக் கொண்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் கூறுகிறேன், எங்கள் மண்ணில் அளவுக்கு அதிகமாக மரக்கன்றுகள் மரங்கள் உள்ளன. இருக்கும் மரக்கன்றுகளையும் மரத்தையும் பாதுகாக்கும் வழிமுறைகளை பலப்படுத்த வேண்டும். பசுமையை விதைப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். அழிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வீதிகளில் இருக்கும் மரக்கன்றுகள் மரங்கள் எரிக்கப்படுகின்றன. மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இருக்கும் மரக்கன்றுகளும் மரங்களும் பனங் கூடல்களும் பசுமையின் அவசியத்தை உணராதவர்களால் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவை மிக அவசியமாக தடுக்கப்பட வேண்டும். பொது இடங்களில் இருக்கும் மரக்கன்றுகளை மரங்களை அழிப்பவர்களை இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை கடுமையானதாக இருக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளில் இருக்கும் மரக்கன்றுகள் ஒவ்வொரு நாளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மக்கள் நடமாட்டம் அற்ற காடுகளில் இருக்கும் மரங்கள் பல லட்சம் ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுக்கப்பட்டால் மட்டும்தான் நிகழ்காலத்தில் அடுத்த தலைமுறைக்கான பசுமையை பாதுகாத்திட முடியும். 14. உங்களுடைய இந்தப் பசுமைச் செயற்பாடுகளுக்கு ஊக்கியாக இருந்தவர் அல்லது தூண்டலாக விதையைப் போட்டவர்கள்? இன விடுதலைப் பயணத்தில் பயணிக்கும் பொழுது சில மாதங்கள் க.வே பாலகுமாரன் அண்ணாவுக்கு பணிவிடை செய்வதற்காக பணியமர்த்தப்பட்டேன். என்னை பணியாளராக பார்க்காமல் ஒரு பசுமையாளராக மாற்றியது அவர்தான். எனக்குள் பசுமை விதையை விதைத்தவர் முதன்மையானவர் அவர்தான். தொடர்ந்து சக்தி அண்ணா, கௌதமன் அண்ணா இவர்களோடு இணைந்து பசுமை செயல்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறேன். அதன் தொடர்ச்சியை யுத்தம் முடிந்த பின்னர் மெல்ல மெல்லமாக ஆரம்பித்து ஒரு அமைப்பை உருவாக்கி இன்று நாளைய தலைமுறையின் வாழ்வுக்காக பசுமையோடு சென்று கொண்டிருக்கிறேன். நாளைய தலைமுறைக்காக… 15. அரசியல் தரப்பினரின் ஆதரவு இந்தப் பணிகளுக்கு எப்படியுள்ளது? அரசியல் தரப்பினரின் பசுமைச் செயற்பாடுகளைக் குறித்து உங்களுடைய பார்வை என்ன? நான் இதுவரை வடக்கில் அரசியல் சார்ந்து அதிகாரத்தில் பயணிக்கும் ஒரு பசுமையாளரைப் பார்த்ததில்லை. கார்த்திகை மாதம், மரம் நடுகை மாதம் என்று தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் பசுமைப் புரட்சி பல லட்சம் மரங்களை விதைக்கப் போகிறோம் என்று நூறு மரக்கன்றுகளை விதைத்து விளம்பரத்தை ஏற்படுத்திக் கொள்வதைத்தான் பார்க்க முடிகிறது. இவர்களிடம் தூய்மையான பசுமை எண்ணங்கள் இல்லை. இன்று வடக்கில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் கட்சித் தலைவர்கள் வரை எவருமே பசுமை சார்ந்து சிந்திப்பதில்லை. இதற்கு ஒரு விடயத்தை உதாரணமாக இங்கே குறிப்பிடுகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் தாய் மண்ணுக்கு வருகை தந்தேன். 80 நாட்கள் விடுமுறையில் வந்தேன். 70 நாட்கள் பசுமையோடு பயணித்தேன். பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்தேன். வடக்கில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் அங்கையன் ராமநாதன் அவர்களை சந்தித்து 30 நிமிடங்களுக்கு மேலாக வீதிகளில் காணப்படும் மரங்களை சட்டவிரோதமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பொழுது சாயும் பொழுது சத்தம் இல்லாமல் எரித்து அழிக்கிறார்கள் எனப் பல ஆதாரங்களை அவருக்கு காண்பித்து, “உங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு மரங்களைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்” என்று வலியுறுத்தினேன். “நிச்சயமாக இதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என்று வாக்குறுதி தந்தார். இன்று மாதங்கள் நான்கு கடந்து விட்டன. இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் ஒரு நிகழ்வையும் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். எங்களுடைய வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய பசுமை அமைப்பின் ஊடாக பசுமை செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொழுது கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரையும் அன்போடு அழைப்போம். பசுமை உணர்வுகளோடு நாளைய தலைமுறைக்காக கலந்து கொள்ளுங்கள் என்று கேட்போம். கிளிநொச்சி மண்ணில் வீதி விதைப்புக்காக ஒரு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் அன்போடு அழைத்தோம். அன்றைய நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கட்சியை சார்ந்த ஒரு தவிசாளர் தன்னுடைய ஆதரவாளர்கள் வர்த்தகர்களோடு கலந்து கொள்ள வந்தவர், தங்களுடைய கட்சிக்கு எதிரானவர்கள் இங்கே பங்கு பெற்றிருக்கிறார்கள். நாங்கள் தமிழ்த் தேசியவாதிகள் இதில் கலந்து கொள்ள மாட்டோம் என்ற கருத்தை பரிமாறி தங்களுடைய ஆதரவாளர்கள் உட்பட அனைவரையும் அழைத்துச் சென்று விட்டார். பசுமைக்கு பாகுபாடு தெரியாது. மண்ணில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பாகுபாடுகள் வேற்றுமை தெரியாமல் பயனைக் கொடுப்பதுதான் பசுமை. இது போன்ற பல புரிதல்கள் இல்லாத அரசியல் உறுப்பினர்களை கடந்து தான் இந்தப் பசுமைப் பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் போன்ற பசுமையாளர்களின் கனவுகள், பசுமையை ஆழமாக நேசித்து அர்ப்பணிப்போடு செயல்படுபவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் எங்களுடைய வளங்களும் பசுமையும் பாதுகாக்கப்படும். 16. எதிர்காலத்தில் எப்படியான திட்டங்களை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட்டுள்ளீர்கள்? கிராமங்கள், மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள வீதிகள், பொது இடங்கள், பாடசாலைகள் பசுமையாக வேண்டும். அதற்கான பசுமைச் செயல் திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அவை மட்டுமல்ல, இயற்கையின் தாய்மடி எங்களிடம் இருக்கும் காடுகளையும் பாதுகாக்கும் வழிமுறைகளையும் உருவாக்கி வைத்திருக்கிறோம். அழிவடைந்து போகும் மரங்களை பாதுகாக்க முயற்சி செய்ய இருக்கிறோம். முக்கியமாக விவசாயத்தை பாதுகாக்க முழுமையாக முயற்சி செய்வோம். எங்களை விட பசுமையை பாதுகாப்பவர்கள் விவசாயிகள். அது அவர்களின் அடிப்படை வாழ்வோடு உணர்வோடு இணைந்த ஒன்று. ஆகவே அவர்களை பாதுகாத்தால் பசுமையையும் பாதுகாக்க முடியும். அதைப்போலக் கடலோரத்தையும் கடற்றொழிலாளர்களையும் இணைத்துச் செயற்படுவோம். கண்டற்காடுகளுக்கும் சதுப்பு நில மரங்களுக்கும் இவர்களே பாதுகாவலர்கள் https://arangamnews.com/?p=10139
    1 point
  24. நீங்கள் கூறிய பின்பு தான்... நான் அந்த அழுகின விஷயத்தை கவனித்தேன். 😂 "ஆதவன் நியூஸ்" இடைக்கிடை... "கீலா" வேலையும் பார்த்து விடும். 🤣
    1 point
  25. இந்தியா முதலில் துடுப்பெடுத்து ஆடினால் அவுஸ் 250 ஓட்டங்களினுள் அமத்த வேண்டும். அவுஸ் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் முன்னூறுக்கு மேல் அடிக்க வேண்டும். இது நடந்தால் இறுதி ஆட்டம் சுவாரசியமாக போகும். இலங்கையை ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா துவம்சம் செய்தது போல் அவுஸை துவம்சம் செய்யாது என எதிர்பார்ப்போம்.
    1 point
  26. கவனம். சி என் என் இன் அவியலில் நீங்கள் அவிந்து போவீர்கள்.🤣🤣
    1 point
  27. சிங்களவனுக்கு அது நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்கள் மேலானவர்கள் என்று அவர்களிடம் அந்த இறுமாப்பு இருக்கின்றது. அவர்களது பன்சலைகளில்கூட இது போதிக்கப்படுகின்றது. அதிலிருந்து வெளிவருவது இலகுவாக இருக்காது. இன்னும் இது அரசியல்வாதிகளுக்கு முக்கியமாக தேவைப்படுகின்றது. போகிற வழியில் இப்படி சொல்லிவிட்டு போவார்கள் தவிர , அவர்கள் உள்ளத்திலிருந்து எல்லாம் இது வருவதில்லை.
    1 point
  28. தாவரவியல்/சூழலியல் மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பல்லாயிரம்/பல இலட்சம் பேர் இலங்லையில் உள்ளார்கள். இவர்கள் தமது பிரதேசங்களில் உள்ள விழக்கூடிய மரங்களை பரிசோதனை செய்து/இனம்கண்டு/அடையாளம் செய்து உள்ளூர் பிரதேச சபைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.
    1 point
  29. ரொம்பவும் கஷடப்பட்டுவிடதீர்கள் போல. அவ்வளவு பழைய காலத்து சொந்தங்களா நீங்கள்? பேரப்பிள்ளைகள் எல்லாம் உண்டோ?😜
    1 point
  30. பெய‌ர் சொல்ல‌ விரும்ப‌ வில்லை 13வ‌ருட‌த்துக்கு முத‌ல் நானும் யாழ்க‌ள‌ ந‌ண்ப‌ர்க‌ளும் சும்மா ப‌ண்ணுக்கு ப‌ந்தைய‌ம் க‌ட்ட‌ தொட‌ங்கி நாங்க‌ள்...........இங்லாந் நாட்டில் இய‌ங்கும் www.bet365.com Unibet.com இப்ப‌டியான‌ சூதாட்ட‌ இணைய‌த்தில் . cricket . rugby. Basketball. Handball . Australia AFL . NBA Basketball . United State of America NHL . American NFL . Baseball .சுறுக்க‌மாய் சொல்ல‌ப் போனால் உல‌கில் உள்ள‌ புக‌ழ் பெற்ற‌ அத்த‌னை விளையாட்டுக்கும் க‌ட்டி வெல்லுற‌து தோக்கிறது உப்ப‌டி விளையாடி க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் 5ல‌ச்ச‌ம் குரோன் காசு தோத்த‌ நான்.........இல‌ங்கை காசுக்கு பார்த்தால் 2கோடிக்கு மேல் வ‌ருது🙈.............என‌து ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் 3மில்லிய‌ன் குரோன் காசு தோத்த‌வ‌ன்😯.............ம‌ற்ற‌ ந‌ண்ப‌ன் ப‌ல‌ ஆயிர‌ம் டொல‌ர் தோத்த‌வ‌ர்🙈.............நான் க‌ற்றுக் கொண்ட‌ அனுப‌வ‌த்தில் தான் சொன்னேன்............அண்ணா உந்த‌ சூதாட்ட‌ இணைய‌ த‌ள‌ங்க‌ளை எட்டியும் பார்க்க‌ வேண்டாம் என்று................உங்க‌ட‌ ந‌ண்ப‌ன் ஆசைய‌ காட்டி அதுக்கை உங்க‌ளை மூழ்க‌டித்தால் அதில் இருந்து மீண்டு வ‌ர‌ ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ஆன‌ ப‌டியால் சூதாட்ட‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை எட்டியும் பாராம‌ இருங்கோ உழைக்கும் காசே போதும் வாழ்க்கைய‌ கொண்டு ந‌ட‌த்த‌ அண்ணா 🙏
    1 point
  31. பைடனின் பேச்சு மக்களுக்கு இப்படித்தான் விளங்குகிறது.😂
    1 point
  32. அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது சரியாக தானே சொல்லி இருக்கிறார்.
    1 point
  33. எனக்கு பிடித்த ஒரு நல்ல பாடல் இது. இங்கு வளரும் பிள்ளைகளுக்கும் இப் பாடல் பிடித்து போவது ஆச்சரியமான விடயமாக உள்ளது. என் மகளுக்கு இப் பாடலின் வரிகள் நிறைய மனப்பாடம். உடையாரின் மகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    1 point
  34. நல்லது தான் நாங்கள் படித்த காலத்தில் எங்களுக்கும் படிப்பித்திருக்கலாம். எதுவும் தெரியாது ரொம்ப கஸ்ரப்பட்டு போனோம் 🤣😂
    1 point
  35. பாடலும், இசையும், நடனமும், படப்பிடிப்பும் மிக அருமை. 👍
    1 point
  36. வாழ்த்துகள் உடையார். நன்றாக இருக்கின்றது.🙏🏼
    1 point
  37. சுவி தம்பதியினருக்கு எமதினிய நல் வாழ்த்துக்கள்…!
    1 point
  38. சுவி தம்பதிகளுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளம் நலமுடன் மகிழ்ச்சியாக
    1 point
  39. சுவி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
    1 point
  40. தம்பதிகள் நூறாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்க .
    1 point
  41. சுவி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
    1 point
  42. 1 point
  43. இனி நாங்களும் மனிசிமார்ரை பழைய சுடிதார் பஞ்சாபியை கொழுவிக்கொண்டு திரியோணும் போல கிடக்கு...
    1 point
  44. காலாற நடந்து கண்ணாற தூங்கி வயிறாற சாப்பிட்டு மனசார சிரித்தால் நோய் எங்கிருந்து வரும்? 💪🏽
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.