Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    1887
    Posts
  2. மோகன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    4
    Points
    9997
    Posts
  3. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5832
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/09/23 in all areas

  1. அண்மையில் இலங்கை மக்களை குறிப்பாக இலங்கையின் வடபகுதி மக்களை பீதியில் ஆழ்த்திய விடயம்தான் யாழ் போதனா வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்ட்தால் ஒரு சிறுமியின் கை அகற்றப்படடமை, உண்மையில் தவறான மருந்துதான் வழங்கப்பட்ட்தா? கனுலா எனப்படும் மருந்தை உடலுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியை பத்துவருடங்களுக்குமேல் அனுபவம் கொண்ட தாதி தவறாக ஏற்றினாரா? ஓரிரு நாட்களுக்குள் கை அழுகுமா? போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன் எத்தனை தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறுமி சென்றிருந்தார்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன, ஆனால் இங்கே நான் இந்த சம்பவம் தொடர்பான தர்ம நியாயங்களை விவாவதிக்கப்போவதில்லை, மாறாக எதாவது ஒரு நோய்க்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களைப்பற்றியே நான் இங்கே கூறப்போகின்றேன். வைத்தியசாலைக்கு முதல்தடவை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் நிச்சயம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார் ஏனென்றால் அவரது அன்றாட கடமைகள் வேலைகள் அனைத்துமே தலைகீழாக்கப்பட்டிருக்கும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்ன கூறுவார்கள் எங்கே அனுப்புவார்கள்? என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு சில நிமிடங்களுக்கு முன்பே கூறப்படும். இதை நான் ஒரு தொடராக எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன் மருத்துவ உலகில் உங்களுக்கு தெரியவேண்டிய அத்தனை விடயங்களையும் சாமானியனுக்கு விளங்கும் வகையில் விளக்குவதற்கு முயற்சிசெய்க்கின்றேன். வாருங்கள் மருத்துவ உலகிற்குள் நுழைவோம்........... கனுலா/வென்லோப் cannula/ venflon நீங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட்தும் உங்கள் உடலில் ஏற்றப்படும் ஊசி போன்ற ஒரு பொருள்தான் இது இதை உங்கள் உடலினுள்ளே மருந்துக்களையோ இரத்தத்தையோ ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். இது பல்வேறு நிறங்களிலும் அளவுகளிலும் காணப்படுகின்றது. சாதாரணமக்களிடம் கேட்டால் "கனுலாவை நரம்பில் ஏற்றுவார்கள்" என்றுதான் கூறுவார்கள் அனால் நரம்பு என்பது மூளையில் இருந்து உடலுக்கும் உடலின் பகுதிகளில் இருந்து மூளைக்கும் செய்திகளை கடத்தும் தொழிலை செய்யும் எனவே அதில் கானுலாவை போடமுடியாது. மனித உடலில் நாடி நாளம் என இரு இரத்தக்குழாய்கள் இருக்கின்றன , இதில் நாடி இதயத்தில் இருந்து குருதியை உடலின் பகுதிகளுக்கு கடத்தும் இதில் விரலால் அழுத்தி இதயத்துடிப்பு எண்ணிக்கையை கணக்கிடமுடியும் அடுத்தது நாளம் இது உடலின் பிற பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக்கடத்தும் இந்த நாளத்தில்தான் கனுலா ஏற்றப்படும் உடலில் எங்கெங்கு இவற்றை ஏற்றமுடியும் பொதுவாக இதை கையில்தான் ஏற்றுவார்கள் ஆனாலும் சிலருக்கு சில நோய் நிலை காரணமாகவோ முதுமை காரணமாகவோ இலகுவில் கானுலாவை ஏற்றமுடியாது எனவே கால்களிலும் இல்லையெனில் கழுத்திலும் கனுலா போடப்படுகின்றது கீழே உள்ள படத்தில் கனுலா போடப்படும் பொதுவான பகுதிகள் காட்டப்பட்டிருக்கின்றது தாதி ஒருவரே பொதுவாக கானூலாவை போடுவார் முதலில் கனுலா போடவேண்டிய கையில் கயிறு போன்று ஒரு சேலைன் வயரை கட்டுவார்கள் ( tourniquet ) இப்படி கட்டும்போதுதான் நாளங்கள் புடைத்து தோலின் வெளியே தெரியும் இலகுவாக காணூலாவை போடமுடியும், அப்படியும் சிலரது தொழில் நாளத்தை பார்க்க முடியாது இப்படியான சந்தர்ப்பங்களில் விரலாலோ கையாலோ கனுலா போடவேண்டிய பகுதியின் மேல் தட்டுவார்கள் இப்படி தட்டும்போது நாளம் புடைத்து வெளியே தெரியும் ஒருவேளை என்ன செய்தும் உங்களுக்கு கானுலாவை போட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம் உள்ளே இருக்கும் நாளத்தை கண்டுபிடிப்பதற்காக இன்பிரா லைட் ஸ்கானர் வைத்த்து கண்டுபிடிக்கமுடியும் அதுவும் இல்லையென்றால் Ultra சவுண்ட் ஸ்கானரை வைத்த்துத்தான் கண்டுபிடிப்பார்கள். கனுலாவை போடும்போது கானுலாவை தோலுடன் சேர்த்து ஓட்டும் பிளாஸ்டரில் ஒரு திகதியை எழுதிவிடுவார்கள். எந்த நாளில் கனுலா போடப்படடதோ அந்த திகதியை எழுதுவார்கள் அல்லது எந்த திகதியில் கானுலாவை கழற்ற வேண்டுமோ அந்த திகதியை எழுத்திவிடுவார்கள் இந்த முறை வைத்தியசாலைக்கு வைத்தியசாலை வேறுபடலாம் எப்படி இருந்தாலும் கனுலா போடப்பட்டு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கானுலாவை கழற்றி விடவேண்டும். கனுலாவின் பகுதிகள் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது கனுலா போடப்படடால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? கனுலா போடப்படட பகுதியை நனைக்கக்கூடாது அதோடு கானுலாவில் இருக்கும் மூடியை ( luer lock plug ) திறக்க முயறசிக்க கூடாது. புதிதாக போடப்படட கனுலாவின் மூடியை கழற்றினால் இரத்தம் அதிக அளவில் வெளியேறும். நித்திரையில் தவறுதலாக கழன்றால் கூட நோயாளிக்கு தெரியவராது நோயாளி இரத்தப்போக்கால் இறந்துவிடுவார். பொதுவாக பயன்பாட்டில் உள்ள கானுலாவின் நிறங்களும் அவற்றின் அளவுகளும் பெரியவர்களுக்கு பொதுவாக பச்சை நிற கனுலாவே போடப்படும் , சிறுவர்களுக்கு நீலம் அல்லது பிங்க் நிறத்தையும் குழந்தைகளுக்கு மஞ்சள் அல்லது நீல நிறம் பயன்படுத்தப்படும். கனுலா சரியாக போடப்பட்டிருக்கின்றது என்பதை எப்படி அறிந்துகொள்வது? கனுலாவின் ஊசி தொழில் ஏறும்போது ஏற்படும் வலியைத்தவிர வேறு எந்த வலியையும் நீங்கள் உணரமாட்ட்ர்கள். கனுலாவினுள் மருந்து செலுத்தும்போது எந்த வலியும் இருக்காது. மருந்து ஏற்றும் தாதி, சிரின்சின் மூலம் மருந்த்தேற்றும் பொது மிக இலகுவாக செல்லும், வலிந்து செலுத்த தேவையில்லை. கனுலா போடப்பட்டதும் வெள்ளை மூடியின் அருகில் இரத்தத்தை பார்க்கமுடியும் கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்வது? ( கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை கனுலா அவுட்டக்கிவிட்ட்து ( cannula out of vein ) என்று கூறுவார்கள் ) கனுலா போடப்படட இடம் வீங்கியிருக்கும். கனுலாவில் இருந்து இரத்தம் வராது மருந்தோ சேலைனா எதுவும் உள்ளே செல்லாது. சிரிஞ்சின் மூலம் மருந்து ஏற்றும்போது மிகுந்த வலியை ஏற்படுத்தும். ஏற்றப்படட இடம் மருந்து தோலின் கீழ் சென்று தேங்குவதால் வீங்கும். கனுலா சரியாக நாளத்தினுள் செல்லவில்லையாயின் கனுலாவினூடு செலுத்தப்படும் மருந்தோ அல்லது இரத்தமோ சுற்றி இருக்கும் திசுக்களுக்கும் மற்றும் தோலிற்கு கீழாக தேங்கும் இதை Extravasation என்று அழைப்பார்கள். அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை Thrombophlebitis என்று அழைப்பார்கள் என்று அழைப்பார்கள். இது ஏற்பட்டால் தோலினுள்ளே, இழையங்களினுள்ளே கிருமித்தொற்று ஏற்பட்டு ( cellulitis ) இழைய இறப்பு ஏற்படும், இதனால் பாதிக்கப்படட பகுதியை வெட்டி அகற்றவேண்டியேற்படும் (amputation) இல்லையெனில் அதீத கிருமித்தொற்று (sepsis) காரணமாக இறப்பு ஏற்படலாம். நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி ஏற்படும் நோய்த்தொற்றை அளப்பதற்கு கீழே காட்டப்பட்டிருக்கும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது பாதிப்புக்கள் ..... வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட்தும் கனுலாவை கழற்றிவிட்டுத்தான் வீடுசெல்லவேண்டும், வார்டு இருக்கும் வேலை நெரிசலில் தாதியர்கள் கழற்றமறந்தாலும் நீங்களாகவே கேட்டு கழற்றிவிடுங்கள். கனுலாவை கழற்றும்ப்போது பஞ்சு ஒன்று தருவார்கள் அதை கனுலா போடப்பட்ட இடத்தில் நன்றாக அழுத்தி குறைந்தது 05 நிமிடங்களாவது வைத்திருக்கவேண்டும் அப்படி செய்தால்தான் இரத்தம் வெளிவருவதை நிறுத்தமுடியும். நீங்கள் ஆஸ்பிரின் போன்ற குருதியுறையா மருந்துகள் பாவிப்பவராக இருந்தால் 10 நிமிடங்களுக்குமேல் நன்றாக அழுத்தி வைத்திருக்கவேண்டும். தொடரும் ...... https://www.manithanfacts.com/2023/12/hospital cannula .html
  2. இந்த சுரேன்தான் சோனியா அம்மையார் கருணையோடு பேசினார். அவர் முகத்தில் கருணையைத்தன்னதால் பார்க்க முடிந்தது என்று அறிக்கை விட்டவர்.இனப்படுகொலைைப் பங்காளிக்கு வக்காலத்து வாங்கின ஆள் பேச்சுவார்ததைக்குப் போனால்என்ன நடக்கும்?. மேலும் உலகத்தமிழர் பேரவையில் இம்மானுவல் அடிகளாரையும் சுரேன் என்ற 2 பேரையும் கொண்ட அமைப்பு. வேறுயாராவுது மக்களுக்கு அறிமுகமானவர்கள் இருக்கின்றார்களா?
  3. முதல்ல மழைக்காலங்களில் வீதியில் எனு; தண்ணீர் தேங்குகிறது என்று சென்னை நிலத்ததை செய்யுங்கைய்யா!!!
  4. இனப்பிரச்சினை தீர்வுக்கு எம்மால் தடையில்லை : அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகள் உலகத்தமிழர் பேரவையிடத்தில் தெரிவிப்பு 09 DEC, 2023 | 10:43 AM (ஆர்.ராம்) நாட்டில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துவிதமான பிரச்சினைகளும் நீடித்துக்கொண்டிருப்பதற்கு பௌத்த தேரர்களே காரணமாக உள்ளனர் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலையில் நிரந்தரமான சமாதனம் ஏற்படுவதற்கு நாம் எப்போது தடைகளை ஏற்படுத்தவில்லை. அனைத்து மக்களும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் உலகத்தமிழர் பேரவையிடத்தில் கூட்டாக தெரிவித்துள்ளனர். பௌத்த தேரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்றுக்காலை கண்டிக்கு விஜயம் மேற்கொண்டதோடு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்டனர் . இந்தச் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். முதலில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை குறித்த குழுவினர் சந்தித்தனர். இதன்போது இமயமலைப் பிரகடனம் அவரிடத்தில் கையளிக்கப்பட்டதோடு, அதனடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் சம்பந்தமாக தெளிவு படுத்தப்பட்டது. அச்சமயத்தில் நிறைவேற்றப்பட்ட இமயமலைப் பிரகடனத்தை தான் ஏற்கனவே அறிந்திருப்பதாக தெரிவித்த மகாநாயக்க தேரர், குறித்த பிரகடனம் மக்களிடையே பிரசாரம் செய்யப்பட்டு உரிய கலந்துரையாடல்கள் பரந்துபட்ட அளவில் செய்யப்பட்டு மக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மக்களின் பங்கேற்புடனேயே தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலமாகவே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் அத்தோடு, நான், சகோதரத்துவம், சமாதானம், சமத்துவம் என்ற நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதையே தொடர்ச்சியாக விரும்புகின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்துரூபவ் மல்வத்து பீடத்துக்குச் சென்ற குறித்த குழுவினர், மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து உரையாடினார்கள். இதன்போது, நாட்டில் காணப்படுகின்ற பல பிரச்சினைகளை கலந்துரையாடல் மூலமாக தீர்க முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும். போர் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டிருந்தேன். சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தேன். எனினும் அவை கைகூடியிருக்கவில்லை. பின்னர் போர் முடிவுக்கு வந்ததையடுத்துரூபவ் திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கின் முக்கிய பகுதிகளுக்கு நேரடியாகவே விஜயங்களை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டேன். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினேன். விசேடமாக, பாடசாலைகள் மீள்கட்டுமானம், குடிநீருக்கான கிணறுகள் நிர்மாணம், உள்ளிட்டவற்றுக்கு உதவிகளை வழங்க முடிந்திருந்தது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதைய சூழலில் மிகவும் பாதிப்படைந்திருப்பதனால் அவர்களுக்கு உரிய உதவிகளை தெற்கிலிருந்து தான் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காக பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றோம். இதேநேரம், தமிழ் மக்களிடையே பௌத்த மதகுருமார்கள் தான் இந்த நாட்டில் இனப்பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் நீடிப்பதற்கு காரணமாக இருக்கின்றார்கள். அவர்கள் தான் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் என்ற நிலைப்பாடு விதைக்கப்பட்டுள்ளது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தடையானவர்களாக இருக்கப்போவதில்லை. நானும் இலங்கையர் என்ற வகையில் தமிழர், முஸ்லிம், சிங்களவர்கள் என் பாரபட்சம் பாராமல் பிரச்சினைகளுக்கு நிரந்தமான முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன் ஊடாக நிரந்தரமான சமாதானமும் சாந்தியும் நாட்டில் தோற்றம் பெற வேண்டும். அதற்காக குறித்த குழுவினரை ஆசீர்வதிக்கின்றேன். மேலும், தலதா மாளிகைக்கு சென்று அங்கே வரலாற்று பெருமை மிக்க வணக்க தலத்தினை பார்வையிடுமாறு கோருகின்றேன் என்றார். இதனையடுத்து குறித்த குழுவினர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/171298
  5. எவர் வந்தாலும் என்ன சொன்னாலும் அந்த தலைவனையும் அவர் இலட்சியங்களையும் யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அவர்கள் ஈழ மண்ணுக்கான விடுதலைக்காக செய்த தியாகத்தை மதித்து, மரணித்த மாவீர செல்வங்களை மதித்து எங்கள் கற்பனைகளையும் கட்டுக் கதைகளையும் எலும்பில்லாத நாவால் வர்ணிப்பதை விட்டு விடுவோம். அவர்கள் அமைதியாய் உறங்கட்டும். காலம் ஒரு நாள் மாறும். கபட நோக்கமுடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.