Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்9Points20018Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்6Points87990Posts -
Cruso
கருத்துக்கள உறவுகள்6Points1887Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/01/24 in all areas
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
4 pointsசோழியன் குடும்பி சும்மா ஆடாது. மாலைதீவு இந்தியாவுடன் குழம்பிக்கொண்டு நிக்குது. சீனா உள்ளே புகுந்து விட்ட்து. இலங்கையை நம்ப முடியாது என்று இவர்களுக்கு நன்றாகவே தெரியும். JVP ஆட்சிக்கு வருமென்று அரசால் புரசலாக பேசப்படுகுது. நேற்றும்கூட சீனாவினால் வழங்கப்படட பொருட்கள் கிளிநொச்சியில் மக்களுக்கு ஜேவிபி இனரால் வழங்கப்பட்ட்து. எனவே இந்தியா பயப்படுகின்றது. இதை எல்லாம் சமாளிக்கத்தான் இலங்கைக்கு போங்கள் என்ற அந்த கூப்பாடு அங்கிருந்து கேட்க்கின்றது. மற்றப்படி இதெல்லாம் ஏன் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.4 points
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்த செய்தி உண்மையானால் வாழ்த்துக்கள் வழக்குக்கு எதிராக போராடிய ஆதரவு செய்த அனைவருக்கும்.. கனடா உறவுகள் யாரும் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.. அதிலும் அரசியல் செய்திகள் விடயங்களில் கருத்து எழுதும் கனடா உறவுகள் கூட மூச்… இதுவே தமிழ்தேசியாவாதிகள் ஏதாவது சின்ன பிழை செய்திருந்தாலும் பந்தி பந்தியாக எழுதி விவாதிப்பார்கள்.. அது தப்பில்லை.. ஆனால் அதேபோல் நல்லவிடயங்களையும் எழுதி ஊக்குவித்து பரப்பவேண்டாமா..?3 points
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவலை. ஆனால், தமிழ்த் தேசியம் தன் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதே உண்மை. தலைமை, அமைப்பு, கட்சி பற்றிய எந்தக் கவலையுமின்றி யாருக்காகவும் காத்திராமல் தனது மக்களுக்கூடாக தமிழ்த் தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் கனடாவில் தமிழ்த் தேசியப் பற்றாளர், தீவிர செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது தொடுக்கப்பட்டு முறியடிக்கப்பட்ட வழக்கு இதற்கு நல்ல உதாரணம். கனடாவில், 2021 கார்த்திகை மாதம்... மாவீரர் வாரத்தில் கார்த்திக் நந்தகுமார் என்பவர் கார்த்திகைப் பூக்களை பெருமளவில் இறக்குமதி செய்து, அவற்றைக் கொண்டு ஒரு பிரமாண்டமான மாலை செய்து ஐயப்பன் ஆலயத்தில் கொடுத்து அதனை வைத்து சுவாமி ஐயப்பனிற்கு அலங்காரம் செய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தார். இதனை ஆலய நிர்வாகத்தில் தமிழர் தேசியத்துக்கு எதிராக அந்நிய சக்திகளோடு இயங்கும் ஒரு சிலர் மறுத்ததோடு அந்த மாலையைக் குப்பையில் வீசினர். இந்த நிகழ்வு தமிழ் இளையோர் மற்றும் ஐயப்பன் கோவில் பக்தர் மத்தியில் பெரும் அதிர்வை விளைவித்ததோடு அவர்கள் ஆலய முன்றலில் ஆலயத்தின் நிர்வாக சபையின் அங்கத்தவர்களும் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஆதரவாக செயற்படுபவர்களாக கருத்தப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தினார். அதன் விளைவு : "கோவில் நிர்வாகம் கார்த்திக் மீது கனடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது" கார்த்திக் நந்தகுமாரின் தேசியம் தொடர்பான செயற்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரின் தனிப்பட்ட வாழ்வியலை காரணம் காட்டியும், குறிப்பாக, அவர் தேசியத் தலைவரை முன்னிலைப் படுத்தி திருமணம் செய்தமை மற்றும் அவரின் உருவம் தாங்கிய தாலியை அணிவித்தமை, பிள்ளைகளுக்கு, தீரன்பிரபாகரன், நந்திக்கடலோன் என்று பெயர் சூட்டியமை மற்றும் அவரின் வியாபார நிறுவனத்தின் வெளிப்புறத்தில் கார்த்திகை பூக்களின் படங்களை வைத்திருந்தமை என பல தகவல்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்து கார்த்திக் நந்தகுமார் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என ஐயப்பன் ஆலய நிர்வாகத்தின் சார்பாக குற்றம் சாட்டப் பட்டது. மொத்தத்தில் ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாட்டளானை முடக்குவதற்கும், அவரை அழிப்பதற்கும் அதனை ஏனைய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு ஒரு பாடமாக ஆக்குவதற்மான வகையிலேயே இந்த வழக்கு கார்த்திக் மீது தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை கடந்த 16 ஆம் திகதி நீதிமனறத்தில் நடைபெற்றது. ON-LINE இல் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது பொது மக்களும் பார்வையாளரகளாகக் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உலகெங்கிலும் இருந்து இதில் பார்வையாளராகக் கலந்து கார்த்திக்குக்கு தமது ஆத்மாத்த அதரவைத் தெரிவித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்ற நீதிபதி J.T. Akbarali J. தனது தீர்ப்பில், "ஐயப்பன் ஆலயம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை தள்ளுபடி செய்வதாக அறிவித்ததோடு, இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்" எனவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு சூட்சுமமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அதாவது.... தமிழ்த் தேசிய நிலைப்பாடு என்பது ஈழத்தமிழரின் உரிமை, ஈழத்தமிழரின் விடுதலை, தமிழர் அறம் தமிழர் பண்பாடு சார்ந்த விடயம் மட்டுமல்ல; அது உலக அறம் சார்ந்த நிலைப்பாடு, அது நீதி சார்ந்த நிலைப்பாடு; அது அனைத்து அநீதிகளுக்கும் எதிரான நிலைப்பாடு! அது ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல அது மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு! அது தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல மனிதப் பண்பாடு கலாச்சாரம் சார்ந்த நிலைப்பாடு! அது மனித நாகரீகம் சார்ந்த நிலைப்பாடு; மனித ஒழுக்கம் சார்ந்த நிலைப்பாடு! மொத்தத்ததில் அது மனிதம் சார்ந்த நிலைப்பாடு, கோட்பாடு, வாழ்வியல் முறை! “இந்த வழக்கில் பிரதிவாதி கார்த்திக் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அடங்கியுள்ளதை நிரூபித்துள்ளார்” என்னும் நீதிபதியின் கூற்று அதனையே சுட்டிக் காட்டுகிறது. அதாவது தமிழ்த்தேசிய நிலைப்பாடு என்பது உலக நீதி, மனித அறம், மனித ஒழுக்கம், மனிதப் பண்பாடு மற்றும் மனித நாகரீகம் மனித உரிமை சார்ந்த நிலைப்பாடு என்பது இங்கு நிரூபணமாகியுள்ளது. தமிழ்த் தேசியம் சார்ந்த விடயங்களை இனிமேலும் சட்டவிரோத நடவடிக்கையாகவோ, பயங்கரவாதப் போர்வைக்குள்ளே முடக்கிவிட முடியாது. தமிழ்த்தேசியம் தனது மக்களுக்கூடாக அடுத்த கட்டத்தை நோக்கிச் பரிமணித்துக் கொண்டுதான் இருக்கிறது என ஆரம்பத்தில் நான் கூறிய கூற்றுக்கான ஆதாரமாக இந்த வழக்கின் வெற்றியை நான் பார்க்கிறேன். ஆம்! இது எமக்கான காலம். எமக்கெதிரான குற்றச்சாட்டுகள், வழக்குகள், பிரச்சாரங்களை நாம் துணிவோடும் ஒருமித்தும் எதிர்கொண்டால் நாம் வெல்வதும் வாழ்வதும் நிட்சயமானது என்னும் பெரு நம்பிக்கையைத் தருகிறது இந்த வழக்கின் வெற்றி. பாராட்டுகள் Karthick Nanthan பி.கு: கனடாவில் உள்ள ஐயப்பன் கோவிலானது இலங்கையில் உள்ள போர்க்குற்றவாளிகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையைச் செய்து வருகிறது எனவும் அதன் பின்னணியில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உள்ளது எனவும் அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. (copy from... நண்பரின் முகப்புத்தக பதிவில் இருந்து பிரதி செய்யப்பட்டது)3 points
-
அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஒளிப்படமாகவோ, ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். சுய ஆக்கங்கள் உறுப்பினர்கள் விரும்பும் எத்தகைய கருப்பொருள்களிலும் அமையலாம். இச் சுய ஆக்கங்கள் முகநூல் நிலைத்தகவல், டுவிட்டர் குறுஞ்செய்தி போன்று மிகவும் குறுகியதாக அமையாமல் இருத்தல் வேண்டும். மேலும், இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 26 ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது. எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் அனைத்து கள உறவுகளும் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம். யாழ் களம் 26 ஆவது அகவைக்குள் காலடி வைப்பதை முன்னிட்டு யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கம் வெகுவிரைவில் தயாராகும். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு சில வாரங்களே இருக்கின்றன. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள். விதிமுறைகள்: யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும். கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம். கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம். ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும். ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்2 points
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
2 pointsநுணா, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள்? ஊரே இந்திய மயம் அல்லவா? இந்திய கடவுள்கள் (ஐயப்பன், கல்கி, சாயிபகவான்), இந்திய உடுப்பு வியாபாரிகள், இந்திய சாத்திரகாரர்கள், இந்திய இசைக் குழுவினர்கள், இந்திய அனுசரனையில் பல பல நிகழ்சிகள்.. இவற்றை விட இந்தியாவுக்கு சுற்றுலா போகின்றவர்களும், பழனி, வேளாங்கனி மாதா போன்ற திருத்தலங்களுக்கு படையெடுக்கின்றவர்களும் நிறையப் பேர். வடக்கு, முக்கியமாக யாப்பாணம் பாதி இந்தியாவாக மாறி கனகாலம்.2 points
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
2 pointsஅதிகாரங்களின் மூலம் தனிப்பட்ட ரீதியில் பலனடைவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கலாம், இது அவரது கடந்த கால செயற்பாடு தொடர்பான கருத்தாக உள்ளது, இது தவறானதாக இருக்கலாம், ஆனால் காலம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது தன்னை நிரூபிப்பதற்கு, அவர்தான் தனது பாதையினை தெரிவு செய்யவேண்டும்.2 points
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
2 points
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
2 pointsஅடுத்த கருணாநிதி.இந்திய அரசு இலஙகைக்கு அனுப்பா விட்டால் இந்திய அரசுடனான உறவைத் துண்டிப்பாரா?2 points
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
சிங்களவர்களோடும் உலகத்தோடும் பேச்சுவார்த்தை நடத்தித் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக சொல்லி தமிழர்களிடம் வாக்கு வாங்கி அரசியல் நடத்தும் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பிரச்சினையான சிறிதரன் அணி சுமத்திரன் அணிகளுக்கு இடையிலான பிரச்சினையே தீர்க்க முடியாமல் தள்ளாடுகிறது.இவர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வேயைக் கூப்பிடலாமா?ஒரு கட்சியின் உள்ளக விடயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படுவது ஆரோக்கியமானதா?தமிழரசுக் கட்சியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.2 points
-
அறம் வெல்லும்..?
1 pointஅறம் வெல்லும்..? 'BigBOSS' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் விக்ரமன் அடிக்கடி உச்சரித்த ‘அறம் வெல்லும்’ என்ற வார்த்தைகள் மக்களிடத்தில் இப்பொழுது அதிகம் பரீட்சயமான வார்த்தைகளாகியுள்ளன. ஆனால், போட்டியின் முடிவு ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. உண்மையில் 'அறம்' தோற்பதில்லை. அது தோற்கடிக்கப்படுகிறது என்று மக்களுக்கு புரியவைப்பதற்கே ஒரு ‘விடுப்பு’ நிகழ்ச்சி தேவைப்படுகிறது. இது தான் இன்றைய நிதர்சனம். புதிய ஒழுங்கு. 'அறம்' தோற்றல் என்பது புது விடயம் அல்ல. இது அரசியல், வணிகம், சட்டம், சமூகம், ஊடகம் என எல்லா மட்டங்களுக்கும் பொருந்தும். அடிப்படியில் அறத்தைத் தோற்கடிக்கும் தந்திரம் ஆதிக்க சக்திகளின் மூலோபாயம் என்றாலும், அதனை நிறைவேற்றும் கருவிகளாக மக்களே (சமூகமே) விளங்குகின்றனர். 'BigBOSS' இல் விக்ரமன் தோற்றதால் 'அறம்' தோற்றதா? அல்லது தோற்கடிக்கப்பட்டதா..? என்று விவாதிப்பதற்கான பதிவு இல்லை இது. அல்லது விக்கிரமன் அறத்தின் காவலனா? இல்லையா ? என்று பகுப்பாய்வதும் இப்பதிவின் நோக்கமல்ல. ஆனால், ‘அறம்’ மக்கள் பலத்தால் தோற்கடிக்கப்படுகிறது என்பதே சமகால பொது விதி. இந்நிலையில், ‘அறம்’ பற்றிய சொல்லாடலின் குறியீட்டு அடையாளமாக ‘விக்கிரமன்’ பெயர் புழக்கத்தில் உள்ளதால், சமூகப் பிறழ்வுகள் குறித்து மக்கள் மனங்களில் ஒரு சிந்தனைத் தூண்டலைச் செய்வதற்கான தருணமாக இது அமையலாம் என்ற ஒரு புள்ளியான நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பதிவு. கணிசமானவர்கள், BigBOSS என்ற கள்ளுக்கொட்டிலுக்குள் கூடியிருந்து கள்ளடிச்ச போதையில், 'ஊடக அறம்' எது? என்று வகுப்பெடுத்துக்கொண்டு இருப்பீர்கள். ஆகவே, நானும் கள்ளுக்கொட்டிலுக்கு வெளியில் நின்று கள்ளடிச்சுப்போட்டு வந்திருக்கிறன். போதை உள்ளவர்களோடு போதையில் தானே உரையாடவேண்டும். அறத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் கொண்டு செயற்படவேண்டிய வெகுஜன ஊடகங்கள் (Mass Media), மக்களை எப்பொழுதும் ஒரு போதை மயக்கத்தில் வைத்துக்கொள்ளும் வித்தையில் கைதேர்ந்தவர்களாக உள்ளன. இவ்வித்தையில் தமிழக ஊடகங்களைப் பொறுத்தமட்டில் நான் முந்தி.. நீ முந்தி.. என்று ஒரு பிரகடனப்படுத்தப்படாத ஊடகப் போர் நடை பெற்றுவருகிறது. அது எப்படியோ போகட்டும். ஆனால், “…அதி உச்சமான ரசனை மிக்கவர்கள் ஈழத்தமிழர்கள், எச்சங்களுக்கு எல்லாம் கைதட்டமாட்டார்கள்..” என்ற ஒரு காலத்து நிலை மாற்றம் கண்டு, இன்று எச்சங்களை மட்டுமே தலையில் தூக்கிக் கொண்டாடும் இனமாக ஈழத்தமிழினமும் மாறியிருக்கிறது. எனது கணிப்புச் சரி என்றால், அடுத்த நிகழ்ச்சிக்கு (Season க்கு) கனடாவில் இருந்தும் ஒரு போட்டியாளர் உள்வாங்கப்படலாம். நாமும் Facebook ஐக் கதறவிட்டு வாக்கு வேட்டையில் இறங்கக்கூடும். அதன் பின்னர் Pearson விமான நிலையத்தில் மாலை, பொன்னாடை, தாரை-தப்பட்டைகளோடு அப்போட்டியாளரை விழா எடுத்து வரவேற்போம். கழுதையாக இருந்தாலும், தமிழகத் தொலைக்காட்சியின் வாசம் பட்டால் குதிரையாகிவிடும் என்ற நம்மவர்களின் ‘அக்கரை’ மோகம், நம்மத்தியில் உள்ள திறமையாளர்களை தரக்குறைவாக இழிவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. எனினும், திறமையாளர்களுக்கு பெரிய தளங்களில் அங்கீகாரம் கிடைப்பதை இப்பதிவு குறை கூறவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மண்ணில் அங்கீகரிக்கப்பட்டாலே, நாம் நம்மவர்களின் திறமைகளை அங்கீகரிப்போம் என்ற நிலையைத்தான் குறைகூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்நிலையில், கேளிக்கை விநோதங்களின் மைய்யமாக, மக்களை வசியம் செய்யும் பெருச்சாளிகளாக, ஊடகங்கள் பெருவளர்ச்சி காண்பதில் மக்களே பங்காளிகளாக விளங்குகின்றனர் என்பதை மக்கள் உணர்வதில்லை. எனவே, விடுப்பு, விறுவிறுப்பு, விசித்திரம் என்று நாடுகிற மக்கள் கூட்டத்துக்கு தேவைப்படும் தீனியை அள்ளிக் கொடுக்கும் ஊட்டிகளாக, இவ்வூடகங்கள் விஸ்வரூபம் பெற்றுள்ளன. மாறாக சமூகத்துக்கு உண்மையைச் சொல்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற ஊடகங்களையும் / ஊடகர்களையும் புறக்கணிக்கும் பழக்கத்தையும் இது போன்ற கேளிக்கை மைய்யங்களே உருவாக்கி வைத்துள்ளன. ஆனால், சமூகத்தில் மாற்றங்களை உருவாக்க விரும்பி ஊடகக் கற்கையை பயின்றும், பயிற்சியைப் பெற்றும், அதற்குரிய மதிப்பும் மரியாதையும், வெகுமதியும் கிடைக்காமல், அரச - தனியார் நிறுவனங்களில் கிடைத்த தொழிலைச்செய்கிற வழக்கமும் பழக்கமாகிவிட்டது. ஒரு நுகர்வோனின் பலவீனமே, வியாபாரியின் பெரும்பலம். இந்த சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சந்தைப்படுத்தலின் மூலோபாயம் (Marketing Strategy) வகுக்கப்படுகிறது. அதனை தமிழகத்து தொலைக்காட்சிகள் செவ்வனே செய்து வருகின்றன. ஆனால், பார்வையாளர்களும், பங்காளிகளும் இங்கு மக்களே என்பதே அடிப்படை. தாம் நிர்ணயம் செய்கிற இலக்கை, தமக்கு சேதாரம் இல்லாமல், மக்கள் எனும் கருவிக்கொண்டு இயக்குபவனே இங்கு ஆட்ட நாயகன். இது தெரியாமல் தன் பணத்தை, நேரத்தை, வாழ்வை விரயம் செய்கிறவனே ரசிகன் என்ற பங்காளி. உண்மையில், இங்கே முற்றுமுழுதாகப் பாதிக்கபடுகிற (Vulnerable) தரப்பு, பங்காளியாகவுள்ள பொதுமகனே. ஆனால், அதனை அவன் உணர்வதில்லை. காரணம், ஒரு சாமானியப் பொதுமகனுக்கு பொழுதுபோக்கே முக்கியம். அவனுடைய அன்றாடத் தேவைகளின் பட்டியல் என்பது கேளிக்கை, வேடிக்கை, விடுப்பு என்ற ஆதாயங்களைத் தேடியே அலைகிறது. இதற்கு படித்தவர் /பாமரர் என்ற வேறுபாடு கிடையாது. எனவே, இவ்வாறான மனோநிலையில் மக்களை வைத்துக்கொண்டாலே போதும், வணிக மூலோபாயமும், அரசியல் மூலோபாயமும் கட்டுக்குள் வந்துவிடும். இது போன்ற பிறழ்வுகள் தமிழகம்/ இந்தியாவில் நெடுங்காலப் பழக்கம் என்றாலும், அண்மைக்காலமாக நம்மவர்கள் மத்தியில் புகுத்தப்பட்டுள்ள சினிமா/ சின்னத்திரை / விடுப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளின் திணிப்பும், அவை நம் சமூகத்தின் மீது செலுத்தும் தாக்கத்தின் அளவும், ஒரு பெரும் சமூகக் கட்டுமானச் சீரழிவையே ஏற்படுத்திவருகின்றன. இன்று நம்மவர்கள் மத்தியில் ஊடகம் தொடர்பான புரிதலும், அது சார்ந்த செயல்களும் மலினப்பட்டுவருகின்றன. அதன் அடுத்த பரிணாமமாகவே சமகால சமூக ஊடகங்களின் பெருக்கமும், அவை தாங்கி வருகின்ற விடுப்புகளும் மக்களைக் கவர்ந்து வருகின்றன. அவற்றின் அடிப்படை என்பது, மக்களை வசியம் செய்யும் நோக்கமும். அதனூடாகப் பணம் ஈட்டும் வெறியும் கொண்ட செயல்களாக அமைந்துள்ளன. (ஒரு சில விதிவிலக்குகள் உண்டு) சமூக ஒன்று கூடல்களே இவ்வூடகங்களின் அதிகபட்ச செய்தி மைய்யம் (coverage). கனடாவில் 4 லட்சம் பேர் இருப்பதாக மார்தட்டுகிற நம்மவர் நிகழ்வுகளின் பதிவுகளில் 40 பிரபல தம்பதிகளும்.. 40 வணிகர்களும்... 40 தமிழ் பெண்பிள்ளைகளும் மட்டுமே திரும்பத்திரும்ப 360 கோணத்தில் பதியப்படுகின்றனர் (படம் எடுக்கப்படுகின்றனர்). உதாரணமாக கனடாவிலும் பெருகியுள்ள சமூக ஊடகங்களில் கணிசமானவை சமூகப்பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேரலை செய்வதிலும், ஒளிப்படம் எடுப்பதிலும், செய்தியாக்குவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன. அவர்களுக்குள் ஒரு நீயா? நானா? போட்டியும் நடைபெற்று வருகிறது. அத்தோடு கலியாணம், செத்தவீடு என்று முன்பந்தியில் அமர்ந்து நேரலை செய்யும் அளவுக்கு ஊடகங்கள் மலினப்பட்டுள்ளன. ஆனால், இவ்வாறான ஊடகப் பிறழ்வுகள் தொடர்பிலோ.. ஊடக அறம் பிழைத்ததாகவோ.. யாரும் கவலையோ.. கரிசனையோ ..கொள்ளவில்லை. எனவே, இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.. அதனை நாம் கொடுக்கிறோம் என்று குறித்த ஊடகங்களும்.. நியாயம் சொல்ல வசதியாகிவிட்டது. மறுபுறத்தில் தமிழர்களுக்கு உரிமையும், இனப்படுகொலைக்கு நீதியும் வேண்டி நின்ற அமைப்புக்கள், GTA நகரங்களை குத்தகை எடுத்து விழா நடத்துகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைக் கொண்டு தமது பலத்தை குறித்த அமைப்புகள் பறைசாற்றுகின்றன. தமிழ் இருக்கைக்காக 3 மில்லையன் டொலர்களை திரட்டும் திறன்கொண்ட சமூகத்தால், போரால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் பேருக்கு தீனிபோட வழிபிறக்கவில்லை. திருவிழாவும், தெருவிழாவும் செய்து ஒரு வணிகமயப்பட்ட கட்டமைப்புக்களாக உருமாறியுள்ள அமைப்புக்களின் அறப்பிறழ்வுகள் குறித்து யாருக்கும் கவலை இல்லை. காரணம், நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு கேள்வி கேட்காமல் இருப்பதற்கான மேடைகள் வழங்கப்படுவதோடு, உங்கள் கவனம் அவர்கள் மீது திரும்பாமல் வேடிக்கையும் காண்பிக்கப்படுகிறது. முன்வரிசையில் அமர்ந்து படம் எடுக்க கிடைத்த வாய்ப்புக்காக, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விளம்பர முகவர்களாக சமூக ஊடகர்கள் தமது ஒளிப்படக்கருவிகளை காணிக்கையாக்கிவிட்டனர். ஆக, நம்மைச் சுற்றி எத்தனை அறப்பிறழ்வுகள் உண்டு?. அத்தனை அறப்பிறழ்வுகளின் பின்னால் பங்காளிகளாக யார் உண்டு.? என்ற கேள்விகளை நம் சமூகம் சிந்திக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகள் போல, சுயம் இழந்த சமூகமாக நாம் மாறிவருவது குறித்து நம்மவர்கள் வாய் திறப்பதில்லை. அப்படிக் குரல் கொடுப்போருக்குப் பக்க பலமாகவும் நிற்பதில்லை. ஆக, இத்தனை அறப்பிறழ்வுகளையும் கண்டுகொள்ளாத சமூகம், கூத்தாடிகள் கூடாரத்தில் அநீதி நடப்பதாக முணுமுணுப்பது வேடிக்கையானது. எனவே, BigBoss விடயத்தில் தோற்றது விக்ரமன் என்றாலும், வென்றது விஜய் தொலைக்காட்சியே. இனிமேல், தமது நிகழ்ச்சிகளில், செயல்களில், எவ்வித அறத்தையும் பேணவேண்டிய அவசியம் இல்லை என்பதை, மக்களே சொன்னார்கள் அல்லது சொன்னதாகக் காட்டினார்கள் என்ற நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் இனி அனைத்து ஊடகங்கள் மத்தியில் வீரியம் பெறும். சமூகமும் அதனை ஏற்றுக்கொண்டு பயணிக்கும். சமூகம் வெறும் குப்பைகளைக் கொட்டும் குப்பை மேடு என்பதை ஊடகங்கள் உறுதியாகப் புரிந்துகொள்ளும். ஆனால், வணிகமும், வணிகனும் வெல்வர். எனவே, அறம் தோற்பதில்லை... தோற்கடிக்கப்படுகிறது.. கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சமூகத்தால்... (இப்பதிவை இறுதிவரை பொறுமையாகப் படித்தோருக்கு நன்றி. ஏனையோர் அடுத்த விடுப்பைத் தேடிக்கொண்டிருக்கக்கூடும்..) https://www.facebook.com/uthayan.s.pillai/posts/pfbid02yLeRyR7moGV1qWMKayCw9HSfMS93GJTWCYYKPVdiKt2axDRUzVVbD8nbrhnjUzPJl1 point
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
1 pointஆனால் அது நடக்காது.....பக்கத்தில் உள்ள நாடுகள் இந்தியாவை சீனாவின் உடாக கட்டுப்படுத்துகின்றன...இந்தியா பக்கத்து நாட்டு மக்களில் தங்களுக்கு துணையாக யார் இருப்பார்கள் என அறிந்து கொள்ள இன்னும் பல வருடங்கள் செல்லும் ....இந்தியா கொஞ்ச காலமாக திரைப்படம் ஊடாக வல்லரசு கனவு கண்டார்கள் ..இப்பொழுது யூ டியூப் ஊடாக வல்லர்சு பில்டப் பண்ணுகிறார்கள் ....இலங்கையி ல் சீனாவின் தீவு உருவாகும் வரை கை கட்டி பார்த்து கொண்டிருந்தவை ....வல்லர்சு கனவு காண்கின்றனர்.... இந்தியா புடவை வியாபாரம் செய்யலாம் புலனாய்வு செய்ய மாட்டார்கள்1 point
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள்
செய்தி ஒரே குழப்பமாக இருந்தது. இப்போ புரியுது. மரத்தால ஏறி கொப்பால இறங்கியுள்ளார்.1 point
-
சிறீதரனுக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
தமிழரின் பிரச்சனை பற்றியா பேசியிருப்பார்? அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி பேசியிருப்பாரோ?1 point
-
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointகுடாநாட்டிற்கான குடிநீர் வினியோகத் திட்டத்தில் இரணைமடுக் குளம் தொடர்பான இவரது நிலைப்பாடு இவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.1 point
-
கொஞ்சம் சிரிக்க ....
1 point1 point
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
பைடனுக்கும் நோபல் பரிசுக்கும்... ஏணி வைத்தாலும் எட்டாது. 😂 🤣1 point- வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
1 pointதமிழரிலும் நட்டுக் கழண்டவர்கள் இருக்கின்றார்கள். 😂 🤣1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- கருத்து படங்கள்
1 point1 point- போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்திய மயங்அகர்வால் - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
இந்த கிரிக்கெட் வீரர், ஓசி... என்றால், "பொலிடோலும்" குடிப்பார் போலுள்ளது. 😮 போத்தலில் என்ன எழுதியிருக்கு என்று வாசிப்பதில்லையா? முதலில்... அந்த தொற்று நீக்கி ஏன் அங்கு வந்தது. சிலவேளை அதற்கு முன் அந்த இருக்கையில் இருந்து பயணித்த பயணி, மறந்து போய் விட்டுவிட்டு சென்றிருப்பாரோ. முன்பு எனது வேலையிடத்தில் வேலை செய்யும் ஒருவர் களவாக குடிநீர் போத்தலில் ரொய்லற் கழுவும் மருந்தை நிரப்பிக் கொண்டு போய் வீட்டில் வைத்திருந்திருக்கின்றார். பாடசாலையால் வந்த அவரின் ஆறு வயது மகன் அதனை ஜூஸ் என குடித்து, மிகவும் ஆபத்ததான நிலையில் இருந்து காப்பாற்றப் பட்டாலும் அதன் பாதிப்புகள் பல வருடங்களை கடந்தும் தொடர்ந்து கொண்டுள்ளது. ஒரு ஐரோ கூட பெறுமதி இல்லாத மருந்தை களவெடுத்தது மட்டுமல்லாமல், அதனை குடிநீர் போத்தலில் நிரப்பி வைத்த மடமைத்தனத்தால் மகனின் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்.1 point- சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்!
சுயம் இழந்து, புலிகளின் ஒளியில் குளிர்காயும் தமிழ்க்கட்சிகள்! January 31, 2024 — கருணாகரன் — ஈழத்தமிழர்களின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவில்லை. விடுதலைப் போராட்டம் முறியடிக்கப்பட்டதற்குப் பின்னான (Post – War Politics) அரசியலும் கேள்விக்குறியின் முன்னேதான் நிற்கிறது. காரணம், போருக்குப் பின்னரான அரசியலைத் தமிழ்த்தரப்பு முன்னெடுக்கவில்லை என்பதேயாகும். போருக்குப் பிறகான அரசியல் எது? எப்படியானது? அதை எப்படி முன்னெடுப்பது என்ற தெளிவில்லாமல் அதை முன்னெடுக்கவே முடியாது. இந்தத் தெளிவைக் கொள்வது மிக முக்கியமானது. அதை விட அந்தத் தெளிவின் அடிப்படையில் துணிந்து அதைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்னும் தமிழ் அரசியல் வெளியானது 1960, 1970, 1980 களின் அரசியலிலேயே உள்ளது. இதை தற்போதைய தமிழ் ஊடகங்கள், தமிழ் அரசியற் பத்தியாளர்களின் எழுத்துகள், அரசியற் கட்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள், தலைவர்களின் அறிவிப்புகளில் தெளிவாகக் காணலாம். ஆகவே இதைக் கடந்து போருக்குப் பிந்திய Post – War Politics அரசியலை முன்னெடுப்பதற்கு தெளிவும் அதை முன்னெடுக்கும் உறுதிப்பாடும் அவசியம். அதில்லாத காரணத்தினால்தான் தீவிரவாதம் பேசும் சிவஞானம் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்குத் தலைவராக முடிந்தது. சிறிதரனும் தமிழரசுக் கட்சியும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது கடும்போக்காளர் கஜேந்திரகுமாரைச் சுற்றி. சிறிதரன் மட்டுமல்ல, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விக்கினேஸ்வரன் போன்றோரும் கஜேந்திரகுமாரின் அரசியற் பிரகடனத்துக்குப் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கின்றனர். அதை விட்டு தாம் வேறு நிரலில் நின்றால், தம்மை மக்கள் நிராகரித்து விடுவார்களோ என்ற அச்சம் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது. மற்றும்படி இவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், கஜேந்திரகுமாரின் பருப்பு எங்கும் வேகப்போவதில்லை என்று. அப்படித் தெரிந்து கொண்டே அதைத் தொடர்கிறார்கள் என்றால், இவர்களுக்குத் தங்களுடைய அரசியலில், தமிழர்களுக்கான அரசியலில், இந்தக் காலத்துக்கான அரசியலில் நம்பிக்கையும் தெளிவும் இல்லை என்றே அர்த்தமாகும். எத்தகைய சவால்கள், நெருக்கடிகள், எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு துணிந்து நின்று தமது அரசியலை முன்னெடுப்பதே தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் அழகு. அதை இழந்தால் அவை தலைமைகளும் இல்லை. கட்சிகளும் இல்லை. இந்தக் கட்சிகள் மேலும் தடக்குப் படும் இடங்களுண்டு. சரியோ பிழையோ இந்தக் கட்சிகளும் தலைமைகளும் தமக்கென்ற அரசியற் பாரம்பரியத்தைக் கொண்டவை. உதாரணமாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கென்றொரு பாராம்பரியமும் அரசியற் கொள்கையும் உண்டு. அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கும் புளொட்டுக்கும். ஆனால் இவற்றிற் சில அதைக் கைவிட்டு விடுதலைப்புலிகளின் ஒளியிலும் சிலபோது நிழலிலும் தமது அரசியலை மேற்கொள்கின்றன. இதற்கு மிகக் கிட்டிய உதாரணம், கடந்த வாரம் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவானதற்குப் பின்பு, கிளிநொச்சியில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்று வழிபாடு நடத்திக் காட்சிப்படுத்தியதாகும். இதையிட்டு கடுமையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன. பதிலாகச் சில ஆதரவான குரல்களும் அங்கங்கே ஒலிக்கின்றன. ஆனாலும் இதையெல்லாம் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோபக் கனல் எறிப்பதையும் நாம் காணமுடிகிறது. உதாரணமாக, “வலிக்கிறது. கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது” என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளியாகச் செயற்பட்டவரும் தற்போது பசுமை ஆக்கச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் ‘வன்னித் தமிழ் மக்கள் ஒன்றிய’த்தின் நிறுவனருமான கணபதி சிறிதரன் (தரன்ஸ்ரீ) குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடும்போது, “ராணுவத்தின் முற்றுகையில் களத்தில் கழுத்துப் பகுதியில் விழுப்புண் அடைந்து கதைக்க முடியாது. காலில் விழுப்புண் அடைந்து நடக்க முடியாது என்ற நிலையில் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகில் இருந்த எங்களுக்கு உரித்தான (போராளிகளின்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என்னோடு ஒன்றாகக் களமாடி, காயப்பட்டு நான்கு நாட்கள் கழித்து மரணத்தை அடைந்த நண்பனின் இறுதி நிகழ்வில் அவனுடைய உடலை நானும் சுமந்து விதைக்க வேண்டும் என்று விரும்பினேன். நடக்கவே முடியாது. முழுமையாக கதைக்க முடியாது. இருந்தும் இறுதித் தருணத்தில் நண்பனின் வித்துடலுக்கு விடை கொடுப்பதற்காக கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றேன். ஒன்றாகப் பழகி உணவு அருந்தி, அருகில் உறங்கி, களமாடிய நண்பனை விதைப்பதற்காக… இப்பொழுது ஒவ்வொரு தடவையும் தாய்மண்ணுக்கு செல்லும்போதும் துயிலும் இல்லங்களுக்கு செல்வதற்கு நான் தவறுவதில்லை. இந்த தடவையும் நான்கு துயிலும் இல்லங்களுக்கு சென்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கே நான் புகைப்படங்களை எடுப்பதில்லை. ஆனால் பல ஆயிரம் நினைவுகளை மட்டும் மனதுக்குள் சுமந்து கொள்வேன்… வலிகளோடு… இன்று துயிலும் இல்லங்களும் அரசியல் மேடைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கே விடுதலைக்காகப் போராடித் தம்மை அர்ப்பணித்த ஆன்மாக்கள் அமைதியாக உறங்க வேண்டும். அவற்றை அரசியல் நாடகத்தினால் குலைக்கக் கூடாது….” என்று தரன்ஸ்ரீ குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு, மாவீரர் நாளொன்றில் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் சிறிதரன் மாவீரர்நாள் சுடரை ஏற்றியிருந்தார். அதற்குப் பின்னர் அவர் அப்படிச் கூடர் ஏற்றக் கூடிய சூழல் அங்கே இருக்கவில்லை. அதற்கு மக்களும் போராளிகளும் இடமளிக்கவில்லை. ஆயினும் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தான் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அங்கே சென்று வழிபாட்டைச் செய்துள்ளார் சிவஞானம் சிறிதரன். இது பல தரப்பிலும் கடுமையான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. இதற்கு முன் புலிகளின் காலத்திலும் சரி பின்னரும் சரி, எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எந்தவொரு அரசியற் தரப்பும் மாவீரர் துயிலும் இல்லங்களைத் தம்முடைய அரசியல் மேடையாகப் பயன்படுத்தவில்லை என்கின்றனர் அவர்கள். மட்டுமல்ல, “பேச்சுவார்த்தைக்குச் செல்லும்போதும், போர்க்களத்துக்குச் செல்லும்போதும் கூட மாவீரர் துயிலுமில்லங்களை ஒரு அரசியற் களமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை. துயிலுமில்லங்களை அவர்கள் உயரிய இடத்தில் வைத்தே நோக்கினர் என்றும் கூறுகிறார்கள். ஆகவே இது தனியே தரன்ஸ்ரீயின் கவலை மட்டுமல்ல, வேறு பலருடைய கவலைகளும்தான். 2009 க்குப் பிறகு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்களுடைய கொள்கையை, சித்தாந்தத்தை முன்னெடுப்போர், அவற்றின் தொடர்ச்சியாளர்கள் தாமே என்று தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக் கொண்டு இன்று, தமிழ் அரசியல் வெளியில் அரசியல் நாடகமாடும் போக்கு வரவரக் கூடியிருக்கிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸினர் (கஜேந்திரன், கஜேந்திரகுமார் அணி) தொடக்கம், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் வரையில் சிலர் இந்த நாடக அரசியலை எந்தக் கூச்சமுமின்றி மேற்கொள்கின்றனர். புலிகளின் தொடர்ச்சி தாம் என்று சொல்லும் இவர்கள், விடுதலைப் புலிகள் முன்னெடுத்த எந்தவொரு அரசியல் செயற்பாட்டு வடிவத்தையும் தமது அரசியலில் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, புலிகள் போராடிக் கொண்டு – களத்தில் பெரும் சமராடிக் கொண்டே – மறுபக்கத்தில் சமூக வேலைத்திட்டங்களில் ஈடுபட்டனர். சூழலையும் பண்பாட்டையும் பாதுகாத்தனர். பொருளாதாரக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்தனர். பொருளாதாரத் தடைகளின் மத்தியிலும் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொறிமுறையை உருவாக்கிச் செயற்படுத்தினர். சட்ட விரோத மது உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாதொழித்தனர். மண்ணகழ்வைத் தடுத்தனர். மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கி வைத்திருந்தனர். ஊழலையும் பொறுப்பின்மையையும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லையென்றாக்கினர். அவர்கள் உருவாக்கிய காடுகள் பல இடங்களிலும் இன்னும் உண்டு. பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் மரமுந்திரிகை, வேம்பு போன்ற தோப்புகள் வன்னியில் உள்ளன. சாதி, மத, பிரதேச வேறுபாடுகளற்ற ஒரு சமத்துவச் சமூகம் அப்போதிருந்தது. இதில் ஒரு சிலவற்றைக் கூட தற்போதைய அரசியற் தரப்புகள் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நான்கு மரக்கன்றுகளைக் கூட நட்டுப் பராமரித்து வளர்க்க முடியாத நிலையில்தான் இவை உள்ளன. காடழிப்பும் மணல் அகழ்வும் சட்டவிரோத மது உற்பத்தியும் மதுப்பாவனையும் கட்டற்று அதிகரித்திருக்கிறது. இவற்றையெல்லாம் வெளியே இருந்து வந்து யாரும் செய்யவில்லை. அவ்வளவும் வடக்கில் – நம்முடைய சூழலில் உள்ளோரே செய்கின்றனர். இன்னும் சரியாகச் சொன்னால், இந்தத் தரப்பினரின் ஆதரவாளர்களிற் பலர் இவ்வாறு சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, சாவகச்சேரி போன்ற நீதி மன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிற மணல் மற்றும் மரங்களையும் கொண்டு வந்தோரையும் ஆராய்ந்தால் அவர்கள் அனைவரும் நம்முடைய சூழலைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்து கொண்டே புலிகளின் அரசியலைத் தொடர்வதாகப் பாவ்லா காட்டுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் நிலை சற்று வேறு. அங்குள்ள சமூகச் சூழலின் அடிப்படையில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் நிலவரம் வேறாக இருந்தது. அங்கும் இப்பொழுது மணல் அகழ்வும் சூழல் சிதைப்பும் சாதாரணமாகியுள்ளது. சரி, இன விடுதலை சார்ந்து புலிகளின் அரசியல் கோரிக்கையோடு பயணிப்பதாக இருந்தாலும் அதை முன்னெடுப்பதற்கான அரசியற் கட்டமைப்பும் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. வெறுமனே வாய்ச்சவாடல்களைச் செய்து இலங்கை அரசையும் சிங்கள இனவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமா? ஆக அதுவும் பொய்யான நாடகமே! தவிர, விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள் இன்னும் நிர்க்கதியான நிலையில்தான் வாழ்கின்றனர். மாவீரர் குடும்பங்கள் பலவும் நெருக்கடியான வாழ்க்கையில் உள்ளனர். அவர்களைப் பராமரிப்பதற்கான, அவர்கள் சுயமாக வாழக்கூடிய ஏற்பாடுகளைக் கூட இவர்கள் செய்யவில்லை. அதற்கான எந்தப் பொறிமுறையும் இவர்களிடம் கிடையாது. ஆனால், மேடைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் புலிகளின் இன்றைய பிரதிநிதிகள் போலத் தம்மைக் காண்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதற்காக புலிகள் தரப்பில் போராடி சாவினைத் தழுவிக் கொண்ட திலீபன் நினைவுநாள் தொடக்கம் புலிகளால் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் மாவீரர்நாள் வரையிலும் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றனர். இதனுடைய உச்சக்கட்டமாகவே தற்போது தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறிதரனின் துயிலுமில்ல நாடகமும் நடந்தேறியுள்ளது. தம்மால் சுயமாக எதையும் செய்ய முடியாத நிலையில் புலிகளின் – அவர்களுடைய மாவீர்களின் ஒளியில் தங்களுடைய அரசியலை இவர்கள் மேற்கொள்ள விளைகின்றனர். இது அந்தப் போராளிகளுக்கும் அவர்களைப் பெற்று வளர்த்த பெற்றோருக்கும் அவர்களை மதிக்கின்ற மக்களுக்கும் இழைக்கின்ற அநீதியாகும். யுத்தத்தின்போது படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்களில் இருந்த மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டன. “அது மிகமோசமான ஒரு பண்பாட்டுச் சிதைப்பு. அதற்காக எப்போதும் சிங்கள மக்களும் அவர்களுடைய வரலாறும் தலைகுனிய வேண்டும்” என்று அப்போது அரசியல் விமர்சகர் மு.திருநாவுக்கரசு குறிப்பிட்டிருந்தார். உண்மையும் அதுதான். என்னதான் எதிர்த்தரப்பாக இருந்தாலும் எவருடைய புதைகுழிகளையும் நினைவிடங்களையும் சிதைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அப்படிச் செய்தால் அதொரு பண்பாட்டு அழிப்பே. நிச்சயமாக அரசியல் பண்பாடு வீழ்ச்சியடையும் இடங்களிலேயே இவ்வாறான செயல்கள் நிகழ்ந்தேறும். ஏறக்குறைய அப்படியான ஒரு பண்பாட்டுச் சிதைப்பே, இப்பொழுது நடந்து கொண்டிருப்பதுமாகும். தமது அரசியல் ஆதாயங்களுக்காக போராளிகளையும் போராட்டத்தில் தம்முடைய இன்னுயிரை ஈய்ந்தோரையும் பயன்படுத்திக் கொள்ளுதல் மிகத் தவறானதாகும். இந்த வியாபாரத்துக்கு மக்களும் இடமளிக்கக் கூடாது. அப்படி இந்த அரசியல் தரப்பினர் தம்மைப் புலிகளின் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், (கவனிக்கவும், உருவாக்கிக் கொள்ளல் அல்ல. உருவகித்தல் என்பதை) புலிகளைப் போலச் செயற்திறனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் வாய்ச்சொல் வீரர்களாக இருப்பது பொருத்தமற்றது. அது புலிகளுடைய இயல்புக்கும் அடையாளத்துக்கும் மாறானது. எதிரானது. (குறிப்பு – இந்தக் கட்டுரை புலிகளை தமது அரசியல் எஜமானர்களாகக் கருதிக் கொண்டு அல்லது புலிகளின் தொடர்ச்சி தாம் என்று உருவகித்துக் கொண்டு செயற்படும் அரசியற் தரப்பினைக் குறித்த விமர்சனங்களுக்காக எழுதப்பட்டது) https://arangamnews.com/?p=104151 point- ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
ஐ.சி.சி. 19இன் கீழ் சுப்பர் 6 சுற்றில் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் வெற்றி 01 FEB, 2024 | 09:40 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 6 சுற்றின் இரண்டாம் நாளான இன்று புதன்கிழமை (31) அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் வெற்றிபெற்றன. டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகு வெற்றி கிம்பர்லி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் குழுவுக்கான சுப்பர் 6 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 110 ஓட்டங்களால் டக்வேர்த் லூயிஸ் முறைமையில் அவுஸ்திரேலியா இலகுவாக வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்கொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைக் குவித்தது. அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் ஹியூ வெய்ப்ஜென் 126 பந்துகளில் 15 பவுண்டறிகளுடன் 120 ஓட்டங்களை விளாசினார். ஹெரி டிக்சன் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 53 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலியா ஒரு ஓட்டம் பெற்றிருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. எனினும் வெய்ப்ஜென், டிக்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 105 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழ 38ஆவது ஓவரில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ஆனால், வெய்ப்ஜென், ஒலிவர் பீக் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஒலிவர் பீக் 25 ஓட்டங்களுடனும் ரெவ் மெக்மிலன் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தியோ வில்லி 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 267 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் மின்னல் காரணமாக பிற்பகல் 2.45 மணியளவில் மத்தியஸ்தர்கள் ஆட்டத்தை இடைநிறுத்தினர். மின்னல் தொடர்ந்ததாலும் பிற்பகல் 3.50 மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்ததாலும் ஆட்டம் தொடர்ந்து தடைப்பட்டது. பிற்பகல் 5.10 மணி அளவில் ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 24 ஓவர்களில் 215 ஓட்டங்கள் என திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து 16.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 110 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் சார்லி அலிசன் (26), அணித் தலைவர் பென் மெக்கின்னி (22) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் கெலம் விட்லர் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராவ் மெக்மிலன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். தென் ஆபிரிக்கா 9 விக்கெட்களால் வெற்றி பொச்சேஸ்ட்ரூம், சென்வென் பார்க் அரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் ஸிம்பாப்வேயை 9 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 29.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. ரோனக் பட்டேல் 32 ஓட்டங்களையும் ரெயான் கம்வெம்பா 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்வெனா மெப்ஹக்கா 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ட்ரைஸ்டன் லுஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. லிஹுவான் ட்ரே ப்ரிட்டோரியஸ் 53 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்டோக் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் 5 விக்கெட்களால் வெற்றி புளூம்பொன்டெய்ன், மங்குவாங் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாம் குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண சுப்பர் 6 போட்டியில் நேபாளத்தை 5 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது. அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பிஷால் பிக்ரம் கே.சி. 48 ஓட்டங்களையும் அணித் தலைவர் தேவ் கணல் 35 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரொஹானத் தௌல்லா போசன் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷெய்க் பாவெஸ் ஜிபொன் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 25.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஆரிபுல் இஸ்லாம் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுபாஷ் பண்டாரி 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/1752801 point- சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
1 point- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்திருக்கும். தமிழ் மக்களுக்கு பாரிய நட்டம். அந்த நட்டம். பேச்சுவார்த்தை தொடங்க முதலே தெரியும்1 point- சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
1 point- 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
அப்படி என்னதான்யா ஆசை? பதவியோடு போகணுமா?1 point- சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
நன்மையில் முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.1 point- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
இங்கு எந்த அரசியல் வாதியோ , இயக்கங்களோ மக்களுக்கு நன்மை செய்ததாகவோ அல்லது முன்னோக்கி நகர்த்தியதாகவோ இல்லை. எல்லோருமே தமிழ் மக்களை பின்னோக்கி கொண்டு சென்று தங்களை முன்னோக்கி வளர்த்து கொண்டவர்கள்தான். யாருக்குமே வெள்ளயடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் திருந்த கூடாது அல்லது நல்லவனாக மாற கூடாது என்பது உங்கள் கொள்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது உள்ள நிலைமையில் அப்படி எழுதினேன். நிலைமை அப்படிதான் இருக்கின்றது.1 point- 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
அவர் எங்கே தனியே வாழ்கிறார்? உதயசூரியனை கட்டிப் பிடித்துக் கொண்டல்லவா வாழ்கிறார்.1 point- கோழி வளர்ப்பு கொலையில் நிறைவேறிய சோகம் - யாழில் சம்பவம்
கோழி வளர்ப்பு முறைப்படி வளர்க்கவில்லையானால் அயலவர்களுக்கு ரொம்பவும் இடைஞ்சலாகவும் சுவாத்தியம் இல்லாமலும் போகலாம்.1 point- இரண்டாம் பயணம்
1 point- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointதலைமத்துவத்தில் தான் சுமந்திரனுக்கு இணையானவர் அல்லது அவரிலும் மேலானவர் என்று நிரூபிக்க வேண்டிய தேவை சிறீதரனுக்கு இருக்கிறது. நிரூபிக்க வேண்டும்.1 point- இரண்டாம் பயணம்
1 pointரஞ்சித் பணம் செலவு செய்து நீங்கள் போன இடமெல்லாம் எம்மையும் இலவசமாக கூட்டிச் சென்றமைக்கு மிகவும் நன்றி.1 point- இரண்டாம் பயணம்
1 point- 65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி முன்னுதாரணமாக விளங்கத் தயார் - ரொஷான் ரணசிங்க
அவர் பாராளுமன்ற உறுப்பினர் இல்லை மனிதன் பாவம் பல திருமணம்கள். துணிவுடன் செய்தும் தற்போது தனியாக வாழ்கிறார் 😂 இந்த தமிழ் மக்கள் திருகோணமலை தமிழ் மக்கள் சம்பந்தனின். உயிர் அற்ற உடலுக்கும் வாக்கு போட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள் 🤣1 point- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointஇதுவே இந்த தமிழ் அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இவ்வாறு ஒரு சிக்கலில் மாட்டியிருந்தால் நிதானமாக யாரைத் தொடர்பு கொண்டால் விஷயம் விரைவில் நடக்கும் என்பதை முறைப்படி விசாரித்து இலங்கை வெளிவிவகார அமைச்சை தொடர்பு கொண்டு தமது அரசியல் செல்வாக்கு, தனிப்பட்ட நட்புகள் ஆகியவற்றை பிரயோகித்து காதும் காதும் வைத்தமாதிரி விஷயத்தை கெட்டித்தனமாக முடித்திருப்பார்கள். பொது விஷயம் என்றால் பொங்குவதும் தங்கள் தனிப்பட்ட விடயம் என்றால் பம்முவதும் குழைந்து குழைந்து பேசி தமது அலுவலை முடிப்பதும் தமிழ் தேசிய அரசியலாளர்களுக்கு கைவந்த கலை.1 point- கோயில் வடிவ பள்ளிவாசல் நடிகர் ராஜ்கிரனின் வாக்குமூலம்
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!1 point- இலங்கையில் நீர்த் தேக்கம் ஒன்றில் நீந்திச் செல்லும் யானைகள் - காணொளி
30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்பட்ட இந்த பலசாலி விலங்குகள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டன. வெகுநேரம் நீந்திச் சென்று மறுகரையை அடைவதற்கு முன்பு சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக இந்த யானை கூட்டம் தண்ணீரில் விளையாடவும் செய்கிறது. https://www.bbc.com/tamil/articles/cek78dr810lo1 point- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1 pointஇப்படி எல்லாம் வித்தியாசம் தெரியாம அரசியல் செய்வது அங்கே உள்ள மக்களை மாயையில் எதிர்பார்ப்புகளுடன் வைத்திருந்து காலத்தை கொண்டு செல்வது இவற்றை தான் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் விரும்புகிறார்கள் .1 point- கருத்து படங்கள்
1 point1 point- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இதுவும் கனடாவில்தான் நடந்திருக்கு....புரிஞ்சுக்கோங்க.. ( முகப் புத்தகத்தில் பிரதி பண்ணப் பட்டது.... செய்தி 100 வீதம் உண்மை) · தமிழீழத் தேசியச் சின்னங்கள் மீது கனடாவில் நிரந்தரத் தடை கொண்டு வரும் நாசகாரச் சதியை நோக்காகக் கொண்டு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் கார்த்திக் நந்தகுமார் மீது சிறீலங்கா இன அழிப்பு அரசின் பின் புலத்தில் இயங்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய நிர்வாகம் தொடுத்த வழக்கை ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக 73,769.12 கனடியன் டொலர்களை முப்பது நாட்களுக்குள் செலுத்துமாறும் தீர்ப்பளித்திருக்கிறது. புலத்தில் தமிழ்த் தேசியச் செயற்பாடுகளை - செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்கும் நோக்குடன் எல்லை கடந்த அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு தோல்வியில் முடிந்திருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இன அழிப்பு அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஐயப்பன் கோவில் நிர்வாகம் மக்கள் முன் அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறது. கார்த்திக் நந்தகுமார் தனி மனிதன் அல்ல - அவர் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி. இந்த வழக்கில் அவருக்குப் பக்க பலமாக உலகெங்கும் பரந்து வாழும் நூற்றுக்கணக்கான தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் அணிவகுத்திருந்தார்கள். இது அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல - இன அழிப்பைச் சந்தித்துத் தொடர்ந்து இன அழிப்புக்கு முகம் கொடுத்தபடியே நீதி வேண்டி நிற்கும் ஒரு இனத்தின் நீதியின் மீது - தமிழீழ தேசியச் சின்னங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு. ஐயப்பன் கோவில் நிர்வாகம் மட்டுமல்ல இனியும் அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலுக்குள் பலியாகி புலத்தில் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் - செயற்பாட்டாளர்கள் மீதும் வழக்குத் தொடுக்கும் ஒவ்வொருவரும் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் முன் இப்படித்தான் அம்பலப்பட்டு நிற்க வேண்டும். உங்கள் தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும், சுய அரிப்புகளுக்கும் தமிழீழ விடுதலை என்பது ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. இனியும் இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம்.1 point- இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்
சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை விட இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான். இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது .1 point- யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா:
1 pointஇனி கிராம சபையாக மாறாமல் இருந்தால் சரிதான். சிவபூமி எல்லாம் அதட்குள் வரும்போது இப்படித்தான் இருக்கும். சாபக்கேடு.1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- இனித்திடும் இனிய தமிழே....!
1 pointபள்ளிக் குழந்தையின் சிறப்பான தமிழ் உச்சரிப்புப் பேச்சு........! 👍1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!