Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87986
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    10205
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3043
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/30/25 in all areas

  1. வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க்கப்படும் என்றார். இங்கு கடந்த வியாழனும், வெள்ளியும் விடுமுறை தினங்கள். ஆனால் பேச்சுவார்த்தை எதுவுமே நடக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் இப்பொழுது நான்கு ஐந்து நாட்களாக வேறு விடயங்களில், ரஷ்ய - உக்ரேன் சண்டையில் அல்ல, தனது நேரத்தையும், முயற்சியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றார். இந்தச் சண்டையில் அமெரிக்காவிற்கு நீண்ட கால நோக்கங்கள் சில இருக்கலாம். மேற்கு ஐரோப்பாவிற்கும் சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் நோக்கங்கள் இவைகளுடன் இணைந்தவை அல்ல. அவர் ஒரு முதிர்ச்சி அடையாத, நான் என்ற முனைப்பு மிக அளவுக்கு அதிகமான, வயது போன மனிதர் மட்டுமே. தான் வரலாற்றில் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்............... நிற்கத்தான் போகின்றார், ஆனால் அவர் நினைக்கும் இடத்தில் அல்ல. இந்த அம்ச திட்டங்கள் என்ற பேச்சு வந்த பின், ரஷ்யா வழமை போலவே இன்னும் அதிகமாக உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. சிலர் இறந்தும் போனார்கள். உக்ரேனும் ரஷ்யாவின் ஒரு லேசர் விமானத்தை அதன் இருப்பிடத்திலேயே குண்டு வைத்து தகர்த்தது. ரஷ்யாவிடம் இருந்தது இரண்டு லேசர் விமானங்கள் மட்டுமே. அங்கும் சிலர் இறந்தார்கள். இந்தச் சண்டையின் ஆரம்பமே உக்ரேனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்பது தான். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை யார் தடுக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ரஷ்யா என்பதே. ரஷ்யாவை மீறி உக்ரேனை நேட்டோவில் இணைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. இந்த இரு பக்கங்களிலும் எவர் உக்ரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்காக போராடுகின்றார்கள்................. ரஷ்யாவா................ ரஷ்யாவில் இருக்கும் சிறுபான்மை மக்களே தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. செச்னியர்கள் என்ற ஒரு இனமே ரஷ்யாவில் இல்லாமல் ஆகிவிட்டது அல்லவா. ரஷ்யா போன்ற அரசில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும், சீனாவிலும் கூட சிறுபான்மை அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவை வீழ்த்தி ஜப்பான் வென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் அரசு அமைத்திருந்தால், இந்தியாவிலும் மொழிவாரி மாநிலங்களோ அல்லது தனித்தனி இன அடையாளங்களோ இருந்திருக்காது. பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் தொலைந்து போனது போல. இந்துக்களாகிய தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தை முன்வைத்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அப்படி இந்தியா செய்தால், இந்தியாவுக்கு எதிராகவே உலக அபிப்பிராயம் இருக்கும். அதுவே தான் ரஷ்யாவின் நிலையும் இன்று. என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது பெரும்பாலும் ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கும் விருப்பு - வெறுப்பு - காழ்ப்பு என்ற உணர்வுகளின் அடிப்படைகளில் வரும் கருத்துகள். ஊடகங்களும், கருத்தாளர்களும் இப்படி பக்கச்சார்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அவற்றின் தன்மைகளை அறிந்து, பிரித்தறிய வேண்டியது எங்களின் கடமை ஆகின்றது.
  2. எங்கள் காலத்தில் ஷெல், விமான குண்டு வீச்சு காலங்களில்தான் இப்படி உடல் சிதறும் அவல காட்சிகள் தென்படும். போர் இப்போது இல்லை. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு விட்டது. ஆனால், உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். என்ன கொடுமை சாமி இது. விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.
  3. வெள்ளத்துக்கு பிறகு பலர் அசுத்தமான நீரும் நுளம்புகளும் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் பெறலாம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். சுத்தமான அல்லது கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிக்கவும், உடனடி சமைத்த உணவு சாப்பிடவும், காயங்களை மூடி வைத்திருக்கவும், வெள்ளநீரை தவிர்க்கவும். நுளம்பு விரட்டும் கிரீம் பயன்படுத்துங்கள், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும், அடிக்கடி கைகள் கழுவவும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது ஏதாவது விசித்திரமான அறிகுறிகள் இருந்தால் உடனே டொக்ரரைச்சந்திக்கவும்(டொக்ரர் அரச்சனாவை அல்ல😂
  4. திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் கடலில் புயல்கள் மற்றும் அவற்றின் தீவிரத்தன்மை அதிகரித்து வருவதை இது உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமயமாதலின் விளைவாகக் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதும், வளிமண்டல ஈரப்பதம் அதிகரிப்பதும், வங்கக் கடலில் புயல்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன. ஆனால், கடல் சூடாவதற்கும் திட்வா புயல் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியதற்கும் என்ன தொடர்பு? வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் 2 புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? 'ஒரே காலகட்டத்தில் உருவான இரண்டு புயல்கள்' வங்கக் கடல் பகுதியில் இந்த வாரம் மலாக்கா ஜலசந்திக்கு அருகில் சென்யார், இலங்கையின் தெற்கே திட்வா என இரண்டு புயல்கள் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் உருவாயின. "வங்கக் கடல் பகுதியில் இது மிகவும் அரிதான நிகழ்வு" என்றார், சென்னையைச் சேர்ந்த சுயாதீன வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த். "சில தருணங்களில் ஒரு புயல் சின்னம் வங்கக் கடலிலும் மற்றொரு புயல் சின்னம் அரபிக் கடல் பகுதியிலும் உருவாகும் என்றாலும் வங்கக் கடல் பகுதியிலேயே ஒரே நேரத்தில் இப்படி இரண்டு சுழற்சிகள் உருவாகிப் புயலாக மாறியது அரிதிலும் அரிது," என்று கூறுகிறார் ஸ்ரீகாந்த். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உடலில் இருந்து வாயுவை வெளியேற்றுவதற்கான நடைபயிற்சி பற்றி தெரியுமா? 1971: பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய விமானிகள் தப்ப உதவிய 'கோககோலா பாட்டில்' தமிழ்நாடு கடற்கரை அருகே திட்வா புயல் நகர்வதால் எங்கெல்லாம் மிக கனமழை பெய்யும்? புதிய அப்டேட் பாம்பு கடித்தபின் சிகிச்சை எடுக்காமல் இறுதி தருணங்களை எழுதி வைத்தவர் End of அதிகம் படிக்கப்பட்டது கடந்த 2019-ஆம் ஆண்டில், கியார், மஹா ஆகிய இரு புயல்கள் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் உருவானதை நினைவுகூர்ந்த அவர், "அதுபோன்ற நிகழ்வு வங்கக் கடல் மண்டலத்திற்குள் பதிவாவது அரிதான ஒன்று," என்று தெரிவித்தார். படக்குறிப்பு,திட்வா புயல் இலங்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு இந்தப் புயல்கள் எங்கு உருவாயின என்பதுதான் இவற்றின் மீது மேலதிகமாக கவனம் செலுத்துவதற்கு காலநிலை ஆய்வாளர்களைத் தூண்டுகிறது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில் கோரியாலிஸ் ஆற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதால், 5 டிகிரிக்கும் உள்ளே இருக்கும் பகுதிகளில் புயல் உருவாவது அரிதிலும் அரிது. புயல்கள் சுழல்வதற்குத் தேவையான ஆற்றலே கோரியாலிஸ் விளைவு என்றழைக்கப்படுகிறது. ஆனால், சென்யார், பூமத்திய ரேகைக்கு மிக அருகில், வடக்கே 4.9 டிகிரிக்கு அருகில் உருவானது. அங்கு உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்யார் புயலாக உருவெடுத்து, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திட்வா புயலாக மாறியது. இந்தப் புயல் மெதுவாக நகர்ந்து வருவதால், நீண்டநேரம் நீடித்திருந்து, அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,இந்திய பெருங்கடல் பகுதி, உலகின் வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல பெருங்கடல் என்று கூறப்படுகிறது. கடல் சூடாவதே அசாதாரண புயல்கள் உருவாகக் காரணமா? ஹைதராபாத்தில் உள்ள பார்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியின் ஆராய்ச்சி இயக்குநரும் காலநிலை விஞ்ஞானியுமான பேராசிரியர் அஞ்சல் பிரகாஷின் கூற்றுப்படி, புயல் அசாதாரணமாக பூமத்திய ரேகைக்கு அருகிலேயே உருப்பெறுவது ஒரு தற்செயலான நிகழ்வு இல்லை. "காலநிலை மாற்றத்தால் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் பூமத்திய ரேகைக்கு அருகிலும் கடல் நீர் சூடாகி, புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது." "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை 28 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சூடாக இருந்தால் அங்கு புயல் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பு புயல் உருவாகாத பகுதிகளிலும்கூட வெப்பநிலை இந்த அளவுக்கு உயரும்போது, அது நிலைமையை மாற்றுகிறது," என்று விளக்கினார் அஞ்சல் பிரகாஷ். கடந்த சில தசாப்தங்களில் வங்கக் கடல், அரபிக் கடல் என இரண்டுமே கணிசமாக வெப்பமடைந்துள்ளதாகக் கூறுகிறார் அவர். மேலும், "கடல் மேற்பரப்பின் வெப்பநிலை பல பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் முதல் 1.4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. கடல் பரப்பில் வெப்ப அலைகள் தோன்றுவதும் அவை நீடிக்கும் காலமும் அதிகரித்துள்ளது," என்றும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,Sri Lanka Airforce படக்குறிப்பு,புயலின் தன்மையை அடிப்படையாக வைத்து பேரிடர் மேலாண்மை தொடர்பான திட்டங்களை வகுப்பதைச் சவாலாக்குகிறது. இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் தரவுகள்படி, 1951 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கு 0.15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை உயர்ந்து வந்துள்ளது. 1982 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வங்கக் கடலில் மட்டும் 94 கடல் வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தப் போக்கு, புயல்கள் மற்றும் பருவநிலைகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ், இதனால் அவற்றைக் கணிப்பதிலும் சவால்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். 'திட்வா புயல் மெதுவாக நகர்வதே காரணம்' ஆனால், அனைத்து நிபுணர்களும் சமீபத்திய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்ற கருத்துடன் உடன்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் முனைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, பிபிசி தமிழிடம் பேசியபோது, சென்யார் மற்றும் திட்வா புயல் ஒரே காலகட்டத்தில் உருவானது ஒரு தற்செயலான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். அதோடு, "புயல் உருவாவதை வெப்பநிலை தவிர வேறு பல காரணிகளும் தீர்மானிக்கின்றன. வங்கக் கடல் இயற்கையாகவே தீவிர புயல்கள் உருவெடுக்கக் கூடிய கடல் பகுதியாகும். அத்தகைய பகுதியில், புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் எந்த வகையிலும் அதிகரித்துவிடவில்லை" என்று அவர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, சென்யாரும் திட்வாவும் ஒப்பீட்டளவில் குறைந்த தீவிரம் கொண்ட புயல்களே. "இலங்கை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் திட்வா பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம், அது மெதுவாக நகர்வதுதான். அது மெல்ல நகர்வதாலும், அதிக நேரம் புயல் நீடிப்பதாலும், மழைப் பொழிவு தீவிரமாக உள்ளது," என்று குறிப்பிட்டார் முனைவர் மொஹபத்ரா. படக்குறிப்பு,புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. வானிலையை கணிப்பதில் ஏற்படும் சிக்கல் புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஒரு காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியானதாகக் கருதப்பட்ட அரபிக் கடலில், 1980களில் இருந்து தீவிர புயல்கள் தோன்றுவது 150% அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், வங்கக் கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்பநிலை பதிவாகி வருகிறது. உதாரணமாக ஆம்பன் புயல் உருவானபோது வங்கக் கடலில் 32-33 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலை நிலவியது. அதாவது, "ஒரு காலத்தில் உச்சகட்ட பருவமழை மற்றும் பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் மட்டுமே இருந்த நிலைமை இப்போது ஏப்ரல் முதல் டிசம்பர் வரை நிலவுகின்றன. இதனால் புயல்கள் தோன்றக்கூடிய காலகட்டங்களும் மாறுகின்றன," என்று கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். அவரது கூற்றுடன் உடன்படும் வகையில் பேசிய, இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர் ராக்ஸி மேத்யூ கோல், இந்தியாவின் வானிலை கணிக்க முடியாததாக மாறி வருவதாகக் கூறுகிறார். "புவி வெப்பமடைவதில் 93 சதவிகிதத்திற்கும் அதிகமான வெப்பத்தை பெருங்கடல்கள் உறிஞ்சிக் கொள்கின்றன. இந்தியா மூன்று பக்கங்களிலும் வேகமாகச் சூடாகி வரும் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டுள்ளது. அந்தச் சூடான கடல் பரப்பில் நிலவும் வெப்பக் காற்று, ஈரப்பதத்தை அதிகமாகத் ஈர்த்துக் கொள்ளும். இதனால் நீண்ட காலம் மழை பெய்யாமல் இருக்கும். எனவேதான், மழை பெய்யும் காலகட்டத்தில், அது லேசான, பரவலான மழைப்பொழிவாக இல்லாமல், குறுகிய, மிகத் தீவிரமான கனமழையாக இருக்கிறது," என்று விளக்கினார் முனைவர் ராக்ஸி. அதோடு, இதே கடல் வெப்பம்தான், இந்திய பெருங்கடல் பகுதிகளில் புயல்களையும் தீவிரப்படுத்தி, அவை நீண்ட காலம் நீடிக்கவும், வேகமாகத் தீவிரமடையவும் வழிவகுப்பதாகத் தெரிவித்தார் அவர். கடலோரப் பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து புயல் மற்றும் கனமழையுடன், வெள்ளப் பேரிடர்களும் நிலச்சரிவுகளும் சேர்ந்து வருவதால், கிழக்கு மற்றும் மேற்குக் கடலோரங்களில் உள்ள பல மாவட்டங்களில் காலநிலை தணிப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கடினமாகிறது. அதோடு, ஒவ்வொரு ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயர்வும் புயலின் தீவிரம் பத்து மடங்கு அதிகரிக்க வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை விஞ்ஞானிகளை கவலையடைச் செய்யும் விஷயமும் இதுதான். பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூற்றுப்படி, "கடல் வெப்ப அலைகள் 2050ஆம் ஆண்டுக்குள், 'ஆண்டின் மூன்றில் இரண்டு பங்கு' காலத்திற்கு நீடிக்கலாம். அதன் காரணமாக, சென்யார், திட்வா போன்று ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாவது பொதுவான வானிலை நிகழ்வாகிவிடக் கூடும்." இதனால், புயல்களின் தாக்கங்களுக்கு நடுவில், "மீட்புக்குத் தேவைப்படும் கால அளவு" சுருங்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கிறார் அவர். குறிப்பாக, ஒரு புயலை எதிர்கொண்டு சமாளிக்கும் நேரத்திற்குள், மக்கள் மற்றுமொரு புயலின் தாக்கத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது சவாலாகிவிடும் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, மாறி வருகின்ற இந்த சூழல் மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்துகின்றன, அதற்கு திட்வா மிகச் சமீபத்திய சான்றாக விளங்குகிறது என்றார் அவர். தெற்காசியாவில் மோசமான வானிலை நிகழ்வுகள், மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நடந்துள்ளன. ஐ.நா.வின் 30வது காலநிலை உச்சி மாநாட்டில் இந்தியா தனது புதுப்பிக்கப்பட்ட காலநிலை வாக்குறுதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலோரப் பாதுகாப்பு, நகர்ப்புற வெள்ளப் பேரிடர் மேலாண்மை, தாங்குதிறன் மிக்க உள்கட்டமைப்பு போன்ற காலநிலை தகவமைப்பு நடவடிக்கைகள் குறித்த தெளிவு இந்தியாவிடம் இன்னும் குறைவாகவே இருப்பதாகக் கூறுகிறார் அஞ்சல் பிரகாஷ். உறுதியான தகவமைப்புத் திட்டங்கள் இல்லாமல், கிழக்குக் கடற்கரைகளின் பாதிப்புகளை இந்தியா எதிர்கொள்வதாக எச்சரிக்கும் அவர், போதுமான, நீண்டகாலத் திட்டமிடலின்றி இலங்கையும் தொடர்ந்து காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார். மேற்கொண்டு பேசிய அவர், "இந்தியா தனது நீண்டகால இலக்குகளை அடைய சுமார் 21 டிரில்லியன் டாலர் காலநிலை நிதி தேவை என்று சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால், தெளிவான திட்டத்தை முன்வைக்காத காரணத்தால், அதுகுறித்த விவாதங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது." என்று குறிப்பிட்டார். இந்தியா, இலங்கை இடையிலான முன்னெச்சரிக்கை ஒத்துழைப்பு மேம்பட்டுள்ளதாகக் கூறிய அஞ்சல் பிரகாஷ், "இரு நாடுகளும் தொடர்ந்து பேரிடர்களைச் சந்திக்கின்றன. அவை கணிக்க முடியாதவையாக, கடுமையானவையாக இருக்கின்றன. ஆகவே அதற்கேற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டியது அவசியம்," என்று விளக்கினார். அவரது கூற்றுப்படி, சென்யார் மற்றும் திட்வா புயல்கள் ஒரே நேரத்தில் தோன்றியது, கடல் நிலைமைகள் மாறிக் கொண்டிருப்பதன் அறிகுறி. உலகில் வேகமாகச் சூடாகி வரும் வெப்பமண்டல கடல் பரப்பில் இருக்கும் இந்தியா மற்றும் இலங்கையின் புதிய யதார்த்தம் இதுதான் என்கிறார் அஞ்சல் பிரகாஷ். அவரைப் பொருத்தவரை, சென்யார் மற்றும் திட்வாவின் கதை இரண்டு புயல்களைப் பற்றியது மட்டுமல்ல. அது மாறி வரும் ஒரு பெருங்கடலின் தன்மை மற்றும் அதன் விளைவாக, இந்த நாடுகளின் கடலோரப் பகுதிகளில் எதிர்காலத்தில் மேலதிகமாக பாதிக்கப்படக் கூடிய நிலையில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9w1wvy35o
  5. வணக்கம் நெடுமாறன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். சொந்தமாக விமானங்கள் செய்தோமா....................... அங்கு பல்கலைக் கழகங்களில் இருக்கும் இருக்கும் குப்பை போடும் தொட்டிகளை கூட, காலால் அமத்த மூடி திறக்கும் தொட்டிகள், நாங்கள் சொந்தமாகச் செய்யவில்லை..................🤣. முன்னர் எங்கேயோ இந்த குப்பைத் தொட்டி டிசைன் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கின்றேன். Autofiction என்பதை Science fiction என்று மாற்றினால் போச்சு...................😜.
  6. இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.
  7. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·proednsoSta0mufc51gmtai900h1m153h7cu2a0galmg306cf38at338 fgh · #கேவலமான #உண்மைகள் !!!!!! படித்தேன்!!!பகிர்ந்தேன்!!!! 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!! 8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!! படித்ததில் பிடித்தது:- 1. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.! 2. வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும், சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது.. 3. பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.! 4. தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம். 5. முதியோர் இல்லத்திற்கு பணம் கொடுங்க, பொருள் கொடுங்க, உணவு கொடுங்க, உடை கொடுங்க.. ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க.. 6. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 7. டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.! 8.ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட, ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.! 9. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை. 10. அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்.. இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்... 11.கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கிட வேண்டியிருக்கிறது.! 12.மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்.. ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்.. மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்.. 13. மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை.. அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்.. 14. ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம். 15. ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க? 16. அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்......!
  8. அது… பாட்டி இல்லை. அப்பா. 😂 பாட்டியை… போன கிழமை, பூனை பிடிச்சுக் கொண்டு போட்டுது. 🤣
  9. மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் ........ சிவாஜி & பத்மினி .......! 😍
  10. அரசுப் பேருந்துகளின் நெருக்குதலே தனியார் பேருந்துகளின் வேகம் .தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் இரண்டு நிமிட இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்கி நெருக்கடி கொடுப்பதுதான் காரணம் கவன சிதைவுக்கு காரணம் அனைத்து பேருந்துகளிலும் பாட்டு கேட்க தடை செய்ய வேண்டும் பயணிகளிடம் பாட்டு கேட்பதற்கான செல்போன்கள் உள்ளன. குறிப்பிட்ட ஊரை சொல்லி டிக்கெட் ஏறிய பின்பும் கத்தி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே செல்லவே அரைமணி நேரம் ஆக்கி விடுவார்கள்,சில பஸ்கள் 60 நிமிடம் கூட எடுத்துக்கொள்ளும். நகருக்குள் தேவையில்லாமல் விட்ட நேரத்தை பிடிக்கிறேன் என நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது. குறிப்பாக பெண் பயணிகள். அரசு பஸ்க்கு முன்னால் சீக்கிரம் போவீர்களா என்று கேட்டுத்தான் ஏறுகிறார்கள். பெண் பயணிகள் ஓட்டுநர் அருகே உட்கார்ந்து அவர்களை உசுப்பேற்றுகிறார்கள்.பெண் பயணிகளை பஸ்சின் பின் பகுதியில் அமரவைத்தாலே பாதி விபத்து குறையும். வருவாய் அதிகம் எதிர்பார்க்கும் உரிமையாளர் வருவாய் குறைந்தால் ஓட்டுநர் நடத்துனரின் வேலை பறிபோகும் என்ற அவல நிலையும் காரணம்
  11. மின்சார தைலம் - தடவும் போதே ஷாக்கடிக்க போகுதப்பா..
  12. யாழ்பாணத்து பொட்டி கடைகளில் கிளிப் மாட்டி தொங்கியது எல்லாம் நினைவில் இருக்கா ரெல் மீ..
  13. தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே ! சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் 57, உடற்கல்வி இயக்குநர் 102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும். ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html டிஸ்கி : இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும் அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?
  14. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கடும் மழையுடனான வானிலையின் போது, இந்த பகுதியிலுள்ள வீடொன்று மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளது. இந்த செய்தியை அறிந்த பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் குறித்த வீட்டை அண்மித்து மீட்பு பணிகளை ஆரம்பித்த தருணத்தில் அந்த பகுதியில் மீண்டும் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ராணுவத்தின் உதவியுடன் தேடல் இந்த மண்சரிவில் அப்பகுதியிலிருந்த ஏனைய வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டதுடன், காப்பாற்றுவதற்காக விரைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர். பிரதேச இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல்களில் 9 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இன்றைய தினம் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை மண்ணுக்குள் புதையுண்ட 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் கிராம சேவை உத்தியோகத்தரின் கண்காணிப்பில் புதைக்கப்பட்டன. ஏனையோரை தேடும் பணிகளுக்காக ராணுவத்தினர் இன்று வரவழைக்கப்பட்டு, மாலை முதல் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பகுதியில் ஆறொன்று ஊடறுத்து செல்கின்றமையினால், மீட்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. படக்குறிப்பு,வி.கே.முத்துகிருஸ்ணன் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலுள்ள வீடொன்றின் உரிமையாளரான வி.கே.முத்துகிருஸ்ணன், முதல் வீட்டில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து, ஏனைய இளைஞர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சற்று மேலே வந்த தருணத்திலேயே அவருடைய வீட்டுக்கு கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இறுதி நொடியில் தப்பித்த தருணம் இறுதி நொடியிலேயே தான் தப்பித்ததாக வி.கே.முத்துகிருஸ்ணன் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார். ''மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்த குடும்பங்களுடன் காப்பாற்ற போன இளைஞர்களும் இறந்து விட்டார்கள். முதல் வீட்டை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் சென்றார்கள். மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டிலுள்ளவர்களை காப்பாற்றும் போது, மறுபடியும் மண்சரிவு வந்தது. பாரிய சத்தத்துடன் மண்சரிவு வந்தது. எனக்கு தெரிந்தளவில் 23 பேர் அந்த இடத்தில் இருந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஐந்து குடும்பங்கள் அந்த இடத்தில் இருந்தது. என்னுடைய வீட்டோடு சேர்ந்து 6 குடும்பங்கள். குறிப்பிட்டளவு உடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இன்னும் பலரை தேட வேண்டியுள்ளது. இனிமேல் நாங்கள் அந்த இடத்தில் இருக்க மாட்டோம். அந்த இடத்திலுள்ள மக்களுக்கு நிரந்தர இடமொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டார். உதவ சென்றவர் உயிரிழந்த சோகம் படக்குறிப்பு,மண்சரிவில் உறவினரை இழந்த உஷா தனது மைத்துனனை இழந்த சரசவிகம பிரதேசத்தைச் சேர்ந்த உஷா, ''சரியான மழை. அப்போது இரண்டு பேர் வந்து, பிள்ளைகள் எல்லாம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றனர் என மைத்துனரிடம் சொன்னார்கள். போய் உதவி செய்வோம் என்று மைத்துனர் அழைத்தார். நாங்கள் போக வேண்டாம் என கூறினோம். ஆனாலும் பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரை பற்றிய தகவலே கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலையில் தான் தெரியும் இப்படியான சேதம் நடந்திருக்கிறது என்று. அவருடைய உடல் கிடைத்தது.'' என கண்ணீருடன் தெரிவித்தார். 'காப்பாற்ற சென்றவர் உயிருடன் இல்லை' படக்குறிப்பு,தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜா தனது சகோதரனின் மகனை இழந்த பாக்கியராஜாவும், '' அவர் என்னுடைய அண்ணாவின் மூன்றாவது மகன். அவருக்கு கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. அவர் தொழில் செய்துவிட்டு வரும்போது, இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிள்ளையை தூக்கி வந்து வீடொன்றில் விட்டுவிட்டு, வீட்டில் அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிவிட்டு வருகின்றேன் என்று சொல்லி இன்னுமொரு முறை போயிருக்கின்றார். அப்படி சென்றவர் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.'' என குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cde69885rk6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.