• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. karu

  karu

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   11

  • Content Count

   1,848


 2. நெற்கொழு தாசன்

  நெற்கொழு தாசன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   487


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   28,694


 4. Nitharsan

  Nitharsan

  கருத்துக்கள உறுப்பினர்கள்


  • Points

   3

  • Content Count

   732Popular Content

Showing content with the highest reputation on 12/08/2014 in all areas

 1. 11 points
  சரி பின்னக் காதலிப்பம்... அவளுக்குப் பயமாகவிருந்தது. எப்படி இந்த இரவைக் கழிப்பது? எரிந்து கொண்டிருந்த குத்து விளக்கு அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. உடல் கூசத் தன் சேலையால் போர்த்துக் கொண்டாள். அவனை ஒரு தரம் நினைத்துப் பார்த்தாள். முரடனாயிருப்பானோ? மனம் கிடந்து தவித்தது. "சே! சே! இதென்ன கலியாணம்? முன்பின் தெரியாதவனோடு ஒரு முதலிரவு. நான் எப்படி வளர்ந்தேன்? எப்படி வளர்க்கப்பட்டேன்? எப்படி ஒரு ஆணின் நிழல் கூட என்னில் படாமல் பார்ர்த்துக் கொண்டேன்? திடீரென்று இதென்ன. . .?" பெரியவர்கள் எல்லாம் பார்த்துப் பேசி எல்லாம் முடித்து விட்டார்கள். தாய் தந்தை பெரியவர்களின் சொல்லைத் தட்டக் கூடாதென்பதற்காகத்தானே நான் இந்தக் கலியாணத்திற்குச் சம்மதித்தேன். இப்போது ஓர் ஆணுடன் எப்படி வேண்டுமானாலும் இருக்க லைசன்சு தந்துவிட்டார்கள். "அப்படியானால் நான் இதுவரை காத்ததெல்லாம். . .?" அவளுக்குத் தன்னை நினைக்கவே அருவருப்பாயிருந்தது. சே சே நான் எவ்வளவு கீழ்த்தரமானவளாகப் போகப் போகிறேன். முன் பின் தெரியாத அவரின் ஆதிக்கத்துக்குட்பட்டு, என்னை இழந்து, இந்த இரவிலேயே என் நிறை, மானம் எல்லாவற்றையும் அவரிடம். . . நினைக்க நினைக்க வெட்கமும் வேதனையும் அவளைப் பிடுங்கியெடுத்தன. இன்னும் சில நிமிடங்கள்தான். அதன் பிறகு அவன் வந்துவிடுவான். எல்லாரும் உறங்கி விடுவார்கள். முன்பின் அறிமுகமே இல்லாத அவனும் அவளும் அந்தத் தனியறையில். . . இதுவரை தங்களுக்குத் தாங்களே போட்டு வைத்திருந்த வேலிகளைத் தாண்டி. . . உணர்வுகளுக்கு அடிமையாகி, எல்லைகள் வரம்புகளைத் மீறிய அச்சங்கமத்தில் விலங்குகள்போல் நடந்து கொள்ளுவதற்குத்தானா சாந்தி என்கிறார்கள், முகூர்த்தமென்கிறார்கள்? இதிலேயென்ன சாந்தியிருக்கிறது? இதற்கு எதற்கு முகூர்ததம்? ஆயிரம் காலமாக வளர்த்த பயிர் இந்தக் கலியாணமாம். அது வேறு சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறதாம். அவளுக்குச் சிரிப்பாயிருந்தது, வெறுப்பாகவுமிருந்தது. "பேசாமல் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் யாரையாவது காதலித்திருக்கலாம்." அவள் அங்கலாய்த்தாள.; காதலித்திருந்தால் எவ்வளவு நல்லது. அவர் வருவார். இருவரும் பழகிய பழக்கத்தில் சினேகமாக, மகிழ்வாக, காதல் கைகூடிய நிலையில் எத்தனை வரம்புகளைத் தாண்டினாற்தான் என்ன? நட்போடும் உரிமையோடும் உணர்வுகளைப் பரிமாறி, என்னில் அவரும், அவரில் நானும் சங்கமிக்க, சுகிக்க எவ்வளவு சந்தோசமாயிருக்கும். மனத்தில் வெறுப்பேயிருக்காதே. "இதென்ன? இவரோடு நானெப்படி. . .?" "நான் அவரோடு பேசியதுமில்லை. பழகியதுமில்லை. எடுத்த எடுப்பில் என் முந்தானையை. . . இவருக்காக. . .சே! சே!. . . " அவள் துவண்டு போனாள். மனம் பேதலித்துப் போயிற்று. ஓர் வரனுக்காக அவள் காய்ந்து கிடந்தவளல்ல. உரிய நேரத்தில் பெரியவர்கள் செய்யவேண்டியதைச் செய்வார்கள் என்று அந்தப் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டுத் தானுண்டு தன் பாடுண்டு என்று வாழ்ந்தவள். ஆனால் இப்போது அவளுக்குத் தான் செய்தது தவறோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. கட்டுப் பெட்டியாக இருந்து விட்டோமே. காதலிக்கத் தெரியாததால் யாரோ முன்பின் தெரியாத ஓர் அன்னியனைக் கல்யாணம் என்ற பெயரால் எடுத்த எடுப்பிலேயே கட்டியணைக்க வேண்டிய கீழ் நிலைக்கு வந்து விட்டோமே என்று அவள் மனம் தவித்தது. சோர்ந்துபோய் அவனுக்காக அவள் காத்திருந்தாள். உடல் முழுவதும் பயத்தில் நடுங்கியது. கதவு தட்டப்படவில்லை. திறந்தது. அதிலாயினும் இங்கிதம் வேண்டாமோ? "இப்படித்தான் தன்னையும் தன் அனுமதியின்றித் திறந்து விடுவானோ?" அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட அவளுக்குத் தைரியமில்லை. கடைக் கண்ணால் அவன் வருவதை அவதானித்துவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள். உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது. பெண்மைக்கேயுரிய பயிர்ப்பில் அவன் அருகே வரவர தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆமையாய் ஒடுங்கிக் குறுகினாள். "ஹும். . ." செருமல் சத்தம் கேட்டது. அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்க்க மனதில்லை. மீண்டும் செருமல். விளக்கை மறைத்து நின்ற அவனது நிழல் கூட அவள் மீது கவிவதை அவளால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து கொண்டாள். நிமிர்ந்தாள். ஹி. . . அவனது அசட்டுச் சிரிப்பு. பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை. ஒதுங்கி நின்றாள். என்ன பேசுவது? எப்படித் தொடங்குவது? ஒன்றும் புரியாத மௌனம். வார்த்தைகள் வரமறுத்தன. சே! நான்தான் வெட்கத்தில் நிற்கிறேன். இந்த ஆள் ஏதாவது கதைக்கலாம் தானே. . .! அவருடைய அவசரத்துக்கு என்னோடு கதையென்ன வேண்டிக்கிடக்கு?- மனதில் வெறுப்போடு நினைத்தாள். மௌனம் தொடர்ந்தது. பாவம் ஒரு பாவமுமறியாத அப்பாவியோ தெரியாது. சில வேளை நல்லவராயுமிருப்பார். நாம எதுக்குச் சும்மா வெறுத்து வெறுத்து நினைக்கவேணும்? முதன் முதலாக அவள் நினைவில் ஏதோ அவனைப் பற்றிய கனிவு. "ஹும். . . இந்த விளக்கு சரியான புகையா இருக்குது லைற்றப் போடுவமா. . . " முதன் முதலாக அவன் வாய் திறந்தான். "இந்த வெளிச்சமே அதிகம் போல இருக்கு. எதுக்கு லைற்றெல்லாம்."-அவள் நினைத்தாள். பக். விளக்கு அணைந்தது. திடுக்கிட்டாள். தலை சுற்றியது. பளிச். லைற் வந்தது. அப்பாடா! அவளுக்குச் சற்று ஆறுதலாயிருந்தது. அறைக் கதவைப் பார்த்தாள். அதை அவன் தாளிடவில்லையென்று தெரிந்தது. பக்கத்து அறையில் யாரோ கலியாணத்திற்கு வந்திருந்தவரின் குறட்டைச் சத்தம் கேட்டது. நல்ல இழுவை இழுக்கிறார். -ஒரு பகிடி விட்டான். "களுக்"-அவளுக்குச் சிரிப்பு வந்தது. "நானும் இப்படித்தான். படுத்தனெண்டா ஒண்டும் தெரியாது. குறட்டைதான்".-அவனது சுய விமர்சனம். எனக்குச் சத்தம் கேட்டா நித்திரை கொள்ள ஏலாது. -அவனை நோக்கிய அவளின் முதல் வார்த்தை. அது அவனை ஆதரித்தா அல்லது நிராகரித்தா?-அது அவளுக்கே தெரியாது. ஏதோ, பகிடியை ஒரு உண்மையோடு கலந்து சொல்லி வைத்தாள். "அப்ப நான் கீழ படுக்கிறன். நீங்க அந்தக் கட்டில்ல படுங்க."-அவன் தலையணையையும் ஒரு போர்வையையும் இழுத்தான். அவளுக்குத் தர்ம சங்கடமாயிருந்தது. எதிர் பார்த்தது ஒன்று, நடந்தது ஒன்று. "சே! சே! நீங்கள் வயதுக்கு மூத்தவர். நீங்க இந்தக் கட்டில்ல படுங்க. . . நான்,,. கீழ படுக்கிறன்". "இதென்ன, நாங்களென்ன இந்தியாக் காறரா? பால் செம்போட நீங்கள் வந்து முன்பின் தெரியாத என்ர கால்ல விழுறதுக்கும், புருசன் சாப்பிட்ட எச்சில் இலையில சோறு போட்டுச் சாப்பிடுறதுக்கும், புருசன் தான் சொகுசாக் கட்டில்ல படுத்துக்கொண்டு பொஞ்சாதிய நிலத்தில படுக்க வைக்கிறதுக்கும். . . ? எங்களுக்கெண்டு நாகரீகமான தனித்துவமான கலாச்சாரம் இருக்குது, பண்பாடு இருக்குது. பேசாமக் கட்டில்ல படுங்க".-படபடவென்று கூறிவிட்டுத் தலையணையையும் போர்வையையும் நிலத்தில் எறிந்தான். மெதுவாக உள்ளுக்குள் சிலிர்த்தாள். "சே! நான் எவ்வளவு கீழாக அவரை நினைத்தேன். அவர் சரியான நல்லவர் போல கிடக்குது. எண்டாலும் நம்ப ஏலாது. காரியத்தை நிறைவேற்ற வாழைப் பழம்போலப் பேசுறாரோ தெரியாது. லேசாக இளகி விடக் கூடாது".-அவள் நினைத்தாள். "இப்பிடிப் பெண்கள மதிக்கிற நீங்கதானா சீதனத்த வெகு கறாராப் பேசியது?"-குத்தலாகக் கேட்டாள். "ஐயையோ! நானா பேசின நான்? வீட்டாக்கள் விடமாட்டம் எண்டுற்றாங்க. நான் உங்கட படத்தப் பார்த்துப் போட்டு, உங்களக் கோயில்லையும் நேரில பாத்துப் போட்டு. , . ஓம் எண்டுற்றன். நான் என்ன செய்யிறது? கூடப் பிறந்த ஒண்டு ஒண்டுமில்லாம என்ன எதிர்பாத்துக் கொண்டு அண்ணா! அண்ணா! எண்டுற்றுக் கிடக்குதே. அதனால அவங்க வாங்கிறத வாங்கிப் போட்டுத்தான் விடுவம் எண்டு நிண்டுற்றாங்க." அவன் வழிந்தான். கதை எங்கோ திரும்பி எங்கோ போகத் தொடங்கியது. அவளுக்கு ஆறுதலாயிருந்தது. "அப்பாடா! இப்போதைக்கு மரியாத கெடத் தேவையில்ல. இந்த இரவை இப்பிடிக் கதைச்சே களிச்சிரலாம்." அவன் தொடர்ந்தான். "எனக்குப் பேசி முடிக்கிற கலியாணத்தில விருப்பமில்ல. அதில நம்பிக்கையுமில்ல. . . அதால. . ." "அதால. . .?| தங்கச்சியிர விசயத்தை முடிச்சுப்போட்டு. . . " "முடிச்சுப் போட்டு. . ." ஆரையாவது காதலிச்சிக் கலியாணம் முடிப்பமெண்டுதான். . யோசிச்சனான், . . ஆனா. . அதுக்குத் தைரியம் காணாது. சந்தர்ப்பமும் இடங்கொடுக்கயில்ல. . அதால. " "அதால. . . ?" "ஹும். . . கலியாணத்த முடிச்சுப்போட்டுக் காதலிப்பமெண்டு யோசிச்சன். . ." "ஆரை?" "ஆரை. . . முடிக்கிற ஆளைத்தான்." "ஓஹோ! சீதனத்தையும் வாங்கிப்போட்டு. . . ?"-அவள் கேட்டாள் "ஓம். . அதுக்குப் பிறகு பிரச்சினையில்லைத்தானே! வைவ் விட்ட ஐ லவ் யு எண்டு சினிமா வசனம் பேசலாம்தானே. பயமுமில்ல, ஹாய், ஹுய் எண்டு கத்தி பிரச்சனையுமெடுக்கமாட்டாள்." "அப்ப காதலியுங்கவன். கலியாணம் முடிஞ்சுதானே! எனக்கும் கவலைதான். முன்பின் தெரியாத ஒருவர முடிச்சுப்போட்டு. . . இவ்வளவு காலமும் பாதுகாத்ததையெல்லாம் ஒரே இரவில இழக்கிறத நினைச்சால். . . இதைக் காட்டிலும் ஆரையாவது காதலிச்சுக் கலியாணம் செய்தா இந்த வெட்கக் கேடு இல்லைத்தானே!" "அப்ப காதலியுங்கவன். . . ஆரையாவது. . ."-அவன் குத்தலாகச் சொன்னான். "நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும். இனி..."-அவள் அத்தோடு நிறுத்திக்கொண்டாள். மனத்திற்குள் குமுறல். தாங்காது மீண்டும் தொடர்ந்தாள். "ஏன் இந்த முதல் நாளிலேயே இப்படிக் குத்தலாப் பேசுறயள். நீங்க இருக்கக்குள்ள நான் ஏன் ஆரையும் காதலிக்க வேணும்?" "ஆரையுமெண்டால். .அதுக்குள்ள நான் அடங்கக்கூடாதெண்டோ சொன்ன நான்? விருப்பமெண்டா என்னக் காதலியுங்கவன். ஆர் வேண்டாமெண்டது?" "ஹும். . . யோசிப்பம்." -அவளின் சறுக்கலான பதில். "நீங்க யோசிச்சு முடிவெடுக்கிற வரைக்கும் எனக்குப் பொறுக்க ஏலாது." அவளுக்குச் சிலீரென்றது. என்ன இவன் தனது சுயரூபத்தைக் காட்டப் போகிறானோ! அவன் சொன்னான்- "எனக்கு நித்திர வருகுது. நான் இந்தக் கட்டில்ல ஒரு ஓரத்தில படுத்துக்கொள்ளுறன். இது டபிள் பெட் தானே! நாம ரெண்டு பேரும் ஆளுக்கொரு தொங்கலில ஒருவரோடொருவர் உரசாமப் படத்துக்கொள்ளலாம். நீங்களும் நித்திரையக் கொள்ளுங்க. . . இல்லாட்டி இருந்து யோசியுங்க. குட் நைற்|." அவன் குறட்டை விடத் துவங்கி விட்டான். அது உண்மையோ பொய்யோ! ஆனாலும் அவளுக்கு அது இனிய சங்கீதமாயிருந்தது.
 2. 8 points
  பெரும் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது இலையுதிர்காலத்தின் கடைசிப் பாடலை நீண்டவால்க் குருவி. வானத்தின் சோகங்களையும் வீதியின் தனிமைகளையும் பழுத்த ஊசிஇலைகளின் துயரங்களையும் துணைக்கழைத்து நேசிப்பின் வரிகளை இழைத்துக் கூவியழுகின்றது. சேர்ந்து இசைக்கும் குரலொன்று வருமென்ற தேடலில் நியமம் தப்பாத இடைவெளிகளை சலிப்பின்றி விட்டு காத்திருக்கவும் செய்கின்றது. நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலில் சூரியன் மரணிக்கத்தொடங்குகிறான். இருளின் பெருக்கத்தொடு இயைந்து மௌனத்தின் இடைவெளியும் நீண்டு கனக்கத் தொடங்குகையில், அந்த இடைவெளிகளின் நிசப்தத்தில் மூச்சின் ஒலிகளை நிறுத்திக் காவலிருக்கத் தொடங்குகிறேன். இன்னொருகுரல் எங்காவது ஒலித்துவிடாதா.... நீள்கின்ற தனிமை இந்த இலையுதிர்காலத்தொடு கலைந்துவிடாதா .... நீண்டவால்க் குருவியின் ஒற்றைக்குரலும் தளம்பத்தொடங்குகிறது. குளிர் மெல்லப் பரவ. அங்குமிங்கும் வெண்துகள்கள் சிந்தத்தொடங்குகிறது. எங்கும் இருள். தூண்களில், மின்குமிழ்களில் தடித்த கோடுகள் நீள்கின்றன. யன்னல்கள் அடைந்து கொள்கின்றன. உதிர்ந்துகிடக்கும் மஞ்சள் இலையொன்றை எடுத்து நரம்புகளோடு பேசத்தொடங்குகிறேன். உள்ளங்கையில் தவறிவிழுந்த ஒற்றைத் துளியின் சூட்டில் நீண்டவால்க் குருவியின் மௌனத்தால் நட்சத்திரமொன்று உதிர்ந்துகொண்டதை உணர்ந்தேன். காலடியில், வானம் வெறுமையாகிக் கிடந்தது.
 3. 2 points
  குமாரசாமியின் குப்பைகள். என்ரை குப்பையளை இஞ்சை கொட்டப்போறன். விருப்பமான ஆக்கள் கிண்டிக்கிளறிப்பார்க்கலாம். இங்கு அநியாயினிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 4. 2 points
  பெண்ணே.. பெண்ணே... காதல் கொண்டேன் உந்தன் கண்ணில் மின்னல் கண்டேன் உன்னால்தானே தூக்கம் மறந்தேன் விண் மேகம்போல நானும் மிதந்தேன் செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...! வெல்லமாய் இனிக்கிறாய் மனசுக்குள்ளே...!! கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...! என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...? காதல் சொல்லித் தருவாயா? இல்லை... வேண்டாம் என்று மறைவாயா? என் இதயம் திருடித் தொலைவாயா? கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு ! என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு ! நீ அன்றி நான் வாழும் என் வாழ்வில் அர்த்தங்கள் இல்லை என்று... புரிந்துவிடு ! வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட... இதயம் சின்னச் சின்னத் தாளமிட... என் பக்கம் ஓடி நீ வாடி... உன் மடியில் நான் சாய...! போகாதே பெண்ணிலவே தூரத் தூர... என் மீது காதல் சாரல் தூறத் தூற... நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற... நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ... உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம் அதுதானே என் வாழ்வின் வண்ணக்கோலம் குறிப்பு: "கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.
 5. 2 points
  என்ன அருமையான பதிவு , முதலில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள் , விமர்சனத்தை நாடு அடைந்த பின்னர் செய்யலாம்
 6. 2 points
  கதையை பாத்தால் உங்கை எல்லாரும் தலையங்கத்துக்கு ஏற்றமாதிரி எழுதீனம் எண்ட மாதிரியெல்லோ கிடக்கு....... இப்பவெல்லாம் தலையங்கம் தன்ரை பாட்டிலை இருக்கும்.... ஆனால் கதை காங்கேசன் துறையிலை தொடங்கி தூத்துக்குடியாலை பம்பாய் போய் பிறகு பாக்கிஸ்தானுக்காலை ஈரானுக்கு போய் அங்கை பிரச்சனைப்பட்டுக்கொண்டு மலேசியாவுக்கு வந்து...மலேசியாவாலை ரஷ்யா வந்து......அங்கை நாலு பெட்டையளுட்டை அடிவாங்கி போலந்துக்கு வந்து.......அப்பிடியே ஜேர்மனிக்காலை பிரான்ஸ்போய்....அதுக்காலை லண்டன் வந்து....அங்கையிருந்து மெக்சிக்கோ போய்......பொய்...போய்....அமெரிக்காவிலை லாண்ட் பண்ணி ரெஸ்ற் எடுத்து....கன்னடா போய் அலஸ்காவிலை கதை முடியும். ஆனால் தலையங்கம் அப்பிடியே இருக்கும்.
 7. 2 points
  மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா, யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை. தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார். முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம். ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம். அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்… இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு. இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க… 2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும், ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம். இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!
 8. 2 points
 9. 1 point
  வணக்கம், NOWWOW (புதிய சந்தர்ப்பக்கள்) அறக்கொடை நிறுவனத்தின் சுயம் தற்தொழிற் திட்டம், அதன் முன்னேற்றம் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இத்திட்டம் 2013ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. நலிவுற்ற இளம் விதவைகளின் வாழ்வாரதார மீட்பு முயற்சியாக யாழ் சிவில் சமூகத்தினதும் யாழ் கத்தோலிக்க இளைஞர் பேரவையினதும் மதச்சார்பற்ற முன்னெடுப்பாக அமைந்த ஒரு திட்டம். இது இளம் பெண்களை கூட்டுறவு முயற்சிகளாக ஒன்று திரட்டி சுயதொழில் வர்த்தகத்தில் ஈடுபட வைப்பது. எனினும் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக அமைந்திருப்பது அவர்களுடைய அனுபவமின்மையேயாகும். புதிய சந்தர்ப்பங்களானது, உணவுப்பொருட்களைத் தயாரித்துப் பைகளிலடைத்துச் சந்தைப்படுத்தும் முயற்சியில் இந்தப் பெண்களுக்கு சந்தைப்படுத்துதல், தேவையறிதல், சுகாதாரமாகப் பைகளிலடைத்தல், வர்த்தகப் பணத்தைக் கவனமாகப் பேணுதல் போன்ற விடயங்களில் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 87 இளம் விதவைகள் மாயவனூர், அம்பல்குளம், வட்டக்கச்சி, விவேகானந்த நகர், கூழமுறிப்பு (Koolamurippu) ஆகிய பகுதிகளிலிருந்து பயனடைந்துள்ளார்கள். 2015ம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 60 பெண்கள் இத்திட்டத்தில் இணக்கப்படவுள்ளார்கள். மேலதிக விபரங்களுக்கு புதிய சந்தர்ப்பங்களின் இணையதளத்திற்குச் செல்லவும். நன்றி சுபா http://nowwow-us.org/ https://www.facebook.com/nowwowcharity
 10. 1 point
  இதை தெரிந்தவர்கள் என்னவென்று கூறுங்கள் பாப்போ ...
 11. 1 point
  ஊரில் இருந்து இப்ப தான் ஸ்ருடன் என்று லண்டனுக்கு வந்தவள்.. லண்டனில்.. எங்கட ஆக்கள்.. அகதி என்று வந்து வாழுற ஆடம்பர வாழ்க்கையை பார்த்திட்டு.. ஸ்ருடன்ரா இருந்து.. சீரழிவு தான்.. நானும் அகதி ஆவம் என்று.. லோயர் சொல்லிக் கொடுத்த பொய்களோடு அகதி அந்தஸ்துக்கோரி உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் (ஹோம் ஆபிசில்) ஒப்புவித்த பொய்கள் வெற்றி பெறும் என்ற ஒரே நம்பிக்கையில்... பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா. அப்போது... ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அவசரஅவசரமாக கைப்பைக்குள் கையை விட்டு கிண்டி.. ஒருவாறு போனை வெளியே எடுத்தவள்.. வந்திருந்த மெசேச்சை பார்த்ததுமே.. அட இந்த நாயா.. இவன் தொல்லை தாங்க முடியல்லையே.. இவனை எப்படி கட் பண்ணுறது.. ஊரில இருக்கேக்க தான் இவன் தொல்லைன்னா.. இங்க வந்துமா. ஒரே ஹாட் சிமைலியா கலர் கலரா அனுப்புறானே.. இவனுக்கு என்றே தினமும் அப்டேட் செய்து விடுறாங்களோ... வரிசையா அடிக்கிட்டே போறானே... கறுமம் பிடிச்சவன்.. என்று மனசுக்குள் திட்டிக் கொண்டே.. தனக்கு உடனவே விசா கிடைப்பது போலவும்... தன் வருங்கால லண்டன் வாலிபன் தன்னை காதலிக்க வருவது போலவும்.... அவர் எப்படி எல்லாம் இருக்கனும் என்றும்.. கனவில் மூழ்கத்தொடங்கினாள்.. ஜீவிதா. ஜீவிதா.. அழகு என்றாலும்.. சினிமாப் பைத்தியமும் கூட. சினிமா நடிகைகள் போல அலங்கரிப்பதில் அவளுக்கு அலாதிப் பிரியம். அலங்கரிப்பது மட்டுமன்றி.. சினிமா நடிகர்களோடு தன் போட்டோவை இணைத்து வைத்து.. சோடிப் பொருத்தம் பார்ப்பதில் இருந்து அவளுக்கு எல்லாமே சினிமா தான். சூரியா.. விஜய் மாதிரி இல்லை என்றாலும்.. சிவகார்த்திகேயன் ரேஞ்சில ஒருத்தன். ஆறடி உயரம்.. சிக்ஸ் பக் வைச்ச சிக்கான உடம்பு.. அப்பப்ப 5 நட்சத்திர விடுதியில்.. தண்ணி அடிக்கிற.. பார்ட்டி. நல்ல கார்.. அழகான வீடு.. என்று கற்பனைக் குதிரையை தாறுமாறாக ஓட்டிக் கொண்டே போனவள்.. மீண்டும் ஐபோன் சிணுங்குவதை கேட்டு.. அந்த நாயாத்தான் இருக்குமோ... சனியன் தொலைஞ்சு போகுதில்லையே என்று திட்டிக்கொண்டே மெசேச்சை பார்த்தவள்..ஹோம் ஆபிஸ் அவளை அகதி விண்ணப்பம் தொடர்பில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் தேதியை குறிப்பிட்டு அனுப்பி இருந்த மெசேச் என்று கண்டதும்... என்ன இவ்வளவு கெதியா செய்யுறாங்கள்.. விசா உடன தரப்போறாங்களோ.. என்ற எண்ணிக் கொண்டே.. தனது லோயருக்கு விசயத்தை போன் போட்டுச் சொல்லி முடித்தவள்... மீண்டும்.. போனை எடுத்து அவனுக்கு ஒரு ரெக்ஸ் போட்டாள். இத்தோடு என்னை தொந்தரவு செய்வதை விட்டிடு. உனக்கும் எனக்கும் ஒத்து வராது. நீ.. ஊரில இருந்து எவளை என்றாலும் மேய். எனக்கு கவலை இல்லை. என்னை விட்டிடு. எனக்கு உன்னில காதலும் இல்லை.. கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லி அவளைப் பொறுத்த வரையில் அவனுக்கான இறுதி மெசேச்சை அனுப்பிய திருப்தியில் போனை கைப்பையில் போட்டாள். சிறிது நேரத்தில் போன் வைபர்.. சிணுங்கத் தொடங்கியது. யார்.. அவனாத்தான் இருக்கும். எடுத்துக் குடுக்கிற குடுவையில.. எனி இஞ்சால பக்கமே தலைவைச்சுப் படுக்கமாட்டான்.. என்று போனை.. பையில் இருந்து ஆத்திரத்தோடு வெளியே இழுத்து எடுத்தவள்.. வைபரின் பொத்தானை அழுத்தி.. ஹலோ என்றதும்.. என்னடி.. லண்டனுக்கு போனதும்.. உனக்கு பெரிய மகாராணி என்ற நினைப்போ. இங்க ஊருக்க இருக்கேக்க.. நீதானேடி வந்து ஐ லவ் யு சொல்லி.. என் வாழ்க்கையே நாசம் பண்ணினனீ. இப்ப என்னடி பெரிய பத்தினி வேசம் வேண்டிக் கிடக்கு உனக்கு. கடைசியும் முதலுமா ஒன்று சொல்லுறன் கேள்.. உனக்கு காதல்.. கலியாணம்.. இதெல்லாம் பொழுதுபோக்காக இருக்கலாம். எனக்கு அப்படி இல்ல. நான் உன்னை உண்மையாவே தான் காதலிச்சன். இப்பவும் காதலிக்கிறன். எப்பவும் காதலிப்பன். ஏன் இந்த உலகத்தில..மரம் செடி கொடியை காதலிக்கிறவன் இல்லையா. அப்படி உன்னை ஒரு மரமா நினைச்சு காதலிச்சிட்டு போவன். ஆனால்.. அதுக்காக.. ஏதோ உனக்குப் பின்னாடி வழிஞ்சு கொண்டு வருவன் என்று மட்டும் நினைக்காதே. நீயும் உன்ர லண்டனும்..அழகும்.. திமிரும் உன்னோட. அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்ல. நான் ஊரேட இருந்தாலும்.. நானா வந்து உன்னைக் காதலிக்கல்ல. நீயா வந்தா... நீயா போறா. அதுக்குள்ள என்னடி.. ரெக்ஸ்.. வேண்டிக் கிடக்கு ரெக்ஸு. லண்டனுக்கு போனதும்.. ஊரில இருந்தது மறந்து போச்சோ. உனக்கொரு காலம் வந்தா.. எனக்கும் ஒரு காலம் வரும்டி. அப்ப தெரியும்.. என்று அவளை பேசவிடாமலே முழங்கித் தள்ளியவன்.. தானே வைபரை கட் பண்ணியும் கொண்டான். அட.. இதைத்தானே நானும் எதிர்பார்த்தான். போடா நாயே. யாருக்கு வேணும் எனி உன்ர காதலும்.. கத்தரிக்காயும்... என்று அவன் மீதான வெறுப்பை இன்னும் வளர்த்துக் கொண்டு அவனை விட்டு மனதளவில்... தூர விலகி இருக்க முனைந்தாள் ஜீவிதா. இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்... ஜீவிதா.. ஜி பி இடம்.. மருத்துவ அறிக்கைக்காக வந்திருந்தாள். ஜி பி மருத்துவ அறிக்கையை கையளிக்க அவளை உள்ள கூப்பிட்டிட்டு.. நீங்கள் இப்ப 3 மாத கர்ப்பிணியா இருக்கிறீங்க... ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமானதா எங்கட பதிவில இல்லை. இதைப் பற்றி உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்.. கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா என்றார்...?! ஜி பியும் தமிழ் என்பதால் அவள் மீது கூடுதல் அக்கறை காட்டி விசயத்தை அக்கறையோடு அணுகினார். அது வந்து டொக்டர்.. என்று இழுத்தவள்.. பின் விசயத்தை சொல்ல ஆரம்பித்தாள். நான்.. இங்க ஒருவரை விரும்பினனான். அவரும் என்னை விரும்பினவர் தான். அவர் இங்கத்தையான் பிரஜை. இங்கு பிறந்து வளர்ந்தவர். தமிழ் ஆக்கள் தான். நான் அகதியா பதிஞ்சிருந்த போது.. எனக்கு விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில.. எப்படியோ அவரைக் கட்டி வாழத்தானே போறன் என்ற அவசரத்தில சில விசயத்தில... கவனக் குறைவாவே இருந்திட்டன். இப்ப விசாவும் பிரச்சனையாப் போச்சுது.. இதுவும் பிரச்சனையாக் கிடக்குது. அவரும் இப்ப என்னோட நல்ல மாதிரி இல்லை. அவருக்கு இப்ப வேற கேர்ள் பிரண்ட் இருக்குது. அது லோக்கல் பிள்ளை. அவருக்கு அவளோட கூட ஒட்டும் உறவும். என்னை விட நெருக்கமா தன்னோட அவள் இருக்கிறாள் என்று அவர் நினைக்கிறார். மற்றும்படி.. அவர் தப்பான ஆள் கிடையாது. ஹாங்க் அதுஇதென்று ஒன்றுமில்லை. நல்லவர் தான். ஆனாலும்.... இதுதான் பிரச்சனை என்று முடித்தாள் ஜீவிதா.. கண்களில் கண்ணீர் நிரம்ப. இதைக் கேட்டு ஜி பி அவளைத் தேற்றியபடி.. இப்ப இந்தப் பிள்ளையின் எதிர்காலம் பற்றி தான் நீங்கள் யோசிக்கனும். எனி கருவை கலைக்க எல்லாம் முடியாது. அது றிஸ்க். நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறதால உங்களை ஊருக்கு பிடிச்சும் அனுப்ப ஏலாது... அந்த விசயத்தில நீங்கள் லக்கி. இல்லை டொக்டர். விசா நிராகரிக்கப்பட்டிருந்தாலும்.... என்ர லோயர் அப்பீல் பண்ணி இருக்கிறார். கேஸ் கோட்டுக்கு வரப் போகுது. அதுக்கு சப்போட்டா இந்த மருத்துவ அறிக்கை உதவும் என்று தான் எடுக்க வந்தனான். லோயரைட்டும் விசயத்தைச் சொல்லி இருக்கிறன். அவர் விசா அலுவலை முதல்ல பார்ப்பம். பிறகு மற்றதைக் கவனிப்பம் என்று சொல்லி இருக்கிறார். என்ர அவசரத்தால சொந்தக்காரரும் என்னோட அவ்வளவு நல்லமில்லை. இருந்தாலும்.. அப்பா அம்மாவுக்காக சமாளிக்கினம்... என்று தன் மனப்பாரத்தை டொக்டரிடம் கொட்டித் தீர்த்தவள்.. கண்களால் வழிந்த கண்ணீரைத் துடைத்தப்படி.. ஜிபியிடம் இருந்து விடைபெற்றாள். அப்போது.. நீண்ட காலத்தின் பின்.. வைபர் ஒலித்தது. ஆச்சரியத்துடன் அதன் பொத்தானை அழுத்தி காதில் வைத்த போது.. அவன்.. தான் ஊரில் இருந்து லண்டனுக்கு வந்திருப்பதை ஜீவிதாவிடம் சொன்னான். வசதி என்றால் வந்து நேரே சந்திச்சு கதைப்பதாகவும் சொன்னான். ஜீவிதா மறுமுனையில் மெளனமாக.. பேச்சின்றி.. ம் ம்.. ங்களால் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவள்.. ஒரு கட்டத்தில்.. கதறி அழுதாள். அவளின் அழுகுரல் கேட்டவன்.. என்னாச்சு ஜீவிதா. என்ன பிரச்சனை. ஏன் அழுகிறீங்க. நீங்க போட்ட ரெக்ஸில கோபத்தில தான் அப்ப திட்டிட்டு போயிட்டன். பிறகு யோசிச்சு பார்த்தனான். நான் பண்ணினது தப்புன்னு தெரிஞ்சு கொண்டன். சும்மா ரெக்ஸில வைபரில் சொறி சொல்லி சரிவராது. உங்களுக்கு அதிர்ச்சி தர லண்டனுக்கே வந்து.. நேரில சந்திச்சு.. விசயத்தை கதைக்கனும்.. என்று முயற்சி செய்து தான் இப்ப அதில வெற்றி பெற்றிருக்கிறன். இப்ப போய் ஏன் அழுகிறீங்க என்றான்.. கவலை தோய்ந்த குரலில். அதுக்கு ஜீவிதா.. எல்லாம் முடிஞ்சி போச்சு வசந்த். நான் இப்ப முன்னைய ஜீவிதாவா இல்ல. நீங்க காதலிச்ச ஜீவிதாவாவும் இல்லை. என்னை மறந்திடுங்க.. என்று விம்பி விம்பி அழுதுகொண்டே சொல்லி முடித்து.... போனை கட் பண்ணினாள் ஜீவிதா. (எம்மவர் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றைத் தழுவிய கற்பனைப் பாத்திரங்கள் நிறைந்த கதை.)
 12. 1 point
  தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!
 13. 1 point
  பி வாசுவைப்பற்றியும் ஓரளவுக்கு தெரியும்......
 14. 1 point
  இன்னும் வரும்....
 15. 1 point
  படிக்கவேண்டும் புதிய பாடம்!! தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். ஒரு இயக்கத்தை உருவாக்குவது என்பது கஷ்டம் மிகுந்த அத்தியாயம். அதன் கட்டமைப்பு குலையாமல் மூன்று தசாப்தங்கள் வரை நகர்த்தி வந்தது என்பது பெரும் எதிர்நீச்சல்கள் மலிந்த அத்தியாயம். இக்கட்டமைப்பு குலைபடாமல் தொடர்ச்சியாக கொண்டுசெல்லப்பட வேண்டுமாயின் ‘பேதங்கள் மறந்த ஒற்றுமை‘ அவசியம். புகலிடத்திலும் தளத்திலும் ‘சிங்களம்‘ தமிழ்மக்கள் மத்தியில் ஒற்றுமையீனத்தை உருவாக்கி தமிழர் உரிமைகளை பறிப்பதற்கான காய்நகர்த்தல்களை செய்து வெற்றிகொண்டு வருவதை நாம் உணர்தல் வேண்டும். எல்லைகள் அற்ற தடைகளைத் தாண்டி இயக்கம் வளர்ந்துள்ளது என்பதை காட்டுவதற்கு எத்தனையோ வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கலாம். கடந்த கால அத்தியாயங்களில் வரலாற்றின் ஒரு பகுதியைப் படிப்பினைக்காக பார்ப்போம். சந்ததியார், கண்ணன், பார்த்தன், சுந்தரம், உமாமகேஸ்வரன், பொபி, தாஸ், பற்குணம், மைக்கல், மாத்தையா, கௌசல்யன், அற்புதன்(EPDP), யோகேஸ்வரன், தர்மலிங்கம், அமிர்தலிங்கம் இவர்கள் எப்படி மரணித்தார்கள் என்பதை எனக்கோ உங்களுக்கோ விபரம் தெரியாது, ஆனால் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும், ஆரம்பகால உறுப்பினர்களுக்கும், அதைச் செய்தவர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். இவர்கள் எல்லோரும்(ஸ்ரீ சபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமார்) தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமிழீழ மலர்வுக்காகவும் சிங்களத்திற்கெதிராக போராட புறப்பட்டவர்களே ஆவார்கள். பலர் இந்த போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த அன்னிய ஆதிக்க சக்திகளின் சதி வலைக்குள் சிக்கி சின்னாபின்னமாகிப் போனார்கள். இவர்களில் இறுதிவரை நின்று இலட்சியம் மாறாமல் வெற்றி பெற்றவர்கள் விடுதலைப்புலிகள் மட்டுமே. இருப்பினும் கடைசியில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் பலரையும் சர்வதேச சதிவலைக்குள் சிறுகச் சிறுக சிக்க வைத்துவிட்டார்கள். தமிழீழ விடுதலைக்காக அடியெடுத்து வைத்த தலைவர்களை உண்மையிலேயே விசுவாசிப்பதாக இருந்தால், அவர்கள் முதல் அடியெடுத்து வைத்த நோக்கம், கொள்கை தமிழீழத் தாயகத்துக்காகத்தானென்றால்(தமிழரின் தாகம்), தேசத்தின் விடிவிற்காய் உயிர்நீத்த அனைவரும் மாவீரர்கள்தான் என்றால் பிரிந்து நின்று கூத்தாடிக் கோஷமிடுவதை விடுத்து அவர்களின் கனவை நனவாக்குங்கள். தற்பொழுது யாரை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பதுவல்ல எமது பிரச்சனை. நாம் எல்லோரும் விடுதலை இயக்கங்களை ஆரம்பித்து, அவற்றில் இணைந்து போராட புறப்பட்ட நோக்கம், தேவை இன்னும் தீர்க்கப்படவுமில்லை, அடையப்படவுமில்லை. இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது. தமிழர்கள் நாங்கள் தெளிவாக ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள், சிங்களவர்களால் மெல்ல மெல்ல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், தமிழர்கள் எந்த உரிமையுமின்றி சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் இன்னமும் உணரமுடியாமல் இருப்பது பெரும் வேதனைக்குரியது. எமது உரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும். எமது சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும். எமக்கென்று ஒரு நாடு வேண்டும். அதற்காக சிங்கள ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடவேண்டும். அதை விடுத்து அவன் LTTE, இவன் PLOTE, நான் TELO, நீ EPRLF, கிழக்கு, வடக்கு என்ற பிரிவினை வாதங்களை விடுத்து ஒரு குடையின் கீழ் நின்று எமது பொது எதிரியை, அந்நிய ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெற்றிகொள்ள வேண்டும். தமிழன் மீண்டும் தலை நிமிர்ந்து இந்த உலகத்தின் ஒரு முன்மாதிரியான இனமாக வாழ்ந்து காட்டவேண்டும். யூத இனத்தின் ஒற்றுமையின் பலத்தையும், திறனாற்றல் குணாதிசயங்களையும் கண்டறிந்த மேற்குலகமும் அரபுக்களும் அவர்களை அழிக்க நினைத்தார்கள், ஆனால் அவர்கள் தமது ஒற்றுமையால் இன்று உலகே வியக்கும் வண்ணம், பயப்படும் வண்ணம் வளர்ந்து நிற்கிறார்கள். தமிழர்களுக்கிடையில் உள்ள ஒரே காரணியான ஒற்றுமையின்மையே சிங்களவர்களுக்கு வாய்ப்பாகிறது. அத்தோடு தமிழர்களை வளர விட்டால் தமக்கு ஆபத்து வந்துவிடும் என நினைக்கும் அன்னிய ஆதிக்க சக்திகளும் தமிழர்களின் இந்த நிலையை சரிவர பயன்படுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு நீக்கப்பட்டபோது சரியோ தவறோ தமிழர் ஒற்றுமையைப் பற்றி மட்டுமே சிந்தித்திருப்பாராயின், போராடச்சென்ற நோக்கத்தை சற்று யோசித்துப் பார்த்திருப்பாராயின் வேறொரு இயக்கத்தை ஆரம்பிக்காது ஒதுங்கியிருக்கலாம். அப்படி ஒதுங்கியிருந்தால் எத்தனையோ இளைஞர்கள் அவர்கள் சென்ற பாதையை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்.மாறாக சென்றபாதையை திசை திருப்பி விடுதலைப்புலிகளுடன் இணைந்து மேலும் தமிழீழத்துக்கான போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருப்பார்கள். மேலும், PLOTE இயக்கத்தில் இருந்தவர்கள் காரணமின்றி கொத்துக் கொத்தாக உட்கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த இளைஞர்களின் போராட்ட சக்தி, ஆட்பலம் என்பன இந்த போராட்டத்திற்கு பயன்படாமலேயே மூழ்கடிக்கப்பட்டிருக்கப்பட மாட்டாது. பிற்காலத்தில் PLOTE போராளிகள் தேசியம், சுயநிர்ணயம் தனிஈழம் என்ற ஒரே கொள்கையின்கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து போராட முடியாமலேயே போய்விட்டது. அதற்கான காரணம் விடுதலைப்புலிகளின் அணியில் இணைவதற்கு உயிருக்கு உத்தரவாதமற்ற நம்பிக்கையீனம். அக்கால கட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை விட மேலதிக எண்ணிக்கையான எத்தனையோ வீர மறவர்கள், இன உணர்வுள்ள இளைஞர்கள், திறமையான போராளிகள், சிந்தனைவாதிகள்(தராக்கி சிவராம் போன்றோர்) ஏனைய இயக்கங்களில்(PLOTE, TELO, EPRLF, EROS போன்ற) உள்வாங்கப்பட்டிருந்தார்கள். இதேபோல கருணா பிற்காலத்தில் பிரபாகரனால் வன்னிக்கு அழைக்கப்பட்டபோது பிழை செய்தாரோ இல்லையோ தமிழர் ஒற்றுமையை மட்டுமே சிந்தித்திருப்பாராயின், தமிழர் போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருப்பாராயின், வடக்கு கிழக்கு என்று போராளிகளுக்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாதென்று எண்ணியிருப்பாராயின், விடுதலைப்புலிகள் அழிந்துவிடக்கூடாதென்று உறுதியாய் இருந்திருப்பாராயின் மரணதண்டனையேயாயினும் ஏற்று வன்னி சென்றிருப்பார். எதை எதை சிங்களவனும் அன்னிய ஆதிக்க சக்திகளும் எதிர்பார்க்கின்றனவோ அதையே தான் நாமும் செய்துகொண்டு இருக்கிறோம், எதிர்காலத்தில் செய்யவும் போகிறோம். காட்டிக்கொடுப்பதிலும் துரோகம் செய்வதிலும் நாம் தமிழர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் எவ்வளவு தான் வீரம் நிறைந்த போராளிகளாகவும், மதிநுட்பமிக்க திறமைசாலிகளாகவோ இருந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அன்னிய ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது மட்டுமல்லாமல் தமிழர் வரலாற்றில் மாறாத வடுவாக பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை ஆட்சேபிக்க முடியாது. நாம் சிங்கள மற்றும் அன்னிய ஆதிக்க சக்திகளின் திட்டம் நிறைவேற ஒத்துழைப்பதற்காக பிரிந்தே நிற்கிறோம். அதாவது இந்திய நலனிற்காக இந்தியாவை வழிநடாத்தும் RAW அமைப்பு தமிழீழ போராட்டத்தை அழிப்பதற்காக அதில் ஒரு நடவடிக்கையாக விடுதலைப்புலிகளை ஆத்திரமூட்டி இந்திய மக்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவரை அவர் எவராக இருப்பினும் கொலைசெய்ய வைத்தால் விடுதலைப்புலிகள் மேல் வைத்திருக்கும் ஆதரவை இந்தியத் தமிழ்மக்களிடமும் இந்திய மக்களிடமுள்ள தமிழீழ ஆதரவுத் தளத்தையும் உடைத்தெறிவதே ஒரே வழி என முடிவுசெய்தார்கள். பின் செய்தும் முடித்தார்கள், அதில் வெற்றியும் பெற்றார்கள். தமிழ் இயக்கங்களுக்கிடையில் விரோதத்தை வளர்த்தார்கள். டக்லஸ் தேவானந்தா போன்றவர்களைக் கொண்டு தமிழ்நாட்டில் கொலை கொள்ளை நடாத்தி ஒட்டுமொத்த இந்தியத் தமிழர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும் அவர்களது போராட்டம் பற்றியும் ஒரு வெறுப்பை தோற்றுவித்தார்கள். இலங்கையிலே தமிழர் தலைவர்களை இயக்களைக் கொண்டே கொல்லவைத்து இலங்கைத் தமிழர்களிடையே இயக்கங்கள் மேலான வெறுப்பைத் தோற்றுவித்தார்கள். இவற்றிலிருந்து நாம் படிக்கவேண்டிய புதிய பாடம் ஒற்றுமை என்பது புலனாக வில்லையா? அன்பான தமிழ் மக்களே! ஏன் இன்னும் நாம் விழித்துக் கொள்ளாமல் இருக்கிறோம்??? ஏன் இன்னும் இன்னும் எம்மை நாமே அழிப்பதற்கு துணைபோகின்றோம்??? தயவுசெய்து சிந்தியுங்கள்!!!!!!!! முரளி நடேசன் http://ulavan.wordpress.com/2010/07/30/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/
 16. 1 point
  கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்... high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York) இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான். college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)
 17. 1 point
  நாயை காப்பாற்றிய, மகிழ்ச்சியில்... டெல்பினின் மகிழ்ச்சியும், நாயின் நன்றியும்.... மிகவும் மனதை தொட்டது.
 18. 1 point
  இதை நான் மிகச் சிறுவனாக இருக்கும்பொழுது, எங்கள் கிராமத்து கடைகளில் வாங்கி விளையாடியிருக்கிறேன்.. பெயர் மறந்து போச்சு.. ஆள்காட்டி விரல் மேல் அந்த வளைந்த கீழ்த்தகட்டை வைத்து பிடித்துக்கொண்டு, மேலேயுள்ள தட்டையான தகட்டை கட்டை விரலால் கீழே அழுத்தியும், பின் அழுத்தத்தை விடுவித்தால், "டிக்" என ஒலி எழுப்பும். இப்படி பலமுறை தொடர்ச்சியாக விட்டு விட்டு அழுத்தினால், 'டிக்.. டிகி.. டிக்.. டிகி' வினோதமான ஒலிகள் கிட்டும். 5 பைசாவிற்கு அப்பொழுது கடைகளில் கிடைக்கும். காலியாகும் எண்ணை டின்களின் இரும்புத் தகடுகளை வெட்டி, இதனை தயாரிப்பார்கள். கூட்டாளிகளுடன் குறூப்பாக விளையாடி, தெருவை இந்த ஒலிகளால் அதிர வைப்பது வழக்கம். யாராவது பெருசுகள், தெருத் திண்ணைகளில் ஓய்வாக இருக்கும்பொழுது / தூங்கும்பொழுது இந்த சத்தங்களை பொறுக்காது "டேய்" என தோள் துண்டால் அடிக்க வருவார்கள்.. "போங்க, தாத்தா.." என ஒழுங்கு காட்டிவிட்டு ஒரே ஓட்டம் தான்..! எம் நினைவில் இப்படி சின்ன்ச் சின்ன அழியாத கோலங்கள்..! மறந்தே போய்விட்ட சிறுவயது நினைவுகளை புன்முறுவலுடன் இரைமீட்ட உதவியதற்கு நன்றி..!
 19. 1 point
  டெட்டொல், பொலிடோல் எல்லாம் போட்டுக் கழுவினால், பக்டீரியா செத்துப் போடுவினம். தமிழ் சிறியர் சொல்லுற மனமும் வராது. மூக்கு முட்ட பிடிச்சுப் போட்டு படுத்தியல் எண்டால்.... சொர்க்கம் தான்.
 20. 1 point
 21. 1 point
  அதுவும் நம்ம இளைஞன்...? யாகூ சற் ரூமில் 'அதைப்பற்றி கதைக்கிறோம்.. இதைப்பற்றிக் கதைக்கிறோம்' என்று கூப்பிடுவார்... பேந்து தட்டுத் தடுமாதிரி யாகூ சற் ரூம் போகப் பழகி... பேந்து வேற வேற சற் ரூம்கள் போகப் பழகி... இப்பிடித்தான் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்றொரு தொடர் கதை யாழில் உருவாச்சு. கணனிப்பித்தன் போன்ற பலருடன் தொடர்பில் இருந்தேன்... 2009இன் பின் நானும் சிலகாலம் ஒதுங்கி அல்லது நெற் பாவனையைக் குறைத்து இருந்ததால் பலருடைய உரையாடலை இழந்துவிட்டேன்.. எனினும் அவர்களில் பலர் மௌனமாக எனது முகனூலில் இருந்து.. எப்பவாவது ஒருமுறையாவது நலம் விசாரித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
 22. 1 point
 23. 1 point
  பரணி. 14.04.2003. வசி_சுதா. 21.04. 2003. ஆளவந்தான். 20.06.2003. தேவகுரு. 14.09.2003. பிரபா. 29.09.2003. சனியன். 04.10.2003. ஆதிபன்.18.10.2003. மதன். 29.01,2004. சயந்தன். 21.07.2004. நிர்மலன். 22.09.2004. ஜூட். 24.09.2004. சிறி. 25.09.2004. ஹரி.26.09.2004. நிதர்சன். 07.10.2004. டபிள். 17.11.2004 குளக்காட்டான்.30.11.2004. ஈழப்பிரியன். 30.01.2005. அனைவருக்கும், வாழ்த்துக்கள்.
 24. 1 point
  தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர் ஓ மை லாட் பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... தாய் மடியிலே மழலைகள் ஊமையோ சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ நோய் உடலிலா மனதிலா தேவனே நான் அழுவதா சிரிப்பதா கர்தரே... ஓ... மான்களும் சொந்தம் தேடுமே இம் மானிடன் செய்த பாவம் என்னவோ காவலே சட்ட வேலியே உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது சேவை புரிந்திட சேவகர் ஆயிரம் தேடிக் கொண்டாடிட நன்பர்கள் வந்தனர் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட் தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை என் கருணையே திறக்குமா சன்னிதி என் கர்தரே கிடைக்குமா நிம்மதி... ஓ... ஓ லாட் ப்லீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர் கண்களில் கண்ணீர் இல்லையே இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே கொண்டு வா இல்லை கொண்டு போ உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன் முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும் ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும் அன்று நடந்தது ஆவி துடித்தது இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
 25. 1 point
  வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோபம். எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். கோபம் உங்களின் நட்பை மட்டும் கெடுக்கவில்லை. உங்கள் உடல் நலனையும் கெடுக்கின்றது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறக்கவும் நேரிடும். இன்றைய நமது ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கோபத்தால் ஏற்படும் உடல் பிரச்சனைகளைக் காணலாம்… மன அழுத்தம் கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதய நோய் கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும். தூக்கமின்மை எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும். உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் இரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும். சுவாசக் கோளாறு சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். தலைவலி எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது. மாரடைப்பு பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளை வாதம் மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது. இனிமே தேவையில்லாம அதிகமா கோபப்படனுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். http://seithy.com/breifNews.php?newsID=122130&category=CommonNews&language=tamil
 26. 1 point
  புற்று நோய் வந்தால் சத்திர சிகிச்சை முடிந்த பின்னர் கதிர் வீச்சை கொண்டு அந்த வளர்ச்சி மீண்டும் வராமால் இருக்க கதிர்வீச்சின் சிகிச்சை(Chemotherapy) செய்வார்கள், அதே போல தான் இந்த தேசிய கொடி பிடித்த இளைஞ்னர் மீதான தாக்குதலும், தாயகத்தில் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் அது மீண்டும் தலை தூக்க வண்ணம் தடுக்க பாடுபடுபவர்களின் முயற்சியே இது அதாவது கதிர்வீச்சு சிகிச்சை செய்யீனம். அடிக்கடி சீமானுக்கும் செய்வீனம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் செய்யீனம்
 27. 1 point
  பலருக்கும்.... "இடம்விட்டு எழுதுதலும், சேர்த்து எழுதுதலும்" சரிவரத் தெரியாமல்.. பிரச்சினை உள்ளது. அத்துடன்.... ஆச்சரியக்குறி, கொமா, (......) அடைப்புக் குறிக்குள் உள்ள நீண்ட புள்ளி எங்கு போடவேண்டும் என்ற பாடத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன் வாத்தியார்.