-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
பேச்சு வார்த்தையில் என்ன பேசப் போகின்றார்கள்என்பது வெளிப்படையாக்கப் படவேண்டும். அதற்கு அரசாங்கமும் பேசப்போகின்றவர்களும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிடுவது சிறப்பு. அதில் முதலாவதாக இலங்கையில் முதலீடுசெய்யப் போகும் தமிழர்களுக்கு என்ன அரசியல் சார்ந்த உரிமைகள் வழங்கப்படும், அதற்காக வழங்கப்படவுள்ள மாநில சுயாட்சி அமைப்பு எப்படியமையும்? அதிலுள்ள சட்டரீதியான சுதந்திரங்களென்ன என்பனபோன்ற விபரங்கள் அடக்கப்பட வேண்டும். அதில் தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகள் உள்ளடக்கப்பட்டால் அதனை தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இரண்டாம் கட்டத்தை நோக்கி நகரலாம். ஆரம்பத்திலேயே பேய்க்காட்டும் தன்மை இருக்குமாயின் வந்து போன செலவைத் தரவேண்டுமென்ற முன்நிபந்தனையுடன் சிங்கள அரசுக்கு குட் பை சொல்ல வழிவகைகள் இருக்க வேண்டும். எதற்கும் விஸாவையும் றிட்டர்ண் ரிக்கற்றையும் முன்கூட்டியே வாங்கிக்கொள்வது நல்லது.
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாறெமக்குண்டு தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும். இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் எந்த இனப் பெண்ணிடமும் இருக்கவில்லை நெஞ்சிலுரம் என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம். தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை ஆட்டிப்படைக்கும் அயலார்கள் வாய்மூட வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும் எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும் அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட சொந்தங்காள் உம்மைக்கை தூக்கி வணங்குதற்காய் ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம் இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் நன்றே நடக்கும் நமக்கு.
-
karu started following வாத்தியார்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த வாழை மரத்திற்குப் பயித்தியம் பிடித்துலிட்டது, யாராவது ஏதாவது செய்து இந்தக் கண்றாவியைச் சுகமாக்குங்கள்.
-
தணலை மூட்டிய தமிழ்க்கவி வாணன்
தணலை மூட்டிய தமிழ்க்கவி வாணன் புதுவையென்னும் புகழுக்குரியவன் புனிதவேள்விக் கவிகளியற்றுவோன் எதுகை மோனை இலக்கணச் சாத்திரம் எதிலுங் கட்டுப் படாதவன் ஆயினும் வதுவை செய்து கவிமகள் தன்னையே வாழ்வு முற்றும் அவட்கென வாழ்ந்தவன் மதுவைத் தன்றன் தமிழிற் கலந்தனன் மாந்தி வீழ்ந்து மயங்கினர் ஆயிரம். அகவை ஐம்பது ஆனது அவன் கவிக்(கு) ஆயினும் பதினாறின் இளமையாள் தகைமையால் தமிழ் ஈழமறவரின் தழலெரிந்திடு நெஞ்சினை மூட்டினாள் பகைமை தோற்றது பாயும் மறவரின் படை நடந்தது பாரதம் சோர்ந்தது இகமெலாம் தமிழ் வீரம் தெரிந்தது ஈழதேசம் உயிர்த்து எழுந்தது. நீரிலே நெருப்பேற்றிய எங்களின் நேரிலாத் தலைவன் ஒளிர் சு+ரியன் போரிலேற்றிய வெற்றிச் சுடர்களைப் பொன்னெழுத்திற் புதுவை பொறித்ததால் தேரிலேறிய தீந்தமிழாளவள் திலகமாகத் திகழ அவன் கவி பாரிலே தமிழீழப் பரணியைப் பாட வேண்டியதில்லை யென்றானது. காற்றையே கயிறாக முறுக்கியும் கனலை நெஞ்சில் அடக்கியும் தங்களின் ஆற்றல் யாவும் விடுதலைக்கேயெனும் அணி வகுத்த மறவரின் நெஞ்சிலே ஏற்றி ஏற்றி உணர்வினை ஊட்டிய இரத்தினத்துரை எம் கவி வாணனைப் போற்ற நாவிற் புகழ்மொழி ஆயிரம் பொய்யிலாதவர் நெஞ்சிலுதிக்குமாம். வாழ்வு வேறு கவிக்களம் வேறெனும் வகை பிரித்த நடிப்புச் சுதேசியாய் தாழ்பிடித்து உயர்ந்திடத் தன்னிலை சாகஸங்கள் நடாத்த அறிந்திலான் கூழ் குடித்து அரைவயிற்றோடுதன் குடும்ப மோடினும் ஈழவிடுதலை நாளை நோக்கி நலிந்தவப் பெற்றியான் நமது தேசக் கவிதனைப் போற்றுவோம்! வேறு: புதுவைக் கவி எம் ரத்தினமே புகழ்மிக்குயர் நட் சத்திரமே எதுகைக்கொரு வெண் நித்திலமே எழுசப்த சுரத்தின் நிலமே வெல்லற்கரிய தமிழினிமை மேவக் கவியால் தளையிடையே அல்லல் படுமெம் நிலையுரைத்த சொல்லேருழவா சீராளா எழுத்தாம் அம்பை மழையாக்கி எறியும் வில்லை நாவாக்கி ஒளித் தூறல்களால் மானுடத்தின் உயர்விற் குறிவைத்துரமூட்டி புழுத்தே வழியும் சமுதாயப் பொல்லா நாற்றச் சிணிபோக்கி முழுத் தாரணியும் கழுவுண்ண முழுக்காட்டினை நின் கவியாலே! என்றும் நின்றன் இனியகவி ஈழமண்ணில் நிலை நின்றே நின்று மறவர்க்(கு) உரம் ஊட்டும் நின்றன் புகழைப் பறைசாற்றும்.
- மனிதா உன்னைத்தான்!
-
தமிழன்னை அருட்புகழ்
மிக்க நன்றி goshan_che. இது திருப்புகழில் சரணகமலாலயத்தை அரைநிமிட நேரமட்டில் என்ற செய்யுளின் சந்தத்தைப் பின்பற்றியெழுதியது.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
- மனிதா உன்னைத்தான்!
- மனிதா உன்னைத்தான்!
- தமிழன்னை அருட்புகழ்
பாராட்டுக்கு மிக்க நன்றி சுவி.- மனிதா உன்னைத்தான்!
- தமிழன்னை அருட்புகழ்
இன்று தாய்மொழி்தினம். எம் உயிரினுமினிய தமிழன்னைக்காக 2020 பெப்ரவரி 21 இல் நானெழுதிய அருட்புகழ் கீழே தரப்பட்டுள்ளது.- மனிதா உன்னைத்தான்!
- மனிதா உன்னைத்தான்!
- மனிதா உன்னைத்தான்!
View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.