Everything posted by Paanch
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இன்னும் சில வருடங்களின் பின்பு யாழ் உறவுகளை எண்ணிப்பார்க்கிறேன், யாரது...????
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
இது பனைமரத்துக்கு உள்ளே ஏதோ புகுந்து வந்து பூத்திருக்கு. ஈழத்துக்கு உள்ளே புத்தர் புகுந்து வந்து பூரிப்பதுபோல.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தன் குமாரசாமி சும்மா (இரு)ப்பவன்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உறவுகள் மறைந்தாலும் யாழ்களம், அவர்களின் உணர்வுகள் மறையாது பாதுகாக்கும் என்பதற்குச் சாட்சியான யாழ்கள உறுப்பினர் , "வசம்பு" அவர்களின் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்து வாழ்த்துகிறேன்!!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பச்சை ஒரு ஊக்கமாத்திரையாக விளங்கவேண்டுமே தவிர, போதைமாத்திரையாக விளங்கக்கூடாது. ஊக்கமாத்திரையும் மருந்தாக அளவோடு இருந்தால், யாழும் சந்ததியும் நோயின்றி வளரும்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
டாப்பு வருகைப் பதிவேட்டில், உள்ளேன் ஐயா...! என்று பதியுங்கள் என்றவாறுதான் நிழலி அவர்களின் வேண்டுகோள் இருந்தது. ஆனால் வருகை தருபவர்களோ! உள்ளத்தையே அள்ளும் கருத்துக்களையும் வண்ணப் படங்களுடன் பதிந்து அசத்துகிறார்களே!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா! யாழில் நுள்ளான் கடித்ததால் நேற்றுவரை உள்ளேவர முடியவில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அவர்களுக்கு, அவருடைய கனவுப் பைங்கிளியின் ஆசியுடனும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அஞ்சரன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அற்றாக்கை விட்டு திரும்பவும் அகிம்சையைக் கடைப்பிடிப்பதால் தமிழ் சிறி அவர்களால் ஒரு அடிகூட முன்னேற முடியவில்லை. அற்றாக் அவுட் ஆன்றோரும், சான்றோரும் கூடிநிற்கும் யாழ்களத்தில் ஆசாமி பாஞ்சுக்கும் பிறந்தநாள் வாழ்த்து. அதுவும் ராசவன்னியரின் தொழில்நுட்ப வண்ணத்தில்!... தமிழ் சிறி மந்திரம் ஓத, புங்கையூரன், சுவி, வந்தியதேவன், உடையார், பகலவன், ஈழப்பிரியன், மெசொபொத்தேமியா சுமேரியர், குமாரசாமி, வாத்தியார், விசுகு, யாயினி, ரதி, நெடுக்காலபோவன் என உறவுகளின் வாழ்த்துக்கள் ஒலிக்க மயங்கிவிட்டேன். புகழுக்கு மயங்காதோர் அவனியில் உண்டோ? மயக்கம் தெளிந்து நன்றி கூற எழுந்தபோது.... நாட்கள் ஓடிவிட்டன. உடன் நன்றி கூறத் தவறியமைக்கு மன்னிப்பும் வேண்டுகிறேன். நான் வாழ்த்தத் தவறியோரும் என்னை வாழ்த்தியபோது நெஞ்சம் நெகிழ்ந்தது. குறள் ஒன்றும் நினைவில் வந்தது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்நயம் செய்துவிடல்.' என் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சென்றவாரம் பிறந்த நாளைக் கொண்டாடிய மெசொபொத்தேமியா சுமேரியர், ராஜன் விஸ்வா, மற்றும் வாதவூரான் அவர்களுக்கும், இந்தவாரம் பிறந்த நாளைக் கொண்டாடிய பகலவன், புலவர், அனிதா, ஆகியோருக்கும், நேற்றுப் பிறந்த நாளைக் கொண்டாடிய கரன் அவர்களுக்கும் உளம்நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
உள்ளேன் ஐயா. புத்தகம் படிக்கிறேன்....- உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா? புலிகளின் தலைவருடன்
உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா? புலிகளின் தலைவருடன் 2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்டபோது அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்” என்று கூறிய அவர், “”உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன். போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார். தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் அன்டனி. படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல. வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்லஸ் அன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார். எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… என்று குழைந்து திரியும் குழந்தை என்றே அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள். அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல. துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை’ என ஆன்றோர் கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள். அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி “மாலதி படையணி’யில் நின்று களமாடியது. முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன. எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா… எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை… முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம் வரை உன் நினைவுகளும் உயிராய்… உணர்வாய் அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் எம்மிடையே நிற்கும். மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது. சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள். கிளிநொச்சி விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புலமொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார். ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன். என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகரமாட்டேன் என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார். அவரது மகன் 24 வயதே ஆன சார்லஸ் அன்டனி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார். மகள் துவாரகா 22 வயதே ஆன துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்கள் தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் மிக்க தலைவனை உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல், திமிருடன் பெருமிதம் கொள். asrilanka.com- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பல்லுப் புடுங்கியதால் வாய்திறக்க முடியவில்லை. உள்ளேன் ஐயா என்று உணர்த்தும் என் கை தெரிகிறதா வாத்தியார்....- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அவர்களுக்கு! 'காளையும் காவல்துறையும்' பதிவுக்கான படத்தை இணைத்தபோது நன்றாகவே பதிவில் பொருந்திக் காட்சிதந்தது. திரும்பத் திறந்து பார்த்தபோது படம் வரவில்லை. காரணம் தெரியவில்லை. அதனை நீக்கிவிட்டமைக்கு நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.
கடந்த மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமிழீழப் போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராசதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார். ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும், இராசதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். 14.12.2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் இறுதியெய்தினார். அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய சரித்திரம், http://www.tubetamil.com/watch-daily-tamil-news-online/tamil-eelam/history-of-bala-anna-3.html- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிப்புயல் இனியவனுக்குப் பிறந்தாள் வாழ்த்துக்கள்!! கவிப்புயலின் பாணியில் அவருக்கு ஒர் கவிதை; கவி ஒன்று பிறந்தது அவளுக்காக! புயல் ஒன்று பிறந்தது அவள் அப்பனாக!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.