Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. நந்தனுக்குப் பிறந்தநாள் தமிழ் தங்கைக்கும் பிறந்தநாள் கவிதைக்கும் பிறந்தநாள் சுரேசுக்கும் பிறந்தநாள் விசுகுக்கும் பிறந்தநாள் மீராகுகனுக்கும் பிறந்தநாள் யாழ் அன்புக்குப் பிறந்நாள் சசிவர்ணத்திற்கும் பிறந்தநாள் வாத்தியாருக்குப் பிறந்தநாள் சபேசனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கூற பாஞ்சுக்குப் பஞ்சியில்லை. பத்துப்பேருக்கும் வாழ்த்துமடல் அனுப்ப நான் பொத்திப் பொத்திச் சேர்த்தபணமும் போதவில்லை, அதுவும் காரணம். அதனால் அனைவரையும் ஒரு மடலில் வாழ்த்துகிறேன். நூறாண்டும் கடந்து நீடுழி வாழ வாழத்துகிறேன்.
  2. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய யாழ் உறவுகள் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
  3. சைக்கிள் ராணியை வாழ்த்துவதோடு அவர் தலையில் சூடிக்கொள்ள யாராவது பூ கொடுங்கப்பா இன்னும் மங்களகரமாக இருக்கும். .
  4. தமிழ்சூரியன் மற்றும் சாந்தி இருவருக்கும் இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!
  5. சுவையான உணவுகள், பாடல்களைக்கொண்டு யாழ்களத்தைச் சுவையூட்டும் சுவியருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!
  6. அஞ்சரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
  7. நிலாமதி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  8. பிறந்தநாள்..! அது வயதொன்றை ஏற்றி முதுமைகாண வைத்தாலும்! முதுமையை மறக்க வைத்தது! ராசவன்னியரின் வண்ணமிகு வாழ்த்து!! இசைக்கலைஞர் இளமையோடு பின்னவைத்து வாழ்த்தினார்! உளம்கசிந்து வாழ்த்தினார் ஒரு தம்பி சசிவர்ணம்! பாஞ் துள்ளியாட வாழ்தினார் குறும்புக்காரத் தமிழ் சிறி! உடையார் வாழ்த்தினார் இன்பம் மடைதிறந்து பாய்ந்தது! பாஞ்சுக்கு ஒரு 'ச' போட்டுச் சந்தோசமாய் வாழ்த்தினார் சுமேரியர்! நீலப் பறவையின் வாழ்த்தும் நாலும் பெற வாழ்த்தியதே! யாழில் ஒரு யாயினி மலர்ச் செண்டு கொண்டு வாழ்த்தினார்! 'என் இனிய பிறந்தநாள்' எனத் தன்னையும் வாழ்த்திக்கொண்ட குமாரசாமியர்! சுவி என்ற உறவொன்று சுவையோடு வாழ்த்திநின்றார்! செந்தமிழால் வாழ்த்தினார் இனிய செந்தமிழாளன்! மன்மத ஆண்டின் சுகுமாரன் விசுகும் வந்து வாழ்த்தினார்! வாத்தியார் வாழ்த்தினார், தந்தைநான் தனயனானேன்! ஆதவன் வாழ்த்தினார் வயதொன்றை ஏற்றிவைத்து! நுணாவிலான் வாழ்த்தினார் கணாவிலும் இன்பம் காண! ராசன் விசுவா வாழ்த்தினார் அண்ணன் பாஞ்சுக்கு 'ச்' தந்து! இணையவன் வாழ்த்தினார் இனித்தது உள்ளம்! நந்தனும் வந்தார் வாழ்த்தினார் 'ச்' தந்து ராசன் விசுவாபோல்! மன்மத ஆண்டில் வாழ்கவென வாழ்த்தி என்னை, வில்போல் வளைத்துவிட்ட உறவுகளே! மீண்டும் நிமிரவைப்பது எப்போது..!! ஊரறிய வாழ்த்திய, உள்ளத்தில் வாழ்த்திய, அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!!
  9. கயந்தி தீயா இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! மூத்தோரை வாழ்த்த வைத்த வாத்தியாருக்கு நன்றி.
  10. சுமேரியர் அவர்களுக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  11. யாயினி உங்கள் வயதை எண்ணிப் பார்த்தேன்..... நீங்கள் செவ்வாய்க்கிரகம் சென்று வாழ வாழ்த்துகிறேன்!! பூமியில் நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவதுதான் சம்பிரதாயம்.
  12. இணையவன் அவர்களை வாழ்த்தப் பிந்தியோருக்கும் பிந்திய அடியேனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனியவருக்கு உரித்தாகுக!!!!
  13. புங்கை அவர்களுக்கும், அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்காலைபோவன் அவர்களே! உங்களை வாழ்த்த இன்றுதான் படியேறி முடிந்தது.
  15. தமிழ் சிறி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! அர்ச்சுனன் மகன் அபிமன்யு போன்ற ஆற்றல் கொண்டவர்தான் தமிழ் சிறி அவர்கள்! அபிமன்யு சுபத்திரையின் வயிறில் இருக்கும்போதே பத்மவியூகப் போர்முறைபற்றி அறிந்து கொண்டதாக மகாபாரதம் கூறுகிறது. சிறி அவர்களும் பிறப்பதற்கு மூன்றுநாள் முன்னரே யாழ்கழத்தைக் கலக்குவதுபற்றி அறிந்துள்ளார்! தமிழ் சிறி அவர்கள் யாழ்கழத்திற்கு வந்தது 19 மாசி 2008. பிறந்ததோ...!! 21 மாசி 2008.
  16. றோசா மலர் பூத்த திங்கள் இன்று. இந்நாளில் பூத்த நுணாவிலனுக்கும், அகத்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  17. இன்றுவரை பிறந்த நாளைக் கொண்டாடிய, கொண்டாடும் அனைத்துக் கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!!
  18. நிழலி அவர்கட்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!! பருவ வயதான 40தை எட்டிய நிழலி அவர்களை வாழ்த்துவதோடு அவர்பொருட்டு நான் தேடிக் கண்டறிந்த உண்மைகளையும் இங்கு பதிவதில் ஆனந்தமடைகிறேன். ஆண்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆகக் காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி பெண்களிடம் கருத்து கேட்கப்பட்டபோது. ஆண்களுக்கு 40 வயதில் செக்சுடன் கூடிய கவர்ச்சி அதிகரிக்கும் எனத் தெரியவந்தது. 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களைக் கவருகிறது. ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும், விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  19. தமிழரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  20. பெருமாள் அவர்கட்கும்! அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!.
  21. இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன். பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களை நோக்கி ஓடி வந்த எம் மக்கள் குண்டு மழையால் கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகின்றது. அவன் மார்பை துளைத்த ஒவ்வொரு குண்டுகளும் இனத்தை அழிக்க துடித்த இனவெறியர்களையும், எம் மண்ணனை சுரண்ட நினைத்த ஏகாதிபத்தியங்களையும்(அமெரிக்கா,இந்தியா,சீனா,ஜப்பான்) எங்களுக்கு நினைவுபடுத்துகின்றது. தான் கொல்லப்படப்போவது தெரிந்தும் மாறாத உறுதியை கொண்டிருந்த அவன் விழிகள், இறக்கப்போவது தெரிந்தும் இனவிடுதலைக்காக போரிட்டு உயிர்நீத்த என் போராளிகளை நினைவுபடுத்துகின்றது. எம் மக்கள் மிகுந்த உவகையுடன் கொண்டாடிய உனது பிறந்தநாள் இன்று ஓட்டுமொத்த தமிழனத்தின் விடிவுநாளாக மாறியிருக்கின்றது. அன்புத் தம்பி, பாலச்சந்திரா! உன் சாட்சியாக, உனது அண்ணன்களாகிய நாங்கள் இன்றொரு சபதத்தை ஏற்றுக்கொள்கின்றோம், ”எமது வாழ்நாள் முழுவதும் உண்மையாகவும், உறுதியாகவும், நேர்மையுடனும் எம் இனத்தின் விடுதலைக்காக ”தனித்தமிழீழத்திற்காக” களமாடுவோம்” எள்ளளவும் என் இனத்திற்கு இழுக்கு ஏற்படும் அளவுக்கு எமது செயல்கள் அமையாது என்று” ஆயிரம் கைகளை ஒன்றிணைத்த வீர விழியே.. உன் வழி நின்று ஈழம் மீட்போமடா.., பாலச்சந்திரா! —–பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.
  22. கோமகன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!. யாழை மீட்டி இனிய நாதம் எழுப்பிவந்த அவர்.... அந்த இனிய நாத சுவைகளில் ஒரு சுவை சற்று அதிகமானதால் அதனைச் சரிசெய்யத் தவம்செய்யச் சென்றுவிட்டாரே.....! ஆனாலும் அவர் யாழில் மீட்டிய இசை இன்றும் காதில் ரீங்காரமிடுகிறது. கோமகன் அவர்களே! நீங்கள் எங்கிருந்தாலும் நலமுடன் நீடூழி வாழ்க!!. இன்றுவரை பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் நீடூழி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்!!.
  23. இன்று பிறந்தநாள் காணும் சாந்தி அவர்கட்கும். ஆனி 1ல் பிறந்தநாள் கண்ட சுண்டல் அவர்கட்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக!!
  24. இன்றுவரை இவ்வாண்டில் தங்கள் பிறந்தநாளைக் கொண்ட யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! :rolleyes:
  25. புலவருக்கும், பகலவனுக்கும்.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.