Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஆமா ஆமா அது தான் தலைப்பிலேயே போட்டால் மக்கள் படங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் அல்லவா! கடவுச் சொல்லை எத்தனை தடவை வேணுமென்றாலும் மாற்றலாமே? இதில் என்ன சங்கடம்?
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
இதுக்கு தான் சொல்லுறது யாழுக்குள் படுத்து கிடக்கணும் பொண்டாட்டியிடம் பேச்சு வாங்கணும். விளக்கத்துக்கு நன்றி நிழலி. ஏராளன் யார் தான் அப்படி நிற்கிறார்கள்? பாராளுமன்ற உறுப்பினர்களா? பொதுமக்களா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 கல்யாணி 65 வாழ்த்துக்கள் கல்யாணி. 17 கோஷான் சே 49 @goshan_che என்னைத் திட்டிக்கொண்டிருக்காமல் அடுத்த போட்டிக்கு தயாராகுங்கள்.
-
விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்!
கொழும்பில வைத்து அடுத்த ஜனாதிபதி நான் தான் என்றாய். யாழ்ப்பாணம் வந்ததும் பொது வேட்பாளர் என்கிறாயே என கேட்க வந்திருப்பாரோ?
-
கிளிநொச்சியில் 1286 இலவச காணி உறுதிப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி
தேர்தலைக் குறிவைத்து பல வேலைத் திட்டங்களைச் செய்கிறார். இதில் தமிழர்களுக்கு எத்தனை ?
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
@ரசோதரன் னின் பயணக் கட்டுரையில் உள்ள தலைப்பு போல நீங்களும் படமில்லாத சந்திப்பு என்றல்லவா போட வேண்டும். ஆகா வேட்டி சால்வையுடன் போய் கொண்டாட்ட இடத்திலேயே அவர்கள் செலவில் சந்திப்பை முடித்து விட்டீர்களோ? பாஞ்ச் அவர்கள் யாழை விட்டு முற்றாக ஒதுங்கியது மனவருத்தமாக உள்ளது.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
பாடசாலைகளை ஏன் தேசியப் படுத்துகிறார்கள்? தேசியப் படுத்திவிட்டால் இடமாற்றம் முதல் கொண்டு சகலதும் மத்திய அரசின் கைகளில் என்கிறார்கள்?
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
யார் என்ன தான் சொன்னாலும் விடுதலை தேசியம் என்பது மக்கள் மனங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. இதைப்பற்றி ஊரில் கதைக்க எனக்கும் பயம்.அங்குள்ளவர்களுக்கும் பயம். திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளவர்களின் மனநிலை இது தான். அதையும் மீறி சாந்தனின் இறுதி ஊர்வலம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாவீரர்தினங்களின் போது தம்மையும் அறியாமல் வெளிப்படுத்துகிறார்கள்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தமிழீழத்தின் அழகு தனி அழகு.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
அரசின் கையில் ஒப்படைத்தவர்களுக்கு என நடந்து என்றே கேட்கிறார்கள். சுட்டுக் கொன்றுவிட்டோம் என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள். அதைவிட்டு அவர்களுக்கு இழப்பீடு என்பது உலக மகா அநிஞாயம். அவர்கள் என்ன பணத்துக்காகவா போராட்டம் நடத்துகிறார்கள். ஆமாம் ஆமாம் முழு சிங்கள மயமாக மாறும்.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
அவசர அவசரமாக வைத்தியசாலைகளில் இருந்து பாடசாலைகள் வரை ஏன் தேசியமயமாக்குகிறார்கள். நாளைக்கு வடகிழக்குக்கு 13ம் திட்டம் போல ஏதாவது தீர்வு கொடுத்தால் தேசியமயமாக்கப்பட்டதெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாலா? இதைபற்றி யாருக்காவது தெளிவான விளக்கம் இருக்கிறதா? ஏன் தேசிய மயமாக்குகிறார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தலைவரே என்ஞாயி and be safe.
-
ஜனாதிபதியின் வடக்கு - கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்.
"யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுமந்திரன் எம்.பி. கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில், "யாழ்ப்பாணம் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் இந்தச் சபையில் உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இன்று இங்கு வந்தமைக்குத் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் முதல் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார். இன்று திறந்து வைக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் இந்த மருத்துவ பீடக் கட்டடம் வடக்குக்கு மாத்திரமன்றி நாட்டுக்கும் ஒரு நல்ல முதலீடாகும் எனச் சுட்டிக்காட்டலாம். மேலும் இது எதிர்காலத்தில் இலங்கையில் நிபுணர்களின் புகலிடமாக மாறும் என நான் நம்புகின்றேன். ஜனாதிபதி விசேட கவனம் முன்னதாக இந்தச் சபையில் உரையாற்றியவர்கள் கூறியது போல் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியிலும், மக்களின் அபிவிருத்தியிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 2005 இல் உங்கள் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை வட பகுதி மக்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைக்கின்றேன். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை நான் வாழ்த்துகின்றேன். இந்த முதலீடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை அன்புடன் வரவேற்பதுடன், இந்த விஜயத்தின்போது வடக்குக்கு அவர் ஆற்றி வரும் அனைத்துப் பணிகளையும் பாராட்டுகின்றோம்." - என்றார். https://tamilwin.com/article/president-development-of-north-and-east-1716595304 இதைவிட ஜனாதிபதியை யாராலும் புகழ முடியாது. நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கத் தான் வேண்டும்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஆகா நீங்க எங்கேயோ போயிட்டீங்க.
-
வினா விடை
முன்னர் Yahoo,Hot mail என்று இருந்தது. இப்போ Gmail தான் பிரபல்யம் என்று எண்ணுகிறேன்.
-
சென்று வாருங்கள் அண்ணா!
ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
2017 இல நானும் பிள்ளைகளை கூட்டிக் கொண்டு போய் ரொம்பவும் அசிங்கப்பட்டு விட்டேன். யானையில் இருந்து குளித்தால் யானைப்பலம் வரும் என்பார்கள். கொடுத்து வைத்த குடும்பம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@தமிழ் சிறிஉம் கலந்து கொள்வார் என எண்ணுகிறேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
அட நானும் ஏதோ புத்தரின் கோபப் பார்வை என்று எண்ணிவிட்டேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
கடந்த வருடம் இந்தநேரம் யாழ்ப்பாணத்தில் நின்றேன். மனைவியின் தங்கையின் மகன்(15 வயது)லைற்று பார்க்க போவோமா என்று அலுப்பு கொடுக்க சரி வா போவோம் என்று மோட்டார் சைக்கிளில் ஆரியகுளம் போய் சுற்றி பார்த்துவிட்டு பொலிஸ் நிலையம் என்று பல இடங்களையும் பார்த்தோம். நிறைய கூட்டமாகவே இருந்தது.ஆச்சரியமாகவே இருந்தது. என்னைப் போலவே பலரும் வந்திருப்பார்கள் என எண்ணினேன். வீடுவந்து படுத்து அடுத்தநாள் ஒருபக்க கன்னம் வீங்கிவிட்டது. அப்பிடி இருக்கும் இப்பிடி இருக்கும் என்று ஆளாளுக்கு வீடே ஒரு வைத்தியசாலையாகி எல்லோரும் டாக்ரராகிட்டாங்க. அதிலிருந்து எழுந்துவர 15 நாட்களாகி விட்டது. ரொம்பவும் கஸ்டப்பட்டுப் போனேன். இதுவேற தொற்றும் என்று என்னை ஒதுக்கியும் வைச்சுட்டாங்க. வீட்டுக்கு யாரும் வந்தாலும் கிட்ட வராதைங்கோ தள்ளி நில்லுங்கோ வாற சனத்தையம் பயப்புடுத்தி அட்டகாசம் பண்ணிட்டாங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடந்த காலங்களில் சரியாக விளையாடா விட்டாலும் இந்த போட்டியில் வெற்றிகள் அள்ளிக் குவிக்கும் என எண்ணுகிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
நன்னி உங்கள் இணைப்பிலிருந்து பாடல்களை கேட்க முடியாதா?- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆகா பெரிசு டொம் என்று குதித்துள்ளது. - புலிகள் காலத்திய இயக்கப்பாடல்களின் 221 இறுவட்டுகள் | திரட்டு
Important Information
By using this site, you agree to our Terms of Use.