கோசான்... நல்ல பிள்ளை. நீங்களே திரியை ஆரம்பியுங்கள்.
தமிழ் மக்களின் நன்மை கருதி, கட்டாயம் அர்சுனாவிற்கு ஒரு திறந்த மடல் எழுத வேண்டியது... அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும்... அந்தாள் விசர் கூத்தாட சந்தர்ப்பம் அதிகம்.
ஊரில் உள்ளவர்கள் அச்சம் காரணமாக அவரின் செய்கையை, கட்டுப்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. அதனை ஊர் மக்கள் சார்பாக, யாழ். களத்தில் உள்ள நாம் தான் செய்ய வேண்டும்.
ஒருவரும் அவரின் செய்கையை விமர்சிக்காத பட்சத்தில்... அவர் தான் செய்வது சரி என்று நினைத்து தொடரவே செய்வார். ஆனபடியால்... அவருக்கு ஒரு திறந்த மடல் அவசியம்.
சுற்றி வளைத்து அவரிடம் போவதைவிட யாழில் உறுப்பினராக்கி விட்டால் நல்லது.
யாழும் கலகலப்பாக இருக்கும்.
யாழ் இயங்காமலிருந்த நேரம் காணொளிகளைப்பார்த்த போது சில் காணொளிகளில் மன்னார் வைத்தியசாலைக்கும் இரணைமடு அணை உடைந்ததற்கும் விசாரணை நடத்த அர்ச்சுனாவாலேயே முடியும் என்கிறார்கள்.