Everything posted by ஈழப்பிரியன்
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை. நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை குளிர்காலப் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, கடுமையான இந்த பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன்படி, நியூயார்க் நகரின் சென்ட்ரல் பார்க்கில் 4.3 அங்குலம் (11 செ.மீ) பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவசரகால நிலை ஜனவரி, 2022க்குப் பிறகு இதுவே அதிகபட்சமான பனிப்பொழிவு என அந்நாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் மாநிலத்தின் பிற பகுதிகளில் 7.5 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. புயலுக்கு முன்னதாக, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு அவசரகால நிலையை அறிவித்திந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, சுமார் 1500இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன் பயணிகள் கடும் சிரமத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். Tamilwin2022க்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிக மோசமான வானிலை -...நியூயார்க்கில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அ...இப்போது நியூயோர்க்கில் நிற்கிறேன். 8 அங்குல பனிப்பொழிவு என்றார்கள். எமது இடத்தில் 5" அடித்துள்ளது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரிசில்களை அள்ளுவதற்கு அவ்வளவு அவசரமோ?
-
தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -
கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்: தமிழரசுக் கட்சி மீது கடும் விமர்சனம்! முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் இன்று (22) தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தவிசாளர் தெரிவுக்கான கூட்டத்தில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ரகசிய வாக்கெடுப்பு முறையில் இரண்டு கட்டங்களாக இந்தப் போட்டி இடம்பெற்றது. வாக்கெடுப்பு விவரம்: முதற்கட்ட வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (10), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (6) மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி (5) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறைந்த வாக்குகளைப் பெற்ற தமிழரசுக்கட்சி வேட்பாளர் நீக்கப்பட்டார். இறுதிக்கட்டப் போட்டியில் தேசிய மக்கள் சக்தியின் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளை மட்டுமே பெற்றார். புதிய தவிசாளர் உறுதிமொழி: வெற்றிக்குப் பின் உரையாற்றிய புதிய தவிசாளர் இமக்குலேற்றா, ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு ஏற்ப பாமர மக்களை முன்னேற்றவும், பாரபட்சமின்றி பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார். தமிழரசுக்கட்சி மீது குற்றச்சாட்டு: இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைமை முல்லைத்தீவில் உள்ள ஒரு தனிநபரின் பேச்சைக் கேட்டுச் செயற்பட்டதாலேயே, இந்தச் சபை தேசிய மக்கள் சக்தி வசம் சென்றதாகச் சமூக செயற்பாட்டாளர்களும் ஏனைய உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியாகங்கள் நிறைந்த இந்த மண்ணை, தமிழரசுக்கட்சியினர் தமது சுயநலத்தால் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா மற்றும் தவராசா அமலன் ஆகியோர் சாடியுள்ளனர். இது எப்படி ஒருவரை கட்சியை விட்டு துரத்துவது? இங்கு 4 கறுப்பாடுகள் இருந்திருக்கின்றன. இவர்களை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வழி காட்டியவர்கள் யார் யார். 14 வாக்குகள் எப்படி கிடைத்தது?
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
@ரசோதரன் உங்கள் இடம் எப்படி? சுகமாக இருக்கிறீர்களா? எமதுகரை பனியால் மூழ்கியுள்ளது. அதே மாதிரி உங்கள்கரையை வழிந்தோடும் சேறுகளை அள்ளி எறிகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு வீரர்களின் பெயர்களைக் கேட்டிருப்பதால் ஆட்களைத் தேடி எடுக்க வேண்டுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மாற்றம்செய்யப்பட்டால்போட்டியில் இருந்து விலக்கப்படுவார். விளையாட்டு வீரர்களின் பெயர்களை எங்கே எப்படி பார்ப்பது?
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.
-
🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப் பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா போறார் போறார் என்றார்களே பொய்யா கோப்பாலு. சாது ஓதியே ஆளைப் பிழைக்க வைத்துவிடும்.
-
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!
பழவெனி வேதிகாவே திபுண ராத்திரி தும்பிறிய தெங் காங்கசந்துறய பலாபிரத்துவே. இது எப்படி?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி ஏராளனுக்கு வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
https://www.facebook.com/reel/25453132194339109/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e யார் சொன்னது நரி தான் தந்திரமானது என்று நான் சொல்கிறேன்……..
-
நில உயிர்கள்
போராடினாலும் போராடாவிட்டாலும் இழக்கவே போகிறாய் போராடி பார்ப்பதில் தப்பில்லையே.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அதைவிட 2000 ரூபாக்காக பொதுமக்கள் கமராவும் கையுமாக அலையப் போகிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பகலில் நைட்டி அணிந்தால் 2000 ரூபா தண்டம்.
-
அமெரிக்க இந்திய போட்டிக்குள் இலங்கை.
அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை! - ------------- *சஜித் ஜனாதிபதியாக இருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்... *டில்லியின் திட்டத்திற்குள் அநுர வரவில்லையானால்...? *ஸ்ராலினுக்கு நோகாமல் நடத்தப்படட பேச்சு *ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தை திமுக எதிர்க்கவில்லை அல்லவா? -- ---- ------- இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை. மேலும் அழுத்திச் சொல்வதானால், அநுரகுமார திஸாநாயக்கவின் இடத்தில் இப்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும். ஆகவே -- டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளிநாடுகள் உதவியளிப்பதை அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் நுட்பம் அல்லது ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் மிகைப்படுத்திப் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும். ஆனால், அவ்வப்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் சமகால புவிசார் அரசியல் போட்டிச் சூழலை இனம்காணக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருப்பது அவசியம். குறிப்பாக -- மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய புவிசார் அரசியல் பின்னணிகளை சரியாகப் பயன்படுத்தினார். அதாவது, விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா தான் பொருத்தமான நாடு என்பதை மகிந்த தெரிந்து கொண்டார். இதனால் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது. 2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது. 2020 கோட்டாபய எடுத்த நகர்வும் 2022 இல் ரணில் ஜனாதிபதியாக வந்த போது மேற்கொண்ட நகர்வுகளும், அமெரிக்க - இந்திய அரசுகளை சமாந்தரமாக கையாளும் அணுகுமுறைக்கு வழி வகுத்தது. அதேநேரம் -- சீனாவுக்குரிய இடமும் இலங்கையில் சுதந்திரமாக உண்டு. இந்த அரசியல் தேவை, சிறிமா - ஜேஆர் காலம் முதல் உண்டு. இது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு புரியாத புதிரும் அல்ல. இதையே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவும் கையாளுகிறார். ஆகவே இது ஒன்றும் பெரிய இராஜதந்திரம் அல்ல. குறிப்பாக இலங்கையின் சிஸ்ரம் (System) என்பது எப்போதும் அமெரிக்கச் சார்புத் தன்மை கொண்டது தான்.. அதன் பின்னர் தான் இந்திய, சீன உறவு என்பது. ஆனாலும், ஈழத்தமிழர் விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்கா இன்றுவரை கூட இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டோடு ஒத்துழைக்கிறது. குறிப்பாக -- சீனா - ரசியாவை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் நிலவினாலும், தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டோடு அமெரிக்கா ஒத்துழைக்கிறது. அதாவது மோடி இருந்தால் என்ன ராகுல் காந்தி இருந்தால் என்ன 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவுக்குத் புரியும். வடக்கு கிழக்கில் உள்ள இயங்கைத் துறைமுகங்களை பங்கு போடுவதிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன. இதனை அநுரகுமார திஸாநாயக்க நன்கு விளங்கிக் கொண்டு காய்நகர்த்துகிறார். அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும். அதேநேரம்-- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமெரிக்க பின்புலம் கொண்ட கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கஜேந்திரகுமார் எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ம் அவசியமான ஒன்று. இது கஜேந்திரகுமாருக்கும் நன்கு தெரியும். இப்போது இவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றிருப்பது கூட அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் தேவையின் அடிப்படைகளை மையம் கொண்டதாகக் கூட இருக்கலாம். தற்போது குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலையில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த அடிப்படையில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா முரண்பாட்டில் உடன்பாடாக பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு. இந்தியாவின் ரசிய - சீன கூட்டு அமெரிக்காவுக்கு ஒத்துவராத சூழலிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நிற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு. ஆகவே, இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய உறவு இருக்க வேண்டுமானால், முதலில் வடக்கு கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இதனால் புலிகள் இயக்கமும் அழிக்கப்பட்டது. ஆனாலும் -- 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அந்த அமைதி நிலவாத ஒரு பின்னணியில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி ஏற்கனவே அமெரிக்க இந்திய அரசுகளின் கொள்கைக்கு ஏற்ப இணங்கிச் செல்லக் கூடிய பக்குவத்துக்குள் நுழைந்துவிட்டது . கஜேந்திரகுமார் சற்று வித்தியாசமாக செயற்பட்டு வருவதால், அமெரிக்க - இந்திய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன. ஆனாலும் தோ்தல் அரசியலை மையமாக் கொண்டு தூய தமிழ்த் தேசியம் பேசுவது போன்ற தோற்றத்தை கஜேந்திரகுமார் காண்பித்து வருகிறார். இதன் பின்னணியில் கஜேந்திரகுமாருக்கும் அவரது கட்சிக்கும் நோகாமல் நகர்த்தப்படும் அரசியல் தான், இந்த தமிழ் நாட்டுப் பயண ஏற்பாடு. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த அணுகுமுறைக்குள் கஜேந்திரகுமார் சென்றிருக்கத் தான் வேண்டும். ஆகவே -- அமெரிக்க இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் போட்டிக்குள் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த காய் நகர்த்தல்களை செய்கிறார்கள் என்பது புரிகிறது. தமிழ் நாட்டில் ஸ்ராலின் ஆட்சியில் இருந்தால் என்ன விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன, ஈழத்தமிழர் விவகாரத்தில் 13 என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்வாக்கியே கஜேந்திரகுமார் சென்னைக்குச் சென்றிருக்கிறார். அதேநேரம் -- அமெரிக்க - இந்திய அரசுகள் தயாரிக்கும் தமிழர் விவகார ஏற்பாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் ஒரு கட்டத்தில் அடங்கிச் செல்லவில்லை என்றால், அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இல்லாமில்லை. பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தமக்கு ஏற்றமாதிரியான அரசியலைத்தான் அமெரிக்க - இந்திய அரசுகள் தற்போது கையாண்டு வருகின்றன. அதேநேரம் -- ரசிய - சீன கூட்டை இந்தியா வளர்த்து வருகின்றது என அமெரிக்கா ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மையமாக் கொண்டு அநுர அரசாங்கம் கையாளும் அணுகுமுறை, ரணில் என்ற தற்காப்பு அரசியல் சாணக்கியனால் மடைமாற்றப்படக் கூடிய ஆபத்துகளும் இல்லாமலில்லை. ஆகவே -- சரியான உத்தியுடன் வகுப்படாத அரசியல் வியூகத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதால், கையாளப்படும் சக்தியாக மாத்திரமே தமிழ்த்தரப்பு கையாளப்பட்டு வருகிறது. பொறிமுறை ஒன்றின் கீழ் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்சி அரசியலுக்கு அப்பால், உரிய முறைப்படி இயங்கியிருந்தால், தற்போதைய புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் ஒரு அரசு அற்ற சமூகமாக குறைந்தபட்ச அரசியல் லாபங்களை பெற்றிருக்கலாம். இப்போது கூட சஜித்,ரணில், அநுர என்று உள்ளக அரசியல் முரண்பாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்கள் சிங்கள அரசியல் பரப்பில் ஆழமாக வேரூன்றி வருகின்றன. அது சாத்தியமா இல்லையா என்பது வேறு. ஆனால் அந்த அரசியல் பின்னணிகளைக் கூட தமக்குச் சாதகமாக மாற்றும் நுட்பங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லையே! வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறையில் ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமை அங்கீகரிக்கப்படாது. ஏனெனில் சமஸ்டிக் கோட்பாடு பல வகைப்பட்டது. அமெரிக்காவின் உள்ள முழுமையான சம்ஸ்டி ஆட்சியை முறை கஜேந்திரகுமார் கோருகிறாரா அல்லது இந்திய சமஸ்டி முறைமையை கேட்கிறாரா? எதுவானலும் -- “ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை“ என்ற கோட்பாட்டில் இருந்து கஜேந்திரகுமார் விலகிவிட்டார் என்பதும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை தவிர்த்துள்ளார் என்பதும் இங்கே பட்டவர்த்தனம். இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஆகவே “முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்” என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் ஏற்றுள்ளார் என்பது இங்கே பகிரங்கமான உண்மை. குறிப்பாக -- தமிழக சட்ட சபையில் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தை முன்கொண்டு சொல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் ஸ்ராலினிடம் கேட்கவில்லை. கட்சி வேறாக இருந்தாலும் தீர்மானம் என்பது தமிழக அரசினுடையது. அத் தீர்மாதை அப்போது ஸ்ராலின் எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0XuH6gpXsJhGgEjPcLdTfwb9gPDv5o4sFxA7PNHT4rfSnL5hgxd21uvQqUKXqzngjl/?
-
வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
இவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கணுமோ?
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
- இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி
IMF கொடுத்தா அமெரிக்கா கொடுத்த மாதிரியே.- தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
பெருமாள் பிச்சைக் காசே இலங்கைக்கு போதுமானதே. இந்தியா வளர்ந்த நாடுகளின் உதவியுடன் எடுக்கலாம். சீனனைப் பிடிக்கலையோ? பலாலியில் அமெரிக்க விமானம் இறங்கியது முதல்கொண்டு ஏதோ தமிழனுக்காகவே அமெரிக்க விமானம் இறங்கியது போல கொண்டாடுகிறார்கள். எந்த நாடு வந்தாலுமே தனது நலத்துக்காக அரசுடனேயே சேர்ந்தியங்கும்.- தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?- மண்டைதீவில் நள்ளிரவு வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம் - உதவிக்கு சென்ற முதியவர்கள் மீது சித்திரவதை
மிகவும் வெறுப்பாக உள்ளது.- நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!
எனக்கும் இது பெரிய ஆச்சரியமாக உள்ளது. 5-10 பேர் என்றால் பயத்தில் திரும்ப போகவில்லை என்று சொல்லலாம். கோசான் பொறுத்த நேரத்தில் இலங்கை பயணம் மேற்கொண்டு இருக்கிறீர்கள். எதுவித துன்பமும் இல்லாமல் சுகமாக திரும்ப வந்தது சந்தோசம். இந்த தடவை முக்கியமான பயணமாக இருந்திருக்கும். எனவே நேரமிருந்தால் உங்கள் பயணத்தை நேரடி அனுபவங்களை எழுதுங்கள்.- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் வடக்கைச் சேர்ந்தவர்களோ? - இலங்கைக்கான அவசர நிதியுதவிக்கு IMF நிறைவேற்று சபை அனுமதி
Important Information
By using this site, you agree to our Terms of Use.