Everything posted by ஈழப்பிரியன்
-
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர.
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத்திடம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் உண்டு. தேர்தல் முறைமையைக் கூட மாற்றலாம். ஆனால் -- வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியபோது, எதிர்க்கட்சிகளிடம் அப் பொறுப்பை கையளித்தன் பின்னணி என்ன? தேர்தல்களில், குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில், தமிழர்களின் ஆதரவை பெறவரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் பற்றி, சிங்கள அரசியல் தலைவர்கள், தமிழர்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வழங்குவர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் ---- A) நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பர்... B) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என்பர்... C) சர்வகட்சி மாநாடு என்பர்... D) மகாநாயக்கத் தேரர்களுடன் பேச வேண்டும் என்பர். இவ்வாறு ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி ”எல்லோருடைய கருத்துக்களையும் பெறுதல்” என்ற சந்தர்ப்பவாத ஜனநாயக முகத்தைக் காண்பித்து ”அரசியல் தீர்வுப் பந்து” பிரதான எதிர்க் கட்சிகளிடம் எறியப்பட்டு விடும். இப்படி பந்து எறியும் அரசியல் விளையாட்டு, ஜேஆர் 1980 இல் ஆரம்பித்த ”மாவட்ட அபிவிருத்தி சபை” என்ற அரைகுறை தீர்வு முறையில் இருந்து, 13 என்ற குறைப் பிரவசம் வரையும் நீட்சியடைந்துள்ளது. இப் பின்புலத்தில், ஜேஆருக்கு சளைத்தவன் அல்ல என்பதை, அநுர இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்... குறிப்பாக --- 2017 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல் செலவுக்கு 10 பில்லியன் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அநுர. ஆனால், தேர்தல் எப்போது என்பது பற்றி தன்னால் தீர்மானிக்க முடியாது என்று கூறி கைவிரித்து விட்டார். அத்தோடு பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குமாறு எதிர்க்கட்சிகளின் தலையில் பந்தை எறிந்து விட்டுத் தப்பிவிட்டார் அநுர. அதாவது --- நாட்டைப் பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் என்று 2009 இற்குப் பின்னர் குறிப்பாக 2017 ஆண்டில் இருந்து கூற ஆரம்பித்த சிங்கள அரசியல் பிரதிநிதிகள் சிலர், முடிந்தவரை 13 ஐ இரத்துச் செய்யவே விரும்புகின்றனர். ஆகவே -- அத்தகையை சிங்கள அரசியல் பிரதிநிதிகள் - பௌத்தகுருமார் ஆகியோரிடம் இருந்து தப்பிவிட்டார் அநுர. ஆனால், எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்...? அநுர வீசிய அப் பந்தை எடுப்பார்களா? எடுக்க முடியுமா? பொருத்தமான தேர்தல் முறையை உருவாக்க அறுதிப் பெரும்பான்மை அநுர அரசாங்கத்திடம் உண்டு என்று கூறி எதிர்க்கட்சிகள் தட்டிக் கழிக்கும். உண்மையும் அதுதானே! ஆனாலும், அதற்கு அநுர என்ன சொல்வார்...? 1) தமிழ்தேசியக் கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என்பார். 2) புதிய அரசியல் யாப்பு தாயாரிக்கப்படும்போது அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை என்பார். 3) 2015 இல் ரணில் - மைத்திரி அரசாங்கம் தயாரித்த 'ஏக்கிய இராஜ்ய ' என்ற யாப்பு வரைபை கையில் எடுப்பார். 4) நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பார்... இவ்வாறு விரிவுபடுத்தி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் இருந்து அநுர தப்பித்துக் கொள்வார்... இப்படியே கைமாறி, கைமாறி பந்து எறிந்து விளையாடுவது தானே சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாறு. 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் இந்த அணுமுறை தானே இங்கு விஞ்சிக் கிடக்கிறது? ஆனால் --- ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்ய வரும்போது மாத்திரம் ---- ------தீர்வு விவகாரத்தில் ”நாங்கள் அரசியல் பந்து எறிந்து விளையாடமாட்டோம்” என்று வாக்குறுதி வழங்குவார்களா? 1994 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா வழங்கிய வாக்குறுதி என்ன? பின்னர் நடந்தது என்ன? அன்று சமாதானத்துக்கான போர் என முழங்கினார் சந்திரிகா. அது இன்று செம்மணியில் வந்து நிற்கிறது... 2024 இல் நடைபெற்ற தேர்தலில் அநுர வழங்கிய வாக்குறுதி என்ன? A) ”தமிழர்களின் பிரச்சினை எங்களின் பிரச்சினை” B) ”தமிழர்களின் பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்” C) ”தென்பகுதியில் பாரிய மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றத்துக்குள் தமிழர்களும் வர வேண்டும்” இல்லையேல் தனிமைப்படுவீர்கள்” என்ற எச்சரிக்கை வேறு. இப்படி வாக்குறுதிகள், அதேநேரம் மிரட்டல் தொனியிலும் உரையாற்றி, அநுர அளித்த உறுதிமொழிகள் இப்போது எங்கே? மாகாண சபைத் தேர்தலை நடத்த பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் ஏன்? 159 ஆசனங்கள் உள்ள அரசாங்கம் மிக இலகுவாக பொருத்தமான தேர்தல் முறை ஒன்றை உருவாக்கலாமே? பதவியேற்று இன்று ஒரு வருடம் சென்று விட்டதே? அதென்ன?--- தமிழர்களின் விவகாரங்கள் என்று மாத்திரம் வரும்போது, ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் - பொது அமைப்புகள் - பௌத்த குருமார் ஆகியோரின் ஒத்துழைப்புகளை கோருவது? சுனாமி பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் சந்திரிகா இப்படித்தானே செயற்பட்டார்! ஆகவே இவ்வாறு சுட்டிக்காட்டி எழுதுவதற்கு நிறைய உண்டு... ஆனால்--- சில போலியான முற்போக்குத் தமிழர்கள் - போலியான இடதுசாரி தமிழர்கள் சிலருக்கு இவை புரியும். ஆனால் எழுதமாட்டார்கள். கம்யூனிஸ்ட் என்று மார் தட்டுகின்ற சில தமிழ்ப் பத்திரிகையாளர்களும் இப்படித்தான்...இப்படி எழுதாமல் தவிர்ப்பதுதான் இவர்கள் கூறுகின்ற “மாற்றுக் கருத்து” அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
@Justin பாம்பு கடித்தால் இரத்தம் ஓடாமல் கட்டுப் போடுவார்கள். சிறிய வயதில் எனக்கும் ஏதோவொரு பாம்பு கடித்து காலில் கட்டுப் போட்டு கொட்டடியில் இருந்த விசகடி டாக்ரரிடம் கொண்டு போனார்கள். சிலர் அந்த இடத்தில் இருந்து இரத்தத்தை வெளியே எடுக்க வேண்டும் என்கிறார்கள். இப்போது இந்த முறையெல்லாம் செய்யவே கூடாது என்கிறார்கள். ஆனால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இதுவரை தெளிவாக எழுதுகிறார்கள் இல்லை. உங்களுக்கு தெரிந்ததை கொஞ்சம் எழுதலாமே.
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
என்பிபிக்கு விருப்பம் இருக்கலாம். தோட்ட உரிமையாளர்களும் எப்படி கொடுப்பது? தேயிலை விலை உயர்த்தவா? இது கொஞ்சம் சிக்கலே. ஏறத்தாள இலங்கை விமானசேவை போலவே.
-
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
கங்காணியே மேலே ஏற்றியபடியால் அவலத்தில் நேய் நேய் என்றும் கத்த முடியாது. வீடுகள் மாறும் போதும் இதைவிட கூடுதலான புதிய புதிய பிரச்சனைகள் வரும்.
-
தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும். !
இது நீண்ட காலமாக ஒவ்வொரு அரசாலும் அப்பப்ப சொல்கிறார்கள். சகல தோட்டங்களும் தனியார் வசம் இருப்பதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை?
-
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் - சுருக்கம்
யாழ்ப்பாணத்திற்கு எப்பதான் நெடுஞ்சாலை அமைக்கப் போகிறார்கள்?
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!
*பாதுகாப்பு அமைச்சுக்கு 64800 கோடி ரூபா நிதி! 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் நாளை *கல்வி அமைச்சுக்கு கடந்த ஆண்டைவிட 3000 ஆயிரம் கோடி மாத்திரமே மேலதிக ஒதுக்கீடு - ----- ----- ------ அநுர அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில், மொத்த செலவீனமாக 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ரூபா காண்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் 21610கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 61,744 கோடியே 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாது காப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் மொத்தமாக 11,6980 கோடியே 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக அநுரகுமார வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு 1.105.782.000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 271,000,000,000ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3000 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்த செப்ரெம்பர் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் வாசிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இவை) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
-
இலகுகாத்த கிளிகளாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்
கக்கீம் மெளனத்தைக் கலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் குளிர் காயாமல் தேசியத் தலைவருக்கும் இவருக்கும் இது பற்றி நடந்த கலந்துரையாடலும் தேசியத் தலைவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும் வெளிப்படையாக பேச வேண்டும்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்படி என்னதான்யா தெரிந்தது? சொன்னா நாங்களும் பார்ப்பமில்ல.- கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
இந்த காணொளியை எல்லோரும் பாருங்கள்.- கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
ஐயா இளஞ்செழியனின் பேச்சைக் கேட்க மிகவும் கஸ்டமாக இருந்தது. ஏன் இவ்வளவு வஞ்சகம்? எல்லோரும் சமமாக வாழுவோம் என்கிறார்களே? இதுவா சமம்?- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்பு சோறு முக்கியம். வேலை இல்லா பட்டதாரிகள் சொல்லுறாங்களே என்று வேலை நேரத்தில் கவனமப்பு. போதிய வசதிகள் இல்லாமல் போட்டியை திறம்படி நடத்திய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். துல்லியமான விடைகளைக் கணித்து முதலாவது இடத்தைப் பிடித்த @Ahasthiyan னுக்கு வாழ்த்துக்கள். போட்டியை விறுவிறுப்பாக கொண்டு போன உறவுகளுக்கும் பாராட்டுக்கள். பையா எங்களை @கிருபன் கூகிளில் விடை எழுத பழக்கியதால் கூகிள் இல்லாமல் சரியாக விடைகள் எழுத முடியவில்லை.- வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/asia/northern-afghanistan-earthquake-latam-intl- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஒரு நாள் லீவு போட்டால் என்னவாம். @கிருபன் அலுவலக நேரத்திலேயே யாழில் அதிக வேலை செய்வார். அவரைப் பார்த்து பழகுங்க.- இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது
ஏற்கனவே இவர் கொள்ளைக்காரன் என்று தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சொல்லியும் சுமந்திரன் இவருக்கு ஆதரவு அளிக்கும்படி ஆணையிட்டுள்ளார். அதையும் மீறி மானமுள்ள உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு மேலுள்ள காணொளியைப் பாருங்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையா கோட்டு சூட்டு போட்டு கப் வாங்க சிரித்துக் கொண்டு வரவும்.- பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாள்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கண்ணுபட்டு போச்சு.- எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்!
எதிர்க்கட்சிகளின் பலவீனமும் அரசாங்கத்தின் அணுகுமுறையும்! *தமிழ்த்தேசியக் கட்சிகளை தவிர்த்து, தமிழர் தரப்பில் வேறு பிரதிநிதிகளுடன் பேசும் திட்டம் வகுக்கப்படுகிறதா? *எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டம் பிசுபிசுத்தால், அநுரவின் நகர்வு மேலோங்கும் *ரணில் – மகிந்த ஊழல் - மக்கள் போராட்ட முன்னணியின் கருத்து நியாயமானது... ------ ----- அநுர அரசாங்கத்துக்கு எதிராக கருத்திட்டு வரும் பிரதான எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு நுகேகொடை நகரில் நடைபெறவுள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பங்கெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அறிவித்திருந்தார். அதேபோன்று -- மக்கள் போராட்ட முன்னணியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது. அதாவது -- இலங்கைத்தீவை ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களுக்கு உள்ளாக்கிய முன்னாள் ஆட்சியாளர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் மறுப்பில் நியாயம் உள்ளது. ஏனெனில் -- ரணில், சஜித், ராஜபக்ச என்ற அரசியல் தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள் முன்னர் ஆளும் கட்சியாக இருந்தபோது ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அரசியல் - பொருளாதாரம் ஆகியவற்றுக்கு கேடுவிளைவித்தனர். பொருளாதார நெருக்கடி எழுவதற்கும் இவர்களது கட்சிகளின் 76 வருட ஆட்சிதான் காரணம். இன முரண்பாட்டுக்கு உரிய தீர்வு ஏற்படாமல் வெறுமனெ இனவாதம் பரவுவதற்கும் இவர்கள் தான் காரணம்... இப் பின்னணியில் --- மக்கள் போராட்ட முன்னணி அவர்கள் நடத்தும் எதிர்ப்பு போராட்டத்தில் பங்குகொள்ள முடியாது என்பது நியாயமானது. அவர்களுடைய அரசு எதிர்ப்பு போராட்டமும் தனித்துவமானது. ஆனால் -- சஜித், ரணில், ராஜபக்ச என்ற தலைவர்களின் கீழ் செயற்படும் கட்சிகள், தமக்குள் முரண்பட்டுக் கொண்டு அநுர அரசாங்கத்தை எதிர்க்க முடியாது. மக்களுக்கும் இக் கட்சிகளின் கடந்தகால அரசியல் சூழ்ச்சிகள் - ஊழல்கள் தெரியும். இப் பின்னணிகளை தமக்குச் சாதகமாக்கி, 2015 இல் மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' என்ற புதிய அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதா இல்லையா என்ற இரு வகையான அணுகுமுறைகளுடன் அநுர அரசாங்கம் புதிய வியூகம் ஒன்றை வகுத்து வருகின்றது. இந்த நிலையில் -- பிரதான எதிர்க்கட்சிகள் தமது பலவீனத்தை மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விடயத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக சஜித், ரணில், மகிந்த ஆகியோர் ஏறத்தாள அநுர அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகும் தன்மை உண்டு. ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மாகாணசபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் கடந்த வாரம் முதல் கோர ஆரம்பித்துள்ளன. ஆனாலும் --- இந்தக் கோரிக்கை பலமானதாக இல்லை. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளை தம் பக்கம் எடுக்கக் கூடிய முறையில் சும்மா ஒப்பாசாரத்துக்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையாகவே இதனை அவதானிக்க முடியும். இப்பின்னணியில் -- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான மையமாக விளங்கும் ஜேவிபி கொழும்பில் தொடராக நடத்தி வரும் உரையாடலில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாக தெளிவாக தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலமான மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு கோரினாலும், கொழும்பை மையமாக் கொண்ட, எதிர்தரப்பு சிங்கள அரசியல் கட்சிகள் அதற்கு பெரிய அளவில் ஆதரவு வழங்கும் சாத்தியம் இல்லை என்பது, ஜேவிபிக்கும் தெரியாமல் இல்லை. புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காண முடியும் என ஜேபிவி பலமாக நம்புகிறது. அநுர அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வரும் அதேநேரம், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி பெரிய அளவில் அவர்கள் அச்சம் கொண்டதாக கூற முடியாது. ஆனால் -- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் மேலும் ஒத்திவைப்பது குறித்தே அதிகளவில் அவர்கள் சிந்திக்கின்றனர். இந்த விவகாரங்கள் உள்ளிட்ட ஒரு வருட ஆட்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக உரையாடுகின்றனர். அதேநேரம் -- தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வகுக்கும் தமிழர் தரப்பு நிலைப்பாடுகள் பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர். குறிப்பாக - தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், கல்வியாளர்கள் போன்றவர்களை அழைத்து இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசும் திட்டம் ஒன்று ஜேவிபியிடம் இருப்பதாக தெரிகிறது. அதேநேரம் -- கடந்த செப்ரெம்பரில் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற உரையாடலின் தொடர்ச்சியாக மற்றொரு உரையாடலை நடத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமிழர் பிரதிநிதிகள் என்ற ஒரு கட்டமைப்பை தமக்கு ஏற்ற மாத்திரி உருவாக்கும் திட்டமும் இருப்பதாக அறிய முடிகிறது. ஆனாலும் -- சுவிஸ்லாந்தில் நடந்த உரையாடலில் பங்குபற்றிய தமிழ்த்தரப்பின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது என ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் தெளிவாக கூறுகின்றனர். இதன் காரணமாக சுவிஸ்லாந்திலோ அல்லது வேறொரு நாட்டிலோ மற்றொரு சந்திப்புக்கு அதாவது விரிவான உரையாடலுக்கு அநுர அரசாங்கம் இணங்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூற முடியாது. ஆனாலும் -- மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், புதிய யாப்பு எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் ஏற்பாடும் அடுத்த ஆண்டு சூடு பிடிக்கும் என ஜேபிவி தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டம் வெற்றியளிக்காமல் பிசுபிசுக்குமானால், அநுர அரசாங்கத்தின் மேற்படி இரண்டு அணுகு முறைகளும் 2026 ஆம் ஆண்டு வெற்றியளிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் புதிய யாப்பு அதாவது 'ஏக்கிய இராச்சிய' என்ற அந்தக் கதை நீடித்துச் செல்லக் கூடிய சூழலும், அதன் மூலம் தமிழரசுக் கட்சி தமது செல்வாக்கை நிலை நிறுத்தக் கூடிய வாய்ப்பும் உண்டு. புதிய யாப்பு விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் -- வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர் தரப்பு பேசி வருவதை தடுக்கும் திட்டங்களும் வடக்கு கிழக்கில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் மூலம் காய் நகர்த்தப்பட்டு வருகிறது. ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றி வருவதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்தில் உள்ள தூதுவரை சந்தித்து உரையாடியுள்ளார். தமது கட்சி சார்பில் வடக்கு கிழக்கில் எட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் செல்வாக்கு இழந்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சு கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் கொடுத்து வருகிறது. சர்வதேச மட்டத்தில் இப் பிரச்சாரம் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது. வத்திக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் பவுல் றிச்சார்ட் கல்லேகர் (Paul Richard Gallagher) எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தரவுள்ள இரகசியத்தின் பின்னணியும் இதுதான். அதாவது -- இலங்கைத்தீவு மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் நிற்கிறார்கள், போருக்குப் பின்னரான சூழலில் மீள் நல்லிணக்கம் உறுதியாகிவிட்டது என்ற இறுதிச் செய்தி உலகத்துக்குப் போய் சேரும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-- இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
அப்போ தாங்கள்?- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அப்படி போடுங்க அரிவாளை- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அதென்ன தோற்றால் தோற்கும். தென்னாபிரிக்கா கப்பை தூக்கும்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நானும் இதையே யோசித்தேன். அவுஸ் அணியின் களத்தடுப்பும் போற்றத் தக்கதாக இல்லை.- இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது
தேர்தல் நடந்து ஒருவருடம் கூட ஆகவில்லை. பிடிபட்டது 5 லட்சம் பிடிபடாதது எவ்வளவோ? - யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.