Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. இவரது கதையைப் பார்த்தால் வெளியில் இருந்து வேறு யாரோ தமிழரசை உடைப்பது போல அல்லவா இருக்கிறது. நீண்டகால அனுபவம் உள்ளவர் சிவஞானம். இவர்களோடு உள்ளவர்களே முதுகில் சொருகுகிறார்கள் என்று எப்போது கண்டுகொள்ளப் போகிறார். சைக்கிளும் மாம்பழமும் ஒன்று சேர முயற்சி நடக்கிறது. கடந்த தேர்தலில் மரணஅடி வாங்கியும் இன்னமும் பிரிந்து போவதையே செய்து கொண்டிருக்காமல் எல்லோரும் ஒன்றாகாவிட்டால் உள்ளூராட்சி சபைகளையும் என்பிபி வசமே போகும். பணத்தை வாரி இறைப்பதாக சொல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கே ஆளில்லாமல் கஸ்டப்பட்ட தமிழ்கட்சிகள் 2-3 ஆயிரம் வேட்பாளர்களை எப்படித் திரட்டப் போகிறார்கள்? கடந்த தேர்தலில் சைக்கிளில் பயணித்த பெண்ணை வீட்டுக்குள் இழுத்துக் கொண்டோடியது போல பலதும் நடக்கும்.
  2. நல்லதொரு சேவை. பாராட்டுக்கள். நாய்களை சிறிதிலிருந்து வளர்காவிட்டால் வளர்ந்ததும் கோபம் வந்தால் எஜமானை கடிக்கலாம்.
  3. தேல்தலில் வென்றிருந்தால் இவரைப் பிடித்திருக்கேலாது. தற்போது சிறிய கூட்டமைத்திருக்கும் ஆட்களை பிரிப்பது பற்றி மும்முரமாக வேலை நடக்கிறதாம். செல்வத்தையும் சித்தரையும் தட்டித் தூக்கிற அலுவல் நடக்குதாம். எதுக்கு வந்தார்களோ அதை செவ்வனே செய்கிறார்கள்.
  4. விடுமுறை போகிறதை பற்றி இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் என்றால் சொல்லமாட்டேன். ( கள்ளன் கிள்ளனுக்கு தெரிந்துவிடும் என்பதினால் ) கந்தப்பு மடியில் கனம் என்றால் வழியில் பயம் என்றது இயல்பு தானே.
  5. உங்க மணிக்கட்டு ஏன் திரும்பியது என்று இப்ப விளங்கிச்சுது தம்பி.
  6. இப்பதான் இந்த பாடலை முதன்முதல் கேட்டேன். நன்றாகவே இருந்தது.
  7. என‌க்கு ம‌ட்டும் என்ன‌ ஜ‌பிஎல்ல‌ பிடிக்குமா , தினேஸ் கார்த்திக் விளையாடின‌ போது ஜ‌பிஎல்ல‌ விரும்பி பார்ப்பேன் கார்த்திக் ஜ‌பிஎல்ல‌ இருந்து ஓய்வு பெற்று விட்டார்..............சும்மா பொழுது போக்குக்கு அடிச்சு விடுங்கோ சில‌து அதிக‌ புள்ளிக‌ள் கிடைக்கும் , ப‌ம்ப‌லுக்காக‌ தான் நான் க‌ல‌ந்து கொள்ளுறேன் யாழில் போட்டி நடத்தும் போதுதான் ஐபிஎல் என்று ஒரு விளையாட்டே இருப்பதாக தெரியவந்தது.
  8. இதைச் சொல்லிசொல்லியே அடுப்படி வேலைகளை செய்யாமல் இருக்கலாம்.
  9. சிலர் சிவலிங்கத்தை கும்பிடுவதை வினோதமாக பார்த்துக் கொண்டிருப்பேன். முன்னுக்கிருக்கும் நந்தியின் காதுகள் இரண்டுக்கும் ஊடாக இலக்கு பார்ப்பது போல லிங்கத்தைப் பார்ப்பார்கள். நீங்களும் அப்படி பார்க்கிறீர்களோ?
  10. மற்றைய இடங்களில் உள்ள எல்லைகள் தெரியுது. இலங்கை எல்லை மட்டும் தெரியவில்லை. சரி தடை செய்யப்பட்ட வலைகளை வீசுவது யார்? வீசும்போதே இது கற்பப்பையையும் கொண்டுவரப் போகுது என்று தெரியும் தானே.
  11. அமெரிக்காவில் பெரும்பாலான குற்றவாளிகள் சித்தசுவாதீனமற்றவர்கள் என்று வைத்தியசாலையில் இருந்துவிட்டு வெளியே வந்து குற்றம் செய்கிறார்கள் அல்லது குற்றம் செய்தபின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் முடிவில் குற்றவாளி சித்தசுவாதீனமுடையர் என்று வழக்கை முடிக்கிறார்கள். குற்றவாளிகள் தப்பிக்கிறார்கள். இதேமாதிரி இலங்கையில் குற்றவாளிகள் பெளத்த துறவியாக இருந்திருக்கிறார்கள் அல்லது குற்றம் செய்யதபின் பொளத்த துறவியாகிறார்கள்.
  12. நல்லவேளை தொலைபேசியை திருடியது. இல்லாவிட்டால் ஆளைக் கண்டுபிடிக்கவே இயலாது போயிருக்கும்.
  13. https://www.facebook.com/share/p/1AAK9SvbBh/ படலந்த வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ கருணாரத்ரன ஒரு நேர்காணலில் வழங்கிய திர்ள் வாக்குமூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ♦️ ஊடகவியலாளர் : இந்த வாக்குமூலத்தை நீங்கள் வழங்குவதால் உங்களுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ♦️ஏ. பீ கருணாரத்ரன : இந்த நேர்காணலிற்கு போக வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள். நான் யாருக்கும் கடனுமில்லை. பயமும் இல்லை. எனக்கு இப்போது 88 வயது . என்னை இன்று கொலை செய்தாலும் பராவாயில்லை. நாளை கொலை செய்தாலும் பராவாயில்லை. நாங்கள் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. ♦️ ஊடகவியலாளர் : நீங்கள் யார் ? உங்கள் பதவி என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஏ. பீ கருணாரத்ரன , ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் , இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேரத்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைய படலந்தவில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றேன். ♦️ ஊடகவியலாளர் : படலந்த என்றால் என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்த என்பது காடு அல்ல. கொழும்பிலிருந்து கிரிபத்கொடவிற்கு செல்லும் போது, கிரிபத்கொடயில் இருந்து மாத்தறை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் தூரம் சென்ற பின் வலது பக்கம் சுமார் 20 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு ஒன்று இருக்கும். அதில் வேலை செய்யும் வேலையாட்களுக்கான களஞ்சிய அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே 20 ஏக்கரில் பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் தான் வதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. ♦️ ஊடகவியலாளர்: படலந்தவில் என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவர்களை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே வரும். சூடாக்கப்பட்ட இரும்புக் கோளினால் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றை செய்யும் போதே அந்த மனிதர் அரைவாசி இறந்த விடுவார். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். பின்னர் விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை போட்டு அவர்களுக்கு மேல் டயர்களை போட்டு கொளுத்துவார்கள் . இங்கே இடம் போதாத சந்தர்ப்பங்களில் சிலரை மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று , அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு கொளுத்து வார்கள். ♦️ ஊடகவியலாளர் : அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் யாராவது விஷேடமானவர்கள் இருந்தனரா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : விஜயதாஸ லியனாரச்சி . திறமைமிக்க ஒரு சட்டத்தரணி. பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியே வாதிட்டார். ♦️ ஊடகவியலாளர் : அவருக்கு என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இவர் ஒருநாள் ஒரு வழக்கிற்காக வாதிட்டுவிட்டு வெளியே வரும் போது சிவில் ஆடை அணிந்த 04 பொலிஸ் அதிகாரிகள் வந்து வழக்கொன்றிற்காக வாதிட உள்ளதாக கூறி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றி தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கரவிட்ட என்ற ஏ. எஸ். பீ ஒருவர் இருந்தார். அவர் பல கேள்விகளை இவரிடம் கேட்டார். இவர் எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தார். பின் அவரை பலமுறை அடித்து கேள்விகளை கேட்டார். எதற்கும் இவர் பதில் அளிக்காததால் படலந்தவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொண்டு வரும் போதே அவர் அரைவாசி இறந்த நிலையிலேயே இருந்தார். கொண்டுவரப்பட்ட உடன் டக்ளஸ் பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு செய்தி அனுப்பினார். உடனே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் , ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்களும் முடியுமான அளவு கேள்விகளை கேட்டனர். ஆனால் அந்த சட்டத்தரணி எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு கூட உயிர் இருக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் டக்ளஸ் பீரிஸிடம் இந்த சட்டத்தரணியை முடியுமான அளவு சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு பணித்தனர். அதன் பின்னர் அந்த சட்டத்தரணியின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு மிளாகாய் தூளை முகத்தில் போட்டனர். நான் ஆயுத களஞ்சியசாலை இருந்து மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் முடியுமான அளவு சித்திரவதை செய்தனர். மாலை 5 அல்லது 6 மணியளவில் அவர் உயிர் அவரின் உடலை விட்டு சென்றது. அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர். காலையில் சடலத்தை கண்ட மக்கள் வைத்தியசாலையின் பிணவறையில் கொண்டு சென்று வைத்தனர். பிணவறையில் அவர் உடல் வெட்டப்பட்டு மரண பரிசோதனை செய்யப்பட்டு உட்காயங்கள் 46 இனால் இரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக கூறினர். பின்னர் அவரின் அண்ணாவை அழைத்து அவரது சடலம் கையளிக்கப்பட்டது. அவரது கண்கள் இருந்த இடத்தில் ஏதோ ஒன்றை நிரப்பியிருந்தனர். ♦️ஊடகவியலாளர் : கண்களால் கண்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது உள்ளதா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஆம். களுத்துறை பிரதேசத்தில் நடந்த சம்பவம். தென் மாகாணத்திற்கு பொறுப்பான விஜய சூரிய என்ற ஒரு இராணுவ கேப்டன் இருந்தார். அவரின் அம்மாவின் வீடு வேயங்கொட பாடசாலைக்கு அடுத்த காணியில் இருந்தது. JVP இன் சிலர் வந்து அவரின் அம்மாவின் தேசிய அடையாள அட்டையையும் , பணத்தை எடுத்துச் சென்றனர். மகனிற்கு உடனடியாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் கூறிவிட்டு சென்றனர். மகன் வந்தவுடன் அம்மா நடந்ததை கூறியதும் கோபமடைந்த கேப்டன் விஜய சூரிய லொறி ஒன்றை எடுத்துச் சென்று களுத்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த உயர் தர வகுப்பிற்கு சென்று அங்கு கற்றுக் கொண்டிருந்த பெண் மாணவிகள் உட்பட 20 பேரை படலந்தவிற்கு அழைத்துக் கொண்டு வந்து பெண் மாணவிகள் அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து ஆண் மாணவர்களை படுக்க வைத்து இரும்பு சுத்தியலால் தலையில் பலமுறை அடித்து பின்னர் பொலித்தீன் உறைகளில் அவர்களை போட்டுக் கொண்டு அந்த கேப்டனின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் பாடசாலைக்கு முன்பாக அவர்கள் மீது டயர்களை இட்டு கொளுத்தினர். அவர்களை கொண்டு வரும் பயத்தினால் அனைவரும் கதறி அழுதனர். சிலர் எங்கள் அம்மாவை ஒரு முறை காண்பித்து விட்டு எங்களை கொலை செய்யுமாறு கெஞ்சினர். ♦️ ஊடகவியலாளர் : இது போன்ற சித்திரவதைகள் படலந்தவில் மாத்திரமா மேற்கொள்ளப்பட்டன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு பெரும்பாலும் கொண்டுவரப்பட்டவர்கள் பிற இடங்களில் வசித்தவர்கள் . ஹபராதுவை வரை , அம்பலங்கொட , பலப்பிட்டிய , வேயங்கொட , மீரிகம , திஹாரிய மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் படலந்தையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். படலந்த போன்ற வதைக்கூடங்கள் நாடு பூராவும் 46 காணப்பட்டன. அவைகள் அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட தொழிற் கிராமங்கள் ஆகும். சூரியகந்த , வவுல்பெலே, மினுவங்கொட , பலங்கொட உடவலை மற்றும் மல்மீகன்த என்பன சில உதாரணங்களாகும். ♦️ ஊடகவியலாளர் : படலந்தவிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் ? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : தினமும் ரணில் விக்கிரமசிங்க வந்து செல்வார். அதேபோன்று கோணவில சுனில். கோணவில சுனில் வைத்தியர் ஒருவரின் மகளை கற்பழித்து கொலை செய்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலை செய்யப்பட்டு சமாதான நீதிவானாக மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ♦️ ஊடகவியலாளர் : பிரபல்யமான தேசிய அடையாள அட்டை கொண்டு செல்லுதல் தொடர்பான உங்கள் கருத்து என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : உண்மை. "கோணிபில்லா" என்ற ஒரு குழுதான் செய்தது. அதில் பெரும்பாலானோர் JVP இல் இருந்தவர்கள் தான். தேசிய அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். கட்சிக்கு உதவுவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்தனர். JVP இனர் 03 கோணிப் பைகளில் தேசிய அடையாள அட்டைகளை எடுத்து வைத்திருந்தனர். நாங்கள் விசாரணைக்காக எல்லா வதைக்கூடங்களிற்கும் சென்றோம். அனைத்தினதும் தகவல்களை சேகரித்து இருந்தோம். ஆனால் படலந்தவிற்கு மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டது. மற்றைய வதைக்கூடங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று JVP இனரால் வாக்களிக்க சென்ற 5 பேரை கொலை செய்து வாக்களிக்கும் இடத்திலேயே போட்டனர். இதுபோன்று 225 பேர் கொலை செய்யப்பட்டனர். ♦️ ஊடகவியலாளர் : இவ்வளவு நடந்த பின்பும் ஏன் இவர்களுக்கு எதிராக சட்டம் எதையும் செய்யவில்லை? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நான் நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க செல்ல இருந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போக வேண்டாம் என பயமுறுத்தினார். இருந்தாலும் நான் போனேன். போகும்போதே டக்ளஸ் பீரிஸ் பெயரை மாற்றி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இரண்டாவது பிரதிவாதியான நிஷ்ஷங்க என்பவர் வீட்டிலேயே துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ♦️ ஊடகவியலாளர் : ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை போன்றே செயற்படுகிறார்? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இன்று ரணில் விக்கிரமசிங்க அதைத் தருகிறேன். இதை செய்வேன் என்று கதை சொல்லித்திரிகிறார். அவரின் பழைய வரலாறு கொலையை யும் , வதையையும் ஊக்குவித்த ஒருவராக காணப்படுகிறார். புதிதாக அவர் ஒரு கூட்டத்தில் இதை கூறினார். அப்போது எனக்கு பண்டைய வதைக்கூடங்கள் ஞாபகம் வந்தது. ♦️ ஊடகவியலாளர் : பண்டைய வரலாற்றை தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நீங்கள் வாக்களிக்க 88/89 நடைபெற்றது என்ன என்பதை தேடிப் படியுங்கள். பின்னர் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். 🛑 பிற்குறிப்பு இவர் இந்த நேர்காணலில் கூறியது போல் JVP இனரால் தேசிய அடையாள அட்டைகள் திருடப்பட்டது உண்மை தான். தற்பாதுகாப்பிற்காக சில கொலைகள் செய்யப்பட்டன. நானும் 2000 ஆண்டுக்கு பிற்பாடு பிறந்தவன். நானும் இவர் சொன்னது போல் வாக்களிக்க முன் பண்டைய அரசியலில் 88/89 உண்மைத் தன்மைகளை ஓரளவு தேடிப் படித்தேன். நான் தெரிந்த மட்டில் JVP இன் பெயரை வைத்து அவர்களின் கொள்கைக்கும் அரசியல் கோட்பாடுகளிற்கும் அப்பால் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற ஒரு குழு JVP பெயரை வைத்து பல அப்பாவிகளை கொலை செய்ததையும், இந்த குழுவில் இந்திய ரோ அமைப்பின் சிலரும் அரசினால் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு அராஜகம் செய்தாக பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியாளர்களின் அறிக்கைகளில் எழுதப்பட்டிருத்ததை வாசித்தேன். அன்று ஊடகங்களும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதே மக்களிற்கும் காட்டியது. அடாவடித்தனத்திற்கும் , ஊழலிற்கும் எதிராக குரல் கொடுத்ததால் தீவிரவாதிகள் JVP இனரை முத்திரை குத்த அரசாங்கம் செய்த செயலாகவே பெரும்பாலான ஊடகவியலாளர் எழுதியிருந்தனர். இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்து எழுதவுள்ளேன். எது எப்படியோ இந்த வதை முகாம்களில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தற்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும் சிலர் நினைக்கலாம் நான் JVP சுத்தப்படுத்த முனைவதாக. எழுதுவது என் விருப்பம். வாக்களிப்பதும் எனது உரிமை. விமர்சிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. ✍🏻
  14. என்னப்பா இது பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த மாதிரி இருக்கிறதே?
  15. @குமாரசாமி அண்ணே.... உங்கடை ஆளுக்கு சுகமில்லையாம் என்னது அண்ணை வைத்தியசாலையில் என்று கேள்விப்பட்டு அம்மணியும் வைத்தியசாலையிலா? அண்ணன் சுகமாக வீடு வந்து சேர்ந்து விட்டார் என்று தகவல் அனுப்புங்கப்பா. இதுகளை இப்போதைக்கு அண்ணனுக்கு சொல்லி பிபியை ஏத்த வேண்டாம் பிளீஸ்.
  16. பையா இதுக்கு தானே Ball Boys என்று கொஞ்ச பெடியளை வைத்திருக்கிறோம்.
  17. சூட்டோடு சூடாக ஐபிஎல் படவங்களையும் நிரப்பி அனுப்புங்க. கடேசி பஸ்சில் புட்போட்டில் தொங்கி விழ வேண்டாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.