Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. நமதாக்கள் பணம் இதற்குள் தான் சேமிப்பு. 200 பேரில் எங்கட ஆட்கள் யாராவது நின்றார்களோ?
  2. நாங்க இருக்கிறமல்ல ஒரு சத்தியாகிரகமே நடத்துவோம்.
  3. அவரின் பதில்களை கூகிள் சீற்றில் போட்டேன். அவரின் தெரிவுகள் புரிகின்றது. 41லிருந்து 69வரை சரி பண்ணித் தரவா. வீரத் கோலியையும் கேன் வில்லியம்சனையும் மற்றைய கேள்விகளுக்குத் தெரிவு செய்துள்ளார். அவர்கள் அணியில் இடம்பெற மாட்டார்கள். அவர்தான் இந்தக் கேள்விகளைத் திருத்த வேணும். ஓ இப்போ வாடகைக்கும் ஆட்களைப் பிடிக்கலாமா?
  4. எனது மனைவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதில் அலாதி பிரியம். எப்ப முறைப்பாடு செய்கிறாங்களோ என்று சொல்லுவேன். இந்த கதையை சொல்லும் போது கொஞ்சம் சிந்திக்கிறா. பார்ப்போம்.
  5. அவர் ஏற்கனவே சில எறும்புகளைப் கண்காணிக்கிறார். அதற்குள் திறமையானதை தெரிவு செய்வார். ஆள் புலனாய்வு பிரிவு தெரியும் தானே.
  6. சாதாரணமாக ஒரு குழந்தை விழப்போகுதே என்று குழந்தையைப் பிடித்தவருக்கு ஒருவாரமாக கம்பி எண்ணியிருக்கிறார். சிலவேளை இவர் ஒரு வெள்ளையராக இருந்திருந்தால் இவர்களால் மிகவும் பாராட்டப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் படிப்பினையாக வைத்து என்ன தான் நடந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியுமா?
  7. அட்லாண்டா (WANF/கிரே நியூஸ்) - வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தனது வாழ்க்கை தலைகீழாக மாறியதாகக் கூறி, ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒருவர் அக்வொர்த் நகராட்சி மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் கழித்தார், மேலும் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுவதற்கு முன்பு மிரட்டல்களையும் பெற்றதாகக் கூறப்படுகிறது. செப்டம்பரில் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட ஒரு முன் அறிவிப்பின்படி, மகேந்திர படேல் அவதூறு, மானநஷ்டம், கவனக்குறைவு, தவறான சிறைவைப்பு, மன உளைச்சல் மற்றும் பல காரணங்களுக்காக அக்வொர்த் நகராட்சியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் இழப்பீடு கோருகிறார். மார்ச் மாதம் வால்மார்ட் கடையில் ஒரு குழந்தையைக் கடத்த முயன்றதாக படேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருக்கு எதிரான அனைத்து குற்றவியல் குற்றச்சாட்டுகளும் ஆகஸ்ட் மாதம் கைவிடப்பட்டன. படேலின் வழக்கறிஞர் ஆஷ்லே மெர்ச்சன்ட், இந்த முழு சம்பவத்தையும் ஒரு தவறான புரிதல் என்று கூறினார். தனது கட்சிக்காரர், கைகளில் நிறைய பொருட்களை வைத்திருந்த ஒரு தாய்க்கு உதவ மட்டுமே முயன்றார் என்றும் அவர் தெரிவித்தார். படேல் தனது வயதான தாய்க்கு டைலெனால் மருந்து வாங்குவதற்காக கரோலின் மில்லர் என்ற வால்மார்ட் வாடிக்கையாளரிடம் உதவி கேட்டபோது இந்தச் சம்பவம் தொடங்கியதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். கண்காணிப்பு வீடியோவில், மில்லர் தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு மொபிலிட்டி ஸ்கூட்டரில் பயணிப்பது தெரிகிறது. மில்லர் மருந்தைச் சுட்டிக்காட்ட எழுந்தபோது, தன் மடியில் இருந்த குழந்தையை கீழே விழாமல் தடுக்க படேல் குனிந்ததாக மெர்ச்சன்ட் கூறுகிறார். 30 நிமிடங்களுக்குப் பிறகு, மில்லர் அக்வொர்த் காவல் துறைக்குத் தொலைபேசி செய்து, கடத்தல் முயற்சி குறித்துப் புகார் அளித்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன. தனது குழந்தையை இழுத்துச் செல்வதில் நீண்ட நேரம் நடந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக அவர் அந்தச் சம்பவத்தை விவரித்தார். தன் குழந்தைகளுக்கு உதவுவதை மில்லர் விரும்பவில்லை என்பதை உணர்ந்ததும் படேல் அங்கிருந்து சென்றுவிட்டதாக மெர்ச்சன்ட் கூறுகிறார். அவர் தேடிக்கொண்டிருந்த டைலெனால் மருந்தை கண்டுபிடித்து, அதை வாங்கி, அந்தச் சம்பவம் நடந்த சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு கடையை விட்டு வெளியேறிவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, படேல் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்குப் பிணை வழங்கப்படுவதற்கு முன்பு அவர் 46 நாட்கள் சிறையில் இருந்தார். https://www.kbtx.comMan accused of trying to kidnap toddler from Walmart sues...The man's lawyer called the whole thing a misunderstanding, saying her client was merely trying to help a mother who had her hands full.
  8. @Eppothum Thamizhan தலைவா நீங்கள் இல்லாமலா? கடைசி ஆளாக குதிப்பது நீங்கள் தான். இம்முறை கிருபனுக்கு வேலை கூடுதலாக இருப்பதால் நேரத்தோடு பதிந்தால் அவருக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும்.
  9. நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன். அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன் சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன் நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன். தினமுரசு நாளிதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா, மகேஸ்வரி வேலாயுதம் ஆகிய இருவரையும் வி*டுதலைப் பு*லிகள் செய்தது என்று கூறி, நாமே கொ*ன்றோம். அந்தக் கொ*லைகளுக்கு புலிகள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உலகிற்கு “புலிகள் செய்தார்கள்” என சொன்னோம் ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களையும் எங்களில் சிலர் திட்டமிட்டு கொ*ன்றார்கள் அந்தக் கொ*லையில் தொடர்புடையவர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். சிலர் வெளியேறியிருக்கின்றார்கள் உதயன் நாளிதழ் மீது தாக்குதலையும் இராணுவமும், ஈபிடிபியும் சேர்ந்து செய்தார்கள். குறித்த தாக்குதலில் ராஜன், திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்தார்கள் இருவரும் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த Masterminds, யாரெல்லாம் தூண்டினார்களோ – எல்லோரும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். எந்தப் பயமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், வவுனியா எங்கும் பொதுமக்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபியினரால் தான் கடத்தப்பட்டார்கள். கொ*லை செய்யப்பட்டார்கள். சிறுமிகளும், மாணவர்களும் என பலர் காணாமலாக்கப்பட்டார்கள் ஈபிடிபி யின் சாவகச்சேரி அமைப்பாளர் சார்ள்ஸ் தான் இந்த ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இருந்த Operation lead. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற போது 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெ$டி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சு*ட்டு கொ*ன்று விட்டார்கள். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அ*டித்து சி*த்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர். யாரும் விசாரிக்கவில்லை. ஒரு கேள்வியும் இல்லை. ஏனெனில், எங்களை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள் எங்களுடன் இருந்த 6 உறுப்பினர்கள், பு*லிகளுடன் இணைய முயன்றார்கள். அவர்களை வெ*ட்டிக் கொ*ன்றது யாரென்று தெரியுமா? எங்களுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி. அவரே வெ*ட்டிக் கொன்ற கத்தியுடன் வந்து, கூட்டம் நடத்தினார். முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா இந்தியாவில் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவே அவரை அழைத்து வந்தார். பின்பு அவர் மீண்டும் ஒலிபரப்பு சேவைக்கு சேரலாம் என்ற தகவல் வந்ததும், அவர் நமது சில இரகசியங்களை வெளியே சொல்லக் கூடும் என்ற பயத்தால் அவருக்கு மதுவில் ந*ஞ்சு கொடுத்தோம். அவரும் செ*த்து போனார். மலையகத்தை சேர்ந்த மோகன், விஜி, யாழில் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி – ஆகியோர் எங்களில் சிலருக்கு விரோதமாக நடந்ததால் நாமே அவர்களை கொ*ன்றோம். அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொ*சுக்கினோம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போட்டோம் அதே போல ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொ*லைகள் நடைபெற்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான உத்தரவு – நம்முடைய முன்னாள் எம்.பி மதனராஜாவிடமிருந்து தான் வந்தது. பாதுகாப்பு அமைச்சகம் மாதாந்தம் எங்களுக்கு சம்பளத்தை அனுப்பியது. மஹிந்த ராஜபக்சே காலத்தில் எங்கள் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார். ஆனால் எங்களுக்கு ரூபா 10,000 - ரூபா 15,000 வரையில் சம்பளம் வழங்கினார்கள். கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் ரூபா 3,000 வரை EPF/ETF சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் அடிப்படை வேதனம் கேட்ட சிலரை கூட டக்ளஸ் தேவானந்தா இல்லாமல் ஆக்கியுள்ளார் இவ்வாறு மிக நீண்ட ஆதாரங்களை ஈபிடிபி அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சு. பொன்னையா (சதா) என்பவர் திரு மைத்திரிபால சிறிசேன - திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்க காலத்தில் குறைபாடாக முன்வைத்திருந்தார் பின்னர் தற்போது ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பொலிஸ் தலைமையகம் முதல் பலவேறு தளங்களில் முறைப்பாடுகளாக வழங்கியிருக்கின்றார் எத்தகைய விசாரணைகளுக்கு அழைத்தால் சாட்சியம் அளிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார் ஆனால் இந்த குற்றச்செயல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதால் நல்லாட்சி ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் முறைப்பாட்டை ஏற்று கொள்ள தற்போது வரை தயாரில்லை இராணுவ ஒருங்கிணைப்பில் தான் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையிடப்பட்டு இருக்கின்றார்கள் என்பது பகிரங்கமாகி விடும் என்பதால் முறைப்பாட்டாளரை அலைக்கழிக்கின்றார்கள் குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களை வேட்டைடைய பாதுகாப்பு அமைச்சு மாதாந்தம் பணம் செலவளித்திருக்கின்றது என்கிற அசிங்கம் தெரியாமல் இருக்க நாடகமாடுகின்றார்கள் இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள் இது ஜே ஆர் ஜெயவர்த்தனே கால Technique https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02RU7NXS6p2mcYrfFgDxbkpz9kRa4FWrEvMrE6E7ZASKQzkEW62L7sHBK9ksWCTAB5l&id=100057588638936
  10. அடைந்தால் மகாதேவி என்பது போல நீங்க பலாலியில் போய் இறங்க துடியாக துடிக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். காரியம் கை கூடும் நாள் செல்லும்.
  11. மொத்தமாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்வதை விட புள்ளி விபரங்களுடன் எந்த எந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவாகியது என்ற விபரத்தையும் மக்களுக்கு வழங்கலாமே?
  12. இந்தக் கூட்டங்களின் காணொளிகளைப் பார்க்க பிபி எகிறிக் கொண்டு போகிறது. அத்தனை பேரயைும் சுட்டுத் தள்ள வேணும் போல உள்ளது.
  13. @கிருபன் இன்னமும் விளையாட்டு வீரர்களை ணஅணிகள் அறிவிக்கவில்லை. இருந்தும் ஆளாளுக்கு குத்துமதிப்பில் ஏதோ ஒரு பெயரைப் போடுகிறார்கள். விளையாட்டு வீரர்களின் பெயர்களை அறிவிக்கும் போது அவரவர் பதிந்த வீரர்கள் இல்லாவிட்டால் திருத்தம் செய்யலாமா ? நானும் அதை ஒன்றை எதிர்பார்த்தே பதியாமல் இருக்கிறேன்.
  14. போட்டி முடிவுக்கு நீண்ட நாட்கள் உள்ளன. பதியும் போது ஏதாவது சந்தேகம் வந்தால் அடுத்தவர் விடையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கூகிள் சீற்றில் பதியும் போது விடைகள் இலகுவாக இருக்கும். இலங்கை இந்தியாவைத் தவிர விளையாடும் நாடுகள் வீரர்களின் பெயர்களை வெளியிடவில்லை.
  15. @வாதவூரான் @Newbalance போட்டியில் கலந்து கொள்ளவும்.
  16. உங்களுக்கு எங்க சார் உதைக்குது? ஓஓஓ இப்போது தான் கண்டு பிடித்தேன். தவறுக்காக வருந்துகிறேன். உங்கள் பெயர்மட்டுமல்ல @கறுப்பி யின் பெயரும் விடுபட்டுள்ளது. @வீரப் பையன்26 போட்டியில் கலந்து கொள்ளவும். @Ahasthiyan போட்டியில் கலந்து கொள்ளவும்.
  17. @நியாயம் நன்றி. இந்த திரி உங்களுக்குமானதே.
  18. இதை நாங்கள் அல்லவா சொல்ல வேண்டும். ஆத்துக்காரிக்கு இதுபற்றி தெரியுமா சார்?
  19. இதையும் அனேகமாக கிந்தியிலேயே கேட்பார்கள்.
  20. நான் கிழக்கில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ரசோதரன் மேற்கில் பசுபிக் சமுத்திரத்தில் 3000 மைல்கள் விமான பயணம் 6 மணித்தியாலம். இரண்டு இடங்களுக்கும் 3 மணிநேர வித்தியாசம். @Maruthankerny இருக்குமிடம் குளிர் தொடங்கினால் முடியும் வரை அடிக் கணக்காக பனி கொட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.