Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    17882
  • Joined

  • Last visited

  • Days Won

    72

Everything posted by ஈழப்பிரியன்

  1. எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக செய்திருப்பார். ஆழ்ந்த இரங்கல்கள்.
  2. Companies ready price hikes to offset Trump's global tariff ... நீங்க யாரைச் சொல்கிறீர்கள் என்று ஒரே குழப்பமாகவும் உள்ளது. ரம் வந்தால் விலைகள் குறையும் என்றார்கள் இன்று மேலே உள்ள தலையங்கம் ஏதோ விபரீதம் ஏற்படப் போகிறதென்றே சொல்கிறது. பொறுமை பொறுமை பொறுமை பொறுத்தார் பூமி ஆழ்வார்.
  3. நல்லது செய்யப் போய்த்தான் களுத்துறைக்கு மாற்றப்பட்டதாக பேசிக் கொண்டார்கள். டாக்ரர் அர்ச்சுனா ஒருவரே சுனாமியை ஏற்படுத்தியுள்ளார்.
  4. எங்கே ஒரு படத்தையும் காணவில்லை? யாரங்கே யு ரியூப்பர்களை அழைத்து வாருங்கள்.
  5. குறைந்ட பட்சம் 2 வருடமாகத் தன்னும் கட்சியில் அங்கத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற மரபை மீறி கட்சியில் உறுப்பினர் இல்லாத இருவரை எப்படி தேர்தலில் களமிறக்கினார்கள் என்று கேட்கிறார்கள். இதிலும் ஒருவர் சைக்கிளில் போகும்போது அப்படியே வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்கள். இந்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை சைக்கிளில் போன பிள்ளையை வீட்டுக்குள் கொண்டு வந்ததே பெரியதொரு இராணுவ முகாமை தாக்கியழித்தது போல சந்தோசத்தில் உள்ளார்கள்.
  6. இன்னொருத்தர் **** சொத்துக்கு காவல் இருந்தது போல இருக்கிறார். வேற யார் ரணில் தான்.
  7. இப்ப தாய்லாந்தை மறந்துட்டீங்களோ? மசாச் மசாச் சான்விச் மசாச்.
  8. ஒரு பக்கத்தார் தூக்க மறுபக்கத்தார் தூக்க நேரம் பிழைத்துவிட்டது. சூரன்போர் சன்னதியில் ஒருதடவை பார்த்தேன். விளையாட்டுச் சாமானை எறிந்து விளையாடுவது போல இருந்து எழும்பினார்கள் மேலெழும் வேகத்தில் 2-3 அடி உயரத்துக்கு தலைக்கு மேலே காற்றில் சூரன் மிதப்பார். கொண்டோடுவார்கள் சுற்றி ஓடுவார்கள். இப்போதும் அப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை.
  9. எங்க உங்க தலைவரைக் காணோம்? இப்ப இருவரும் தான் கட்சியில் இருக்கிறீர்களா? எங்க கட்சி கொடியைக் காணோம்? இருக்கிற இரண்டு பேர்களுக்குள்ளும் ஏனய்யா முரண்பாடு வருகுது?
  10. எவன்டா அவன் @தமிழ் சிறி க்கு முகத்தில் கரி பூசுவது? விடிய காலையிலேயே ரென்சனாக்கிறாங்களே.
  11. பழைய ஜனாதிபதிகள் மந்திரிகள் அனுபவிக்கும் சலுகைகளை குறைத்தாலே இதேமாதிரி நிவாரணங்கள் பல வழங்கலாம்.
  12. ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨 https://www.facebook.com/share/15FunbKmyA/?
  13. சிறிய வயதில் ஏதாவதொரு நிகழ்வை முன்னிட்டு வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒலிபெருக்கிக் கொண்டு வருவார்கள். தூரத்தில் சத்தம் கேட்கும்போதே இங்கே ஒரு படையே உருவாகிவிடும். சில இடங்களில் நின்று ஒலிபெருக்குவார்கள்.குடிமனைப் பகுதிகளில் ஓடீஓடி ஒலிபரப்புவார்கள். வாகனத்தின் இரண்டு கரையிலும் அண்ணை நோட்டீஸ் அண்ணை நோட்டீஸ் என்றே புழுதிக்குப் பின்னால் நாய் துரத்துவது போல அரை மைல் தூரத்துக்காவது துரத்துவோம். இவைகளையும் இந்த நேரங்களில் எண்ணிப் பார்க்கிறேன்.
  14. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து எறிந்து மற்றவர்களின் வீடுகளை உடைத்து பெருமைப்பட்டு இப்போ இருக்க வீடேயில்லாமல் ஐயா புலம்பிக் கொண்டே திரிகிறார். தம்பி எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
  15. அண்மையில் இதுபற்றி எனது மிக நெருங்கிய நண்பரொருவர் கூறினார்.ஆதாரங்கள் இல்லாத செய்தி என்றேன். பாதிக்கப்பட்டவர்களுடன் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் பேசிய போது அடுத்தநேர சாப்பாட்டுக்கு வழிதெரியாமல் இருந்த போது இவர்கள் தான் இப்போதுவரை கிழமைக்கு கிழமை இவ்வளவு இவ்வளவு சாப்பாட்டு சாமானும் செலவுக்கும் ஏதாவது தருகிறார்கள். உங்களால் எப்படி தர முடியுமா என்று கேட்கிறார்கள். இதைச்சமன் செய்வதற்கு யாருமே முன்வருவதில்லை என்று ஆதங்கப்பட்டார்.
  16. வாக்குப் போடுவதைவிட வேட்பாளர்கள் கூடுதலாக உள்ளதாலே இப்படி பார்க்கின்றனரோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.