Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. ஏன் விலகவில்லை? வடக்கு கிழக்கில் பல இடங்களில் இருந்த முகாம்கள் ஆமி தானாக விலக்கி கொண்டுள்ளது அவர்கள் தேவைக்கு ஏற்ப. பல வருடமாக நடப்பது இது. தெற்கில் பாவாடை நாடா காணாமல் போனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இனவாதிகள் கதறுவதும் வழமையானதே. அனுர இதுவரை இராணுவ பிரசன்னத்தை தலையீட்டை குறைக்கவே இல்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனது கைப்பொமை ஆளுனர் மூலம் ஆட்சி செய்கிறார். ஜேவிபி எம்பிகள் இருந்த இடமும் தெரியாமல் இருக்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.
  2. தனது பொறுப்பில் உள்ள ஒரு அமைப்பு குடிமகன் ஒருவனை அதுவும் சிறுவனை கொலை செய்துள்ளது. குடும்பம் போராடுகிறது. பொலிஸ் குடும்பத்தை மிரட்டுகிறது. மனித உரிமை அலுவலகம் விசாரிக்கிறது. குறைந்த பட்சம். நடந்தவை கவலை அளிக்கிறன. பாரபட்ச விசாரணையை உறுதி செய்யும் முகமாக சம்பந்த பட்ட அனைவரையும் லீவில் அனுப்புகிறேன் என்றாவது கூறி இருக்கலாம். இதற்கெல்லாம் நேரம் இல்லை, மலையகத்தில் போய் தொழிலாளர் கையை பிடித்து பார்த்து டிராமா போடவும், ஹெலி கொப்டரில் போய் கிரிகெட் மேட்ச் பார்க்கவும் நேரமிருக்கிறது. கபடவேடதாரி, இனவாதி அனுர. இதை பற்றி 3 ஜேவிபி யாழ் எம்பிகள் ஏதும் சொன்னார்களா? தானாக விலகி போகும் ஆமியை நாம் அனுப்பினோம் என மார்தட்ட மட்டுமே அவர்கள் ரெடி. சுமந்திரனை வென்ற நடிகர் திலகங்கள் அனுரவும் அவரின் எம்பிகளும்.
  3. இராசதுரையை இப்படி கேவலப்படுத்த கூடாது. சிறிதரன் ஈழதமிழர் அரசியலில் ஒரு மிக்சர் மாமா 😂
  4. இவ்வளவு மோசமான சுமந்திரனை எதிர்த்து சொந்த கட்சியில் ஆட்களை திரட்ட வக்கிலாத ஆள்தான் சிறி என்கிறீர்கள். இவர் எம்பி. சுமன் ஒரு உள்ளாட்சி உறுப்பினர் கூட இல்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாமல் முக்கிறார்.
  5. இங்கிலாந்து எனக்கு பெரிய வீட்டில் நிரந்தர வதிவுரிமை எடுத்து தராமல் ஓயமாட்டார்கள் போல இருக்கு. இலங்கை சீரிசில் விளையாடியதை வைத்து இவர்களை பைனல் வரை கொண்டு வந்துள்ளேன்.
  6. மேலே போல்டில் இருப்பதை மீள வாசிக்கவும். முழுக்க முழுக்க ஒருமையில் எழுதி உள்ள்ளீர்கள். அப்படியாயின் ஒருவரைத்தான் குறிக்கும். பல பெயர் என்பது கூட - பல பட்ட பெயர்களை பட்டியல் இட்டு, உங்களுக்கு இப்படி பல பெயர்களை அவர் கொடுத்தார் என்ற அர்த்ததில்தான் உள்ளது. நீங்கள் B என நினைத்துகொண்டு A என எழுதினால், வாசிப்பவர் A என்றே புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் சொன்னேன் குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுத சொல்லி. பிகு பலபெயர் என்பதும் பலர் (பலபேர்) என்பதும் ஒன்றல்ல.
  7. உங்களை நான் கட்டாயபடுத்தவில்லை. உங்கள் இஸ்டபடி எழுதுங்கள். அது உங்கள் உரிமை. காவடி ஆடினால் எதிர்வினை ஆற்றுவது என் உரிமை. விசாரணை இலங்கை பொலிஸ் எப்படி நடத்தும் என மறந்து போச்சா? தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் செய்த கொலை பற்றி அதன் தலைமையில் இருக்கும் அனுரவுக்கு கூடுதல் பொறுப்பு கூறல் உண்டு. இன்னும் ஒரு வரி பேசவில்லை. சம்பந்த பட்ட பொலிசார் அத்தனை பேரையும் கட்டாய லீவில் அனுப்பி இருக்க முடியாதா?
  8. அவர் தலைவராக தேர்ந்தெடுத்த கட்டிசியிலே கூட அவர் தனிமைபடுத்த பட்டுள்ளார்… இவருக்கெலாம் எதுக்கு அரசியல்? இவர் எப்படி மக்கள் உரிமையை வென்றெடுப்பார்? சுமந்திரனை வெட்டி ஆட முடியாதவரா சிங்களவரை வெட்டி ஆட போகிறார்?
  9. உங்களை இங்கே அனுரகாவடி என விமர்சிப்பவன் நான் மட்டுமே. அனுரகாவடி என விமர்சிப்பவர் புலிக்காசை அடித்தார் எனவும் என்னை சொன்னார் என நீங்கள் எழுதியதால் அப்படி விளங்கி கொள்ளப்பட்டது. கீழே நான் குவோட் பண்ணியுள்ள, நீங்கள் குறிப்பிட்ட பதங்கள் அனைத்தும் நான் மட்டுமே பாவிப்பவை. குழப்பி அடிக்காமல் தெளிவாக எழுதினால் நல்லம். நீங்க புளொட்😂
  10. அண்ணனுக்கு டிரைவராக வீட்டிலேயே தங்கி இருந்த தம்பியை அண்ணன் துரத்தி விட்டாராமே? உண்மையா?
  11. ஒரு வர்ணணையாளருக்குரிய ஆழத்துடன், மிக நேர்த்தியான அலசல். 1996 வட்மோர் இலங்கை அணியில் ஏற்படுத்திய மாற்றம் போல இது இருக்கிறது. ஆனால் ஒரு போட்டியை வைத்து சொல்ல முடியாது. Consistency இருக்குமா ? இது கடவுளுக்கே நடந்த பிறகுதான் தெரியுமாம்😂 நல்ல விடயம்தான் அண்ணை. வழமையாக எங்காத்துகாரரும் கோர்ட்டுக்கு போறார் என போட்டிக்கு வரும் சிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற full members உம் இந்த முறை உத்வேகமாக விளையாடுகிறார்கள். 20 இல் கடைசி 12 நாடுகள் தமக்குள் அடிக்கடி விளையாட வேண்டும்.
  12. ஆயுத மயமாக்கல் ஜேர்மனி விரும்பாத ஆனால் அதன் மீது திணிக்கப்படும் ஒன்று. நீங்கள் விரும்பியது போலவே அமெரிக்கா ஐரோப்பாவை விட்டு விலகி விட்டது. ஆனாலும் ஐரோப்பா-ரஸ்யா முரண் தீரவில்லை. காரணம் - இந்த முரணின் அடிப்படை நான் முன்பே சொன்னது போல் அமெரிக்கா அல்ல,மாறாக ரஸ்யாவின் நில-வெறி. நேற்று மேர்ஸ் சொன்னதை கேட்டிருப்பீர்கள், 1991 இன் பின்னான ஒற்றை தலைமை நிலையும், 2ம் உலக யுத்ததின் பின்னான உலக ஒழுங்கும் இப்போ இல்லை. இந்த நிலையில் வளமிகு நாடான ஜேர்மனி ஆயுத படைகள் இல்லாமல் இருந்தால் சூறையாடப்படும். AfD யின் எழுச்சியும் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலும் ஒரு சேர நிகழ்வது ஆபத்தானது என்பதில் எனக்கும் வேறு கருத்தில்லை. நான் “புட்டினும் புதுமாத்தளனும்” எழுதிய போது இப்படி ஒரு நிலை வராது எள்ளி நகையாடியவர்களை இப்போ யதார்த்தம் முகத்தில் அறைக்கிறது என நினைக்கிறேன். அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கு உடைந்தால் அதன் பலாபலன்களில் ஒன்று ஆயுத மயப்பட்ட ஜேர்மனி AfD கைக்கு போவதாக இருக்கலாம் என நான் பலதடவை எச்சரித்தேன். ஆனால் என்னை அமெரிக்காவின் அடிவருடி என முத்திரை குத்துவதிலேயே பலரின் கவனம் இருந்தது. “Be careful what you wish for, you just might get it". நீங்கள் வேண்டுவது எது என்பதில் மிக கவனமாக இருங்கள், வேண்டுதல்கள் பலித்து விடக்கூடும்.
  13. புலிக்காசை கொள்ளை அடித்தீர்கள் என உங்களை நான் ஒரு போதும் நேரடியக சொன்னதில்லை. சில சமயம் நான் சொன்னதை பிழையாக விளங்கி தொப்பியை எடுத்து போட்டு கொண்டீர்களோ தெரியாது. காசை அடிப்பது சுலபம் அல்ல. அதற்கு கள்ளனாக மட்டும் அல்ல… கெட்டிகாரனாகவும் இருக்க வேண்டும்.
  14. மேலதிக தகவலுக்கு நன்றி. புலிக்காசை கொள்ளை அடித்தவர்கள் யார் என்பதை அவர்களே வாயை கொடுத்து வெளிகொண்டு வந்துள்ளார்கள்😂.
  15. இங்கே அனுரவை யாரும் நீதிபதி வேலை செய்ய சொல்லவில்லை. மாறாக பொலிஸ் ஒரு அரச அமைப்பு. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பொலிஸ் நடவைக்கையை விசாரிக்க அனுரவுக்கு முடியும். ஏனைய கொலைகளுக்கும், பொலிஸ் செய்யும் கொலைகளுக்கும் வித்தியாசம் உண்டு. என்ன உண்மை வெளி வந்தது? நீங்கள் மேலே பத்தி பத்தியாக, அதாம் இதாம் என்று அனுரவுக்கு கவர் எடுத்ததை தவிர இங்கே எந்த உண்மையும் வெளிவரவில்லை. தனது இருப்பை தக்க வைக்க, பொலிஸ் அராஜகத்தை நம்பி இருக்கும் இன்னொரு அரசியல்வாதிதான் அனுர.
  16. என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்? Shyamsundar IUpdated: Tuesday, February 10, 2026, 15:40 [IST] கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (NTK) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத 'மூன்றாவது சக்தியாக' உருவெடுத்திருந்தது. தீவிரமான தமிழ்த் தேசியப் பேச்சுகள் மற்றும் சீரான வாக்கு வங்கி வளர்ச்சியால் கவனத்தை ஈர்த்த இந்த கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலை நெருங்கும் வேளையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு மௌனமான நிலையை எட்டியுள்ளது. Also Read களத்தில் குறைந்த வேகம்? வழக்கமாக தேர்தல் நெருங்கும் நேரங்களில் சீமானின் மேடைப் பேச்சுகளும், தொடர் பொதுக்கூட்டங்களும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். ஆனால், இந்த முறை 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்ததைத் தாண்டி, சீமான் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களையோ அல்லது மக்கள் சந்திப்புகளையோ (Makkal Sandhippu) இன்னும் தீவிரப்படுத்தவில்லை. வழக்கம் போல தங்களது வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பதிலும், அதில் 50% பெண்களுக்கு வாய்ப்பளிப்பதிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்தது. இந்த முறையும் வேகமாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இருப்பினும், தற்போது கட்சியின் தேர்தல் வேலைகளில் பழைய வேகம் இல்லை என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. கடந்த தேர்தல்களில் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரங்களும், சமூக வலைதளங்களில் தொண்டர்களின் தீவிரமான செயல்பாடுகளும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தும். ஆனால், தற்போது பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பிரச்சாரங்களும் பெரிய அளவில் வேகம் எடுக்காமல் இருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வை ஏற்படுத்தியுள்ளது. சீமான் எப்போதும் டிரெண்ட் செட்டர், நர்ரேட்டிவ் செட்டர் ஆக இருப்பார். ஆனால் இந்த முறை சீமான் கடுமையாக அமைதி காத்து வருகிறார். Recommended For You அமைதிக்கான காரணங்கள்:அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு சீமானின் இந்த "அமைதியான" ஆட்டத்திற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்: விஜய் காரணி (The TVK Factor): நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' தொடங்கி தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதுவரை சீமானிடம் இருந்த "மாற்று அரசியல்" வாக்குகள் பிரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வருகை ஏற்படுத்தியுள்ள சலசலப்பை உற்று நோக்கி, தனது அடுத்த கட்ட நகர்வை சீமான் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. You May Also Like உள்கட்சி சீரமைப்பு:பொதுவெளியில் சத்தமாக கூட்டம் போடுவதை விட, இந்த முறை பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதிலும், வேட்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்துவதிலும் (சென்னை-போரூர் ஆலோசனைக் கூட்டங்கள் போல) அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனித்து போட்டி - 50:50 முறை: இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் தனித்து போட்டி மற்றும் "ஆண்-பெண் சம பிரதிநிதித்துவம்" என்பதில் அவர் உறுதியாக இருப்பது அவரது பலமாகப் பார்க்கப்படுகிறது. காத்திருக்கும் புயல்? சீமானின் அமைதி குறித்து அவரது தம்பிகள் (கட்சித் தொண்டர்கள்) கூறுகையில், "அவர் அமைதியாக இல்லை. பேசிக்கொண்டுதான் இருக்கிறார். விஜய் மீடியாவால் பெரிதாக்கப்படுகிறார். மக்கள் என்னவோ சீமானுக்கே அதிக மதிப்பு தருகிறார்கள். நாங்கள் தேர்தலை வைத்து மட்டும் அரசியல் செய்ய மாட்டோம். அப்போது மட்டும் நாங்கள் அரசியல் பேசுபவர்கள் அல்ல, அதனால் நாங்கள் செய்வதை அமைதி என்றெல்லாம் நினைக்க வேண்டாம்" என்று கூறுகின்றனர். https://tamil.oneindia.com/news/chennai/the-quiet-before-the-storm-naam-tamilar-seeman-s-strategic-silence-in-the-2026-race-772597.html
  17. ம்ம்ம்… ஆனால் பார் சிறி கூப்பிட்டும் போக ஆளில்லை போலும்? அதான் பிரதேசசபை உறுப்பினரை எல்லாம் கூட்டி போயுள்ளார்😂
  18. தனது பதவியை தக்க வைக்க, பொலிசாரின் அராககத்தையும் கண்டும் காணாமல் விடும் அற்பனா அனுர?
  19. தலைப்பில் உள்ளது போல் உண்மையில் புலி காசை கொள்ளை அடித்த கள்ளர் பெயர் விபரம் வீடியோவில் உள்ளதா? சும்மா கவர்சிக்கா வைத்த தலைப்பு போல் உள்ளது. 2 நிமிடம் பார்த்தேன் - நான் புலிக்காசு 300,000 டொலரைத்தான் அடித்தேன், நீ புளொட் காசு 500,000 அடித்தாய் என கதை நீளுது😂. புலிக்காசை அடித்தாயா? என கேட்டால், கேட்பவரை நீ புளொட் என திசை திருப்பி விடும் பழைய உத்தியோ? வீடியோவை பார்த்தவர்கள் யாரும் இருந்தால் உண்மையில் கள்ளர் விபரம் உள்ளதா என சொல்லவும்.
  20. பின்வாங்கில உப்பிடி ஒருத்தர் எப்பவும் இருப்பார். டேர்ம் டெஸ்ட் நேரம் எல்லாம் எங்களோடு கிடந்து பிரண்டு போட்டு… ஓ எல், ஏ எல் சோதனை கிட்ட வந்தோன படிக்க தொடங்கி…நல்ல ரிசல்டும் எடுத்து விடுவார்கள்😂.
  21. சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
  22. உக்ரேனுக்கு எரிவலு உதவியை செய்ய ஒத்து கொண்ட சீனா! உக்ரேன், சீனா வெளிநாட்டமைச்சர்கள் முனிச் மாநாட்டில் பேச்சுவார்த்தை. # நீ கொஞ்சம் அங்க பாரு கண்ணா # கோமாளி #ராஜதந்திரி
  23. சொன்னமாரி செய்திட்டியல் என்ன? நாளைக்கு சவுத் ஆபிரிக்கா உங்களை பதிய விட்டு கிளப்பும் எண்டு ஜக்கம்மா சொல்றா😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.