Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. கூட்டணியில் சீட் இல்லாவிட்டாலிம் இதயத்தில் இடமுண்டு 😂
  2. நிலாமதி அக்காவும் உங்களை போல என்றே நினைக்கிறேன்.
  3. ம்ம்ம்…பறவைகள் பலவிதம்…. எனக்கு உலக கிண்ண கிரிகெட் போட்டியில் எந்த நாடு வெண்டாலும், கணிப்பு போட்டியில் நான் வெண்டாலும், புள்ளி எடுத்தாலும் - பொருட்டே இல்லை. உண்மையில் இப்போ எந்த போட்டியில் யார் வெல்வார்கள் என கணித்தேன் என்பதே மறந்து விட்டது. அதேபோல் கடைசியாக வரவேண்டும் எனவும் அறம்புறமா எழுதுவதில்லை. ஆனால் தெய்வாதீனமாக 😂😂😂 அப்படித்தான் அமைகிறது 😂. தேர்தல் போட்டியில் கொஞ்சம் அதிக சிரத்தை எடுப்பேன். அதில் கிரிகெட்டை விட கொஞ்சம் அப்டேட் ஆக இருப்பதால் - ஆனால் அங்கும் யார் வெல்வார்கள் என கணிப்போரை மட்டுமே தேர்வேன். விருப்பின் அடிப்படையில் அல்ல. தேர்தல் போட்டியில் பலர் அபிமான கட்சிக்கு அதிகம் கணிப்பை கொடுப்பதை கண்டுள்ளேன். உங்களை தவிர வேறுயாரும் கிரிகெட் போட்டியில் விருப்ப அடிப்படையில் தெரிகிறார்களா என அறிய ஆவல்.
  4. உண்மையில் இங்கே “விருப்பின்” அடிப்படையில் நீங்கள் தெரிவுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக உள்ளது. நான் முழுக்க முழுக்க ஒரு போட்டியில் எந்த அணி வெல்லும் என நான் நினைக்கிறேனோ அதை மட்டுமே தேர்வு செய்கிறேன். அந்த கணிப்பு தலைகரணமாக போவது வேறு விடயம் 😂. மீதி ஆட்களும் இப்படித்தான் என்றே கருதினேன். அக்காவுக்கும் எனக்கும் 4 புள்ளி வித்தியாசம். நாளைக்கு சமனாக வந்தாலும் அக்கா என்னை விட முன்னுக்கு பதில் போட்டதால் எனக்கு eviction நோட்டிஸ் தர முடியாது என நினைக்கிறேன். வாதவூரார் எண்ட வீட்டின் மீது ஒரு கண் வைப்பது போல உள்ளது.
  5. கணிப்பு வேறு விருப்பம் வேறு. விருப்பபடி தேர்வு செய்தால் நான் இந்தியா, அவுஸ், இலங்கை சுப்பர் எட்டுக்கு கூட போகாது, ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து பைனல் விளையாடும் எண்டுதான் எழுத வேண்டும் 😂.
  6. ஆம் சொல்லி உள்ளேன். பெரிய கை தான் ஆனால் கேட்ச் பிடிக்க சொன்னால் butter fingers 😂
  7. மே.இ.தீ நாட்டுபாடலை பாடிய உத்வேகத்தை பார்த்தால் ஒற்றுமையா, உத்வேகமா விளாடுவாங்கள் போல கிடக்கு. வழமையா பாட்டு பாடும் போது பலர் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்கு நிற்பது போல் நிற்பார்கள்😂.
  8. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் எழுதி அறிவியல் உலகை ஆள்கிறார் என லூசுதனமாய் பேஸ்புக்கில் எழுதபடும் பிஸ்கோத்து தகவல்களை இப்படித்தான் நாறடிக்க வேண்டும். இல்லை என்றால் நிஜமாக சாதிக்கும் தமிழரின் சாதனைக்கும் மதிப்பில்லாமல் போய்விடும். கீழே மித்திலாவின் வேலையிட புரோபைலை தந்துள்ளேன். அவர் ஒரு சாதராண முனைவர்தான். அப்படி ஒன்றும் அரிய சாதனை நிகழ்தியதாக அதில் இல்லை. தமிழன் என்பதால் பிஎச்டி எடுப்பது, மருத்தடிக்கும் விமான லைன்சன்ஸ், ரோட்டு கூட்டு இயந்திர லைசன்ஸ் எடுப்பதை எல்லாம் சாதனை என கொண்டாடுவதும், ஏனையோரும் அதை ஏற்க வேண்டும் என நினைப்பதும் மடமை. இவற்றை எல்லாம் ஒரு அமேசன் பழங்குடியில் செய்யதால் அதன் முதன் முயற்சி பாராட்டலாம், ஈழதமிழரில் அல்ல. https://profiles.sydney.edu.au/mehala.balamurali
  9. ஓம் நாகரத்தினமேதான். எனக்கு தெரிந்த நாகரத்தினம் எண்டா அது எங்கட நக்கத் மட்டும்தான்😀
  10. ராஜா பாதி ரஹ்மான் பாதி…90s teenager 😀 ஆப்கானிஸ்தான் குர்பாசை முதல்ல அனுப்பி இருக்கலாம்.
  11. நான் 13 தரம் அதில் 6 தரம் தியேட்டரில். ஊரில் இருந்து யார் கொழும்பு வந்தாலும் கூட்டிப்போவதுதான் வேலை😂.
  12. நான் கேள்விபட்டுள்ளேன். சாணியை பாம்பின் முத்து மேல் போடும் தைரியம் எல்லாம் இல்லை, அதனால் பாம்பு முத்தை துப்பிய பின் இயற்கை/அகால மரணம் அடைந்தால் நான் போய் முத்தை நைசாக எடுத்து கொள்ளலாம் என நப்பாசை கொண்டதுண்டு😂.
  13. தேவராஜ் ரசோ அண்ணா, சூர்யா கோஷான் அமுல் பேபி கலெக்டர் - வசி😂
  14. ரசோ அண்ணா நவ் 😂👇 பிந்திய தகவல்களின் படி கிரிகெட் அணிதான் இறங்குமாம்😂
  15. ஹொல்ட் ஓன் ப்ரோ… ஐ ஆம் ஒன் மை வே… நாளைக்கு நானும் நமிபியாவும் சேர்ந்து உங்களை மேலே தூக்கிறம்😂.
  16. அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀. 😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂
  17. நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை, ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும். முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார். இதைத்தான் நான் சொன்னேன். கருத்து சொல்வதை அல்ல.
  18. உங்களிடம் நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…. தொடர்ந்து எழுதுங்கள். யாழ் போன்ற களங்களில் தமிழ் தேசியத்தை ஆதரித்து எழுத பலர் வருவார்கள், ஆனால் கேள்வி கேட்டு எழுத மிக சிலரே வருவார்கள். இது ஒரு பஜனை மடம் ஆகாமல் தடுப்பவர் நீங்கள். மன உழைச்சல் உட்பட அதற்கு நீங்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். ஆனால் சில சமயங்களில் உங்கள் கருத்துகள் அதீத மேலோட்டமானவையாக இருப்பதும் உண்மை. துரையப்பா ஒரு நல்ல உதாரணம் - அவர் ஒரு நல்ல மேயர் மறுக்கவில்லை, அவரை தமிழரசு மூர்க்கமாக எதிர்த்தது அதையும் மறுக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவர் பற்றி இருக்கும் மதிப்பீடு இதனால் மட்டும் விளைந்தது அல்ல. தனி சிங்கள சட்டத்தின் பின், தமிழராய்ச்சி மாநாட்டு கொலைகளின் பின், இன்ன பல கலவரங்கள், கொடுமைகளின் பின் அதை எதையும் ஒரு துளி கூட கேள்வி கேட்காமல் தான் சார்ந்த ஒரு கட்சிக்கும் அதன் மூலம் இனவாதத்துக்கு சுயநலமாக அடிமை சேவகம் செய்த ஒருவர்தான் துரையப்பா. துரையப்பா ஒரு நல்ல தமிழனாக மட்டும் அல்ல, ஒரு நல்ல அரசியல்வாதியாக மட்டும் அல்ல, ஒரு நல்ல மனிதனாக கூட நடந்து கொள்ளவில்லை. இதனால் அவரை கொன்றது சரி என வாதிடவில்லை. ஆனால் அவரை பற்றி எழுதும் போது இந்த பக்கத்தை நீங்கள் ஒரு போதும் எழுதுவதில்லை. அது உங்கள் இஸ்டம். ஆனால் அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஏனையோர் இஸ்டம். ஆனால் ஒன்று - யாழில் மிக கண்ணியமாக எழுதுபவர்களில் நீங்கள் ஒருவர். பலவாறான சீண்டல்கள் name calling இன் மத்தியிலும். என்னால் எல்லாம் அப்படி வார்த்தையை கட்டுப்படுத்த முடியாது😀. இதற்கும் இன்னொரு பக்கம் உள்ளது.
  19. அனுர, ஷபாஸ் ஷெரிபுடன் பேசிய பிந்தான் விளையாடும் முடிவை பாக்கிஸ்தான் எடுத்ததாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.