Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. நன்றி. இரெண்டு பவுண் - உங்கள் அனுபவத்தை நான் மறுதலிக்க முடியாது. நான் அப்போது பதின்ம வயதையும் அடையவில்லை. ஆகவே விளக்க குறைபாடு இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை பார்த இரு குடும்பங்களுக்கு ஏழ்மை காரணமாக விலக்கு அளித்தார்கால். நான் ஜப்னா ரோயல் 😂
  2. சீண்டுவார் சீண்டல் எத்தகை ஆகினும் நாவினை காத்தல் தலை - புதுக்குறள்-
  3. அப்ப பெப்ரவரி 4 ம் தேதி பூட்டான்காரனுக்கா😂
  4. பிகு நீங்கள் உட்பட யாழில் எழுதும் பலர் கடன் அட்டையை நான் மேலே சொன்னபடி responsible ஆக பாவிப்போர்தான் என்பது அவரவர் எழுத்துக்களிலேயே தெரிகிறது. ஆனால் யாழுக்கு வெளியே இறாலுக்கு ஆசைபட்டு சுறாவை இழந்த எமது மக்கள் அதிகம். குறிப்பாக அடுத்த சந்ததி…கொஞ்சம் பயமாகவே உள்ளது😂
  5. நானும் டிக்கெட் வாங்க கடனட்டையைத்தான் பாவிப்பேன். விமான டிக்கெட்டுகளை IATA அதிகாரமுள்ள ஏஜெண்டிடம் வாங்கினும் கடன் அட்டை தரும் section75 உத்தரவாதம் ஒரு மேலதிக பாதுகாப்பு. 30-50 நாள் வட்டி இல்லை. Avios போன்ற புள்ளிகளை சேர்த்து கொள்ளலாம். இப்படி அனுகூலங்கள் பல. ஆகவே ஏர் டிக்கெட் மட்டும் அல்ல, சாண்ட்விச் வாங்குவது, டயருக்கு காத்தடிப்பது ஈறாக கடன் அட்டையில்தான். ஆனால் இலவச கடன் அட்டைகள் மட்டும்தான். வாழ்நாளில் மாத சந்தா கடன் அட்டைக்கு கட்டியதே இல்லை. அதேபோல் அடுத்த தவணைக்குள் முழுவதுமாக (0%வட்டியில்) கட்டி முடிக்க பார்ப்பேன். சில சமயம் அது அடுத்த மாதம், 3ம் மாதம் என தள்ளி போகும் (எதிர்பாரா செலவுகள் தொடர்ந்து வரும் போது). ஆனால் வட்டி கட்டும் ஒவ்வொரு மாதமும் வங்கியுடனான போட்டியில் தோற்று விட்டேன் என மனம் அல்லல்படும்😂. ஆனால் ஒரு போதும் ஹொலிடே கடன் அட்டையை நம்பி போவதில்லை என்பது கல்லில் எழுத்து. போய் வந்து அடுத்த தவணைக்குள் கட்ட வேண்டிய தொகை வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே ஹொலிடே. இல்லை எண்டால் ஐரோப்பாவுக்குள் போய் வரலாம். அதுவும் இல்லை எண்டால் யூகேயில் பார்க்க எவ்வளவோ இருக்கு. அதுவும் இல்லை எண்டால் - டிவியில் போகும் ஹொலிடே நிகழ்சிகளை பார்த்து இன்புறலாம் 😂. ஆனால் வட அமெரிக்கா வாழிகளானா உங்களின் அலுப்பும் புரிகிறது. டிரான்சிட்டிலேயே பாதி வாழ்க்கை போய்விடும். உங்களுக்கு ஏர்போர்ட் லவுஞ்சுகள் சொகுசு என்பதை மேவி தேவை என்ற எல்லைக்குள் வரும் என நினைக்கிறேன். சும்மா பகிடியண்ணை
  6. ஒருவர் கட்டிக் கொடுத்தவர், மற்றையவர் கட்டி எடுத்துப் போனவர் 😂. நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம் 😂
  7. பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.
  8. குஞ்சு குருமான் உட்பட இறந்த அனைவரும் சாக வேண்டியோரே என அண்ணன் அநாகரிகன் ஒரு அருமை முத்தை உதிர்ர்துள்ளார். வழமையா வாண்டடா வந்து தலையை கொடுக்கும் எந்த தம்பியையும் இந்த பக்கம் காணோம். திருந்தீடாய்களோ😂
  9. இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச் Mohanraj ThangavelPublished: Wednesday, October 22, 2025, 18:29 [IST] சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது. Also Read Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே! அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது. கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. Recommended For You Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர் பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. https://tamil.filmibeat.com/news/dude-movie-director-keerthishwaran-notable-speech-at-thanksgiving-meet-dude-success-165641.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards
  10. இதை கண்டும் காணாமல் கடந்து போவது சரியில்லை. நீங்கள் ஜேர்மனியில் வந்து இறங்கிய நேரம் தொட்டு சான்சிலராகவா வேலை பார்த்தீர்கள்? அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்? இந்த கேள்வி உங்கள் கருத்துக்கு சிரிப்புகுறி இட்டவருக்கும்தான். புலம்பெயர் தேசத்தில் மொழி அறியாமல் நாய் பிஸ்கெட்ட்டை மனித உணவு என சாப்பிட்ட யாழ்ப்பாணத்தமிழன், இன்னொரு இனத்தை செருப்புதைப்பவன் என கிண்டல் அடிக்கலாமா? 90 க்கு முன் அவர்களும் கணிசமான வியாபார நிலையங்கள் யாழ் நகரில் நடத்தினார்கள். முண்ணனி பாடசாலைகளிலும் படித்தார்கள். சிலவேளை நாளைக்கு ஒரு பஸ் வரும் ஊரில் இருந்தவர்களுக்கு செருப்பு தைக்கும் முஸ்லிமை மட்டும்தான் தெரிந்திருக்கலாம்.
  11. போன வருடமும் வடகீழ் பருவ மழைக்கு இப்படி நிப்பாட்டினார்கள். இங்கே பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போகும் கப்பல் எல்லாம் வருடம் முழுவதும் போகும். பெயரிடப்பட்ட பெரும் சூறைக்காற்றுக்கு சில நாட்கள் நிப்பாட்டுவார்கள். ஒருவேளை இவை சிறிய கப்பல் என்பதாலோ?
  12. தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை. அனுரவுக்கும் ஆதரவு… ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்…. ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம். பிகு வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂. கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம். பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.
  13. நேற்றைய நான் இன்று கவிதையாகினேன் அனுபவம் 😂
  14. இஸ்லாம் பகட்டை எதிர்கிறதே ஒழிய, தங்கத்தை அல்ல. ஆண்களதிலம் தங்கம் அணிவதில்லை எனிலும், பெண்கள் அணிவார்கள் அத்தோடு அரபி நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு தெரியும் அவர்கள் தங்கத்தை செல்வத்தின் store value வாக எப்படி சேமிப்பார்கள் என்பது.
  15. கரூரில் இறந்தோர் சாக வேண்டியோரே! அநாகரிகத்தின் உச்சம் சீமான்! மனசு பூராவும் நஞ்சு.
  16. சின்ராசு இதுக்கே இப்படி பயப்படுறானே…. இவனா பேரினவாததுக்கு தலைவாரி, பின்னல் கட்டப்போறான்😂
  17. அருவருக்கதக்க கருத்தை விட்டு விட்டு கருத்தாளரை தாக்கும் பதிவு. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை நீர்த்து போக செய்து, உலக ஒப்பினையை தனக்கு எதிராக திருப்ப இது மிக உதவியாக இருக்கும். சமாதான காலத்தில் புலிகளின் அனுதாபிகள் என பலர் இப்படித்தான் அவர்களுக்கு குழி பறித்தார்கள். இந்த ஜோக் காப்புரிமை செய்யப்பட்டது 😂
  18. மிகவும் நல்ல கேள்வி (எங்கேயோ கேட்ட குரல்😂). சீரியசாகவே இது கேட்க வேண்டிய கேள்வி. ஒருவர் தனது தரப்பு நியாயத்தை இப்படித்தான் கேள்விகள் மூலம் முன்வைக்க வேண்டும். எனது பங்குக்கு மேலதிகமாக…. புலிகள் மன்னிப்பு கேட்ட சமயம் மீள வரும் போது வீடுகளை, வியாபார தலங்களை மீளளிப்பதாக சொன்னார்கள். அதே சமயம் இந்த நகைகளுக்கான ஒரு டோக்கன் நஸ்ட ஈட்டை ஏன் எவருமே கோரவில்லை?
  19. நாங்கள் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண் ஐயா… சொகுசு…பவிசு… எது எண்டாலும் முதலில் அவிசு படைக்க வேண்டும்😂. சட்டதில் இடமில்லை இல்லாவிட்டால் பாய் போட்டிருப்போம்😂
  20. கவனிக்க: புலிகள் ஒரு போதும் முஸ்லிம்கள் ஆயுதம் வைத்கிருந்தார்கள், காட்டி கொடுத்தார்கள், பாதுகாப்புக்கு வெளி ஏற்றினோம் என்ற எந்த விளக்கத்தையும் கொடுத்து நான் அறியவில்லை. ஏன் வெளியேற்றினார்கள் என்பது, வெளிப்படையானது obvious. கிழக்கில் நடந்த கொடுரத்துக்கு பதிலாக…. இனியும் செய்யவேண்டாம் என மிரட்ட…. கிழக்கு தமிழருக்கு உங்களுக்காக நாம் இருக்கிறோம் என காட்ட….. இவைதான் காரணங்கள். மிக நியாயமான காரணங்கள். ஆனால் …. இந்த நடவடிக்கை நியாயமானதா, விவேகமானதா, நீண்ட கால நோக்கில் அனுகூலமானதா? இல்லை.
  21. இதில் அரசியலும் உள்ளது. புலிகள் முஸ்லிம்கள் மீது செய்ததை சொல்லும் முஸ்லிம் அவர்களிடம் ஹீரோ. முஸ்லிம்களின் குழுக்கள் தமிழர் மீது செய்ததை சொல்லி, புலிகள் செய்ததையும் நியாயப்படுத்துவோர் எம்மிடம் ஹீரோக்கள். இங்கே எவ்வளோ எழுதுகிறார்கள் முக்கி, முக்கி. நான் கேட்ட கேள்வி ஆம் இல்லை அல்லது தெரியவில்லை என பதில் சொல்ல கூடிய எளிய கேள்வி. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடம் புலிகள் நகை, பணம், இதர பொருட்களை பிடுங்கி கொண்டார்களா? மறுவளமாக முஸ்லிம்களும் இப்படித்தான். வீடமுனையை நாசம் பண்ணினீர்களா? என கேட்டால் எத்தனை முஸ்லிம்கள் உண்மையை ஏற்பார்கள்? ஹிஸ்புலா காளிகோவிலை மாட்டு தொழுவம் ஆக்கினேன் என மேடையில் பேசவில்லையா? அவர்களில் யாரும் பேசினாலும் “முஸ்லிம் அரிச்சந்திரன்” - இப்படியான விடயம் பேசாமல் விடுவதே சிறப்பு என ஏனையோர் அடக்கி விடுவார்கள். மன்னிப்பு பற்றி சீமான் திரியில் எழுதியதுதான். Truth and reconciliation உண்மையும், பரஸ்பர மன்னித்து மீள் ஏற்றலும். இதில் உண்மையை தவிர்த்து விட்டு, மன்னிப்பு வெறும் வார்த்தைகளால் வராது. இது முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் மட்டும் அல்ல, சிங்களவருக்கும்ப்பொருந்தும். லொஜிக் மருந்துக்கும் இல்லாத நிலைப்பாடு. முஸ்லிம்களை பாதுகாக்க வெளி ஏற்றினால் அது தவறல்ல அவர்களுக்கு செய்த நன்மை. நன்மை செய்யமைக்கு யாராவது மன்னிப்பு கேட்பார்களா? நான் நினைக்கிறேன் இவர்கள் யாருக்காவது பெரும் நன்மையை செய்து விட்டு, நன்மை செய்தமைக்கு மன்னிபும் கேட்கும் அளவுக்கு அப்பாவிகள் என😂
  22. பிள்ளையள் ஒயில் கிழவனுக்கு கல் எறிய வேண்டாம்…பாவம்.😂 கள்ளனே மனிசியையும் கூட்டி கொண்டு நாட்டை விட்டே ஓடீட்டான் 😂. வீட்டையும் விக்க போட்டுட்டு. ஒயில் ஓல்ட் மான் எண்ணையை பூசிகொண்டு ஒரே அலப்பறை😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.