Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14509
  • Joined

  • Last visited

  • Days Won

    157

Everything posted by goshan_che

  1. ஓம் அல்வாயன் உங்கள் பார்வை இந்த விடயத்தில் மிக சரியானதே. இப்போ ஈழத்தமிழர் ஒரு பக்கம், தமிழக+மலையக தமிழர் ஒரு பக்கம் என்ற மாயப்பகுப்பு ஒன்று தமிழகத்தில் வலிந்து உருவாக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் ஒரு நச்சு செடியின் ஒரு கிளை வெளி வருவதை இப்போ கண்டு கொண்டீர்கள். ஆனால் இந்த நச்சு செடியின் விதை 2009 இல் தலைவர் இறந்த போதே தமிழ் நாட்டில் ஊன்றப்பட்டு விட்டது. மேலே நீங்கள் சுட்டிய இந்த பிரித்தாளும் சூழ்சியின் ஆரம்ப புள்ளியே - திராவிட சாதிகள்/கட்சிகள் தமிழனுக்கு, குறிப்பாக ஈழத்தமிழனுக்கு எதிரானவை என்று தமிழ் நாட்டில் கட்டி அமைக்கப்பட்ட கருத்து நிலைதான். கட்சி அரசியல் தாண்டி, ஒட்டு மொத்த தமிழ் நாடும் ஈழ ஆதரவுதான் என்ற நிலையில் இருந்து, ஒரு பகுதி மட்டுமே ஈழ ஆதரவு மறுபகுதி (ஒட்டு மொத்தமாக சில சாதியை சேர்ந்தோர்) ஈழத்தமிழரின் துரோகிகள் என கட்டமைக்கப்பட்டதும், அதன் தொடர்சியாக ஒரு பகுதி கருணாநிதி பிறந்த நாளில் அவரை அசிங்கபடுத்த, மறுபகுதி தலைவர் பிறந்த நாளில் அவரை உருவக் கேலி செய்ய வழி சமைத்ததும் இந்த நச்சு செடியின் விதைதான். கடந்த 14 வருடங்களில், தமிழ் நாட்டு தமிழர்கள், வாக்காளர் மத்தியில் நாதக புலிகளை எடுத்து சென்றது எவ்வளவு உண்மையோ அதேபோல் மிக பெரும் ஈழ/ விடுதலை புலிகள் மீதான வெறுப்பும் அங்கே குறித்த சாரார் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. 2009 ற்கு முன்னர் இருந்த புலிகள்/ஈழ பிரச்சனை கட்சிக்கு அப்பாற்பட்ட விடயம் என்ற நிலை இப்போ அங்கு இல்லை. இன்று புலிகள்/ஈழத்தமிழர் என்றால் அது ஒரு கட்சி சார்ந்தோர் மட்டுமே என்ற நிலை அங்கே உருவாக்கப்பட்டு, எமக்கு செயற்கையாக பல இலட்சம் எதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். நீங்கள் சொன்ன விடயம் இந்த நச்சு செடியின் ஒரு கிளைதான். விதையை பற்றி நானும் பலரும் இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறோம். இந்த செடியின்…விதையின் கருவூலம்…சாட்சாத்….அ றோ ஹராவேதான். றோ இலங்கையிலும், மாலை தீவிலும் மூக்குடை படலாம். ஆனால் அது முயலாமல் இருப்பதில்லை. அண்மைய போலி நாடகம் அவர்கள் இன்னும் இதில் முழு மூச்சாக இருப்பதையே காட்டுகிறது. றோ எல்லாம் ஒரு மேட்டரே இல்லை…என சொல்பவர்கள்….அதன் செயல்களை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கவே அப்படி சொல்கிறார்கள் என்பது என் கருத்து.
  2. மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா? துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா? தானாட வில்லையம்மா சதையாடுது அது தாத்தா என்றும் பேரன் என்றும் விளையாடுது 🤣. ஆராரி…றோ…பாடியதா…றோ…தூங்கி போனதா..றோ…. யா…றோ…யா…றோ…. என் தெய்வமே இது பொய் தூக்கமா?🤣 பிகு நான் மலையாளி, றோ என்பதை 2013 இலேயே அண்ணைமார் கண்டு பிடித்து எனக்கு பட்டமளிப்பும் நடத்தி விட்டார்களே. Why are you re-inventing the wheel🤣.
  3. இப்பதானே 9 நாள் கடந்துள்ளது. ஏன் இதில் அவசரப்படுவான். டீல் ஓடிகிட்டிருக்கு….. படிந்தால் சகோதரி…. படியாவிட்டால் துரோகி… யாறோ, எவறோ மனமும் கோணாமல் முடிவு எடுக்க வேணும். டைம் ஆகும்.
  4. ஓம். 2015 இல் கொழும்பு ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நிற்கும் போது மழை அடிக்கத்தொடங்கியது. அந்த பகுதி எல்லாம் முன்னர் வெறும் தரை - இப்போ காங்கிரீட். வளாகத்துள் போகும் போது மழை இல்லை, சாப்பிட்டு வெளி வர முழங்காலுக்கு சற்று கீழே வெள்ளம். டக்சி எடுத்து கிருலப்பனை போக 3 மணத்தியாலம் பிடித்தது. இப்போ போர்ட் சிட்டி வேற வெள்ளம் பாயும் வழியை அடைத்து கொண்டு இருக்கிறதோ தெரியா. அமைவிட அதிஸ்டம் ஒரு தரம் தப்பினாலும் பெரிய அனர்த்தம் வரும்.
  5. டீம்காவில் முழு பிழை - நாலாயிரம் கோடியை ஏப்பம் விட்டு ஸ்வாக செய்தது. ஒரு புதிய வெள்ளமேந்து பகுதியை அல்லது ஒரு புதிய ஏரியை நிர்மாணித்து - மோட்டர் பம்புகள்+ கால்வாய்காள் (canal) மூலம் உபரி நீரை வெளி ஏற்றும் பொறிமுறையை உந்த காசில் செய்திருக்கலாம். எல்லா வழிந்தோடும் வழிகளையும் கடலை நோக்கி அமைத்து விட்டு, கடல் சீற்றத்தால் கடல் நீரை வாங்கவில்லை என்கிறார்கள். இது நடக்கும் என எதிர்பார்த்திருக்க வேண்டிய ரிஸ்க்.
  6. வணக்கம் நெடுக்ஸ். கண்டது சந்தோசம். எல்லாம் நல்லதுக்கே - பலஸ்தீன போரட்ட திரியில் சொன்னேன் அல்லவா. அந்த “நல்லதின்” அடுத்த கட்டம்தான் இது. குடிசன பரம்பலை (demography) ஒரு அளவுக்கு மேல் மாற்ற அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்கவும் கூடாது. இன்றேல் இங்கிலாந்து, இங்கிலாந்தாக அன்றி, இலாகூராக மாறிவிடும்.
  7. ஒவ்வொரு நதி, ஏரிக்கும் நீர் வரத்து அதிகரிக்கும் போது அதன் உபரி நீரை உறிஞ்சி கொள்ள ஒரு ஸ்பாஞ்ச் தேவைப்படும். இதை floodplains என்பார்கள். யாழ் நகருக்கு பொம்மை வெளியியும், வலிகாமத்துக்கு கல்லுண்டாயும், கொழும்புக்கு முத்துராஜவெலவும் இப்படித்தான். ஏரியில் மட்டும் அல்ல, இந்த ஏரியின் வெள்ளமேந்து பகுதியில் வீடு கட்டினாலும் இதே நிலமைதான். சென்னையில் 2015 மழைக்கு பின் வீடு வாங்கிய பலர், 3ம் மாடிக்கு மேல் இப்படியான பகுதியில் வாங்கினாலும் ஓகே என வாங்கினராம். ஆனால் வீடு 3ம் மாடி என்றாலும் கார் ரோட்டில்தான் போக வேண்டும், வெள்ளம் வடியும் வரை மின்சாரம் வராது. அண்மையில் மும்பையிம் இப்படி மழையை சந்தித்தது. உலக வெப்பமாதல் மேலும், மேலும் இவ்வாறான மழைகளை தரப்போகிறது. பல கட்டுப்பாடுகள் உள்ள மேற்கில் கூட flash floods வருவது இப்போ கூட. வளர்முக நாடுகளின் பெரு நகரங்கள் பாடு திண்டாட்டம்தான்.
  8. நம்பினார் கைவிடப்படார். ஓம் சரவண பாபா நம! சில சமயம்…வார்டன கூட விட்டு விடலாம்….. ஆனால் வார்டனுக்கு சப்போர்ட் பண்ண வேணும் எனபதால்….அரசியல் கட்சிக்கு பணம் யாரும் கொடுக்கலாம்….என சொல்லும்…வார்டனின் தம்பியை…ஆதாரத்தாலேயே அடிப்போம்🤣. ஏன்னா அடிச்சு தெளிய வைக்க வேண்டியது…. பெருமை அல்ல…கடமை….🤣 மேலே உள்ளதன் மொழி பெயர்ப்பு: அதிக சேதாரம் இல்லாமல் இரெண்டு சுஜ ஆக்கத்தை உருட்டி விடலாம் எண்டு பார்த்தால் முடியாது போல இருக்கே🤣.
  9. இப்படியான முடிவுகள் முதன்மை சட்டம் மூலம் மாற்றப்படுவதில்லை. எனவே இவை பாராளுமன்றில் விவாதிக்கப்படுவது குறைவு. ஆனால் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தேசிய கல்வி கொள்கை உள்ளது, அதன் தொடர் மீளாய்வு நடக்கும்.
  10. பல வருடமாக இங்கே யூகேயில் இதுதான் வழமை. பிறகும் மாதத்தை பொறுத்து 17/18 இல் ஏ எல் எடுப்பார்கள். அதே வருடம் செப்டெம்பரில் யூனி. 20/21 இல் வெளியே வந்து விடுவார்கள். வெளியேறும் சராசரி வயது 21. இலங்கையில் ஏ எல் சோதனை எடுக்கும் போதே 19 யூனி போக 20 மினிமம். வெளியே வர 23 (ஸ்டிரைக் இல்லாட்டில்). 90 களில் யூனி போகவே 23 வயதாகியது என நினைக்கிறேன். இது தேவையான மாற்றம்தான். 8 ஆக இருந்து, பின் 89/90 இல் 6 ஆகி, பின் எட்டாகி, ஒன்பதாகி, பத்தாகி…..இனி ஏழரை மட்டுமே பாக்கி🤣. கல்வி திட்டம் 48 இல் இருந்து ஒரு 3 வருட இடைவெளி விட்டு…இங்கிலாந்த்தின் சிஸ்டத்கை 90% ஈயடிச்சான் கொப்பிதான்.
  11. ஆர்யன் பெயர் விளக்கம் ”ஆர்யன் என்பது சம்ஸ்கிருத இந்துப் பெயர். `உயர்வான' என்ற பொருள் உடையது”. ஷாருக்கானின் மூத்த மகனின் பெயரும் இதுவே. https://cinema.vikatan.com/amp/story/shah-rukh-khan-shares-the-interesting-reason-behind-naming-his-son-aryan-khan வட இந்தியர், பிராமணர், ஹிட்லர், யாழ்ப்பாணத்து “ஆரிய” சக்கரவர்திகள், பாரதியார் (24 இடங்களில் இந்த சொல்லை பாவித்துள்ளாராம்) அனைவரும் வேறுபட்ட சூழமைவுகளில் இந்த சொல்லை “உயர்ந்த” என்ற அர்தத்திலேயே பாவித்துள்ளனர்.
  12. வாழ்த்துக்கள் சுவி அண்ணா. ஆர்யன் ஆல் போல தழைத்து, அருகு போல வேரோடி, மூங்கில் போல சூழ்ந்து வாழ வாழ்த்து🙏.
  13. யாழ்கள நீடிப்புக்கு நீங்கள் செய்யும் பேருதவிக்கு நன்றி. நாமலோடு நிற்காமல், யோசித, மகிந்த, பசில் சாமல், கோட்ட வையும் எழுத வைக்கவேணும்.
  14. இந்த விளம்பரங்களை யாழ்களம் ஆட்களிடம் நேரடியாக கோராமல் - சில நிறுவனங்கள் ஊடாக செய்ய முடியும் என நினைக்கிறேன். உதாரணமாக நான் தற்ஸ் தமிழை பார்க்கும் போது எனக்கு இலண்டனில் வீடு, கார், சப்பாத்து வாங்கும் விளம்பரம் எல்லாம் வரும். நிச்சயமாக இதை என்னை டார்கெட் பண்ணி தற்ஸ்தமிழ் செய்யவில்லை. ஆனால் அவர்கள் பக்கதில் இந்த விளம்பரம் ஓட, அதை நாம் அழுத்தி பார்க்க, அவர்களுக்கு அதில் ஒரு தொகை போகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ், இன்னும் சில தளங்களில் விளம்பரத்தை பார்க்காமல், பக்கத்தை பார்க்கவே முடியாது. Popup blocker பாவித்தால், நம் தளம் நடக்க விளம்பர பணம் தேவை எனவே popup blocker ஐ நூத்து விட்டு வாருங்கள் என சொல்லும். இப்படி செய்யலாமா? எனக்கு end user அனுபவம்தான். டெக்னிக்கல் சிக்கல் இருக்கலாம்.
  15. இலத்திரனியல் ஓட்டு மெசின் இந்தியாவில் எப்போ அறிமுகமானது? இந்த கண்துடைப்பு நாடகத்தில் நாமும் ஒரு நாள் வெல்லுவோம், அதிகாரத்கை பிடிப்போம் என பிரச்சாரம் செய்யும், போட்டி போடும் கட்சிகள், தலைவர்கள் மக்களை தெரிந்தே ஏமாற்றும் கள்வர்கள் தானே?
  16. பிபிசி எம்மிடம் எடுக்கும் licence fee யில் தான் ஓடுகிறது. டெலிகிராப், டைம்ஸ், விகடன், குமுதம், இன்னும் பல paywall. சி என் என், ஸ்கை, யூடியூப், பேஸ்புக், தட்ஸ்தமிழ் - விளம்பரம் மற்றும் popups. இணையத்தில் யாழோடு ஓடத்தொடங்கிய பலர் இப்போ இல்லை. இருப்போர் மேலே சொன்ன மூன்று வகையில் ஏதோ ஒரு வகையில் செலவையாவது எடுக்கிறார்கள். யாழ், யூடியூப் அல்லது தட்ஸ்தமிழின் funding model இல் செயல்பட முடியாதா? எனக்கு அதிக விளக்கம் இல்லை. ஆனால் ஒரு யோசனை. ஒவ்வொரு திரியிலும் விளம்பரத்தை போட்டால் நாம் அதை கர்ம சிரத்தையாக அழுத்தி, ஓடவிட்டு ad revenue வை கூட்ட முடியும்? இந்த முறையில், எவரும் நான் காசு கொடுக்கிறேன் என உதார் விடவும் முடியாது. # மனமுண்டானால் மார்கபந்து
  17. இப்படி சொல்லலாம் என நான் சொல்லவில்லையே? ஆனால் கட்சிக்கு அந்த நாட்டுக்கு அப்பால், குடிகள் அல்லாதோரிடம் சேர்க்க முடியாது. அதே போல் கட்சிக்கு என சேர்த்த பணத்தில் தலைவர் சுயமாக பஜரோ வாங்க முடியாது. ஆகவே அறக்கட்டளைகளுக்கு உள்ள அதே கடப்பாடு, கட்சி நிதி சேகரிப்புக்கும் உண்டு. இதை நான் மேலே தந்த லிங்கில் தந்துள்ளாகள். நீங்கள் வாசிக்கவில்லை எனில் நானே தருகிறேன். Can non-UK citizens and companies donate to political parties? Foreign companies and individuals who are not on the UK electoral register cannot make political donations. The only exception is for overseas visits. Foreign organisations and individuals can pay for ‘reasonable costs’ of an overseas visit for politicians. What are the requirements for reporting donations? Political parties and politicians must record details of loans and donations. Donations or loans over £7,500 to the central party must be reported to the Electoral Commission. Party sections whose finances aren’t managed by the central party must report donations over £1,500. MPs must report loans and donations over £500 made in connection with their activities as an MP to the parliamentary commissioner for standards. Political parties and MPs must also report any impermissible loans and donations that they return to the donor to the Electoral Commission and the parliamentary commissioner for standards, respectively.
  18. என்ன ஓணாண்டி லண்டன் ரிட்டர்ன் ஆக இருந்த படி இப்படி கேட்கிறீர்கள். எத்தனை தடவைகள் இங்கே conservatives donors காசை கொடுத்து காரியம் செய்கிறார்கள் என பல வேறு பட்ட புகார்கள் கிளம்பி உள்ளன. உங்கள் பழைய பொஸ் லைக்கா கூட இப்படி என கார்டியன் எழுதியதே? இந்த லிங்கில் சென்று பாருங்கள். பொதுமக்கள் சார்பில் கேள்வி மட்டும் இல்லை, ஏகபட்ட கெடுபிடியான கட்டுப்பாடுகளும் உள்ளன. ஒரு அறக்கட்ளை அளவுக்கு அரசியல் கட்சியின் நிதி சேகரிப்பும் பொதுமக்கள் சார் விடயமே. https://www.instituteforgovernment.org.uk/explainer/rules-funding-political-parties 👆🏼இதே மாதிரியான கட்டுப்பாடுகள் இந்தியாவிலும் உண்டு. அதை மேலே நாதம், பையன் சொல்லியிம் உள்ளார்கள். இதை நீங்கள் விபரம் தெரியாமல் எழுதினீர்கள் என்றே நினைக்கிறேன். தயவு செய்து மேலே நான் தந்த இணைப்பை முழுவதுமாக வாசித்து - அதன் பின்னும் நீங்கள் மேலே எழுதியது ஒவ்வொரு சொல்லும் பிழை என புரியவில்லை எனில் சொல்லுங்கள் மேலும் பல உதாரணங்களோடு விளக்குகிறேன். ***
  19. குறுக்கு கேள்விக்கான பதில் அதை விட குறுக்கால போனதை கண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். பிகு நான் ஜீனியஸ் குறுக்ஸ் அல்ல. அவரின் ஏகலைவன். 2013 க்கு முன் யாழில் பல வருட வாசகன். அதனால் எழுதிய அனைவரும் எனக்கு பழக்கம். அவர்களுக்கு என்னை தெரியாது.
  20. எம்மை சுற்றி இருக்கும் சூழலில்தான் எமது அனுபவமும் அமைகிறது. எனது நண்பர் கொடுப்பதால் - அது என் அனுபவம். அதே போல் போஸ்ட் ஆபிசில் சர்வதேச நாணய மாற்றில் வேலை செய்த @மெசொபொத்தேமியா சுமேரியர்அன்ரியின் அனுபவம். உங்களுக்கு அனுபவம் இல்லை என்பதால் இதை மறுதலிக்க முடியாதே. சுய நினைவில் கொடுப்தால் அது அவரவர் விருப்பம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஒருவர் சிறுவர் இல்லத்துக்கு அல்லது ஊரில் இயங்கும் பல அறக்கட்டளைகளுக்கு காசு அனுப்புவதை எவரும் விமர்சிப்பதில்லை. ஆனால் அறக்கட்டளை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கு சுய விருப்பில் அனுப்பினாலும் அதை விமர்சனம் செய்யலாம். ஜாக்கிகள் ஆன்மீகத்தில் மட்டும் அல்ல, அரசியலிலும் உள்ளார்கள்.
  21. ஜனவரி 2009 வரை இப்படி நடந்தது அரிதிலும் அரிது. அப்படி நடந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.