Everything posted by நீர்வேலியான்
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
அண்ணை, அவசரப்பட்டு ஏதும் செய்துவிடாதீர்கள்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேட்டுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் தற்போது விடுமுறையில் இலங்கையில் உள்ளேன், என்னால் இம்முறை பங்குபற்ற முடியவில்லை.அடுத்த முறை பார்ப்போம்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதை சிறப்பாக நடத்திய கிருபனுக்கும், போட்டியில் வெற்றியீட்டிய பையனுக்கும், திரியை கலகலப்பாக கொண்டு சென்ற சக யாழ்கள உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள். வேலைப்பளு காரணமாக என்னால் இதில் கலகலப்பூட்ட , ஒன்றிணைய முடியவில்லை. இடைக்கிடை பார்ப்பதுண்டு. வெறும் குருட்டு luck இல் முன்னுக்கு வந்துவிட்டேன். இந்த கிரிக்கெட்டில் இப்ப என்ன நடக்குத்தென்று தெரியாது, யார் யார் விளையாடுகிறார்கள் என்றும் தெரியாது. எல்லோரும் கேட்டதுக்கு இணங்க, பங்கு பற்றுவதற்காக, அங்கே இங்கே சுட்டு சும்மா போட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு கேள்விகளுக்கு தெரிந்த பெயர்களை தெரிவு செய்துவிட்டு பார்த்தால் அவர்கள் team இலேயே இல்லை, பிறகு மாத்தவேண்டி வந்துவிட்டது. ஆச்சரியமாக எனக்கும் 42 புள்ளிகள். வரும்காலத்தில் இப்பிடி பங்குபற்றுவது easy ஆக இருக்கும்போல
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னையும் மறக்காமல் கேட்டுக்கொண்டதுக்கு நன்றி, நான் கிரிக்கெட் பார்ப்பதிலும் பின்தொடர்வதிலும் இருந்து வெகுதூரம் சென்று விட்டேன். இருந்தாலும், கேட்டதுக்காக எனது தெரிவுகள் கீழே உள்ளது. கிருபன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சொல்லவும்: # Question Team1 Team 2 Prediction குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS 8) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND குழு A: 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK Select NZ Select NZ NZ BAN Select BAN Select 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (3 புள்ளிகள்) IND #A2 - ? (2 புள்ளிகள்) NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SA Select SA Select ENG Select ENG Select AFG Select AFG AFG 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (3 புள்ளிகள்) Aus #B2 - ? (2 புள்ளிகள்) AFG 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ENG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்) IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) BAN 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rashid Khan 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Shubman Gill 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Shah Afridi 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Rassie van der Dussen 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இதில் இவர்களுக்கு அப்பிடி என்ன வெற்றி கிட்டியது? இவ்வளவு பணத்தை செலவிட வைத்து, அமெரிக்க எல்லையை கண்காணித்து அப்பிடி என்ன செய்யப்போகிறார்கள் என்று புரியவில்லை. இந்த எல்லையால் அமெரிக்காவுக்கு வரும் fentanyl இல் அளவு மொத்தத்தில் வெறும் 0.2%. கிட்டதட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லி விடலாம். சட்டவிரோத குடியேறிகளும் அங்கிருந்து வருவது குறைவு. Trump இற்கு கை சுட்டு விட்டது, தான் வெற்றி பெற்றேன் என்று அவரது மறைகழண்ட ஆதரவாளர்களுக்கு காட்டவேண்டிய தேவை வந்துவிட்டது. மேலே நிழலி எழுதியது போல, இதன் விளைவு கனடா மக்களை இன மதம் பார்க்காமல் அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரவைத்தது. இதன் பொருளாதார அடி கொஞ்ச நாட்களில் இங்கு எதிரொலிக்கும். தற்போது இவருக்கு வாக்கு போடாத blue states எனப்படும் ஜனநாயக கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் கை வைக்கத்தொடங்கியுள்ளார்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இலங்கையின் பொருளாதார அளவை அமெரிக்காவுடன் ஒருபொதுமே ஒப்பிட முடியாது. அமெரிக்கா அரச வருமானத்தில் கிட்டத்தட்ட 19% வட்டி கட்டுகிறார்கள், இது அதிகம் என்றாலும், மோசமான நிலை அல்ல, செலவை குறைக்க வேண்டும் என்பது உண்மை, அனால் குறைப்பதுக்கு வேறு நிறைய வழிகள் உள்ளன, மக்களின் social security யில் கை வைக்கக்கூடாது, அது மக்கள் வேலை செய்யும்போது அவர்களிடம் இருந்து எடுத்த பணம்.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
வெறும் conspiracy யாக தெரிந்தாலும், இந்த doubt எனக்கு உண்மையிலேயே இருக்கு
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
உண்மை, கனடியர்கள் வேற்றுமை மறந்து ஒற்றுமையாகியுள்ளார்கள், bullying ஐ அனுமதிக்கக்கூடாது என்று சோசியல் மீடியாக்களில் எதிர்வினைகள்நிறைய வருகிறது, இதற்கு நிறைய அமெரிக்கர்களும் support. தடை எடுத்தால்பிறகும், கனடாவில் சூப்பர் மார்கெட்டுகளில் அமெரிக்க பொருட்களை நீக்குவதாக தகவல்கள் வருகிறது. இவர் உண்மையிலேயே என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்று புரியவில்லை, அமெரிக்காவின் நட்பு வட்டாரங்களை படிப்படியாக பகைத்துக்கொண்டு வருகிறார்.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இவ்வளவுக்கும், ஒரு சந்தோசமான விடயம், இவருக்கு வோட்டுப்போட்ட நிறைய இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார். இங்கிருக்கும் இந்தியர்கள் போல ஒரு hypocrites ஐ காண முடியாது. பல இந்தியர்கள் புதிதாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு வேலை விசாவை கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் ஆதரவாக உள்ளார்கள். தனது வேலை போய்விடக்கூடாது என்ற சுயநலம் தவிரவேறு ஒன்றும் இல்லை. Medicare, social security cut பண்ணப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது, இவரின் ஆதரவுத்தளமான வயது போன வெள்ளையர்களுக்கும் ஆப்பு இருக்கு
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இவர் இந்த குறூப் உடன், முதல் பிளான்இன்படிஅட்டர்னி ஜெனரல் ஆக Matt Gaetzயும் சேர்ந்திருந்தால், ஒரு அட்டகாசமான, dream cabinet ஒன்று எமக்கு கிடைத்திருக்கும்
-
யுஎஸ்எயிட் சீர் செய்ய முடியாத நிலையை அடைந்துவிட்டது- மூடுவதற்கு தீர்மானம்- எலொன் மஸ்க்
இலங்கையில் NGO களில் வேலை செய்யும் 1000 பேர்களுக்கு இதனால் வேலை போகப்போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. என்னோடு படித்த சிலர் இப்பிடியான NGO களில் வேலை செய்துகொண்டிருந்தார்கள், அவர்களின் நிலை என்னவோ தெரியவில்லை.
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
எனக்கென்னவோ சனியன் தலைக்குமேல் நின்று ஆடப்போவது போல் உள்ளது
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
இப்ப துவங்கியிருப்பது வெறும் ட்ரைலர், மெயின் பிக்சர் இனித்தான் இருக்கு. வரும் நாலு வருடங்கள் எப்பிடிபோகபோகுதோ தெரியவில்லை. சிலர் மூளைக்கும் வாயிற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுவார்கள், இவர் அந்த மாதிரி ஒரு கேஸ். தனது கம்பனியை நடத்துவதுபோல், வாறவன் போறவன் எல்லாரையும் மிரட்டி நாட்டை நிர்வாகிக்கலாம் என்று நினைக்கிறார்.
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
தாவடிக்கு அடுத்து, இரண்டாவது தாக்குதல் நீர்வேலியில் நடந்ததாக ஒரு ஞாபகம், அதில் 3 அல்லது 4 பேர் இறந்தார்கள். நாங்கள் அப்பொழுது ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம், முன் அனுபம் இல்லாததால், ஏன் plane இப்பிடி சரியுது என்று விளையாட்டை நிறுத்திவிட்டு பார்த்தோம்.
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
Google இல் இருந்து எல்லோரும் நமது தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறார்கள், இதிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. சரி சீனர்களும் சேகரித்துக்கொண்டு போகட்டும். எனது குளியல் வீடியோ வந்தால் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். இது இலவசமாக கொடுக்கிறார்கள், விளைவுகளை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்த போட்டியில் மாறி மாறி ஒவ்வொருவரும் மெருக்கூட்டி சிறப்பான செயலிகளை விடப்போகிறார்கள். எனது வேலைக்குரிய சில தேவைகளுக்கு சும்மா பாவித்துப்பார்த்தேன், சில வேலைகளுக்கு இனி ஆட்கள் தேவைப்படாது என்று தெரிகிறது. வருங்காலத்தில் நிறைய பேருக்கு வேலை போகபோவது உறுதி
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
Downlod பண்ணி பார்த்தேன், இது உண்மையிலேயே சிறப்பாகவும், வேகமாகவும் இயங்குகிறது, இனி அமெரிக்க கம்பனிகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது, செலவைகுறைத்து, இன்னும் சிறப்பான ஒன்றை தரவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். சீனர்கள் தடை வரமுன்னரே நிறைய ஹார்ட்வேர்களை வாங்கி வைத்துள்ளார்கள், அவர்களுடைய ஆராய்ச்சிக்கு ஒருவித தேக்கமும் வரப்போவதில்லை
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
அண்ணை, வழமை போல அதுபாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் எரியுது. என்ன இந்தமுறை வித்தியாசமாக நிறைய குடியிருப்புகளை தாக்கியுள்ளது. அதுவும் பணக்காரர்களின் இடங்களை தாக்கியுள்ளது. அதனால் முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. இது கிட்டத்தட்டஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் Fire என்று வகைப்படுத்தியுள்ளார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், நேற்று பக்கத்தில் சிறிய Fire ஒன்று உருவாக்கி, control பண்ணிவிட்டார்கள். ஏற்கனவே பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் இனி கலிபோர்னியாவில் சேவை செய்வதில்லை என்று விலகிவிட்டார்கள், வரும் காலத்தில் விட்டு இன்சூரன்ஸ் நன்றாக ஏறப்போகிறது
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
கோசான், நாளைக்கு வெள்ளிக்கிழமை, திரி வேறு நன்றாக போகிறது. நீங்கள் ஏதோ கு.. என்று எழுததொடங்கிவிட்டு, மறந்துபோய் விட்டுவிட்டீர்கள், அது என்னது?
-
ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் ; ரயில் திணைக்களம் விசாரணை!
நீங்கள் வீடியோ பார்க்கவில்லை, பெண்களும் மசாஜ் பண்ணுகிறார்கள்
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது எங்களுக்கு சிறிது தொலைவு, நான் பாதுகாப்பாக இருக்கிறேன், போன வருடம் மிகவும் பக்கத்தில் எரிந்தது, நாங்கள் மலைப்பகுதியில் இல்லாதபடியால் தப்பி விட்டோம்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இவர் ஒரு ஐயர் குடும்பம் என்று சில இடங்களில் சொல்லியிருந்தார்கள். இவரின் பேட்டி ஒரு பார்த்தேன், நன்றாகவே ஆங்கிலத்திலும் உரையாடுகிறார்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
மேல் மட்டத்து மாணவர்கள் நிறைய பேர் அநேகமாக கண்டியில் இருந்து வருவார்கள், anti ராகிங் குறூப்ஆக இருக்கும். இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒத்துவராது, ராக்கிங் பிரச்சனைகளில் அடிக்கடி முண்டுவார்கள். JVP யின் மாணவர் அமைப்பு பலமாக இருப்பதால், அவர்களது இடமாக இருந்தாலும், கண்டி மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்களில் பொருளாதாரரீதியில், ஒரு சிலரைத்தவிர பெரியளவு வித்தியாசம் இருந்ததில்லை, பேராதனைக்கு வரும் பெரும்பாலான சிங்கள மாணவர்கள் வறுமைமையானவர்கள், அதனால் 5 வீதம் வாக்குகொண்ட ஜேவிபி இங்கு பலமாக இருக்கும். இவர்களில் இனவாதிகள் இருந்தாலும், உண்மையாகவே அந்த நேரங்களில் ஜேவிபியினால் எங்களுக்கு ஒருவித பாதுகாப்பு இருந்தது. நான் பல்கலைக்கழக விடுதியில் இருந்த காலத்தில் ஒரேயொரு முறை மாத்திரமே ஏதோ ஒரு பிரச்சனைக்கு அங்கு police வந்தது. தமிழ் சிங்கள மாணவர் பிரச்சனைகளை ஜேவிபியின் மாணவர் அமைப்பு பஞ்சாயத்து பண்ணிவைக்கும். ஆணையிறவை புலிகள் பிடித்தநேரம், உடல்கள் தெற்குக்கு வந்துகொண்டிருந்த நேரம், அங்கு ஒரு இறுக்கமான நிலை இருந்தது. மட்டக்களப்பை சேர்ந்த ஒருத்தன் யாரோ ஒருவனோடு உள்ள பிரச்சனையில் வெடியை கொளுத்தி போட்டுவிட்டான். மற்ற சிங்கள மாணவர்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு அடிக்க ரெடியாக இருந்தார்கள், ஜேவிபி இற்கு நிலைமை புரிந்து தலையிட்டு தடுத்து விட்டார்கள். ஜேவிபி உறுப்பினர்கள் தனிய எல்லாம் அடிக்கமாட்டார்கள், அமைப்புரீதியாக இயங்குபவர்கள், கட்சி அடி என்றால் எங்களை போட்டுத்தாக்கி விடுவார்கள்
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
நீங்கள் போனப்பிறகும் அந்த சாப்பாடு அதே 4 ரூபாவுக்கு 7, 8 வருடங்களுக்கு இருந்தது. நாங்கள் இருந்தபோதும் கொஞ்சம் நல்ல சாப்பாடு கொண்டுவர முயற்சி செய்தோம், தமிழர்கள் சார்பிலும் சில நல்ல கறிகளை சிபாரிசு செய்தோம், ஜேவிபி மாணவர் அமைப்பு அப்பிடியே அடித்து அமத்திவிட்டார்கள். கான்டீன்காரனும் என்னதான் செய்வது, மலிவாக கிடைக்கும் அழுகிய மரக்கறிகளை கொண்டு வந்து சமைத்து போடுவார்கள், வாயில் வைக்க முடியாது
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கோசான், நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
நான் ஊரில் இருந்தகாலத்தில் மாட்டு வண்டி போட்டி எங்களூரில் வருடா வருடம் நடைபெறும் , கைதடியார் எங்களை வெல்ல முடியாது. வெண்ணிலா தெரிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன், மற்றவர், சரோஜா ஆச்சரியமாக மாத்தறை மாவட்டத்தில் இருந்து அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் புதியவர் என்று நினைத்திருந்தேன் ஆனால் முன்பே தேசியப்பட்டியலில் போக இருந்ததாகவும், ஹரிணிக்காக விட்டுக்கொடுத்ததாகவும் சொல்கிறார்கள், சரியாகத்தெரியவில்லை